PDA

View Full Version : வசந்தகாலம்...!வசீகரன்
11-02-2009, 11:20 AM
இன்னும் சற்று சில
நேரங்களுக்காக காத்திருக்கிறது..

மகிழ்ச்சியுடன் மலர்ச்சியாக மனம்
பரப்பிவிட பார்த்திருக்கிறது...

ஆசைகளோடு வெட்கப்புன்னகையுடன்
வாயிலில் நின்றிருக்கிறது..

எப்போதும்போல்...

இல்லை இல்லை...
இம்முறை இன்னும் அதிகமாய்
என உள்ளக்கிலுக்கத்துடன்

அருகு வரும் நேரத்தை
வெகு ஆர்வமுட்ன்
பார்த்திருக்கிறது அந்த
வசந்தகாலம்...

வசந்தகாலம் மிக வனப்பானது...

அதற்க்கு மிகுந்த காதல்
இந்த நேரங்களில்...
அதன் காலைநேரங்கள் பூத்தெறித்து
புதியவையாக இருக்கும்...

மாலை நேரங்கள் புதுமலர்களின்
வாசத்துடன் நிரம்பி இருக்கும்...

எப்பொழுதும் மந்தி இருக்கும்
மதியநேரம் இம்முறை
இளம் தென்றலை நிழலுடன் கலவி
இதயம் வருடும்...

பள்ளி கல்லூரி சிறை கதவுகளை
திறந்து சிறகடித்து சிதறிவரும்
இளம் இதயங்களின் கூட்டம்
இனி எங்கும்...

அவர்தம் களிப்புக்களும்...
சிரிப்புக்களும்
கும்மாளங்களும்...
கொண்டாட்டங்களும்
இனி எங்கும்...

சாலைகள் எங்கும்
பருவமலர்களின்
வசந்தமாய் வீசும்...
சோபை இழந்திருந்த சோலைவனங்கள்
புதிய உற்சாகம் பெற்று
பூரித்து சிரிக்கும்...
புதியதாக பூக்கள்... இலை...
கிளைகள் நிரம்பி
பசுமை விரியும்...

ஏங்கு பார்க்கினும் இளம் கூட்டம்...
கண்டிப்புகள்... காட்டுப்பாடுகள்..
கவலைகள்...
அனைத்தையும் விட்டொழித்து
விடுதலையாய்...
எங்கும் இளைய கூட்டம்...

இந்த வசந்தகாலம் அவர்களுக்கானதே...

அவர்களுடன் சிரித்து
மகிழ்ந்திட...
வெடித்துசிதறிட... வெட்கம்கொண்டிட...
புன்னகை பூண்டிட...
இதோ வெகுஅருகில்
ஆசையுடன் காத்திருக்கிறது
அவர்களுக்காக
இந்த இனிய வசந்தகாலம்...!

சிவா.ஜி
11-02-2009, 11:55 AM
வரும் வசந்தகாலத்துக்காக உள்ளம் மகிழ்ந்து எழுதிய வரிகளிலும் வசந்தம் வீசுகிறது.
மதியங்களும் குளிர்போர்த்தி வரும் அந்த வசீகர காலத்துக்காகக் காத்திருக்கும் வசீகரனின் வரிகளும் வசீகரிக்கிறது. வாழ்த்துகள் வசீ.

(முதல் பத்தியில் ஏதோ ஒரு நெருடல் இருப்பதாய் தோன்றுகிறது, வாக்கிய அமைப்போ?)

வசீகரன்
13-02-2009, 04:25 AM
மிக்க நன்றி தங்கள் வருகைக்கு சிவாண்ணா...!! முதல் பத்தியில் எந்த வாக்கியத்தில் என்ன நெருடல் என்று சொல்ல முடியுமா அண்ணா...
எனக்கு சரியாக ஏதும் தெரியவில்லையே..!!!

அமரன்
13-02-2009, 07:02 AM
வா வா வசந்தமே.
கவிதையை மட்டுமில்லை.
உன்னையும்..
உடலும் உள்ளமும் சுகந்தானே
வசீகரா..!!

வசந்தத்தின் மனம் மணம் நிறைந்தது.
எம் மனங்களில் மணத்தை நிறைப்பது.

தன் உடலில் சில அங்கங்களை மட்டும் காட்டியபடி
அம்மணம் காட்டும் ஆசைகளோடு ஒளிந்திருக்கிறது.

அவன் மனதில் ஏற்கனவே வசந்தம்.
அந்த வசந்தமும் இந்த வசந்தமும் ஒன்றுபடும் சூழல்..
பொங்கிப் பிரவாகிக்கிறது ஆழ்மனப் புலம்பல்.
அழகாக.. அம்சமாக.. கிறக்கமாக..வசீகரமாக..

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வசீ.புதியதாக பூக்கள்... இலை...
கிளைகள் நிரம்பி
பசுமை விரியும்...


நிரம்பி வழியும் என்பது வழமையானது.
நிரம்பி விரியும் என்ற புதுமையை விட வனப்பானது.

வாழிட வசந்தம் எப்படி இருக்கும்..

மஞ்சள் பூசிக் குளித்த மரங்கள்
பச்சைப் பட்டாடை உடுத்தும்..

சந்தன மணம் வீசும் பெண்கள்
காலாடை இடை சேரும்.
மேலாடை கழுத்திலாடும்..

மரத்திலும் மங்கையிலும்
அங்கமெங்கும் புன்னகை பூத்து
பச்சையாய்ப் பாடு படுத்தும்.
இரண்டுமே ஆதவன் விளையாட்டு.

காளையர் தாகம் தணிப்பர்
மொடக் மொடக் சப்தத்துடன்.


கூட்டுப்புழுக்கள் கூடுடைவது போல்
மொட்டாக்குக் கழட்டும் சிறார்கள்
பட்டாம் பூச்சியாய் பாடத் தொடங்குவர்.
வாயில் லாலி பப்.. காலில் ராலர் சூ.


சூரியன் சுட்டெரிக்கும்..
தகிப்பைத் தணிக்க
காதல் குடையின் கீழ்
காதலர் சரணடைவர்.

குடைக்குள் மழை பொழியும்
சோ எனும் சுருதி சேர்த்து.

இப்படி..

சன்னலைத் திறந்தால்
எங்கு கானினும் சங்கீத நதி..
எனக்கு மட்டும் அலர்ஜி
மகரந்த மாதங்களில்..

வசீகரன்
13-02-2009, 10:51 AM
நான் நலமே அண்ணா..
அ ட ட டா.. அமரண்ணே... மிக பிரமாதமாக இந்த கவிதைக்கு பின்நூட்டம் தந்து
அசத்தி இருக்கிறீர்கள்... மெத்த மகிழ்ந்தேன்... அந்த கவிதையை
விட உங்கள் பின்நூட்டம் வெகுஅழகு..
அவன் மனதில் ஏற்கனவே வசந்தம்.
அந்த வசந்தமும் இந்த வசந்தமும் ஒன்றுபடும் சூழல்..
பொங்கிப் பிரவாகிக்கிறது ஆழ்மனப் புலம்பல்.
அழகாக.. அம்சமாக.. கிறக்கமாக..வசீகரமாக..
உண்மைதான்...
வனப்பு மிகுந்தது இந்த வசந்தக் காலம்.. உடன் வாழ்க்கையும் வசந்தமெனில்...

தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிகுந்த நன்றிகள் தொடர்கிறேன்
எனது மன்ற வசந்தங்களை என்றும்.. எப்போதும்...

சசிதரன்
14-02-2009, 03:23 PM
நல்ல கவிதை வசீகரன்... :)

சுகந்தப்ரீதன்
17-02-2009, 09:35 AM
ஏக்கத்துடன் எழுதினாயோ தாக்கத்துடன் எழுதினாயோ வரிகள் அனைத்தும் வசீகரிக்கிறது நண்பனே...!! உன் வாழ்வில் வரப்போகும் வசந்தத்திற்க்கு என் வாழ்த்துக்கள்..!!

முன்போல் இல்லாமல் மெல்ல மெல்ல இப்போது வரிகளின் நீளத்தை குறைத்திருக்கிறாய்... அது உன்னுடைய கவிதைக்கு மேலும் அழகை அள்ளித்தந்திருக்கிறது வசீ..!!

poornima
17-02-2009, 09:49 AM
குளுமையான கவிதை வசீகரன்..
என்ன விஷயம் திருமணம் ஆகப் போகிறதா :-)
ரசிச்சிப் போய் லயிச்சிப் போய் எழுதியிருக்கீங்க.. அதனாலே கேட்டேன்
நல்லா இருக்குங்க..

வசீகரன்
18-02-2009, 04:04 AM
ஏக்கத்துடன் எழுதினாயோ தாக்கத்துடன் எழுதினாயோ வரிகள் அனைத்தும் வசீகரிக்கிறது நண்பனே...!! உன் வாழ்வில் வரப்போகும் வசந்தத்திற்க்கு என் வாழ்த்துக்கள்..!!

முன்போல் இல்லாமல் மெல்ல மெல்ல இப்போது வரிகளின் நீளத்தை குறைத்திருக்கிறாய்... அது உன்னுடைய கவிதைக்கு மேலும் அழகை அள்ளித்தந்திருக்கிறது வசீ..!!

ஏக்கமும் இல்லை தாக்கமும் இல்லை... சும்மாதான்பா...
வாழ்த்துக்களுக்கு நன்றிடா...
வெகு நாட்களுக்கு பிறகு நாம் மன்றத்தில் சந்தித்ததில் ரொம்ப
சந்தோசம் சுகந்த்..

முன்போல் இல்லாமல் மெல்ல மெல்ல இப்போது வரிகளின் நீளத்தை குறைத்திருக்கிறாய்... அது உன்னுடைய கவிதைக்கு மேலும் அழகை அள்ளித்தந்திருக்கிறது வசீ

அப்படியா...!!! எனக்கு ஏதும் வித்தியாசம் தெரியவில்லையே...
அதுசரி படிப்பவர்க்குதானே தெரியும்..
உனக்கு புடிச்சிருந்தா எனக்கு மகிழ்ச்சிதான்பா...

மிக்க நன்றி சுகந்தா உன் வருகைக்கு....!!!

வசீகரன்
18-02-2009, 04:07 AM
குளுமையான கவிதை வசீகரன்..
என்ன விஷயம் திருமணம் ஆகப் போகிறதா :-)
ரசிச்சிப் போய் லயிச்சிப் போய் எழுதியிருக்கீங்க.. அதனாலே கேட்டேன்
நல்லா இருக்குங்க..


ஹா... ஹா.... இல்லை மேடம் இப்போதைக்கு இல்லை...
மன்றத்தில் சொல்லாமலா இருந்து விட போகிறேன் என் திருமணத்தை...

ரொம்ப நன்றி மேடம் தங்கள் வருகைக்கு...!!!

ஓவியன்
18-02-2009, 02:07 PM
சீதோஷண மாற்றங்களால்
வந்து போகும் வசந்த காலங்கள்,
நம் வாழ்க்கையின்
சந்தோசங்களை நிறைக்கும்
மன மாற்றங்களாகவும்
நின்று நிகழட்டும்..!!

நல்ல கவிதைக்கு, மனதார்ந்த வாழ்த்துக்கள் வசீ..!!
அப்படியே எழுத்துப் பிழைகளையும்
கொஞ்சம் கவ்சனித்துக் களையுங்க..!!

செல்வா
19-02-2009, 11:12 PM
வசந்த காலம்.....
வசந்த விழா
வசந்தம்...
வசந்தம் என்ற வார்த்தையின் பொருள் என்ன மிதமான...
குளிருமில்லாத வெப்பமும் இல்லாத...
மிதமான வானிலை....
உதிர்ந்த இலைகள் துளிர்த்து பூக்கள் பூக்கத்துவங்கி.... மணம் பரப்பும் காலம்...
உலகமே ஆனந்தத்தில் மிதக்கும் காலம்
அதை அனுபவிக்காவிட்டால்...
வாழ்க்கையை வீணாக்கியதாக ஆக்காதா...
வாழ்த்துக்கள்... கவிஞரே.

இளசு
09-03-2009, 10:08 PM
இளமை.. வசந்தம்.. இனிமை..
உள்ளப்பெருக்கு போல் சொற்பெருக்கும்..

உணர்வுகளைப் பரிமாறிய வேகத்துப் பாராட்டுகள் வசீ..
உள்ள(த்)தை அப்படியே வடித்த திறனுக்கு சபாஷ்!

(ஆனாலும் ஏனோ இன்னும் செதுக்கியிருக்கலாம் எனப் படுகிறது..)

கிலுக்கம் - புதிதாய்க் கேட்ட சொல்..

அமரனின் அழகிய பின்னூட்டக்கவிதை.. அதிலும் இறுதிவரி..
மிகச் சிறப்பு..