PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 9



rambal
09-09-2003, 02:24 PM
அவன்:

ஆயிரம் பேர் கூடி இருக்கும் இடத்தில் தனித்துவமாக இருக்க ஆசை கொள்வான்..
அதற்கான முயற்சிகளும் எடுப்பான்.. அவனது உயரம் இந்திய சராசரிக்கும் சற்று அதிகம்.. (6 அடி 2 அங்குலம்)
அவன் அணியும் ஆடைகள் அத்தனையும் அவனால் வடிவமைக்கப்பட்டவை..
அவனைக் கண்டால் தையல்காரர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்..
கிட்டத்தட்ட அந்த ஊரில் இருக்கும் தையல்காரர்கள் அனைவரும் அவனை அறிவர்..
அவன் வடிவமைக்கும் ஆடைகளை தைக்கும் கொடுமைக்கு பயந்தே அந்த ஊரை மாற்றியவர்கள் பலர்..
ஒருநாள் அவனது அம்மாவின் பட்டுப் புடவையை ஜிப்பாவாக்கிவிட்டான்.. அதன்பின் அவனது அம்மா
பட்டுப் புடவைகளை அவன் கண்ணில் காட்டுவது இல்லை..
பேசன் ஷோக்களில் ஏறி பரிசும் வாங்குவான்.. ஆனால், பல சமயங்களில் அவனது ஆடைகள் பயங்கரமாக இருக்கும்..
ஒரு தடவை பாலீதீனில் பேண்ட் தைத்து உள்ளாடை தெரியும் படி ரேம்ப்பில் ஏறி முதல் வரிசையில் அமர்ந்திருந்த
சீப் கெஸ்ட்டின் மனைவி அதிர்ச்சியில் மயக்கமாகி..
ஜீன்ஸை வெட்டி சார்ட்ஸ் ஆக்கி பல இடங்களில் அதை கல்லால் குத்தி நூல் நூலாக தொங்கவிட்டு..
உட்காரும் பகுதியில் கிழித்துவிட்டு.. இறுக்கமான டீ சர்ட்டோடு காலேஜிற்கு சென்று பிரின்ஸிபாலிடம் வாங்கிக்கட்டி..
அடைப்பெட்டியில் சட்டையும், பைக்கிற்கு கவர் தைக்க பயன்படும் ரெக்ஸினில் பேண்ட்டும்..
கோணிப்பையில் சட்டையும் லெதரில் பேண்ட்டும்..
ஒரு தடவை அவனது அப்பா, அவனுக்கு லீவைஸ் ஜீன்ஸ் வங்கிக் கொடுக்க, அடுத்த நிமிடமே அதை கிழித்து..
ஆங்காங்கு நைய்யப் புடைத்து.. நூல் நூலாக்கி.. கந்தல் கோலமாக்கியதில் இருந்து அவனது அப்பா அவனுக்கு
ஜீன்ஸ் வாங்கிக் கொடுப்பதை நிறுத்திவிட்டார்..
மூக்கில், புருவத்தில், காதில், விரல் நகத்தில் இப்படி வளையங்கள் மாட்டாத பகுதியே கிடையாது..
மண்டை ஓடு மோதிரங்கள் மேல் தனி ப்ரியை..
ஹேர் ஸ்டைல் பற்றி கேட்கவே வேண்டாம்.. தோள் பட்டை வரை அலை பாயும் கூந்தல்.. தடாலடியாக
மொட்டையடித்து வளர்ந்தது போல்.. கலர் கலராக ப்ளீச் செய்து தினம் ஒரு வண்ணத்தில் தலை முடி இருக்கும்..
லெதரையும், ஜீன்ஸையும் கலந்து ஒரு பேண்ட். அதற்கு வெற்று உடம்புடன் செல்வதுதான் நாகரீகம் என்று கருதுபவன்..
நாகரீகத்தின் கோட்பாடுகளை உடைத்து எறியவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவான்..

ரேக்கிங்கில் அவனிடம் நீ என்ன ஹீரோவா என்று ஒரு சீனியர் மாணவன் கேட்டதற்கு, இல்லை.. இந்தக் கல்லூரியில்
படிக்கும் அனைவரும் ஹீரோ.. ஆனால், நான் ஒருவன் மட்டுமே வில்லன் என்று சொல்லி திகைக்க வைத்தான்..
ஏனெனில், வில்லன் என்றால்தான் ரேப் பண்ணமுடியும்..
யாரைப் போல் வர விரும்புகிறாய் என்று அவனிடம் ஒருமுறை அவன் அப்பா கேட்டதற்கு,
யாரைப் போலும் வர விருப்பமில்லை என்றும், என்னைப்போலவே வர வேண்டும் என்று சொல்லி அவரை மிரட்டினான்..
அவனுடைய ஹீரோ அவனுடைய வில்லன்.. எல்லாமே அவன் தான்.. இதுதான் அவனது சித்தாந்தம்..
அவனைப் போல் இந்த உலகில் மிக மிக நல்லவனும் மிக மிக கெட்டவனும் யாருமே இல்லை என்று முடிவாக இருப்பவன்..

பேசன் ஷோக்களில் அவனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு தடாலடியாக பதில் சொல்வது அவனது பழக்கம்..
இன்றோடு உலகம் அழியப் போகிறது.. இன்றே கடைசி நாள்.. என்ன செய்வாய்? என்று ஒரு பெண் நடுவர் ஒருத்தி கேட்க
முடிந்தால் ஐஸ்வர்யாராய்.. அப்படி இல்லையென்றால் என்னுடைய பெண் தோழிகள் அத்தனை பேரோடும் கலவியில்
ஈடுபட்டுக் கொண்டே செத்துப் போவேன் என்று பதில் சொன்னான்..
நீங்கள் கல்வி அமைச்சர் ஆனால் என்று வேறு ஒரு சமயத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு
செக்ஸ் லைவ் ஷோவை பாடத்திட்டத்தில் சேர்ப்பேன்.. இங்கு எப்படி கலவியில் ஈடுபடுவதென்றே
யாருக்கும் தெரியவில்லை என்று கூறியதற்கு.. கேள்வி கேட்ட நபர் ஒரு நொடி திணறி.. அதன்பின் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்..
அவனுக்கு தேவை அதுதான்.. கேள்வி கேட்பவர்கள் ஒரு நொடி திணற வேண்டும்.. அதிர்ச்சியில் உறைய வேண்டும்..
அரங்கமே அதிர வேண்டும்..
பேசன் ஷோவிற்கு பிண்ணணி இசையாக தேசிய கீதத்தை ஒலிபரப்பி அதற்கு அரைகுறை ஆடையோடு நடந்துவந்து..
நிகழ்ச்சி நடத்திய கல்லூரியின் பிரின்ஸிபல் இவனது கல்லூரி பிரின்ஸிபலுக்கு நாட்டுப்பற்றைப் பற்றிய பத்து பக்க கடிதம்
எழுதினார்..
உற்சாகம் தலைக்கேறிவிட்டால் அவ்வளவுதான்.. அணிந்திருக்கும் ஆடைகளை கழற்றி அரங்கினுள் இருக்கும் ஆடியன்ஸைப்பார்த்து
எறிவான்.. கூட்டமும் ஹோ என்று கத்தும்.. அந்தக் கத்தலில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

கோயம்புத்துரில்.. கல்லூரிப் பெயர் வேண்டாம்..
யாரிடம் ஐ லவ் யூ சொல்ல விரும்புகிறாய் என்று ஒரு பெண் நடுவர் அவனிடம் கேட்க..
அந்த ஜட்ஜைப்பார்த்து ஐ லவ் யூ என்று சொல்லி... அதன்பின் அந்த நடுவர் எந்த போட்டிக்கும் போகக்கூடாதென்று
அவரது கணவன் உத்தரவு போட..

உடன் படிக்கும் மாணவிகளை காதலிக்கிறேன் என்று சொல்லாமல் அவர்களோடு எல்லா இடங்களுக்கும் சுற்றி..
அங்கு இங்கு கையும் வைத்துவிடுவான்..
இறுதியாக அந்தப் பெண் அவனிடம் ஐ லவ் யூ என்று சொன்னால் மிகப்பெரிய ஜோக் கேட்டது போல் சிரித்துவிட்டு
அவளை கழட்டிவிடுவான்.. இதில் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுதே மூன்றாம் ஆண்டு மாணவியோடு சுற்றி..
எல்லாவற்றிற்கும் மேலாக.. அப்போதுதான் மாஸ்டர்ஸ் டிகிரி முடித்துவிட்டு அவனது கல்லூரியில் அவனுக்கு
வேதியியல் சொல்லிக் கொடுக்க சேர்ந்த லெக்சரையே கேர்ள் பிரண்ட்டாக்கி..
ஒருநாள் அவளை கல்லூரி வளாகத்திலேயே முத்தம் கொடுக்க துரத்த. அவள் ஓட..
இவர்கள் ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டை பார்த்துவிட்ட அவர்களது துறையைச் சேர்ந்த HOD..
இருவரையும் தனித்தனியாக விசாரித்து வன்மையாக கண்டித்தார்..

அவனது தத்துவங்கள் விகாரமாணவை.. சிந்தனைகளும் அப்படித்தான்..
மரணத்தைக் கொண்டாடுங்கள்.. காதலிக்காமல் காதலியுங்கள்.. கர்ப்பமாக்காமல் கலவியில் ஈடுபடுங்கள்..
முத்தத்தை பொது இடங்களில் கொடுங்கள்.. முத்தம் அன்பின் வெளிப்பாடு..
யாராவது இது என் நண்பன் அல்லது நண்பி என்று அறிமுகம் செய்தால் கை குலுக்கமாட்டான்..
இறுக்கமாக கட்டிப்பிடிப்பான்.. பெண்களாக இருந்தால் முத்தமும் கொடுப்பான்..
இதற்கு பயந்தே யாரும் அவனுக்கு யாரையும் அறிமுகம் செய்துவைக்கமாட்டார்கள்..

இந்த உலகில்.. கோபம், ஏழ்மை, ஆங்காரம், இவைகளை வெளிப்படையாக காட்டும் பொழுது..
சக உயிரை நேசிப்பதை வெளிப்படையாக காட்டுவதில் தவறு என்ன இருக்கிறது? அதனால்தான் முத்தம் கொடுக்கிறேன்..
என்று வியாக்கியானம் செய்வான்..

பெண்கள் நிர்வாணமாக இருப்பதே அழகு எனும் கொள்கை உடையவன்..
பெண்கள் மட்டுமல்ல.. அனைவரும் ஆடையணியாமல் இருப்பதே இயற்கை என்பான்..
போலியான வேஷங்களை களைந்தெறியவேண்டும் என்பான்..
இப்படி ஒருமுறை சொன்னதற்கு, அவனது வகுப்பில் ஒருவன்.. நீ இந்த இடத்தில் நிர்வாணமாகமுடியுமா? என்று தெரியாமல்
சவால்விட அங்கேயா அனைத்து ஆடைகளையும் களைந்துவிட்டு போஸ் கொடுக்க.. அவனது வகுப்பு பெண்கள் அலறியடித்துக் கொண்டே
வகுப்பை விட்டு வெளியேறினர்..

அழகை ஆராதிக்கவேண்டும் என்ற கோட்பாட்டிற்காக பௌதிகதுறை HODயை பார்த்து நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள்
என்று நேரிடயாக சொல்லிவிட்டான்.. இவனைப்பற்றித் தெரியாத அவரோ கோபத்தின் உச்சிக்கே போய்
ருத்ர தாண்டவமாட.. நான் தப்பாக சொல்லி இருந்தால் மன்னியுங்கள்.. வேண்டுமானால் உங்கள் கணவரிடம் கேட்டுப்பாருங்கள்..
நீங்கள் அழகா இல்லையா? என்று அவர் சொல்வார்.. எனும்படியாக பதில் சொல்லி.. இந்த விஷயம் கேள்விப்பட்ட அவரது கணவர்
இவனை அடிக்கவர...

இவனை கேள்வி கேட்பதற்கு வீட்டில் யாரும் கிடையது..
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வெளிநாட்டில் இருக்கும் இவனது பெற்றோர்கள் வந்து போவர்..
எப்போதும் தனிமைதான்.. பந்த பாச உணர்வுகளுக்காக ஏங்குபவன்..
ஒரு வேளை பாசம் என்பதின் பொருளை விளங்க வைத்தால் இவன் இப்படி செய்வதை நிறுத்திவிடுவானோ என்னவோ?

பாரதி
09-09-2003, 02:36 PM
தனிமனித ஆசாபாசாங்கள் - நிஜத்தில் நடைபெற்றவையாக இருப்பதால் கொஞ்சம் திகைக்க வைக்கின்றன.

இக்பால்
09-09-2003, 06:04 PM
ம்ம்ம்ம்ம்.........

சேரன்கயல்
11-09-2003, 04:54 AM
கதாபாத்திரத்தின் நியாயம் தேடும் போக்கை, ஹிப்பிக் கலாச்சாரம், 70களில் தொடக்கம் இன்றும் பரவிகிடக்கும் அதிரடி ராக் இசைக் கலாச்சாரம் இவற்றின் உள்ளூர் பதிப்பாக, வழமைக்கு மாறாக செய்கிறேன் பேர்வழி என்று வேடமிட்டு சுயத்தை மறைக்கும்,தொலைக்கும் போக்கை...மொத்ததில் வெளிப்படையாக சில இடங்களில்...வெளியே தெரியாமல் பல இடங்களில் காணக்கூடிய காணமுடியாத விகாரங்களை பட்டியலிட்டதுபோல இருக்கிறது...