PDA

View Full Version : எனக்கென்று ஒரு மனம்



samuthraselvam
16-02-2009, 06:48 AM
அன்பார்ந்த மன்றத்து சொந்தங்களுக்கு வணக்கம்...!!!
இந்தக் கதை என் சிந்தனைக்கும் என் எழுத்துக்கும் பிறந்த முதல் குழந்தை..
இந்தக்குழந்தையை சீராட்டி பாராட்டி குறைகள் இருந்தால் குட்டி என் சிந்தையை ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.


எனக்கென்று ஒரு மனம்
என் பெயர் ஜூலி. எனக்கு வயது இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிறது.
என் பக்கத்து வீட்டு அக்கா பெயர் கேத்ரீனா. நானும் கேத்ரீனாவும் நல்ல தோழிகள். அவள் U.K.G படிக்கிறாள். பள்ளி முடிந்ததும் என்னுடன் விளையாட வருவாள். ஆனால் அந்த தோழமையே என் மனதில் பல வேண்டாத ஏக்கங்களையும் கேள்விகளையும் உண்டு பண்ணியது. அந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.

என்னடா இது ! மூன்று வயதுகூட முடியாதவளா இப்படி எல்லாம் சிந்திப்பாள்? என்று நீங்கள் சிந்திக்கக் கூடாது. என் அனுபமே இப்படி என்னை சிந்திக்க வைத்தது.

அவளுக்கு மட்டும் அன்பு காட்ட அவள் வீட்டில் போட்டி போட்டனர். ஆனால் எனக்கு? கேத்ரீனா நல்ல சிகப்பு நிறம். புசு புசு கன்னங்கள். சின்ன அழகான உதடுகள். கோழி முட்டை கண்கள். அதை உருட்டி உருட்டி உதடுகள் குவித்து பேசும் அழகு உள்ளதே...! அதைப்பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றும். ஆனால் நான் நல்ல கருப்பு. சின்ன முட்டைக்கண்கள். அதனால் தான் யாருக்கும் என்னை பிடிக்கவில்லையோ?

அவள் அம்மா அவளுக்கு குளிக்க தினமும் போராடுவாள். குளிக்க மாட்டேன் என அழுது அடம் பிடிப்பாள். சாப்பாடு பிசைந்து ஊட்டும்போதும், தூங்க வைக்கும்போதும் மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்வாள். அப்போதும் அவள் அம்மா செல்லம் கொஞ்சுவாள்.
இதை எல்லாம் பார்க்கும் பொது எனக்கு ஏக்கமாக இருக்கும். என் வீட்டு அம்மா வேண்டா வெறுப்பாக வாரம் ஒரு முறை மட்டும் குளிக்க வைப்பாள்.
வெறும் சோற்றை பாலுடன் கலந்து பிசைந்து தட்டில் கொட்டி விட்டு போவாள். அவ்வளவு தான்.
என்னால் கையில் எப்படி எடுத்து சாப்பிட முடியும்? கீழே சிந்தினால் சின்ன குச்சியால் அடிப்பார்கள்.
வலி உயிரே போகும் தெரியுமா? என்னால் வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாது என்ற தைரியத்தினால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்களா?.

அவளுக்குத்தான் எத்தனை பொம்மைகள். எனக்கு ஒன்றுகூட இல்லை தெரியுமா?
கேத்ரீனாவை அவளின் அம்மா தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடியபடி தட்டிக் கொடுப்பாள். அவளும் அப்படியே சுகமாக உறங்குவாள். ஆனால் நானோ வீட்டின் மூலையில், எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பாவமாய்.??..
சத்தமாக அழ வேண்டும் என தோன்றும். ஆனால் சத்தம் போட்டால், அனைவரும் "சனியனே ஏன் சத்தம் போட்டு தூக்கத்தைக் கெடுக்கிறாய்?" என திட்டுவார்கள். அதற்கு பயந்துகொண்டு அமைதியாய் இருப்பேன்.

என்னை விட வயதில் மூத்த கேத்ரீனவுக்கு கிடைத்த அன்பும் பாசமும் ஆசையான முத்தங்களும் ஏன் எனக்கு கிடைக்கவில்லை?

ஒருவேளை நானும் என் அம்மாவுடன் இருந்திருந்தால் எனக்கும் இதெல்லாம் கிடைத்திருக்குமோ? அவளாவது வாயை திறந்து கேட்க முடியும். ஆனால் நான் அவளைப்போல் கேட்க முடியாதே...

என் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். என் கதையைக் கேட்டால் உங்களுக்கே என்மீது பரிதாபம் பிறக்கவில்லையா?
நான் இந்த உலகில் நாயாகப் பிறந்தது என் தவறா?
நீங்களே சொல்லுங்கள்.....??!!!

தாமரை
16-02-2009, 07:27 AM
ஜூலி இது மட்டும் மனுசங்களுக்குத் தெரிஞ்சது உன்னோட நிலைமை இன்னும் மோசமாகிப் போகும்..

பொதுவாவே ஏழை வீட்டிலிருக்கிற எல்லாக் குழந்தைகளுக்கும் வரூகிற ஏக்கம்தான் இது...

அது நாயாப் பொறந்தா மட்டுமில்லை...

உனக்கு சோறுபோடவாவது வீட்டு அம்மா இருக்காங்க. பல மனுஷக் குழந்தைகள் பிச்சையெடுத்து பல பெரியவங்களைக் காப்பாத்திகிட்டு இருக்காங்க தெரியுமா.. ஆறு மாசக் குழ்ந்தைங்க வேகாத வெய்யிலில் அழுக்கு பால்புட்டியோட பலரோட பரிதாபத்தைச் சந்திச்சி சம்பாதிக்கறாங்க தெரியுமா?

அம்மா கொடுக்கிற பால்சோறும், ஓரமா தூங்க ஒரு நிழலும் இல்லாத அந்தக் குழந்தையா நம்மளைப் படைக்கிலியேன்னு நாம் நம்ம மனசைத் தேத்திக்கணும்..

குழந்தைங்க விளையாட முடியாம போறதை விட மிகப் பெரிய சோகம் ஒண்ணுமே இல்லை..

கூட விளையாட கேத்ரீனாவைக் கொடுத்த ஆண்டவனுக்கு நாம நன்றி சொல்ல வேண்டாமோ?

நமக்கு அலங்காரமான பொம்மைகள் கூட வேணாம் ஜூலி... ஒரு சின்ன குச்சி, ஒரு சின்ன உருண்டையான யாருக்கும் தேவையில்லாம போயிட்ட பந்து.. இப்படி இருக்கறதை வச்சு மகிழ்ச்சியா வாழ நம்மால முடியும். மத்தவங்களுக்கு இந்த சந்தோஷ ரகசியம் தெரியாது..

அம்மா முத்தம் தராட்டி என்ன? அவங்களுக்கு ஆயிரம் கவலை. அவ சாப்பாடு தர வரும்பொழுது நாம அவங்க காலுக்கு முத்தம் கொடுத்து வாலால டாட்டா காட்டி அவங்களைச் சந்தோசப்படுத்துவோம். .

இல்லாததை நினைச்சு அழவேண்டாம். இருக்கறதை வச்சு சந்தோஷப் படுவோம். அம்மா சந்தோஷமா இருந்தாங்கன்னா இன்னும் நிறைய சம்பாதிப்பாங்க... அவங்க சந்தோஷம் அதிகமான நமக்கு பொம்மைகள் கிடைக்குதோ இல்லையோ பாசம் இன்னும் நிறையக் கிடைக்கும்..

அம்மா வர்ராப்பல இருக்கு. வா வாசப்பக்கம் போயி வாலாட்டி வரவேற்போம்.

அன்புரசிகன்
16-02-2009, 07:46 AM
ஏக்கம் கலந்த பதிவு. அதற்கு பதி்ல் என்ற போர்வையில் பரிகாரம் இரண்டும் அழகாக உள்ளது... மனிதருக்கும் இவ்வாறான ஏக்கங்கள் உள்ளனவே....

ரங்கராஜன்
16-02-2009, 09:30 AM
வாழ்த்துக்கள் பாசமலரே
முதலில் உன்னுடைய முதல் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பலரை கதாசிரியராக மாற்றிய பெருமை நம் மன்றத்திற்கு உண்டு, உன்னையும் நம் மன்ற மக்கள் அப்படி மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சரி கதையை பற்றி வருவோம்.

முதலில் கதையின் கருவுக்கு ஒரு சபாஷ், அதை வித்தியாசமாக சொல்லி இருக்கிறாய் அதற்கு ஒரு சபாஷ். கதையில் இரண்டு இடத்திற்கும் பொருந்தும் வார்த்தை பிரியோகம் நல்லா இருக்கிறது, குட்டி கதைகள் வகேரா வை சேர்ந்தது இந்த கதை என்று நினைக்கிறேன், நாய்களும் இப்படி நினைக்க கூடும் என்று இந்த கதையை படித்தவுடன் தான் சிந்தித்தேன். ஆசை, பாசம், காதல், கோபம் போன்ற உணர்வுகள் அனைத்து உயிரணங்களுக்கும் சொந்தம் என்று சொல்லும் அருமையான கதை, வித்தியாசமான கதையும் கூட,

நல்ல கருக்களை தேர்ந்து எடுத்து, அதை வித்தியாசமாக சொல்லி வாசகர்கள் மனதில் பதியவைத்து விட்டால் போதும், நீ சிறந்த கதையாசிரியர் ஆகி விடலாம். ஆனால் ஒரே பிரச்சனை ஒவ்வொரு முறையும் நீ கதையை எழுதும் பொழுதும் இதை நினைத்துக் கொண்டு எழுத வேண்டும், ஒரு கதையுடன் நிறுத்திவிடக்கூடாது.

முதல் முயற்சியில் வெற்றி அடைந்ததுக்கு வாழ்த்துக்கள்.

அமரன்
16-02-2009, 05:31 PM
முதலில் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள். பதில் கதை மூலம் தாமரை அண்ணாவும் கதை கட்டமைப்பை தக்சும் அலசி உங்களுக்க்கு புத்தூக்கம் அளித்து விட்டார்கள். இன்னும் எழுதிட வாழ்த்துகள் லீலுமா.

arun
16-02-2009, 08:41 PM
தங்களின் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்ல வந்த கதைக்கருவை அழகாக சுருக்கமாக கொடுத்து உள்ளீர்கள் நெகிழ வைத்த கதை பாராட்டுக்கள்

samuthraselvam
17-02-2009, 07:22 AM
கதைக்கு நா(ய்)யகியாய் வந்த ஜூலிக்கு பதில் கொடுத்து அதன் ஏக்கங்களைப் போக்கிய தாமரை அண்ணாவுக்கு நன்றி...!

அன்புரசிகருக்கும் என் நன்றிகள்...

தம் அண்ணா...! தலைப்பு இப்போது சரிதானே? நன்றி அண்ணா.. இது போன்ற ஊக்கமான வார்த்தைகள் தான் மனிதனை உயர்த்தவும் உயிர்ப்பிக்கவும் உதவும்.

அமரன் அவர்களுக்கும் அருண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி....!!
வாழ்த்துக்களே மனிதனை வானம் வரை உயர்த்தும்......

செல்வா
17-02-2009, 08:09 AM
என் மனங்கவர்ந்த கதை.....
வாழ்த்துக்கள் தங்கள் முதல் படைப்பிற்கு...
இத்தகைய படைப்புக்களுக்கென்று ஒரு வரவேற்பு எப்போதுமே... வாசகர்கள் மத்தியில் உண்டு.
வாசகர்கள் மனதில் ஒன்றை நினைக்கச் செய்து விட்டு முடிக்கும் போது பொருந்துகின்ற இன்னொன்றாக முடிப்பது.
ஒரு கதையைச் சொல்லி அதன் ஊடே இன்னொரு கதையையும் உணரவைப்பது..
மனிதக் குட்டியானாலும் நாயின் குட்டியானாலும் ... உயிர்கள் அனைத்தும் ஏங்குவது அன்பிற்காகத்தான்.
எப்போதுமே இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை தான். கேத்ரீனா சொல்லக் கூடும் அவள் தனியாக வளர்கிறாள். அவளைச் சுயமாகச் செல்ல விடுகிறார்கள். ஆனால் என்னை அதீத அன்பு காட்டிச் சிறையாக்கியுள்ளார்கள் என்று.
நிற்க....
நாய்களுக்கெல்லாம் பள்ளி ஆரம்பித்து விட்டார்களா? எப்போது யுகேஜி படிக்க ஆரம்பித்தது?

அமரன்
17-02-2009, 08:18 AM
நாய்களுக்கெல்லாம் பள்ளி ஆரம்பித்து விட்டார்களா? எப்போது யுகேஜி படிக்க ஆரம்பித்தது?

உலகமே ஒரு பள்ளிதானே செல்வா.

samuthraselvam
17-02-2009, 09:03 AM
பாராட்டுக்களுக்கு நன்றி செல்வம்..


என் மனங்கவர்ந்த கதை.....
வாழ்த்துக்கள் தங்கள் முதல் படைப்பிற்கு...
இத்தகைய படைப்புக்களுக்கென்று ஒரு வரவேற்பு எப்போதுமே... வாசகர்கள் மத்தியில் உண்டு.
வாசகர்கள் மனதில் ஒன்றை நினைக்கச் செய்து விட்டு முடிக்கும் போது பொருந்துகின்ற இன்னொன்றாக முடிப்பது.
ஒரு கதையைச் சொல்லி அதன் ஊடே இன்னொரு கதையையும் உணரவைப்பது..
மனிதக் குட்டியானாலும் நாயின் குட்டியானாலும் ... உயிர்கள் அனைத்தும் ஏங்குவது அன்பிற்காகத்தான்.
எப்போதுமே இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை தான். கேத்ரீனா சொல்லக் கூடும் அவள் தனியாக வளர்கிறாள். அவளைச் சுயமாகச் செல்ல விடுகிறார்கள். ஆனால் என்னை அதீத அன்பு காட்டிச் சிறையாக்கியுள்ளார்கள் என்று.
நிற்க....
நாய்களுக்கெல்லாம் பள்ளி ஆரம்பித்து விட்டார்களா? எப்போது யுகேஜி படிக்க ஆரம்பித்தது?

கேத்ரீனா மனித குட்டி தான். ஜூலி உடன் விளையாட வரும் சின்னப் பெண். குழந்தைகளுக்கு நாய் என்றாலே மிகவும் பிடிக்கும் இல்லையா? (ஒரு சிலருக்கு மட்டும் அவை அலர்ஜி & பயம்!!)

செல்வா
17-02-2009, 09:07 AM
கேத்ரீனா மனித குட்டி தான். ஜூலி உடன் விளையாட வரும் சின்னப் பெண். குழந்தைகளுக்கு நாய் என்றாலே மிகவும் பிடிக்கும் இல்லையா? (ஒரு சிலருக்கு மட்டும் அவை அலர்ஜி & பயம்!!)
ஓ... எனது புரிதலில் தான் தவறு.
இது புரிந்தபின் இன்னும் படைப்பின் மீதும் படைப்பாளியின் மீதும் மரியாதை அதிகரிக்கிறது.
மீண்டும் வாழ்த்துக்கள்.

தாமரை
17-02-2009, 09:56 AM
ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனி பாணி உண்டு. அது அவர்கள் எழுத எழுத தானே உருவாகும்.. எந்த பாணியும் உயர்வு தாழ்வு இல்லை, பொதுவா நம்மிடம் நேரடியா பேசற மாதிரியான பாணி ஒற்றைக் கதாபாத்திர கதைகள் இருக்கும். பூமகளின் அச்ச(சு)கப் பிழை (பண்பட்டவர் பகுதிகளில் இருக்கு) இதே மாதிரியான கதை. தங்கை வேண்டி விரும்பிக் கேட்டதால அந்தப் பாணியைப் பற்றிய சில டிப்ஸ்களை அங்க குடுத்திருப்பேன்,

இங்க சிம்பிளா சொல்லணும்னா நல்ல நடை இருக்கு.. தெளிவான நீரோட்டம் போல வரிசையா புலம்பல்கள்..

ஒரு கதைக்கு முக்கியமான இரண்டு விஷயம் கரு, இரண்டாவது பிரசண்டேஷன். எப்படி நாம் கதையை வடிவமைக்கிறோம் என்பது,

ஒரு சின்னக் குழந்தையின் ஏக்கம் தொனிக்கும் விதத்தில் கதையைக் கொண்டு போனது நல்லது. எனக்கு முதல்ல நாய் தெரியலை ஏன்னா இரண்டரை வருஷத்தில நாய் பெரிசாகி இல்லாத ரவுசெல்லாம் பண்ண ஆரம்பிச்சிடும் :) . (Adolescence for most domestic dogs is around 12 to 15 months, beyond which they are for the most part more adult than puppy.)

இதை தயவு செய்து படிக்காதீங்க..

http://en.wikipedia.org/wiki/Dog#Reproduction

இரண்டாவது விஷயம், யாருமே கவனிக்க மாட்டாங்க. இதுக்கு தாமரை மார்க் விளக்கெண்ணெய் கண்ணில விட்டுகிட்டு பார்த்தாதான் தெரியும்.

என் பெயர் ஜூலி. எனக்கு வயது இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிறது. என் பக்கத்து வீட்டு அக்கா பெயர் கேத்ரீனா. நானும் கேத்ரீனாவும் நல்ல தோழிகள். அவள் U.K.G படிக்கிறாள். பள்ளி முடிந்ததும் என்னுடன் விளையாட வருவாள். ஆனால் அந்த தோழமையே என் மனதில் பல வேண்டாத ஏக்கங்களையும் கேள்விகளையும் உண்டு பண்ணியது. அந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.


இப்படி ஆரம்பிச்சிட்டு

அவளாவது வாயை திறந்து கேட்க முடியும். ஆனால் நான் அவளைப்போல் கேட்க முடியாதே...

இப்படிக் கேட்கிறப்ப, சின்ன புன்முறுவல் தோணுது..

இருந்தாலும் கதையின் வசனக் கோர்வையில் மனசைக் கட்டிப் போடற மாயை இருக்கு,


அப்பா எனக்கு பொம்மை வாங்கித்தாங்கப்பா என்ற குட்டிப் பெண்ணின் ஏக்கப் புலம்பலை சரியா படம் பிடிச்சு இருக்கீங்க.

வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்க,

துளசி
17-02-2009, 08:53 PM
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கதை நல்லாயிருக்கு. ஆனால் பாதியிலே இது ஒரு நாயின் கதையாகயிருக்கலாம் என்று யோசனையில் வந்துவிட்டது.

samuthraselvam
18-02-2009, 08:29 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா ..



இரண்டாவது விஷயம், யாருமே கவனிக்க மாட்டாங்க. இதுக்கு தாமரை மார்க் விளக்கெண்ணெய் கண்ணில விட்டுகிட்டு பார்த்தாதான் தெரியும்.

என் பெயர் ஜூலி. எனக்கு வயது இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிறது. என் பக்கத்து வீட்டு அக்கா பெயர் கேத்ரீனா. நானும் கேத்ரீனாவும் நல்ல தோழிகள். அவள் U.K.G படிக்கிறாள். பள்ளி முடிந்ததும் என்னுடன் விளையாட வருவாள். ஆனால் அந்த தோழமையே என் மனதில் பல வேண்டாத ஏக்கங்களையும் கேள்விகளையும் உண்டு பண்ணியது. அந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.


இப்படி ஆரம்பிச்சிட்டு

அவளாவது வாயை திறந்து கேட்க முடியும். ஆனால் நான் அவளைப்போல் கேட்க முடியாதே...

இப்படிக் கேட்கிறப்ப, சின்ன புன்முறுவல் தோணுது..

,


அண்ணா.. ஜூலி கேட்கும் ஆனா நமக்கு தான் புரியாது.. அது குறைப்பது போல் நமக்கு தோன்றும். பாம்பின் கால் பாம்பு அறிவதுபோல், ஒரு நாயின் ஏக்கம் நாய்க்குத்தான் தெரியுமோ என்னவோ..(நான் பொதுவாகத்தான் சொன்னேன்....)

அமரன்
18-02-2009, 08:45 AM
இரண்டாவது விஷயம், யாருமே கவனிக்க மாட்டாங்க. இதுக்கு தாமரை மார்க் விளக்கெண்ணெய் கண்ணில விட்டுகிட்டு பார்த்தாதான் தெரியும்.

நல்ல வேளை இடையில மார்க் போட்டீங்க :)

தாமரை
18-02-2009, 09:35 AM
ஆமாம் ஆரம்பத்திலேயே மார்க் போட்டா நல்லா இருக்காது...

தாமரை
18-02-2009, 09:37 AM
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா ..




அண்ணா.. ஜூலி கேட்கும் ஆனா நமக்கு தான் புரியாது.. அது குறைப்பது போல் நமக்கு தோன்றும். பாம்பின் கால் பாம்பு அறிவதுபோல், ஒரு நாயின் ஏக்கம் நாய்க்குத்தான் தெரியுமோ என்னவோ..(நான் பொதுவாகத்தான் சொன்னேன்....)

Members who have read this thread : 19 (Set)

arun, அன்புரசிகன், அமரன், ஆதி, செல்வா, தாமரை, துளசி, பாரதி, மதி, Basheera, daks, prapanjan, ravy, samuthraselvam, sathyamani, sumithra

அத்தனை பேருக்குமா? சரி சரி.. :D:D:D

samuthraselvam
18-02-2009, 10:07 AM
நான் பொதுவாகத்தான் சொன்னேன்....

இது வெறும் பழமொழி.... பழமொழி மட்டும் தான்.

தாமரை அண்ணா ஏதோ சிண்டு முடிக்கிறார். அல்லாரும் கண்டுக்காதீங்கோ....:icon_nono::icon_nono::icon_nono::icon_nono:
உஷாரய்யா உஷாரு....
ஓரம் சாரம் உஷாரு...:huepfen024::huepfen024::huepfen024::huepfen024:
நானில்லை ஆளை உடுங்க சாமியோய்....:icon_shok::icon_shok::icon_shok::icon_shok::angel-smiley-026::angel-smiley-026:

பாரதி
18-02-2009, 11:22 AM
சிறப்பான முதல் முயற்சிக்கு இனிய வாழ்த்து.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றமைக்கு இனிய பாராட்டு.
தொடர்ந்து உங்களது கதைகளை படையுங்கள். படிக்க காத்திருக்கிறேன்.

ஓவியன்
18-02-2009, 12:08 PM
அழகான முதல் முயற்சிக்கு
என் மனதார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

செல்வண்ணாவின் பின்னூட்டங்கள் இந்தக் கதையின்
செழுமையை இன்னும் கூட்டுகின்றன....

samuthraselvam
19-02-2009, 03:12 AM
பாரதி, ஓவியன் அவர்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

நேரம் இருக்கும் போதெல்லாம் என் படைப்புகளை பகிர்வேன். அனைவருக்கும் நன்றி...

சிவா.ஜி
23-02-2009, 05:53 AM
அடடா...இவ்ளோ நாளா பாக்காம விட்டுட்டேனே....முதல் கதையிலேயே வித்தியாசமா சிந்திச்ச தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் நிறைய எழுதி நல்ல கதாசிரியையாக உயர வாழ்த்துகள் லீலுமா.

samuthraselvam
23-02-2009, 06:43 AM
ரொம்ப நன்றி அண்ணா.. கடிப்ப நான் உயர்வேன்! உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் இருக்கும் வரை.

விகடன்
23-02-2009, 07:15 AM
கதையின் ஆரம்பத்தில் நிறங்கள் கறுப்பு வெள்ளை என்பதை விட மிகுதியாக தரப்பட்ட விடயங்கள் எனது வாழ்க்கையில் ஒருவரின் வரலாற்றை ஞாபகப்படுத்திவிட்டன. ஆனால் அவர்கள் இருவரும் மனிதர்களே...

ஆகையால் இந்த கதையினை படிக்கையில் என்னையறியாமலேயே கண்கள் நீரில் மிதந்திருந்ததை மறைக்கமுடியாது.

இறுதியில் ஓர் நாயின் மனம் என்று முடித்திருக்கிறீர்கள். ஆனால் மனிதர்களிலும் மேற்படு மனமுடைந்தோர் இருக்கத்தான் செய்கின்றனர்.

எது எப்படியோ இரு உயிர் என்று எடுத்துவிட்டால் சரிதானே.

தரமான படைப்பு. வாழ்த்துக்கள்.

samuthraselvam
23-02-2009, 08:43 AM
மிக்க நன்றி விராடன்..

வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு நிகழ்வுகளை நமக்கு நியாபகப் படுத்திக்கொண்டே தான் இருக்கும்.

அது நல்லது தான். நடந்தவற்றை திருப்பிப் பார்த்தால் தான் முன்னே செல்லும் வழி சிறந்ததாக இருக்கும்.

இளசு
25-02-2009, 07:29 PM
முதல் கதை...வெற்றிக்கதை! பாராட்டுகள்.

என் வீட்டு அம்மா, வாரம் ஒரு குளியல்...
இரண்டாவது முறை வாசிக்கும்போது
பயன்படுத்திய வாக்கியங்களின் பலம் புரிகிறது..

தொடர்ந்து எழுதி மென்மேலும் வளர வாழ்த்துகள்!

samuthraselvam
26-02-2009, 04:05 AM
இளசு அவர்களுக்கு மிக்க நன்றி....
வாழ்க்கையின் பலமே நாம் கேட்க்கும் மற்றும் நாம் பேசும் வாக்கியம் தானே. நல்ல ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் வாழ்க்கையை செம்மை படுத்தும்.

vetriviji
26-02-2009, 08:25 AM
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தாயை பிரிந்து அன்பிற்காக ஏங்கும் ஜுலியின் (விலங்குகள்) நிலையை நன்கு தெளிவுபடுத்தியுள்ளிர்கள். மேலும் நல்ல படைப்புகளை அளிக்க வாழ்த்துக்கள் லீலுமா.


அன்புடன் வெற்றிவிஜி.

samuthraselvam
03-03-2009, 11:01 AM
நன்றி விஜி.
உங்கள் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் தெரியுமா?