PDA

View Full Version : எனையறியாமல் மனம் பறித்தாய்...



சசிதரன்
17-02-2009, 06:39 AM
உறங்க முடியாத கனவுகள் தந்தாய்...
தாயென தாலாட்டி உறக்கமும் தந்தாய்...
வாழ்வு சுமையென்றேன்... பகிர்ந்து கொள் என்றாய்...
வானவில் வண்ணமாய் மாற்றியும் சென்றாய்.

இரவு விழித்ததில்லை... விழிக்க வைத்தாய்...
கவிதை படித்ததில்லை... எழுத வைத்தாய்...
இத்தனை அன்பை மொத்தமாய் உணர்ந்ததில்லை...
என்னுள் நுழைந்து.... நீயே உணர்த்தினாய்...

கனவிலும் காணாத உலகம் தந்தாய்...
நினைத்தும் பார்க்காத நினைவுகள் தந்தாய்...
மழைக்கு ஒதுங்கினேன்... கைப்பிடித்து அழைத்தாய்...
துளித்துளியாய் கரைய வைத்து... உயிர் வரை நனைத்தாய்...

சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
இசையென பரவியே என் நெஞ்சம் நிரப்பினாய்...
பகிர்தல் மூலம் எனை முழுமையாக்கினாய்...

பார்வைகள் கொண்டே கோபம் விலக்கினாய்...
புன்னகை மூலமே பூக்கள் பரப்பினாய்...
உலகம் என்பதே எனக்காய் மாற்றினாய்...

இத்தனை செய்து பின் என்னிடம் கேட்கிறாய்...
உன்னை எதற்காக பிடிக்குமென்று.

சுகந்தப்ரீதன்
17-02-2009, 07:58 AM
இத்தனையையும் அவர்கள் இயல்பாக செய்திருப்பார்களோ என்னவோ...
அதனால் நீங்கள் எதற்கும் இந்த கவிதையை அவர்களிடம் கொடுத்து பதில் சொல்லுங்கள் சசி..!!

வார்த்தை தோரணங்கள் நிறைந்த அழகியல் கவிதை... வாழ்த்துக்கள் சசி...!!

அமரன்
17-02-2009, 08:15 AM
பழயன எல்லாமும்
புதிதாய்க் காட்டி வியக்கவைத்தாய்.
மீண்டும் என்னை
உனக்காகப் பிறக்கவைத்தாய்.

அழகிய உணர்வை உயிரில் கலக்கும் வண்ணம் வரையப்பட்ட கவிதை.
மனமார்ந்த பாராட்டுகள் சசிதரன்.

சசிதரன்
18-02-2009, 04:27 AM
இத்தனையையும் அவர்கள் இயல்பாக செய்திருப்பார்களோ என்னவோ...
அதனால் நீங்கள் எதற்கும் இந்த கவிதையை அவர்களிடம் கொடுத்து பதில் சொல்லுங்கள் சசி..!!

வார்த்தை தோரணங்கள் நிறைந்த அழகியல் கவிதை... வாழ்த்துக்கள் சசி...!!

கண்டிப்பாக நண்பரே... தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...:)

சசிதரன்
18-02-2009, 04:29 AM
பழயன எல்லாமும்
புதிதாய்க் காட்டி வியக்கவைத்தாய்.
மீண்டும் என்னை
உனக்காகப் பிறக்கவைத்தாய்.

அழகிய உணர்வை உயிரில் கலக்கும் வண்ணம் வரையப்பட்ட கவிதை.
மனமார்ந்த பாராட்டுகள் சசிதரன்.

பாராட்டிற்கு மிக்க நன்றி அமரன் அண்ணா... தங்கள் வரிகள் மிகவும் அழகாக உள்ளது...:)

samuthraselvam
18-02-2009, 05:59 AM
சிரித்து பேசியே சிரிக்க பழக்கினாய்...
பார்வைகள் கொண்டே கோபம் விலக்கினாய்...

அற்புதமான கவிதை வரிகள்...
பாராட்டுக்கள் சசிதரன்....

சசிதரன்
19-02-2009, 05:18 AM
மிக்க நன்றி தோழி...:)

செல்வா
19-02-2009, 10:01 PM
நீரையும் நெருப்பையும்
வெப்பத்தையும் குளிர்ச்சியையும்
அன்பையும் வெறுப்பையும்...
....................................
இப்படி எதிர் எதிர் துருவங்களை இணைத்து வைக்கும் காதல்
பாருங்கள்.... வண்ணமாய் இருக்கும் வானவில்லுக்கே வண்ணமடிக்கிறது....
காதலி வரும் வரை காதலனுக்கு நிறக்குருடு....
வாழ்த்துக்கள் சசிதரன்.