PDA

View Full Version : பயணங்கள் முடிவதில்லை...

சசிதரன்
14-02-2009, 03:54 PM
எப்பொழுதாவது ஒரு முறை மட்டுமே..
நான் செல்லும் பேருந்து பயணங்களில்...
மிக அரிதாகவே அமைகிறது...
சன்னலோர இருக்கையும்... அதை ரசிக்கும் மனமும்.

இரவுகள்... தனியொரு உலகம்...
பயணிக்கும் இரவுகள்... கூடுதல் வசீகரம்.

நகர நெரிசலில் மெல்ல துவங்கும் பயணம்.
மெல்ல மெல்ல வேகம் பிடிக்கிறது...
நகரம் தாண்டி நகரும் பேருந்து...

கட்டிடங்கள் ஏதுமற்ற சாலையில்...
இருபுறமும் இருள் சூழ்ந்த பாதையில்..
தொடர்கிறது என் பயணம்...

இரவை ரசிக்க விருப்பமில்லா மனிதர்கள்...

உடன் வருவதாய் ஓடி வரும் நிலவுக்கும்...
விழி மூடி மறுப்பு தெரிவிக்கிறார்.
பேச ஆசையாய் வரும் தென்றலை...
சன்னல் மூடி துரத்தி விடுகிறார்.

இரவு என்பது உறங்க மட்டுமே...
என்பதாய் எல்லோரும் உறங்கி போக...
விழித்தபடி பயணம் செய்கிறோம்...
நானும் என் கனவுகளும்.

அமைதியான ஆழ்ந்த இரவில்...
உடன் பலர் பக்கம் இருந்தும்...
தனிமையின் பிடியில் சிக்கி கிடக்கையில்..
தென்றலும் நிலவும் பெரும் ஆறுதல்தான்.

வார்த்தை ஏதும் நான் சொல்லாமலே...
என் உள்ளம் புரிந்த உற்ற நண்பனாய்...
மௌனம் பேசியபடி உடன் வரும் நிலவு...

ஏதேதோ நினைவுகள் இதயம் நொறுக்க...
'ஓ'வென கதறி அழ தோன்றும் வேளையில்...
ஆறுதலாய் தலைகோதி தாலாட்டும் தென்றல்...

துடைக்க மறந்த கண்ணீர் துளிகள்
கன்னம் வழிந்து இருளில் கரைய..
கண்கள் மூட விருப்பமின்றி...
இரவை கடக்க காத்திருக்கிறேன்.

எப்படியும் அமைந்துவிடுகிறது வாழ்க்கையில்..
இது போல் சில பயணங்கள்.
வாழ்க்கை போகிறது ஓர் முடியாத பயணமாய்...
தேடி கொண்டேயிருக்கிறது மனம்...
நிலவையும்.. தென்றலையும்.

ஆதவா
15-02-2009, 02:52 AM
வழக்கம் போலவே நல்ல கவிதையோடுதான் வந்திருக்கிறீர்கள் சசி.
உங்களது கவிதைகளில் பயணங்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு சில கவிதைகளில் கண்டிருக்கிறேன். அல்லது அப்படியொரு அர்த்தம் எடுத்திருப்பேன்.

பயணங்களில் தான் கவிதைகளே தோன்றுகின்றன.. நாம் பயணிக்கும் பாதைகள் எங்கும் கவிதைகள் இரைந்துகிடக்கின்றன. அதைப் பொறுக்கி எடுப்பவர்களுக்கு கவிதைகள் சாத்தியமாகின்றன.

பேருந்து பயணம் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது ஈரோடுதான். எப்போதுமே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டுதான் பயணிப்பேன்.. பேருந்து பயணிக்கும் பொழுது என்னுடனே பயணிக்கும் முழுமையாக பூசப்படாத நால்வழிப் பாதையும் நடுவே தோண்டிக் கொண்டிருக்கும் தோண்டி இயந்திரங்களையும் பார்த்துக் கொண்டே நினைத்துக் கொள்வேன்... மனதை இப்படித் தோண்டி எடுக்க ஏதாவது இயந்திரம் இருக்கிறதா என்று...

மரங்கள், செடிகள், தார்ச்சாலைக்கு வெளியே மண்பாதை, தார்ச்சாலையின் நடுவே பூசப்பட்டிருக்கும் கோடுகள்... எல்லாமே.... ஒரு புதிய அனுபவம்.

நகரம் தாண்டி நகரும் பேருந்து...

பேருந்துகள் இரு நகரங்களுக்கு இடைப்பட்ட கிராம வெளிகளைத் தாண்டித்தான் செல்கின்றன. பெருந்துறை டூ கவுந்தப்பாடி, கவுந்தப்பாடி டூ ஓடத்துறை கிராமப் பாதைகளில் செல்லும் பொழுது, கிராம வாசனைகளும், பேருந்தை முத்தமிட்டுச் செல்லும் முற்செடிகளும், மரங்களும் நம்மை வேறு உலகுக்குக் கொண்டு செல்லும்.,,, இந்தியாவில் எத்தனையோ லட்சம் ஓடத்துறைகள், எத்தனையோ லட்சம் கவுந்தப்பாடிகள்...

கவிதைக்கான விமர்சனம் சொல்ல மறந்தேனே!!

உடன் வருவதாய் ஓடி வரும் நிலவுக்கும்...
விழி மூடி மறுப்பு தெரிவிக்கிறார்.
பேச ஆசையாய் வரும் தென்றலை...
சன்னல் மூடி துரத்தி விடுகிறார்.

இயற்கையை அங்குலம் அங்குலமாக ரசிக்க முடியாதவர்கள், அல்லது ரசிக்கத் தெரியாதவர்கள்... தென்றல் தானாக வந்து தொடும் பொழுதும், துரத்தி விடுவதாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் சசி. ஒருமுறை நான் எங்கள் ஊரில் உள்ள கோவிலினருகே பார்வையற்ற பிச்சைக்காரரைச் சந்தித்தேன்... அவரிடம், உங்களுக்கு அருகே உள்ள மரம் செடி கொடி இதையெல்லாம் எப்படி கற்பனை செய்து பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்,

இயற்கை எப்படி இருக்கிறது என்று எனக்குத் தெரியாது... ஆனால் இயற்கையை என்னால் உணர்ந்து கொள்ளமுடியும். அது என்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது... எனக்கு பார்வை பறிபோனது கூட இயற்கையாகவே உணருகிறேன் என்றார்....

விழித்தபடி பயணம் செய்கிறோம்...
நானும் என் கனவுகளும்.

இரவுகளில் உற்ங்க, விழிக்கிறதா கனவுகள்?? அழகு.. நல்ல அழகான முரண்... ஆனால் நீங்கள் சொல்வது போல, யாரும் தனிமையில் இருப்பதில்லை... நான் தனிமையில் இருந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் நாட்களை எண்ணிப் பார்க்கும் பொழுது, என்னுடன் யாரோ இருந்தார்கள் என்று இன்று உணர்கிறேன். தனிமையைச் சுற்றியுள்ள வெறுமைகூட தனிமையை உறுதிபடுத்தாதல்லவா...

எப்படியும் அமைந்துவிடுகிறது வாழ்க்கையில்..
இது போல் சில பயணங்கள்.

பயணங்களில் எனக்கு இந்தமாதிரி அமைவதில்லை.. நான் அமைத்துக் கொள்வேன். ஏனெனில் நம்மைச் சுற்றிலும் இயற்கை சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை எனது சுயநலத்திற்கு அமைப்பதும் அமைக்காமல் போவது என்னுடைய திறமையாகும்.

சசி.... இந்த மாதிரி உணர்வுள்ள கவிதைகள், ஆறா ரணங்களை மயிலிறகால் தடவி மிதப்படுத்தும்.

வாழ்த்துக்கள்.

நாகரா
15-02-2009, 03:55 AM
கவிதை ஓட்டும்
சசிதரப் பேருந்தில்
அருமையான பயணம்
முடிந்த பின்னும்
மனதில் நிற்கிறது!

ஆதாவாவின் அழகு விமர்சனம்
மனதில் நிற்பதை அப்படியே
படம் பிடித்துக் காட்டுகிறது!

வாழ்த்துக்கள் சசிதரன்
நன்றி ஆதவா

சசிதரன்
16-02-2009, 05:08 AM

உங்கள் அழகான விமர்சனத்திற்கு நன்றி ஆதவா.
என் கவிதைகளில் பயணங்கள் நிறைந்திருப்பது உண்மையே ஆதவா. பயணங்களும் கனவுகளும் நிறைத்தே என் கவிதைகள் செய்கிறேன். ஏனெனில் அவை எனக்கு எளிதில் வாய்க்காதவை. நிஜங்களில் தவற விட்ட தருணங்களை கனவுகளில் வாழ்ந்து பார்க்கும் ஏக்கங்களே எனது கவிதைகள்.

//தனிமையைச் சுற்றியுள்ள வெறுமைகூட தனிமையை உறுதிபடுத்தாதல்லவா...//

மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஆதவா. வெறுமை துணை கொண்டால்... பின் அது என்ன தனிமை என்று கேட்கிறீர்கள்... எனது தனிமைகள்... மனம் வெறுமையை உணரும் தருணங்களை விட... சில நினைவுகளை உணரும் தருணங்களிலேயே வாய்க்கிறது. சற்று முரண்தான். என்ன செய்ய... மனம் அப்படிதானே...:)

சசிதரன்
16-02-2009, 05:09 AM
கவிதை ஓட்டும்
சசிதரப் பேருந்தில்
அருமையான பயணம்
முடிந்த பின்னும்
மனதில் நிற்கிறது!

ஆதாவாவின் அழகு விமர்சனம்
மனதில் நிற்பதை அப்படியே
படம் பிடித்துக் காட்டுகிறது!

வாழ்த்துக்கள் சசிதரன்
நன்றி ஆதவா

வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி நாகரா அவர்களே...:)

செல்வா
19-02-2009, 11:34 PM
பயணங்கள் முடிவதில்லை.... உண்மைதான்...
இந்த உலகில் நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான்...
இந்த உலக வாழ்க்கைப் பயணம் முடிந்தால் அதன்பின்
இன்னொரு பயணம் துவங்கி விடுகிறது....
கண்ணையும் கருத்தையும் திறந்து வைத்திருப்பவர்கள்
பயணத்தின் முழுபலனையும் அனுபவிக்கிறார்கள்...
கண்மூடித்தூங்குபவர்களோ... வாழ்க்கையின் இயற்கையின் சின்ன சின்ன சுகங்களை மறக்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்...
குறியிடாகக் கொள்ளும் அளவு ஆழம் நிறைந்தக் கவிதை...
வாழ்த்துக்கள் சசி....

பூமகள்
21-02-2009, 07:24 AM
சில கவிதைகள் படித்ததும் உடன் எதையுமே எழுத முடியாத அளவுக்கு மனம் பிழிந்து விடும்..

சசிதரன் அவர்களின் படைப்புகளில் நான் படிக்கும் முதல் கவிதை இது.. மனதில் சட்டென ஒட்டிக் கொண்டுவிட்டது. பாராட்டுகள்.

காரிருள் சூழ்ந்த
சன்னலோரப் பயணங்கள்
என்றுமே இதம் தருபவை தான்..

அத்தகைய இதம் இக்கவிதையை
படிக்கும் ஒவ்வொருவருக்கும்
அமைத்துக் கொடுத்திருக்கிறது..

சில வரிகளின் அமைப்பில்
வார்த்தைகள் கோர்வை இல்லாமலிருப்பது அல்லது திரும்ப திரும்ப ஒரே வார்த்தை அமைந்திருப்பது போன்ற பிரம்மை..

ஆயினும்.. இதயம் தொட்ட இக்கவிதை எல்லாவற்றையும் ஈடுகட்டிவிட்டது.

கவிதைக் கருவில் மிக லயித்தேன்..
இவ்வகை பயணங்களுடன் நிலவும்.. தென்றலும் பூமகளுக்கு நெருக்கமானவையே...!!

வாழ்த்துகள் சசி.. இன்னும் பல கவிதைகள் படையுங்கள்... பரிமாறுங்கள்..!

இளசு
21-02-2009, 09:37 AM
உயிர்த்தல், நகர்தல், பயணம் = வாழ்தல்..

மரணமும் ஒரு வகைப் பயணமே..

மூலக்கூறுகள் பிண்டமாகி உலவிப் பிரதிகள் எடுத்துப் பின்
மூலக்கூறுகளாய்ச் சிதறி, பரவி, சுழன்று....

பயணங்கள் முடிவதில்லைதான் - நமக்கு இதுவரை எட்டிய
பார்வை காட்டுமட்டும்!

கவிதைக்குப் பாராட்டுகள் சசி..
பூமகள் சொன்னதுபோல் இன்னும் சொற்செதுக்கல், கட்டமைவு கூடினால்
பொலிவும் கூர்மையும் கூடும்..

ஆதவனின் அழகிய விமர்சனம் கண்டு எனக்குள் ஆனந்தப் பொறாமை!
அதிலும் தனிமை +வெறுமை முரண் - மாணிக்கப்பரல்!
வாழ்த்துகள் ஆதவா...

சசிதரன்
25-02-2009, 10:01 AM
பயணங்கள் முடிவதில்லை.... உண்மைதான்...
இந்த உலகில் நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான்...
இந்த உலக வாழ்க்கைப் பயணம் முடிந்தால் அதன்பின்
இன்னொரு பயணம் துவங்கி விடுகிறது....
கண்ணையும் கருத்தையும் திறந்து வைத்திருப்பவர்கள்
பயணத்தின் முழுபலனையும் அனுபவிக்கிறார்கள்...
கண்மூடித்தூங்குபவர்களோ... வாழ்க்கையின் இயற்கையின் சின்ன சின்ன சுகங்களை மறக்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்...
குறியிடாகக் கொள்ளும் அளவு ஆழம் நிறைந்தக் கவிதை...
வாழ்த்துக்கள் சசி....

மிக்க நன்றி செல்வா...:)

சசிதரன்
25-02-2009, 10:05 AM
சில கவிதைகள் படித்ததும் உடன் எதையுமே எழுத முடியாத அளவுக்கு மனம் பிழிந்து விடும்..

சசிதரன் அவர்களின் படைப்புகளில் நான் படிக்கும் முதல் கவிதை இது.. மனதில் சட்டென ஒட்டிக் கொண்டுவிட்டது. பாராட்டுகள்.

காரிருள் சூழ்ந்த
சன்னலோரப் பயணங்கள்
என்றுமே இதம் தருபவை தான்..

அத்தகைய இதம் இக்கவிதையை
படிக்கும் ஒவ்வொருவருக்கும்
அமைத்துக் கொடுத்திருக்கிறது..

சில வரிகளின் அமைப்பில்
வார்த்தைகள் கோர்வை இல்லாமலிருப்பது அல்லது திரும்ப திரும்ப ஒரே வார்த்தை அமைந்திருப்பது போன்ற பிரம்மை..

ஆயினும்.. இதயம் தொட்ட இக்கவிதை எல்லாவற்றையும் ஈடுகட்டிவிட்டது.

கவிதைக் கருவில் மிக லயித்தேன்..
இவ்வகை பயணங்களுடன் நிலவும்.. தென்றலும் பூமகளுக்கு நெருக்கமானவையே...!!

வாழ்த்துகள் சசி.. இன்னும் பல கவிதைகள் படையுங்கள்... பரிமாறுங்கள்..!

உங்கள் விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது தோழி. உங்களை பற்றி இந்த மன்றத்தில் பலர் சொல்லி படித்திருக்கிறேன். நீங்கள் பாராட்டியது இன்ப அதிர்ச்சி... நீங்கள் சொல்வது போல் வார்த்தை அமைப்பில் கவனம் செலுத்த முயற்சிக்கிறேன். பாராட்டுக்கு நன்றி...:)

சசிதரன்
25-02-2009, 10:07 AM
உயிர்த்தல், நகர்தல், பயணம் = வாழ்தல்..

மரணமும் ஒரு வகைப் பயணமே..

மூலக்கூறுகள் பிண்டமாகி உலவிப் பிரதிகள் எடுத்துப் பின்
மூலக்கூறுகளாய்ச் சிதறி, பரவி, சுழன்று....

பயணங்கள் முடிவதில்லைதான் - நமக்கு இதுவரை எட்டிய
பார்வை காட்டுமட்டும்!

கவிதைக்குப் பாராட்டுகள் சசி..
பூமகள் சொன்னதுபோல் இன்னும் சொற்செதுக்கல், கட்டமைவு கூடினால்
பொலிவும் கூர்மையும் கூடும்..

ஆதவனின் அழகிய விமர்சனம் கண்டு எனக்குள் ஆனந்தப் பொறாமை!
அதிலும் தனிமை +வெறுமை முரண் - மாணிக்கப்பரல்!
வாழ்த்துகள் ஆதவா...

நிச்சயம் இனிவரும் கவிதைகளில் கவனம் செலுத்துகிறேன் அண்ணா... :)