PDA

View Full Version : இந்தியா-நியூசிலாந்து தொடர்



அறிஞர்
13-02-2009, 03:29 PM
இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடியது.

ஆனால் அடுத்த கடினமான தொடர் அவர்களுக்கு காத்திருக்கிறது.

பிப்ரவரி 25ந்தேதி முதல் - ஏப்ரல் 7ந்தேதி வரை T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது.
அட்டவணை
பிப்ரவரி 25 - முதல் T20
பிப்ரவரி 27 - 2வது T20
----------------
மார்ச் 3 - முதல் ஒருநாள்
மார்ச் 6 - 2வது ஒருநாள்
மார்ச் 8 - 3வது ஒருநாள்
மார்ச் 11 - 4வது ஒருநாள்
மார்ச் 14 - 5வது ஒருநாள்
------------------
மார்ச் 18-22 - முதல் டெஸ்ட்
மார்ச் 26-30 - 2வது டெஸ்ட்
ஏப்ரல் 3-7 - 3வது டெஸ்ட்

போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3 தமிழக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 20-ம் தேதி நியூசிலாந்து புறப்பட்டு செல்கிறது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் 25-ம் தேதியும் அடுத்த போட்டி வெலிங்டனில் 27-ம் தேதியும் நடக்கிறது.
இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று காலை சென்னை சேப்பாக்கம் ஸ்டேடிய வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நடந்தது.

ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழுவினர், கேப்டன் டோனி ஆகியோர் அணியை தேர்வு செய்தனர். டெஸ்ட் அணியில் மும்பையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர்கள் பாலாஜி, முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 20-20ல் சச்சினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்

டெஸ்ட்:

டோனி (கேப்டன்), சச்சின், சேவாக், காம்பீர், டிராவிட், லட்சுமண், யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ஹர்பஜன் சிங், அமிர்மிர்ஷா, ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, முனாப் பட்டேல், பாலாஜி, தவால் குல்கர்னி.

ஒருநாள் போட்டி:

டோனி (கேப்டன்), சச்சின், சேவாக், காம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித்ஷர்மா, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரவீன்குமார், இர்பான் பதான், முனாப் பட்டேல், ஓஜா, தினேஷ் கார்த்திக்.

20 ஓவர் போட்டி:

டோனி (கேப்டன்), சேவாக், காம்பீர், யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் ஷர்மா, யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, பிரவீன்குமார், இர்பான் பதான், முனாப் பட்டேல், ஓஜா, தினேஷ் கார்த்திக்.

arun
15-02-2009, 05:34 PM
ஆகா மீண்டும் அணியில் தினேஷ் கார்த்திக் ஆனால் ஆடும் லெவனில் இருப்பது கடினமே ...

பாரதி
15-02-2009, 11:19 PM
ஆமாம். அவர் கூடுதல் காப்பாளாராக சேர்க்கப்பட்டுள்ளார். தோனி ஆடாத நிலையில் மட்டுமே அவருக்கு ஆடும் வாய்ப்பு கிட்டும் என்றே தோன்றுகிறது.

aren
16-02-2009, 12:33 AM
தமிழ்நாட்டு வீரர்கள் ஆடும் 11*ல் இடம் பிடிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

இருந்தாலும் இந்த அளவிற்காவது உள்ளே வரமுடிந்தது பாராட்டப்படவேண்டிய விஷயம்.

அய்யா
24-02-2009, 05:50 PM
நாளை முதலாவது டி 20 போட்டி.

பகல் 11.30க்கு தூர்தர்ஷன் ஒளிபரப்புகிறது.

அறிஞர்
24-02-2009, 06:48 PM
இந்தியர்களுக்கு பகல்.. எனக்கு இரவு 1.00 மணி..

நல்ல லிங்க் கிடைத்தால் பார்க்க வேண்டும்.

aren
25-02-2009, 01:11 AM
அங்கே காற்று அதிகம் அடிப்பதால் ஆடுவதில் சிரமம் இருக்கும். நம் மக்கள் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கவேண்டும். கொஞ்சம் கஷ்டம்தான்.

அறிஞர்
25-02-2009, 06:27 AM
இந்தியா 162/8 (20 ஓவர்)... மூத்த வீரர்கள் தடவல்.. ரெய்னா 61 ரன்கள்.

பார்ப்பதற்கு நல்ல தளமேதும் உள்ளதா..

மன்மதன்
25-02-2009, 06:52 AM
குறைவான ஓட்டங்கள்..

வெற்றி பெறுவது கடினம்..

இந்திய பந்து வீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டிங்கில் இருக்கிறது வெற்றி..!!

மதி
25-02-2009, 08:19 AM
நியூஸிலாந்து அணியினர் வென்றனர்...
இந்திய அணியினர் இன்னும் முயலவேண்டும்... வெற்றிக்கனியினைப் பறிக்க.

அறிஞர்
25-02-2009, 01:33 PM
இர்பான் பதானை மட்டையாளராக்கி விடலாம்.
அவர் அல்வா போல் பந்து வீசி... ரன்களை அள்ளிக்கொடுத்தார். (3 ஓவரில் 38 ரன்கள்).
யுவராஜ் 2வது டவுனில் இறங்கவேண்டும். டோனி வந்தவுடனே போல்ட்...
அடுத்த போட்டியிலாவது இந்தியா போராடுமா... பார்ப்போம்.

ஓவியன்
25-02-2009, 01:45 PM
இர்பான் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினால், பந்து வீச்சு மோசமாகிறது...
பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தினால், துடுப்பாட்டம் மோசமாகிறது...

இரண்டில் எதாவது ஒன்றையே கவனிப்பது நல்லது..!!

அறிஞர்
25-02-2009, 01:50 PM
இர்பான் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தினால், பந்து வீச்சு மோசமாகிறது...
பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்தினால், துடுப்பாட்டம் மோசமாகிறது...

இரண்டில் எதாவது ஒன்றையே கவனிப்பது நல்லது..!! ஆக மொத்தம் சிறந்த ஆல்ரவுண்டராக அவர் ஜொலிப்பதில்லை என்கிறீர்கள்.
அடுத்த ஆட்டத்தில் இடம் பெறமாட்டார் என எண்ணுகிறேன்.

ஓவியன்
25-02-2009, 01:53 PM
அதாவது ஒரே தருணத்தில் அவரால் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை போலுள்ளது, முன்னர் துடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தி, முன்வரிசையில் ஆடிய காலத்தில் பந்து வீச்சில் சொதப்பி அணியினை விட்டே ஒதுக்கப்பட்டிருந்தார் என்பதையும் மனதில் கொண்டு நான் கூறிய கருத்து அது..!!

arun
25-02-2009, 04:36 PM
162 என்பது கொஞ்சம் எளிய இலக்கு தான் முதல் மூன்று ஓவரில் இருந்த கட்டுக்கோப்பான பந்து வீச்சு அடுத்த ஓவர்களில் இல்லை மேலும் பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை

அடுத்தடுத்த போட்டிகளில் சீறப்பாக செயல்படுவர்கள் என நம்பலாம்

arun
25-02-2009, 04:38 PM
இர்பான் பதானை மட்டையாளராக்கி விடலாம்.
அவர் அல்வா போல் பந்து வீசி... ரன்களை அள்ளிக்கொடுத்தார். (3 ஓவரில் 38 ரன்கள்).
யுவராஜ் 2வது டவுனில் இறங்கவேண்டும். டோனி வந்தவுடனே போல்ட்...
அடுத்த போட்டியிலாவது இந்தியா போராடுமா... பார்ப்போம்.

ஆம் சரியாக சொன்னீர்கள் ஆனால் தற்போது நமக்கு தேவை பந்து வீச்சாளர்

அறிஞர்
27-02-2009, 06:48 AM
மீண்டும் மோசமான இந்திய ஆட்டம் 149/6
நியூசிலாந்து எளிதாக வெற்றி பெறும்

"பொத்தனூர்"பிரபு
27-02-2009, 07:53 AM
http://indnz-oox.blogspot.com/

"பொத்தனூர்"பிரபு
27-02-2009, 07:54 AM
http://indnz-oox.blogspot.com/

இங்க்கே சென்று நேரடியாக பார்க்கவும்

"பொத்தனூர்"பிரபு
27-02-2009, 07:56 AM
அதிகமாக அடித்து ஆட முயர்ச்சிப்பதே தோல்விக்கு காரணம்
கட்டுகோப்பு இல்லை
இந்த போட்டியில் தோனி 30 பந்துக்கு 28 ரன்கள் மட்டும் எடுத்து எண்ணிக்கை உயர்த்துவதை தடுத்துவிட்ட்டார்

அய்யா
27-02-2009, 09:49 AM
உலக சாம்பியன்கள் ஊற்றிக்கொண்டார்களா.. பலே!!

அறிஞர்
27-02-2009, 02:44 PM
உலக சாம்பியன்கள் ஊற்றிக்கொண்டார்களா.. பலே!!
யானைக்கும் அடிசறுக்குமில்லே.. அதான் இது...
50 ஓவரில் ரொம்பவே சிரமப்படப் போகிறார்கள்...

அறிஞர்
27-02-2009, 02:45 PM
http://indnz-oox.blogspot.com/
நன்றி பிரபு..

arun
27-02-2009, 04:27 PM
போன முறை ரன்களை எடுக்க அவசரப்பட்டு ஆடினார்கள் இந்த முறை அதற்கு தலைகீழாக ஆடினார்கள் ஆனால் ரிசல்ட்டில் மாறுதல் இல்லை

மன்மதன்
28-02-2009, 11:15 AM
இந்த இரு போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

சரியாக விளையாடாததா?
அங்கே நிலவும் குளிர் சூழலா?

aren
01-03-2009, 02:13 AM
20/20 போட்டி அடிப்படையில் ஒரு குழுவின் நிலையை சரியாக அறியமுடியாது. இதில் வெற்றி தோல்வி ஓரிரு ஓவர்களில் நிர்ணயக்கப்படுகிறது.

ஆகையால் ஒரு நாள் கிரிக்கெட்டில் எப்படி நம் மக்கள் ஆடுகிறார்கள் என்று பார்க்கலாம், பின்னர் முடிவு செய்யலாம்.

அறிஞர்
03-03-2009, 02:12 PM
என்னமா கலக்கிட்டாங்க... இந்தியா....
எப்படியோ ஜெயிச்சுட்டோம்ல.. என்ற பாணியில் இருந்தது.. இந்தியாவின் வெற்றி...
-----
வெகு காலத்திற்கு பிறகு.. பொறுப்போடு விளையாட்டை ஆரம்பித்த சேவாக்-டெண்டுல்கர் கூட்டணியை கண்ட இயற்கைக்கு என்ன வந்ததோ... மழை பெய்ய ஆரம்பித்தது...
38 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டது... டெண்டுல்கர் (20) அவுட்...
அடுத்து தோனி களமிறங்கினார். பொறுப்போடு ஒரு முனையில் விக்கெட்டை காப்பாற்றி விளையாட். மற்றொரு முனையில் பொறுப்போடு சேவாக் அடித்து கொண்டிருந்தார். பின் சேவாக் (77) அவுட்... யுவராஜ் (2) வந்தார், பந்துகளை வீணடித்தார்.. பின் ரன் அவுட்..
அடுத்து.. ரெய்னா (66)... வான வேடிக்கை நடத்தி அவுட் ஆனார்... யூசுப் பதான் (20*) தன் பங்குக்கு சில வானவேடிக்கை நடத்தினார். தோனியின் (84*) பொறுப்பான ஆட்டம் சிறப்பு. இந்தியா நல்ல ரன் எடுத்தது 273/4 (38 ஓவர்).

நியூசிலாந்து 2 ஓவரிலே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. ரன்விகிதம் குறைந்தது. 3விக்கெட் சிறப்பாக விளையாடி ரன்விகிதத்தை அதிகரித்தது. (111/4 20.5 ஓவர்) ஆனால் மீண்டும் மழை.. ஆட்டம் 28 ஓவராக குறைக்கப்பட்டது. 216 ரன்கள் எடுக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டது. 7.1 ஓவரில் 105 ரன்கள்...
அடித்து விளையாட முற்பட்டு நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து, கடைசியில் 162/9 எடுத்தது.

இந்தியா 53 ரன் வித்தியாசத்தில் வெற்றி....
தோனி ஆட்ட நாயகன்.

arun
06-03-2009, 02:48 AM
இரண்டாம் ஒரு நாள் போட்டியில் தற்போது இந்தியா 138/1 21 ஓவர்கள்

சேவாக் : 54 (அவுட்)
சச்சின் : 61
காம்பீர் : 19

போட்டி 44 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது

சிவா.ஜி
06-03-2009, 04:19 PM
அதிகமாக அடித்து ஆட முயர்ச்சிப்பதே தோல்விக்கு காரணம்
கட்டுகோப்பு இல்லை
இந்த போட்டியில் தோனி 30 பந்துக்கு 28 ரன்கள் மட்டும் எடுத்து எண்ணிக்கை உயர்த்துவதை தடுத்துவிட்ட்டார்

முப்பது பந்துக்கு 28 ரன் எடுக்காமல் 280 ரன்னா எடுப்பார்கள்?

அறிஞர்
06-03-2009, 04:30 PM
முப்பது பந்துக்கு 28 ரன் எடுக்காமல் 280 ரன்னா எடுப்பார்கள்?
அவர் எதிர்பார்ப்பது.. 30 பந்தில் 30க்கு மேற்பட்ட ரன்கள்....

ஓவியன்
06-03-2009, 04:32 PM
முப்பது பந்துக்கு 28 ரன் எடுக்காமல் 280 ரன்னா எடுப்பார்கள்?

ஆஹா சிவா, டோனி அன்று மற்றைய வீரர்களை விட கொஞ்சம் அடக்கி வாசித்து விட்டாரென்பதற்காக பிரபு அப்படிக் கூறினார் போலுள்ளது....

மற்றும்படி 30 பந்திலே, எல்லாமே சிக்சராக அடித்தால் ஒரு 180 ஓட்டங்களை அடிக்கலாம், அத்துடன் அப்படி இப்படி எதாச்சும் பண்ணினா 200 ஐ நெருங்கலாமென நினைக்கிறன்....!! :D:D:D

ஓவியன்
06-03-2009, 04:40 PM
ஒரு நாள் போட்டிகள் முழுமையாக நடைபெற மழை அனுமதிக்கவில்லையாயினும், யுவராஜ் தவிர மற்றைய முன்னணி துடுப்பாட்டக்காரர்கள் நன்றாக ஓட்டங்களை குவித்து வருகின்றனர்....

குறிப்பாக டெண்டுல்கர், ஷேவக், தோனி மற்றும் விசேடமாக சுரேஷ் ரெய்னா, முதலாவது போட்டியில் அவரடித்த நான்கு சிக்சர்களும் அழகு...!!

குளிரும் குளிர் காற்றும் வீசும் மோசமான கால நிலையுள்ள களங்களில் இவ்வாறு சிறப்பாக துடுப்பெடுத்தாடுவது பாராட்டுக்குரியது...

"பொத்தனூர்"பிரபு
06-03-2009, 10:57 PM
///
டோனி அன்று மற்றைய வீரர்களை விட கொஞ்சம் அடக்கி வாசித்து விட்டாரென்பதற்காக பிரபு அப்படிக் கூறினார் போலுள்ளது....
///

அதே அதே
20 ஓவர் போட்டியில் மொத்தம் 120 பந்துகளே அதில் 30 க்கு 28 ரன் போதுமா????

"பொத்தனூர்"பிரபு
08-03-2009, 05:04 AM
அடடா !!!!
அடிச்சு துவைத்துவ்விட்டார்கள்

392 / 4

சேவக் - 3 ரன்கள்
சச்சின் - 163 (133) ஆட்டமிழக்காமல் ஓய்வில் சென்றார்
கம்பீர் - 13(27)
யுவராஜ் - 87 (60)
தோனி - 68 (58)
ரெய்னா - 38 (18) ஆட்டமிழக்காமல்


மொத்தம் 18 சிக்சர்கள்

ச்சச்சின் 5 ,யுவராஜ் 6 , ரெய்னா 5 , தோனி 2 என சிக்சர் அடித்து கலக்கினார்கள்

அய்யா
08-03-2009, 02:54 PM
மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி!

2-0 என்ற கணக்கில் முன்னிலை!!

ஓவியன்
08-03-2009, 03:11 PM
வெற்றி பெற்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்..!!

இத்தனை ஓட்டங்களைக் குவித்தும் அசராமல் ஓட்ட எண்ணிக்கையை 334 வரை துரத்திய நியூசிலாந்து வீரர்களுக்கும் பாராட்டுக்கள் அதிலும் இறுதி வரிசையில் துடுப்பாட வந்தும் 32 பந்துக்களைச் சந்தித்து மூன்று சிக்சர்களும் 6 நான்கு ஓட்டங்களும் அடங்கலாக, மொத்தமாக 54 ஓட்டங்களை விளாசித் தள்ளிய மில்ஸூக்கு விசேட பாராட்டுக்கள்...

ஓவியன்
08-03-2009, 03:13 PM
COLOR="Navy"]யுவராஜ் 6[/COLOR]

சிக்சர் சித்துக்கு அப்புறம், சிக்சர் ராஜ் என்று யுவராஜை அழைக்கலாமோ...??

அறிஞர்
09-03-2009, 01:30 PM
இந்தியாவின் ஆட்டம் வெகு அருமையாக இருந்தது.. ரசித்து பார்த்தேன்.

இந்த வயதிலும் டெண்டுல்கர் அசத்துகிறார்.....
200 ரன்கள் அடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இந்தியாவின் பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை.. காட்ச் பிடிக்க விசேஷ பயிற்சி தேவை... இன்னும் ஒரு போட்டியில் ஜெயிப்பார்களா...

அய்யா
10-03-2009, 12:53 PM
. இன்னும் ஒரு போட்டியில் ஜெயிப்பார்களா...


அடுத்த போட்டியில் சச்சின் ஆடமாட்டாராமே..!

:)

அய்யா
11-03-2009, 02:53 PM
. இன்னும் ஒரு போட்டியில் ஜெயிப்பார்களா...


வென்றுவிட்டார்கள்!

போட்டியையும், தொடரையும்!!

அறிஞர்
11-03-2009, 04:00 PM
சேவாக்கின் ஆட்டம் கலக்கல்..

அவங்க அவங்க ஊருக்கு.. அவர்களை அடிப்பது.. தனிரகம்தான்...

வாழ்த்துக்கள் இந்திய அணியினருக்கு.

aren
11-03-2009, 04:58 PM
நம் மக்களுக்கு எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அதுதான் இந்த வெற்றியின் ரகசியம்.

என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்னும் வெற்றி தொடரட்டும்.

ஓவியன்
11-03-2009, 05:03 PM
வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்களும்....

போட்டிகள் முழுமையாக நடைபெற விடுவதில்லையென நியூசிலாந்து மழை கங்கணம் கட்டி நிற்கிறது போல, ஆனால் வெல்லாமல் விடுவதில்லையென இந்திய வீரர்களும் அடித்துத் துவைப்பதால் வெற்றி பெற்றிருக்கின்றனர்...

அடுத்து சச்சினை விட ஷேவக்குடன் கம்பீர் ஜோடி சேர்வது ஷேவக்கின் பலத்தினை அதிகரிக்கும் போலுள்ளது. ஐபிஎல் போட்டிகளிலும் சரி, அதற்குப் பின்னரும் சரி இது பலமுறை நிரூபணமாகியுள்ளது...

ஆனால் முதல் போட்டியில் சச்சின் அடித்த 163 நீண்ட நாட்களுக்கு அவரை தொடக்க ஆட்டக் காரராகவே வைத்திருக்கும் ஒரு காரணியாக அமையப் போகிறது. ஆனால் அணியின் நலனுக்காக சச்சினாகவே முன்வந்து 3 வது ஆட்டக் காராக களமிறங்கினால் நலம்...

சிவா.ஜி
11-03-2009, 05:49 PM
இன்னைக்கு ஆட்டத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சேவாக்கின் அதிரடி ஆட்டத்தையும், நியூசிலாந்து அணியினரின் விளக்கெண்னை குடித்த முகங்களையும் பார்க்க ஏக குஷியாக இருந்தது.

நம்ம மக்கள் சாதிச்சுட்டாங்கல்ல......!!!

இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.

அறிஞர்
12-03-2009, 06:29 PM
இன்னைக்கு ஆட்டத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சேவாக்கின் அதிரடி ஆட்டத்தையும், நியூசிலாந்து அணியினரின் விளக்கெண்னை குடித்த முகங்களையும் பார்க்க ஏக குஷியாக இருந்தது.

நம்ம மக்கள் சாதிச்சுட்டாங்கல்ல......!!!

இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.
அடுத்த போட்டி பார்க்க நாளை ரெடியாகுங்க...

இணைய இணைப்பு நல்ல வேகமாக இருந்தால் cric7.comல் TVU பிளேயர் மூலம் பார்க்கலாம். டீவியில் இணைந்து பார்த்தால் பிரமாதமாக இருக்கிறது.

"பொத்தனூர்"பிரபு
12-03-2009, 11:35 PM
சச்சினை விட ஷேவக்குடன் கம்பீர் ஜோடி சேர்வது ஷேவக்கின் பலத்தினை அதிகரிக்கும் போலுள்ளது. ஐபிஎல் போட்டிகளிலும் சரி, அதற்குப் பின்னரும் சரி இது பலமுறை நிரூபணமாகியுள்ளது...

ஆனால் முதல் போட்டியில் சச்சின் அடித்த 163 நீண்ட நாட்களுக்கு அவரை தொடக்க ஆட்டக் காரராகவே வைத்திருக்கும் ஒரு காரணியாக அமையப் போகிறது. ஆனால் அணியின் நலனுக்காக சச்சினாகவே முன்வந்து 3 வது ஆட்டக் காராக களமிறங்கினால் நலம்...
__________________

சச்சின் நல்லத்தேன் விளையாடுகிறார் அப்புறம் ஏன் மாற்றனும்??

அறிஞர்
14-03-2009, 06:25 PM
இலங்கையில் கடைசி ஆட்டத்தில் சொதப்பினது போல்...
நியூசிலாந்திலும் சொதப்பி.. இந்திய அணியினர் தோற்றார்கள்.

ஓவியன்
15-03-2009, 12:26 PM
சச்சின் நல்லத்தேன் விளையாடுகிறார் அப்புறம் ஏன் மாற்றனும்??


சச்சின் நினைத்தால் மூன்றாவது ஆட்டக்காரராகவும் நன்றாக ஆட முடியும், ஆனால் கம்பீர் ஷேவக்குடன் இணையும் போதெல்லாம் இருவருமே நன்றாக ஆடுகிறார்களே...

அறிஞர்
16-03-2009, 01:13 PM
சச்சின் நினைத்தால் மூன்றாவது ஆட்டக்காரராகவும் நன்றாக ஆட முடியும், ஆனால் கம்பீர் ஷேவக்குடன் இணையும் போதெல்லாம் இருவருமே நன்றாக ஆடுகிறார்களே...
இனி அடுத்த ஒருநாளுக்கு சற்று காத்திருக்கவேண்டும்... அதை அப்பொழுது யோசிப்போம்.

சச்சின் குணமாகி.. நல்ல நிலைக்கு வந்தாலே சிறப்பாக இருக்கும்.

"பொத்தனூர்"பிரபு
16-03-2009, 10:04 PM
/////
சச்சின் நினைத்தால் மூன்றாவது ஆட்டக்காரராகவும் நன்றாக ஆட முடியும், ஆனால் கம்பீர் ஷேவக்குடன் இணையும் போதெல்லாம் இருவருமே நன்றாக ஆடுகிறார்களே...
///

நீண்ட காலமாக சச்சின் துவக்க ஆட்டகாரராக சிறப்பாகவே செய்திருக்கிறார்.
சேவக் மற்றும் கம்பீர் ஜோடி சிறப்பாக செய்திருந்தாலும் ஆடிய போட்டிகள் எல்லாமே பேட்டிங்கிர்க்கு மிக மிக சாதகமான ஆடுகளாக்கள்
குறிப்பாக இந்தியா,வங்காளதேசம், இலங்கை தற்ப்போது ஆடிவரும் நியுசிலாந்தில் எல்லவற்றையும் விட மோசமான ஆடுகளங்கள்,கடைசியாகா ஆஸ்திரேலியவில் ஆடிய போட்டியில் சேவக்கின் ஆட்டத்தை கவனிக்க .
மேலும் சேவக் மற்றும் கம்பீர் இருவருமே வேகமாக ஆடகூடியவர்கள்
என்வே பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைந்தால் இருவருமே விரைவில் ஆட்டமிழக்கும் வாய்ப்பு அதிகம்.சச்சின் போன்ற பக்குவமானவர் துவக்கினால் சிறப்பாக இருக்கும். மேலு சச்சின் அதிரடியாக ஆரம்பிக்கமாட்டார் சில பந்துகளை நன்கு கவனித்துவிட்டு பிறகு ஆடகூடியவர் எனவே துவக்கவீரராக வந்தால் அவருக்கு சரியாகயிருக்கும்

அறிஞர்
21-03-2009, 05:33 AM
வெற்றி வெற்றி வெற்றி...
இந்தியா வெற்றி..
1976க்கு பிறகு.. இந்திய அணி..நியூசிலாந்து மண்ணில் அவர்களை வென்றுள்ளது.
ஹர்பஜன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்.
ஆட்டநாயகன் - உலக நாயகன் - டெண்டுல்கர்

பா.ராஜேஷ்
21-03-2009, 05:36 AM
இந்திய அணி மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
21-03-2009, 05:58 AM
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். மேலும் சாதிக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

aren
23-03-2009, 02:02 AM
வெற்றி பெற்ற இந்தியாவிற்கு என் வாழ்த்துக்கள். இந்த வெற்றி அடுத்த டெஸ்டிலும் தொடரவேண்டும் என்பதே என் விருப்பம்.

ஜாக்
23-03-2009, 06:17 PM
கடந்த சில வருடங்களில் இந்திய ஒற்றுமையுடன் செயல்பட்டு மிக திறமையுடன் விளையாடி வெற்றிவாகை சூடி வருகின்றதை பார்க்கும் போது மன விண்ணில் பறக்கிர*து

கண்டிப்பாக இந்த் டெஸ்ட் தொடை இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கை அப்போது இதைவிட அதிகமாக எனது மனதில் உள்ளதை சொல்லுகிறேன்:icon_b:

அறிஞர்
26-03-2009, 04:31 PM
இரண்டாம் டெஸ்ட்டில் இந்திய ஆட்டம் விறு விறுப்பில்லை.....

நியூசிலாந்து பலமாக இருக்கிறது. 351/4

அமரன்
27-03-2009, 09:07 AM
நியூசிலாந்து 619/9
இந்தியா 79/3

நியூசிலாந்து வீரர்களின் ஓட்ட எண்ணிக்கயைப் பாருங்கோ

Taylorc - 151
JD Ryder - 201
JEC Franklin - 52
BB McCullum - 115
DL Vettori - 55

ஜாக்
27-03-2009, 09:15 AM
நியூசிலாந்து 619/9
இந்தியா 79/3
நியூசிலாந்து வீரர்களின் ஓட்ட எண்ணிக்கயைப் பாருங்கோ
Taylorc - 151
JD Ryder - 201
JEC Franklin - 52
BB McCullum - 115
DL Vettori - 55
இவ்ளோ ஓட்டங்களை எடுக்க முக்கிய காரணம் இந்திய அணியின் படு மோசமான ஃபீல்டிங்க். ஆள் ஆளுக்கு போட்டி போட்டு கொண்டு கேட்சை கோட்டை விடுராங்க பார்க்கவே ரொம்ப கடுப்பா இருக்கு:sauer028::sauer028::sauer028:

இன்பா
27-03-2009, 09:24 AM
ஜாக் சொலவது உண்மை தான், வாய்புகளை நழுவவிட்டால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. தாக்கு பிடித்து ஆடி ட்ரா செய்துவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனல் கொஞ்சம் கிலி ஏற்படுத்திவிட்டார்கள். அடுத்தடுத்து மூன்று விட்கெட்டுகளை இழந்துவிட்டது வருத்தமளிக்கிறது.

நாளை ஆடுகளம் உலரும் வரை நம்பிக்கை நட்சத்திரமும் தடுப்புச்சுவரும் சுதாரித்து ஆடினார்களானால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

tkpraj
27-03-2009, 12:50 PM
ஜாக் சொலவது உண்மை தான், வாய்புகளை நழுவவிட்டால் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது. தாக்கு பிடித்து ஆடி ட்ரா செய்துவிடுவார்கள் என்று நினைத்தேன், ஆனல் கொஞ்சம் கிலி ஏற்படுத்திவிட்டார்கள். அடுத்தடுத்து மூன்று விட்கெட்டுகளை இழந்துவிட்டது வருத்தமளிக்கிறது.

நாளை ஆடுகளம் உலரும் வரை நம்பிக்கை நட்சத்திரமும் தடுப்புச்சுவரும் சுதாரித்து ஆடினார்களானால் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும்.

சற்றே கடினமான விஷயம் தான் வரிப்புலி

அறிஞர்
27-03-2009, 12:55 PM
450 ரன்கள் எடுத்தால் இந்தியாவுக்கு டிரா செய்யும் வாய்ப்புகள் உள்ளது.
----------
கட்டை மன்னன்கள் டிராவிட், லஷ்மண்... நின்று தலா 200 ரன்கள் அடிக்கவேண்டும்.

பரஞ்சோதி
27-03-2009, 03:52 PM
இந்த போட்டியானது நியூஸிக்கு தாரை வார்க்கப்பட்டது, அதனால் தான் தோனி கூட ஆடலை.

கையில் கிடைத்த கேட்சை எல்லாம் கீழே உருட்டி விட்டாங்க. இனிமேல் நாளை எத்தனை பேர் சும்மா ஜாலியாக அவுட் ஆகப்போறாங்கன்னு பாருங்க.

600 ரன்களுக்கு மேல் ஒரு அணி எடுத்திருக்கும் போது, அதுவும் அவங்களுக்கு வெற்றிக்கு வாய்ப்பு இருக்கும் போது ஒரு கேப்டன் இப்படி தான் ஆடுவாரா?

முடிந்த வரை காலத்தை கடத்துவதே சிறந்தது என்று சாதாரண தெரு வீரருக்கும் தெரியும் தானே.

tkpraj
28-03-2009, 06:05 AM
இந்த போட்டியானது நியூஸிக்கு தாரை வார்க்கப்பட்டது, அதனால் தான் தோனி கூட ஆடலை.


மிகச்சரியாக சொன்னீர்கள் பரம்ஸ் அண்ணா!
எனக்கும் இதே எண்ணம் தான் தோன்றியது
ஒரு நாள் தொடர் நமக்கு
டெஸ்ட் தொடர் நியூசிக்கு என

பரஞ்சோதி
28-03-2009, 08:07 AM
ராஜ், நீங்க சொன்ன மாதிரியும் இருக்கலாம்.

ஆனால், ஏற்கனவே 20/20 போட்டியை அவங்களுக்கு கொடுத்தாச்சு, மேலும் டெஸ்ட் தொடரை விறுவிறுப்பாக்க இவங்க இப்போட்டியில் தோற்று, அடுத்த போட்டியில் அசத்துவாங்க, தோனியும் வருவார், அவரது தொடர் வெற்றியும் தொடரலாம்.

அணித்தலைமையின் சொற்படி கேட்டு நடக்கும் யுவராஜ் சிங்கிற்கு இவ்வாண்டின் சிறந்த வீரர் பட்டம், அர்ஜீனா அவார்ட் இப்படி ஏதாவது கிடைக்கும்.

ஓவியன்
28-03-2009, 05:53 PM
அப்ப, நியூசிலாந்து வீரர்கள் நன்றாக ஆடவில்லை எங்கிறீங்களா...?? :rolleyes:

ராஜா
29-03-2009, 02:18 PM
அப்ப, நியூசிலாந்து வீரர்கள் நன்றாக ஆடவில்லை எங்கிறீங்களா...?? :rolleyes:

அதானே..?

பாரதி
30-03-2009, 01:03 AM
இப்போது இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்ட விபரம் : 321 / 3
கம்பீர் : 125*
லக்ஷ்மண் : 39*

தற்போது நியூஸிலாந்தின் ஓட்டங்களைக் காட்டிலும் 7 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 7 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கின்றன. ஆட்ட முடிவிற்கு 56 ஓவர்கள் மீதம் உள்ளன.

இன்று காலை சச்சின் 64 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

பாரதி
30-03-2009, 02:15 AM
இப்போது இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்ட விபரம் : 356 / 4
லக்ஷ்மண் : 58*
யுவ்ராஜ்சிங் : 0*

தற்போது நியூஸிலாந்தின் ஓட்டங்களைக் காட்டிலும் 42 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 6 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கின்றன. ஆட்ட முடிவிற்கு 37 ஓவர்கள் மீதம் உள்ளன. பந்து இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.

கம்பீர் 137 ஓட்டங்களில் பட்டேலின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ஓவியன்
30-03-2009, 02:20 AM
கம்பீர் ஆட்டமிழந்து விட்டதால் லக்ஸ்மனுடன் இணைந்து யாராவது நின்று நிலைத்து ஆட வேண்டிய கட்டாயம்...

யுவராஜ்சிங் சோபிப்பாரா...??

பாரதி
30-03-2009, 03:25 AM
இப்போது இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஓட்ட விபரம் : 442 / 4
லக்ஷ்மண் : 101*
யுவ்ராஜ்சிங் : 43*

தற்போது நியூஸிலாந்தின் ஓட்டங்களைக் காட்டிலும் 128 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 6 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்கின்றன. ஆட்ட முடிவிற்கு 25 ஓவர்கள் மீதம் உள்ளன.

ஆட்டம் நிச்சயம் சமநிலையில் முடியும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

பாரதி
30-03-2009, 03:58 AM
இரண்டு அணிகளும் ஆட்டம் சமனில் முடிந்தது என்பதாக ஒப்புக்கொண்டு ஆட்டத்தை நிறுத்திவிட்டன.

இறுதியாக இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஓட்ட விபரம் :
476 / 4

லக்ஷ்மண் : 124*
யுவ்ராஜ்சிங் : 54*

aren
30-03-2009, 05:29 AM
இந்தியா நிலமைக்குத் தகுந்தமாதிரி ஆடி ஆட்டத்தை டிராவில் முடித்தது.

இந்த இந்திய டீம் எதற்கும் கவலைப்படாத அணி என்று இன்னொரு முறை வெளியே காட்டியிருக்கிறது.

இது நல்ல திருப்பம். இந்திய அணிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று இதன்மூலம் தெரிகிறது. பாராட்டுக்கள்.

xavier_raja
30-03-2009, 06:29 AM
இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பிறகு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஓர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. சீனியர் ஆடகாரர்கள் அனைவரும் நன்றாக தங்கள் அனுபவத்தினை வெளிபடுத்திய விதம் அருமை. மிகவும் நிறைவான ஒரு மாட்சை பார்த்த திருப்தி. மூன்றாவது மட்சில் வெற்றி பெற்று அல்லது டிரா செய்து :) தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாழுத்துக்கள்

அறிஞர்
30-03-2009, 01:13 PM
கட்டை மன்னர்களின் (டிராவிட், லஷ்மண்) வரிசையில் கம்பீரும் இடம்பிடித்துக் கொண்டார். 11 மணி நேர விளையாட்டு அற்புதம்.

எப்படியோ டிரா செய்துவிட்டனர்....

ஜாக்
30-03-2009, 01:19 PM
கட்டை மன்னர்களின் (டிராவிட், லஷ்மண்) வரிசையில் கம்பீரும் இடம்பிடித்துக் கொண்டார். 11 மணி நேர விளையாட்டு அற்புதம்.
காம்பீர் எப்போது அதிரடியாக ஆடக்கூடியவர் ஆனால் இந்த முறை நிலமைய புரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தாற் போல் விளையாடியது மிகவும் பாராட்ட்க்குறியது

மேலும் கடைசி நாளில் சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று எண்ணின்னேன் அதே போல் அனைவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஆடி போட்டியை சமன் செய்து தொடரில் பெற்ற முன்னிலையை தக்க வைத்து கொண்டனர்

கடைசி போட்டியில் வென்று தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் தொடரை கப்பற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்

அறிஞர்
30-03-2009, 01:23 PM
சூழ்நிலைக்கேற்ப விளையாடுபவரே.. சிறந்த வீரர்...
வாழ்த்துக்கள் கம்பீர், டிராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மண், யுவராஜ்..

பரஞ்சோதி
30-03-2009, 01:25 PM
கம்பீரின் ஆட்டமும் இலட்சுமணனின் நிதானமும், டிராவிட்டின் வழக்கமாக பாதுக்காப்பு ஆட்டமும் போட்டியின் முடிவை மாற்றி விட்டது.

போராடி தோல்வியை தவிர்த்த அனைவருக்கும் என் பாராட்டுகள்.

அடுத்த போட்டியில் தோனி ஆட வருவாராயின் ஆட்டம் 2-0 என்ற வகையில் தொடரை கைப்பற்றலாம். ஆடுகளம் இதே ஆடுகளம் போல் மாற்றினால் 1-0 என்று முடியும்.

அறிஞர்
30-03-2009, 01:26 PM
இந்த போட்டியில் டிராவிட்டுக்கு தவறான முடிவு கொடுத்ததால் நடுவருக்கு அபராதம் என கேள்விப்பட்டேன்.

ஜாக்
30-03-2009, 01:33 PM
இந்த போட்டியில் டிராவிட்டுக்கு தவறான முடிவு கொடுத்ததால் நடுவருக்கு அபராதம் என கேள்விப்பட்டேன்.
அம்யெருக்கு அபராதமா இந்த செய்தியை கேள்விபடவில்லையே கொஞ்சம் விபராக மூற இயலுமா:confused:

மன்மதன்
30-03-2009, 02:05 PM
தோனி ஆடலைனா கூட நம்ம ஆளுங்க நிலைமைய புரிஞ்சுகிட்டு
ஆடுறாங்க.. சந்தோசமா இருக்கும். இரண்டு விக்கெட்டுகள் முன்னமே
விழுந்திருந்தா கூட இந்தியாவிற்கு தோல்வி கிடைத்திருக்கும். டெஸ்டில்
கடைசி ஆர்டரில் வருபவர்களை நம்ப முடியாது.

கம்பீர் கம்பீரம்..

ராஜா
30-03-2009, 03:42 PM
லக்ஸ்மனுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்குக் கவலை இல்லே..!

அதுவரை, வழக்கம் போல அவர் ஒவ்வொரு டெஸ்டிலும் 30 ஓட்டங்களுக்குள் எடுத்து ஆட்டமிழப்பார்..!

aren
30-03-2009, 04:02 PM
இந்த போட்டியில் டிராவிட்டுக்கு தவறான முடிவு கொடுத்ததால் நடுவருக்கு அபராதம் என கேள்விப்பட்டேன்.

எங்கே உங்கள் கோர்டிலா?

xavier_raja
31-03-2009, 09:18 AM
நடுவருக்கு அபராதம் என்பதெல்லாம் சும்மா... அப்படி பார்த்தல் ஸ்டீவ் bucknor அவர்களுக்கு எத்தனை முறை அபராதம் போடுவது.

அறிஞர்
02-04-2009, 10:54 PM
நியூசிலாந்து டாஸ் வென்று... இந்தியா பேட்டிங்க்...

ஆரம்பம் முதலே ஒருநாள் போட்டி போல விளையாடுகிறார்கள்.

இந்தியா 62/0 12 ஓவர்

அறிஞர்
02-04-2009, 10:55 PM
நடுவருக்கு அபராதம் என்பதெல்லாம் சும்மா... அப்படி பார்த்தல் ஸ்டீவ் bucknor அவர்களுக்கு எத்தனை முறை அபராதம் போடுவது.
என் நண்பர் cricinfoல் அந்த பதிவை கண்டதாக சொன்னார். பிறகு அதை கண்டுபிடிக்க இயலவில்லை என வருத்தப்பட்டார்.

aren
03-04-2009, 03:16 AM
திராவிடும் அவுட் ஆகிவிட்டார் 204/6

இந்தியாவிற்கு கொஞ்சம் திண்டாட்டம்தான்

பாரதி
03-04-2009, 06:24 AM
இன்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி ஒன்பது துடுப்பாட்டக்காரர்களை இழந்து 375 ஓட்டங்களை சேர்த்துள்ளது. சச்சின், ஹர்பஜன், தோனி ஆகியோர் அரை சதமடித்தனர்.சர்மா 15 ஓட்டங்களுடனும், முனாஃப் படேல் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

tkpraj
03-04-2009, 06:30 AM
சரி சரி எப்படியாவது டிராவிலாவது முடிக்க சொல்லுங்கப்பா?

aren
03-04-2009, 06:35 AM
கடைசி ஆட்டக்காரர்கள் நன்றாக மட்டையடித்தால் இந்தியா 375 ஓட்டங்களை முதல்நாளே குவித்திருக்கிறது. இன்னும் ஒரு விக்கெட் கைவசம் இருக்கிறது. நாளை காலை நம் வீரர்கள் எப்படி நியூஜிலாந்திற்கு எதிராக பந்து வீசுகிறார்கள் என்று பார்க்கலாம். அதன்படியே நமக்கு வெற்றியா அல்லது தோல்வியா என்று கணிக்கமுடியும்.

இந்தியா இந்த ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றுமா?

பரஞ்சோதி
03-04-2009, 08:49 AM
மட்டையடிக்கு சாதகமான மைதானம் என்று சொல்றாங்க, இருந்தாலும் நம்மவர்கள் நியூஸிலாந்தை 300க்குள் சுருட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.

அறிஞர்
03-04-2009, 01:09 PM
மட்டையடிக்கு சாதகமான மைதானம் என்று சொல்றாங்க, இருந்தாலும் நம்மவர்கள் நியூஸிலாந்தை 300க்குள் சுருட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.
உம் வாக்கு பலிக்கட்டும்.... :mini023::mini023::mini023::mini023::mini023::mini023:

பாரதி
04-04-2009, 04:21 AM
நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 197 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது. ஜாஹீர்கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மெக்கிண்டோஷ் 32 ஓட்டங்களையும், டெய்லர் 42 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்க உள்ளது.

tkpraj
04-04-2009, 04:45 AM
மட்டையடிக்கு சாதகமான மைதானம் என்று சொல்றாங்க, இருந்தாலும் நம்மவர்கள் நியூஸிலாந்தை 300க்குள் சுருட்டுவாங்கன்னு நினைக்கிறேன்.


உம் வாக்கு பலிக்கட்டும்.... :mini023::mini023::mini023::mini023::mini023::mini023:
பலித்து விட்டதே

இன்பா
04-04-2009, 05:40 AM
நமது அணி 230 + ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது... மேலும் 200 + ஓட்டங்கள் எடுத்தால் வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைக்கிரேன்.

xavier_raja
04-04-2009, 05:42 AM
இந்தியா 2வது இன்னிங்க்சில் 500 lead கொடுத்து அவர்களை விளையாட சொன்னால் நமக்குத்தான் வெற்றி, 41 வருடங்களுக்கு பிறகு series வெற்றியும் நமக்குத்தான். இந்தியா வெற்றி பெற வாழ்த்துகள்.

anna
04-04-2009, 08:50 AM
இந்திய அணி வெற்றி பெறட்டும். 34 ஆண்டு கால சரித்திரம் மாறட்டும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு.

பரஞ்சோதி
04-04-2009, 08:57 AM
இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், டிராவிட், சச்சின் போன்றோர் தனிப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்த இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். 375+ ரன்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்.

ஹர்பஜன் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சில் கலக்கலாம்.

மன்மதன்
04-04-2009, 12:36 PM
இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், டிராவிட், சச்சின் போன்றோர் தனிப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்த இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். 375+ ரன்கள் வெற்றிக்கு வழி வகுக்கும்.

ஹர்பஜன் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சில் கலக்கலாம்.


உம் வாக்கு பலிக்கட்டும்..!!

aren
05-04-2009, 02:18 AM
208/3 டெண்டுல்கரும் அவுட்.

காம்பீர்தான் இன்னும் ஆடிக்கொண்டு இருக்கிறார்.

நம் மக்கள் குறைந்தது 400வது இரண்டாவது இன்னிங்ஸில் அடிக்கவேண்டும்.

பரஞ்சோதி
05-04-2009, 05:27 AM
கம்பீர் கம்பீரமாக ஆடி 167 ரன்கள் எடுத்தார், தொடர் நாயகன் பட்டம் அவருக்கு தான். இன்றே நம்மவர்கள் 550+ ரன்களில் நியூஸியை ஆட அழைக்கலாம். அல்லது நாளை 650+ ரன்கள் ஏத்திட்டு அழைக்கலாம்.

aren
05-04-2009, 06:52 AM
நாளை காலையில் இன்னும் ஒரு மணிநேரம் ஆடிவிட்டு ஆட்டத்தை முடித்துக்கொண்டு, நியூஜிலாந்தின் பத்து விக்கெட்டுக்களையும் எடுக்கப் பார்ப்பார்கள்.

இந்தியா வெற்றி பெறுவதற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதி
06-04-2009, 12:16 AM
நண்பர்கள் கூறியது போல இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 434 ஓட்டங்களுக்கு தனது ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்து விட்டது. நியூஸிலாந்து அணிக்கு 617 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிஞர்
06-04-2009, 02:33 AM
67/2 நியூசிலாந்து... இன்னும் 4 விக்கெட்டுகளை இன்று எடுத்தால்.. இந்தியா எளிதாக வெற்றி பெறும்.

aren
06-04-2009, 03:23 AM
அறிஞரே, நீங்கள் கேட்ட நான்கு விக்கெட்டுக்களை இந்தியா வீழ்த்தியாகிவிட்டது. இந்தியா வெல்லுமா?

ஓவியன்
06-04-2009, 03:31 AM
அறிஞரே, நீங்கள் கேட்ட நான்கு விக்கெட்டுக்களை இந்தியா வீழ்த்தியாகிவிட்டது. இந்தியா வெல்லுமா?

ம்ஹூம், அறிஞர் கேட்டது இன்னும் நான்கு விக்கட்டாச்சே.......??? :D

அதற்கு இன்னும் இரண்டு விக்கட் வேண்டுமே...!! :rolleyes:


67/2 நியூசிலாந்து... இன்னும் 4 விக்கெட்டுகளை இன்று எடுத்தால்.. இந்தியா எளிதாக வெற்றி பெறும்.

:D:D:D:icon_rollout::D:D:D

aren
06-04-2009, 04:01 AM
அப்படியே பத்து விக்கெட்டுக்களும் விழுந்துவிட்டால் போதும் என்பார்கள் நம் மக்கள்.

aren
06-04-2009, 04:03 AM
டெய்லரும் பிராங்கிளினும் கலக்குகிறார்கள்.

யாரோ ஒருவர் சொல்கிறார், இதே வேகத்தில் நியூஜிலாந்து ஆடினால் நாளை ஆட்டமுடிவில் வென்று விடுவார்கள் என்கிறார். இதற்கு என்ன சொல்வது.

பரஞ்சோதி
06-04-2009, 05:41 AM
இன்னும் 6 விக்கெட்கள், அதில் 3 விக்கெட்கள் தான் பலமானவை, மீதி எல்லாம் படபடவென்று விழுந்து விடும். பார்ப்போம் நாளை எப்போ முடிக்கிறாங்கன்னு.

aren
06-04-2009, 05:47 AM
நாளை காலையில் ஜாஹீர்கான் எப்படி பந்துவீசுகிறார் என்பது மிகவும் முக்கியமானது. நன்றாக பந்துவீசி இந்தியாவிற்கு வெற்றியை வாங்கித்தரவேண்டும்.

மதி
06-04-2009, 06:20 AM
அட ஜெயிச்சுடுவாங்கன்னு
நம்புவோம்....

ஓவியன்
06-04-2009, 06:23 AM
விக்கெட்டை இழக்காமல் ஆடி, பின்னர் மக்கலம் துணையுடன் அடித்தாடி வெற்றிக்கு முயற்சிக்கலாமென நியூசிலாந்து கருதும், அதனால் இந்தியாவின் உடனடித் தேவை இந்த இணைப்பாட்டத்தை உடைத்து தொடர்ந்து மக்கலத்தின் விக்கட்டினையும் பெறுவதே....

ஓவியன்
06-04-2009, 06:24 AM
அட ஜெயிச்சுடுவாங்கன்னு
நம்புவோம்....

நியூசிலாந்தா.....??? :D:D:D

பரஞ்சோதி
06-04-2009, 06:48 AM
நம்மவர் இஷாந்த் சர்மா கூட இருக்காரு, இது மாதிரியான நேரத்தில் அசத்துவார்.

நம்புவோம்.

அமரன்
06-04-2009, 07:16 AM
சட்டென்று மாறாத வானிலை இல்லாத பட்சத்தில் இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது போன்று தோன்றுகிறதே.

anna
06-04-2009, 12:48 PM
இப்போது என் கணக்கு என்னவென்றால் அவர்களின் தோல்வி 1-0, அல்லது 2-0 என்பது தான் 2-0 என்பது ரொம்ப அசிங்கமாக இருக்கும் என்பதால் முடிந்த அளவு டிரா செய்யவே முயற்சிப்பர். முடிந்த வரையில் கட்டை போட முயற்சிப்பார்கள். அதற்குள் நம் ஆட்கள் விரைவாக 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 41 ஆண்டுகால சரித்திரத்தை மாற்ற வேண்டும். எழுச்சி கண்ட இந்திய அணிக்கு மீண்டும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

xavier_raja
06-04-2009, 01:16 PM
நம்முடைய பந்து வீச்சாளர்கள் எல்லோரும் முழு திறமையை வெளிபடுத்தினால் வெற்றி நமக்குத்தான். முதில் இந்த Munaf patel body language கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும். ஒரு fire இல்லை அவரிடம். Come on Guys... we will do it..

மதி
07-04-2009, 01:03 AM
மேலும் மூன்று விக்கட்டுகளை இழந்துவிட்டது. இந்திய அணியினர் சீக்கிரமே ஆட்டத்தை முடித்துவிடவேண்டும்.

பாரதி
07-04-2009, 05:56 AM
ஆட்டத்தை மழை வந்து சீக்கிரமாகவே முடித்து விட்டது!!
தொடரை இந்தியா கைப்பற்றியது.

xavier_raja
07-04-2009, 06:10 AM
இந்த மழையால் நம் இந்தியாவிற்கு கிடைக்கவிருந்த 100வது டெஸ்ட் வெற்றி தடைபட்டு விட்டது. அதுவும் கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எனினும் 40 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு நம்முடைய வாழ்த்துகள். (இதற்கு பிறகு எதனை ஆண்டு ஆகபோகிறதோ இங்கு மற்றுமொரு தொடரை வெல்ல) :)

மதி
07-04-2009, 06:22 AM
தொடரை கைப்பற்றிய இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்..


நியூசிலாந்தா.....??? :D:D:D
மழை :D:D:D:D:D

அறிஞர்
07-04-2009, 02:18 PM
3வது டெஸ்டில், மழை நம் வெற்றியை கவிழ்த்து... நியூசிலாந்தை காப்பாற்றிவிட்டது.
---------
தொடரை வென்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.. இது இன்னும் தொடரட்டும்.