PDA

View Full Version : மதுமிதா (சிறுகதை-28)



ரங்கராஜன்
11-02-2009, 04:26 PM
மதுமிதா

சுந்தர் அறையின் மூலையில் அமைதியாக உக்கார்ந்துக் கொண்டு இருந்தான், விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

காலை 11 மணிக்கு இருக்கும், எழுந்தவன் முகம் கழுவ குளியல் அறைக்குள் சென்றான். அவன் தன்னுடைய வேலைகளை முடித்து விட்டு வருவதற்குள்,
சுந்தரை பற்றி கொஞ்சம் பார்ப்போம். சுந்தர் படித்தது தருமபுரி அரசு கல்லூரியில், வயது 22, இப்பொழுது சென்னையில் தன்னுடைய மாமா வீட்டில் ஐ.ஏ.எஸ் பரீட்சை
எழுத, தங்கி படித்துக் கொண்டு இருக்கிறான், முதல் முறையாக சென்னை வந்து இருக்கிறான், அவன் இதுவரை எந்..................,

சுந்தர் குளியல் அறையில் இருந்து வெளியே வந்து விட்டான் அப்புறம் சொல்கிறேன் அவனை பற்றி. சுந்தர் நேராக சமையல் அறைக்கு சென்று ஃபலாஸ்கில் இருக்கும் காப்பியை எடுத்து தம்ளரில ஊற்றினான், பொறுமையாக நடந்து டி.வி யை ஆன் செய்தான், வெளியில் காலீங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது, சென்று கதவை திறந்தான். நல்ல பகல் வெயிலின் வெளிச்சத்தில், மல்லிகப்பூ வாசனையில், குழந்தையின் பிஞ்சுக் கால் நிறத்தில், அவள் தோலை விட சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக் கொண்டு தேவதை போல ஒருத்தி வந்து நின்றுக் கொண்டு இருந்தாள். இதை எதிர்பார்க்காத சுந்தர் தன்னுடைய தலை முடியை சரி செய்துக் கொண்டு, தன்னுடைய உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு

“சொல்லூங்க” என்றான்.

“நான் பக்கத்து வீட்டில் இருக்கிறேன், அம்மா கொஞ்சம் பச்சமிளகாய் இருக்கானு கேட்க சொன்னாங்க”

”பக்கத்து வீட்டுலயா அப்படியா?, சாரி நான் கவனித்தது இல்லை. ஒரு நிமிஷம் இருங்க இருக்கானும் பார்க்கிறேன்” என்று உள்ளே சென்றான்.

சுந்தர் வருவதற்குள் அவனை பற்றி கொஞ்சம் சொல்கிறேன், அவன் இதுவரைக்கும் எந்.........த பரீட்சையிலும் கொட்டு அடிக்காமல் தாண்டியது இல்லை, அப்புறம் எப்படி ஐ.ஏ.எஸ் படிக்க, சும்மா டூப்பு பெருமைக்கு பன்னி மேய்பவன் நம்ம சுந்தர், சென்னைக்கு வரவேண்டும் அதுக்கு ஐ.ஏ.எஸ் கோச்சிங்கை சாக்காக வைத்துக் கொண்டு வந்து மாமா வீட்டுக்கு வந்து விட்டான். பக்கத்து வீட்டு பொ.....
அவன் வந்து விட்டான்.

“ஏங்க தப்பாக நினைக்காதீங்க.............. உங்க பெரு என்ன சொன்னீங்க”

“நான் சொல்லையே”

“சரி இப்ப சொல்லுங்க”

“மதுமிதா”

“தப்பாக நினைக்காதீங்க மதுமிதா, எனக்கு எது பச்சமிளகாய் என்று தெரியாது. அது என்ன கலர்ல இருக்கும்”

அவன் எதிர்பார்த்து போல குபீர்னு சிரித்த மதுமிதா “பச்சமிளகாய் பச்ச கலர்ல தான் இருக்கும்”

“அப்ப ஏன் காஞ்ச மிளகாய் மட்டும் சிகப்பு நிறத்தில் இருக்கிறது”

“பச்சமிளகாய் இருக்கா இல்லையா” அவள் சுந்தர் அடித்த ஜோக்கை ரசிக்கவில்லை.

“இருக்கு.......... உங்க பேரு என்ன சொன்னீங்க?”

“ம.....து.....மி....தா”

“சாரி சாரி மதுமிதா, என்னுடைய கையில ஒரே விரலா இருக்கு, நீங்களே கொஞ்சம் உள்ள வந்து எடுத்துக்க..........(அவள் முறைக்க)..சாரி ........எடுத்துக்கோங்க”

அவளை அழைத்துக் கொண்டு போனான், அதுவரைக்கு நாம் அவனை பற்றி கொஞ்சம் பார்ப்போம், பக்கத்து வீட்டு பொ......ண்ணு மதுமிதாவை வந்த ஒரு மாசமாகவே இவன் சைட் அடிக்கிறான் அவளுக்கு தெரியாமல், தெரியாமல் அடித்தால் தானே அதன் பேரு சைட்டு.
அவளிடம் பேச இவன் பலமுறை தவித்து இருக்கிறான். இப்பொழுது தான் நேரம் கனிந்து இருக்கிறது. அவன் என்ன பேசறானு கேட்போம். உள்ளே அவனுடைய அறையில் இருவரும் நுழைந்தார்கள். தன்னுடைய அறையில் இருக்கும் ஐ.ஏ.எஸ் கோச்சிங் புத்தகங்களுக்கு மேல் (வைக்கப்பட்டு)இருந்தது பச்சமிளகாய் டப்பா, மதுமிதா அவனை பார்த்து சிரித்தபடி.

“ஏங்க நீங்க பச்சமிளகாய் எல்லாம் படிக்கிற டேபிள் மேல் தான் வைப்பீங்களா?”

“இல்லங்க, ஐ.ஏ.எஸ் படிக்கறதால ........”

“ஓ பச்சமிளகாய் புத்தகத்து மேல வச்சா நல்லா படிப்பு வருமா”

ஆஹா சிட்டு சிக்கிடும் போல இருக்குது, என்று நினைத்துக் கொண்டு மிகையாக சிரித்தான்.

“ஹா ஹா ஹா அய்யோ அய்யோ செம காமெடியா பேசறீங்க”

மென்மையாக அவளும் சிரித்தாள், அவள் சிரிக்கும் பொழுது அவள் பல் வரிசையின் அழகு தெரிந்தது, அதுவும் ஓரத்தில் ஒரு பல்லு தூக்கிக் கொண்டு இருந்தது அவளுடைய முகத்திற்கு அது இன்னும் எடுப்பாக இருந்தது, சுந்தர் அதையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“பச்சமிளகாய் எடுத்துக்கவா”

“நீங்க மட்டும் எப்படி இவ்வளவு கலராக இருக்கிங்கனு சொல்லுங்க, பச்சமிளகாய் தோட்டமே வச்சி தரேன்”

அவள் மறுபடி ஒருமுறை அந்த தெத்துப்பல் தெரிய சிரித்தாள், அவளிடம் இருந்து வீசும் மல்லிப்பூ வாசனை, அவள் உடம்பில் வரும் கதகதப்பான வெட்பம், அந்த தெத்துப்பல் இவை அனைத்து சேர்ந்து ஒரு போதையை தந்தது, சுந்தருக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.

“சரி உங்க கையில எதோ இருக்குதுனு உங்களால எடுக்க முடியாதுனு தானே என்னை வந்து எடுத்துக்க சொன்னீங்க, உங்க கையில ஒண்ணும் இல்லையே”

“ஹா ஹா நான் என்ன சொன்னேன்னு அந்த வரியை போய் பாருங்க” என்று சிரித்தான். //என்னுடைய கையில ஒரே விரலா இருக்கு, நீங்களே கொஞ்சம் உள்ள வந்து எடுத்துக்க//

இருவரும் சிரிக்க, சற்றும் எதிர்பாராத விதமாக சுந்தர் மதுமிதாவின் கையை பிடித்து தன்னுடைய நெஞ்சு அருகே வைத்துக் கொண்டு, அவள் தனக்கு விளங்கி கையை இழுப்பதற்குள்

“மது உன்னை மாதிரி ஒரு மல்லிப்பூ வாசனையான பெண்னை நான் என் வாழ்நாளில் நான் பார்த்து இல்லை சாரி முகர்ந்தது இல்லை, இல்லை பார்த்து இல்லை தான் கரைட்டு, நான் உன்னை காதலிக்கிறேன்
நீ என்னுடைய மனைவியாக வந்தால் உன்னை நான் என்னுடைய மடியில் உக்கார வைத்து ராணி மாதிரி பார்த்துக் கொள்வேன். நீ எனக்காக செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான்
உன் தெத்துப்பல் தெரியிற மாதிரி சிரித்தாலே போதும் எனக்கு, வாழ்நாள் முழுவதும் உனக்கு அடிமையாக இருக்க நான் தயார். நீ மாட்டேன் என்று சொன்னால் ஒரு அருமையான வாழ்க்கையை நீ இழக்கப் போகிறாய் என்று அர்த்தம்”

சுந்தரின் காய்ந்து போன உதட்டில் லேசாக புன்னகை பரவியது, கண்களில் கண்ணீர் வழிந்தது. தனது நடுங்கும் கையை தன்னுடைய மடியில் கிடக்கும் மதுமிதாவின் காதின் ஓரத்துக்கு கொண்டு சென்று

“ஏய் மது நான் இப்ப என்ன நினைச்சேன் சொல்லு, நாம முதல் முறையா பேசின வார்த்தைகளை, உனக்கு ஞாபகம் இருக்கா?, இப்ப தான் நடந்த மாதிரி இருக்கு, அதுக்குள் 2 வருஷம் ஆயிடுச்சு சரி இப்பவாவது சொல்லு மது என்னை காதலிக்கிறீயா, ப்ளீஸ் சொல்லு மது, இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை என்கிட்ட இருந்து எடுத்துனு போயிடுவாங்க மது ப்ளீஸ் சொல்லு மது, சரி கடைசியா ஒரு வாட்டி சிரி மது ப்ளீஸ், ஒரே ஒரு வாட்டி மது ப்ளீஸ்”

பதில் வரவில்லை, சுந்தரின் மடியில் பிணமாக கிடந்தாள் அவன் மனைவி மதுமிதா.

இப்பொழுது நாம் என்ன பேசினாலும் சுந்தரின் காதுகளில் விழாது அதனால் சொல்கிறேன் இருவரும் காதலித்து வீட்டை எதிர்த்து ஓடிவந்து கல்யாணம் செய்துக் கொண்டார்கள். வாழ்க்கை புரிய ஆரம்பித்தது, வறுமை பசி, வேலையின்மை, வாழ்க்கையின் கொடூர கரங்களில் மாட்டினார்கள் இளம் காதலர்கள். பொறுத்து பார்த்தாள் மதுமிதா, அவமானங்கள், துயரங்கள், எதிர்காலம் எல்லாம் அவளை பயமுறுத்தி உருக்கியது. தொங்கினால் விட்டத்தில்.

ஆதவா
11-02-2009, 04:42 PM
வித்தியாசமான நடை...
கதை நன்றாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
11-02-2009, 04:49 PM
வித்தியாசமான நடை...
கதை நன்றாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்

நன்றி ஆதவா

ஏதோ நினைவில் எழுதியது ஆதவா, நிறைய தப்பு இருந்தது, எழுத்துபிழையும், சிலவற்றை சரி செய்து இருக்கிறேன்.

பாரதி
11-02-2009, 05:08 PM
கதையை சற்றே புதிய முறையில் நகர்த்தும் விதத்திற்காக பாராட்டு மூர்த்தி.

ரங்கராஜன்
11-02-2009, 05:27 PM
கதையை சற்றே புதிய முறையில் நகர்த்தும் விதத்திற்காக பாராட்டு மூர்த்தி.

கதையை சற்றே புதிய முறையில் நகர்த்தும் விதத்திற்கு மட்டும் பாராட்டு மூர்த்தி.

இப்படி சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் பாரதி, எனக்கே இந்த கதை பிடிக்கவில்லை, என்னமோ நினைத்து என்னமோ எழுதி விட்டேன். ரொம்ப நாள் ஆகிறது கதை போட்டு என்ற வேகத்தில் விவேகம் இல்லாமல் போட்டு விட்டேன், அதை திரும்பவும் திருத்தம் செய்யவும் விரும்பம் இல்லை, எழுத்துபிழைகளை மட்டும் சிவாஜி அண்ணனுக்காக பயந்து சரி செய்து இருக்கிறேன்.

நன்றி பாரதி.

ஆதவா
12-02-2009, 12:37 AM
ஆமாம் ஆமாம்... காலம் ஒத்து வரவில்லை கதையில்...

பாரதி
12-02-2009, 03:20 AM
கதையை சற்றே புதிய முறையில் நகர்த்தும் விதத்திற்கு மட்டும் பாராட்டு மூர்த்தி.

இப்படி சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் பாரதி, எனக்கே இந்த கதை பிடிக்கவில்லை, என்னமோ நினைத்து என்னமோ எழுதி விட்டேன். ரொம்ப நாள் ஆகிறது கதை போட்டு என்ற வேகத்தில் விவேகம் இல்லாமல் போட்டு விட்டேன், அதை திரும்பவும் திருத்தம் செய்யவும் விரும்பம் இல்லை, எழுத்துபிழைகளை மட்டும் சிவாஜி அண்ணனுக்காக பயந்து சரி செய்து இருக்கிறேன்.



உண்மையிலேயே நீங்கள் கூறியிருப்பது போலத்தான் முதலில் தட்டச்சினேன். பதிவிடுவதற்கு முன்னர் நீங்கள் வருத்தப்படக்கூடும் என்பதால் அதை மட்டும் நீக்கி விட்டேன். தொடர்ச்சியாக நல்ல கதைகளை படைக்கக்கூடிய ஆற்றல் உங்களுக்குண்டு என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள் மூர்த்தி.

ரங்கராஜன்
12-02-2009, 03:52 AM
ஆமாம் ஆமாம்... காலம் ஒத்து வரவில்லை கதையில்...

எனக்கு அதே பிரச்சனை தான் ஆதவா காலம் ஒத்துவரவில்லை

ரங்கராஜன்
12-02-2009, 03:56 AM
உண்மையிலேயே நீங்கள் கூறியிருப்பது போலத்தான் முதலில் தட்டச்சினேன். பதிவிடுவதற்கு முன்னர் நீங்கள் வருத்தப்படக்கூடும் என்பதால் அதை மட்டும் நீக்கி விட்டேன். தொடர்ச்சியாக நல்ல கதைகளை படைக்கக்கூடிய ஆற்றல் உங்களுக்குண்டு என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. தொடர்ந்து எழுதுங்கள் மூர்த்தி.

நன்றி பாரதி

சத்தியமாக என்னுடைய சிறுகதைகளுக்கு வரும் விமர்சனங்களை நான் தப்பாக எடுத்துக் கொண்டது இல்லை, வருத்தப்பட்டது இல்லை, காரணம் சுயநலமானது தான், உங்களின் கருத்துக்களில் இருந்து எனக்கு சில யோசனைகள் கிடைக்கும், தவறுகளை திருத்திக் கொள்வேன். இது வரை என்னுடைய எந்த சிறுகதை விமர்சனத்திற்கும் விவாததிற்கும் நான் வருந்தியது கிடையாது. காரணம் எனக்கு அதில் ஆதாயம் இருக்கிறது.

samuthraselvam
12-02-2009, 04:00 AM
டக்ஸ் அண்ணா கதை என்ற எதிர்பார்ப்பில் படித்தால், புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......?? என்ன ஆச்சு அண்ணா? ஆரம்பத்தில் பிடிக்கும் சூடு முடிவில் சுடுகிறது. தவறாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதை பின்னூட்டமிட்டேன். கதை சுமார் ரகம்.

ரங்கராஜன்
12-02-2009, 04:14 AM
டக்ஸ் அண்ணா கதை என்ற எதிர்பார்ப்பில் படித்தால், புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......?? என்ன ஆச்சு அண்ணா? ஆரம்பத்தில் பிடிக்கும் சூடு முடிவில் சுடுகிறது. தவறாக நினைக்க வேண்டாம். மனதில் பட்டதை பின்னூட்டமிட்டேன். கதை சுமார் ரகம்.

நன்றி பாசமலரே
என்னமோ மன உளைச்சலில் எழுதிவிட்டேன், எப்படியோ போக வேண்டிய கதை எப்படியோ சென்று விட்டது. உன் விமர்சனம் உண்மையானதாகவும், ரசிக்க வைப்பதாகவும் இருக்கிறது. நன்றிகள். இதை போல உண்மையான விமர்சனங்களால் என்னுடைய படைப்புகளை மேலும் செம்மையாக்குவாய் என்ற நம்பிக்கையில் ..........

அப்புறம் ஒரு சின்ன விஷயம், அது டக்ஸ் இல்லை, தக்ஸ்

சிவா.ஜி
12-02-2009, 04:39 AM
பாரதி சொன்னதைத்தான் நானும் சொல்லும் நிலையில் இருக்கிறேன் தக்ஸ். சாரிப்பா.
ஆனா இதையே மறுபடி நீ எழுதினா இன்னும் நல்லா வரும். அசத்தலான ஆரம்பம் இருக்கும் கதையில் எதிர்பார்ப்பு அதிகமாவதால்....இப்படிப்பட்ட முடிவு ஏமாற்றமளிக்கிறது அதுதான் விஷயம். விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் உன் மனப்பக்குவத்துக்கு 'சல்யூட்'. வாழ்த்துகள் தக்ஸ்.

சிவா.ஜி
12-02-2009, 04:41 AM
அப்புறம் ஒரு சின்ன விஷயம், அது டக்ஸ் இல்லை, தக்ஸ்

அப்ப நீ DHAKS ன்னு போட்டிருக்கனும். இப்ப இருக்கிறதை டக்ஸ்ன்னுதான் படிக்கமுடியும்...ஹி...ஹி..(ஆனா எழுத்துப்பிழையில ட-வுக்கு கால் முளைச்சிட்டாதான் கஷ்டம்)

ரங்கராஜன்
12-02-2009, 04:57 AM
அப்ப நீ DHAKS ன்னு போட்டிருக்கனும். இப்ப இருக்கிறதை டக்ஸ்ன்னுதான் படிக்கமுடியும்...ஹி...ஹி..(ஆனா எழுத்துப்பிழையில ட-வுக்கு கால் முளைச்சிட்டாதான் கஷ்டம்)

அண்ணா உண்மையில் என்னுடைய பெயர் dhakshina moorthy தான், இது தான் என்னுடைய அம்மா வைத்த பெயர், நான் 10 வது படிக்கும் பொழுது என்னுடைய சூளகிரி பள்ளியில், 9 வகுப்பு வரை படித்த ஒரு கிளர்க்கால் வந்தது இந்த வினை, டி.சி யில் dakshina murthy என்று அவர் எழுதி விட்டார்(ன்). அதில் இருந்து வேறு வழியில்லாமல் இதையே தொடர வேண்டியாதாகி விட்டது

kugan
12-02-2009, 07:19 AM
எதிர்பராத முடிவு.............
கதை நன்றாக இருந்தது

aren
12-02-2009, 08:01 AM
தக்ஸ், எனக்கு இந்த கதையில் கொஞ்சம் உடன்பாடில்லை.

சரியான கோலத்தில் கதையை எடுத்துச்செல்லவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.

கொஞ்சம் கவனத்துடன் எழுதியிருந்தால் கதை நன்றாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

சுந்தரை ஒரு சந்தர்ப்பவாதியாக சித்தரித்திருப்பதால் இந்த காதலில் ஒரு பொய்மை தோன்றுகிறது.

நான் வெளிப்படையாக எழுதியதற்கு என்னை மன்னிக்கவும்.

ரங்கராஜன்
12-02-2009, 09:33 AM
கொஞ்சம் கவனத்துடன் எழுதியிருந்தால் கதை நன்றாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது.

.

முற்றிலும் உண்மையான கருத்து அரென் அண்ணா, இனிமேல் இந்த தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

நன்றி

செல்வா
12-02-2009, 10:08 AM
முயற்சிக்கு வாழ்த்துக்கள் தகஸ். தொடர்ந்து எழுதுங்க...


நான் 10 வது படிக்கும் பொழுது என்னுடைய சூளகிரி பள்ளியில், 9 வயது வரை படித்த ஒரு கிளர்க்கால் வந்தது இந்த வினை,

அப்படி என்றால் 4வது வகுப்பு வரை மட்டுமே படித்த கிளார்க்கா?

அமரன் : ஏல கதையப் படிச்சு விமர்சனம் பண்ணச் சொன்னா குத்தம் கண்டு பிடிச்சு.... பேரு வாங்கப் பாக்குரியா?
செல்வா : ஆஹா.... இதுவேறயா.. எஸ்கேப்...

ரங்கராஜன்
12-02-2009, 10:14 AM
முயற்சிக்கு வாழ்த்துக்கள் தகஸ். தொடர்ந்து எழுதுங்க...



அப்படி என்றால் 4வது வகுப்பு வரை மட்டுமே படித்த கிளார்க்கா?

அமரன் : ஏல கதையப் படிச்சு விமர்சனம் பண்ணச் சொன்னா குத்தம் கண்டு பிடிச்சு.... பேரு வாங்கப் பாக்குரியா?
செல்வா : ஆஹா.... இதுவேறயா.. எஸ்கேப்...

ஹா ஹா செல்வா, வகுப்பு என்பதுக்கு பதிலாக வயது என்று போட்டு விட்டேன், முதலில் நீங்கள் சொன்னது எனக்கு புரியவில்லை, அப்புறம் புரிந்தது.

ஆனால் உங்களுடைய அமரன் செல்வா வசனங்கள் மட்டும் பார்த்தவுடன் புரிந்து விட்டது.

நன்றி செல்வா. தவறுகளை சுட்டிக் காட்டுவது ஒன்றும் தப்பு இல்லை.

ஆதி
12-02-2009, 10:42 AM
தக்ஸ், விட்டத்தில் ஆரம்பித்து விட்டத்தில் முடித்தது நன்றாக இருந்தது..

கதை சூவாரஸ்யம் என்றாலும், கரு சாயம் போன காகிதம் மாதிரி இருக்கு,..

அதனால் நீங்கள் கையாண்ட முயற்சிகள் தோற்றனவோ என்று எனக்கு தோன்றுது..

நாயகியின் இறப்பென்பது ஈரமான கனமான விடயம் ஆனால் அந்த ஈரமும் கனமும் மனதில் ஏறவில்லை..

கதையை நீங்கள் மீள் திருத்தம் செய்யலாம்..

கதை சொன்னவிதத்துக்கு பாராட்டுக்கள் தக்ஸ்..



அப்படி என்றால் 4வது வகுப்பு வரை மட்டுமே படித்த கிளார்க்கா?



ஆமான் டா, ஏன்னா அவரு நாலாங்கிளாஸ் பாஸ்... அப்ப பத்தாங்கிளாஸ் ... :)

ரங்கராஜன்
12-02-2009, 11:10 AM
தக்ஸ், விட்டத்தில் ஆரம்பித்து விட்டத்தில் முடித்தது நன்றாக இருந்தது..

கதை சூவாரஸ்யம் என்றாலும், கரு சாயம் போன காகிதம் மாதிரி இருக்கு,..

அதனால் நீங்கள் கையாண்ட முயற்சிகள் தோற்றனவோ என்று எனக்கு தோன்றுது..

நாயகியின் இறப்பென்பது ஈரமான கனமான விடயம் ஆனால் அந்த ஈரமும் கனமும் மனதில் ஏறவில்லை..

கதையை நீங்கள் மீள் திருத்தம் செய்யலாம்..

கதை சொன்னவிதத்துக்கு பாராட்டுக்கள் தக்ஸ்..



நன்றி ஆதி

உங்களின் விமர்சனத்தை கதையை ஆராய்ந்து பார்த்து தந்து இருக்கிறீர்கள் என்று நினைக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது ஆதி. கதையை திருத்தம் செய்யலாம் ஆதி, நான் நினைத்த கதையை இப்பொழுது எழுதினால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், நடையும் சரி, முடிவு சரி உங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். ஆனால் உறவுகளால் மதிப்பிடப்பட்ட விடைத்தாளில் உள்ள பதில்களை மாற்றி எழுத மனம் ஒத்துக்கொள்ள வில்லை, இப்பொழுது அதை செய்தால் அடுத்த பரீட்சையில் என்னால் முதல் இடத்தை அடைய முடியாது ஆதி. மதிப்பிடப்பட்ட விடைத்தாள்கள் அப்படியே இருக்கட்டும் ஆதி. அப்பொழுது தான் அடுத்த முறை இந்த தவறு நடக்க கூடாது என்று எனக்கு ஒரு வேகம் வரும், என்ன சொல்கிறீர்கள்??????