PDA

View Full Version : ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்பாரதி
11-02-2009, 09:57 AM
ஒருநாள் கௌதம புத்தர் பிச்சைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார். பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?"

"கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன்.

"ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான்.

மற்றவர்கள் தருவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருவர் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. எதையும் ஏற்றுக் கொள்வதும், ஏற்க மறுப்பதும் நம் விருப்பப்படி இருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளாதது புத்தர் கூறியது போல நம்முடையதாகாது. ஆனால் பொதுவில் நம்மில் பெரும்பாலானோர் மற்றவர் தருவதை எல்லாம் ஏற்றுக் கொண்டு கோபமோ, வருத்தமோ பட்டு, புலம்பி, பதில் என்ற பெயரில் என்னென்னவோ சொல்லி வருந்தி, மற்றவர்களையும் வருத்தி செய்யும் அனர்த்தங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நம்மையும் அறியாமல் நாம் அடுத்தவர் கைப்பாவை ஆகி விடுகிறோம் என்பதை விலகி நின்று பார்த்தால் நம்மால் உணர முடியும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது.

நன்றி : என்.கணேசன் அவர்களின் வலைப்பூ.

அன்புரசிகன்
11-02-2009, 10:11 AM
நல்லதொரு நீதி... அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டிய விடையம். பகிர்வுக்கு நன்றி அண்ணா..

நிரன்
11-02-2009, 11:48 AM
பண்பட்டவரின் மனதைக் காட்டும் போச்சுத்திறன்.

இதை எல்லோரும் அறிந்தால் எவரும் எவரையும் வீணக பேச மாட்டார்கள்

பகிர்ந்தமைக்கு நன்றி பாரதி அண்ணா!


அன்புடன்
°°°நிரன்

பாரதி
11-02-2009, 06:11 PM
கருத்துக்களுக்கு நன்றி அன்பு, நிரன்.

loshan
11-02-2009, 06:17 PM
கணேசனின் பல பதிவுகள் வாசித்துள்ளேன்.சொல்ல வந்ததை நறுக்கென்று,அழகாக சொல்லுவார்.மற்றவர்கள் தருவதை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒவ்வொருவர் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. எதையும் ஏற்றுக் கொள்வதும், ஏற்க மறுப்பதும் நம் விருப்பப்படி இருக்க வேண்டும்.


நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்று இதைத் தான் சொல்வது.

புத்தரின் போதனைகளை நம்ம நாட்டில் சரியாகப் பின் பற்றியிருந்தால் நாங்கள் இப்படி இருப்போமா?

samuthraselvam
12-02-2009, 06:20 AM
"சூரியனை பார்த்து நாய் குறைத்தால், சூரியனுக்கு இல்லை கேடு. நாய்க்குத்தான் கேடு." என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். அதையே இக்கதையும் உணர்த்துகிறது. நல்லதை எடுத்துக்கொண்டு பொல்லாததை விட்டுவிட வேண்டும்.

aren
12-02-2009, 06:40 AM
அருமை!!!

SathyaThirunavukkarasu
12-02-2009, 03:27 PM
மிகவும் நன்று

இளசு
12-02-2009, 08:46 PM
தினமும் வாசித்து உள்வாங்கவேண்டிய கருத்துகள் - கடைசி பத்தியில்...

அப்படி செய்துகொண்டிருந்தால் ஒரு நாள்
நான் இப்படி எழுதக்கூடும் -

நீரோடையானாலும்
சாக்கடையானாலும்
கூழாங்கல்லாய் நான்!

நன்றி பாரதி !

பாரதி
13-02-2009, 09:40 AM
நன்றி லோஷன், சமுத்திரசெல்வம், ஆரென், சத்யா திருநாவுக்கரசு, அண்ணா. லோஷன் நீங்கள் வருத்தப்படுவதில் உண்மை இருக்கிறது. இங்கு தோன்றிய பெளத்தமதம் எங்கெல்லாமோ பரவி இருக்கிறது. ஆனால் அது பரவி இருக்கும் இடங்களிலும், பெளத்த மதத்தை கடைபிடிப்பதாக கூறும் இடங்களிலும் துன்பப்படும் மக்கள் இருக்கவே செய்கின்றனர். என்ன செய்ய...?

அண்ணா... ஒரு சில இடங்களில் கிடைக்கும் கூழாங்கற்கள்தாம் வணக்கத்திற்கும் பூசைக்கும் கூட பயன்படுகின்றன!

அய்யா
24-02-2009, 06:28 PM
நல்ல பதிவு. நன்றி பாரதி அண்ணா!

இறைநேசன்
25-02-2009, 04:24 AM
மனதை தொட்ட அருமையான ஒரு பதிப்பு!

எனக்கு தெரிந்து இப்படியெல்லாம் தன் நடைமுறை வாழ்வில் வாழ்ந்து கட்டியவர் மஹாத்மா காந்தி ஒருவரே என்று கருதுகிறேன்

தன் ஒரு கன்னத்தில் அடித்தவருக்கு மறு கன்னத்தை திருப்பி காட்டினார்
தன்னை எட்டி உதைத்த காலுக்கு பூட்ஸ் செய்து கொடுத்தார்!
உண்மையே பேசினார் இன்னும் பல.....

நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது!

மன்மதன்
25-02-2009, 12:02 PM
பகிர்தலுக்கு நன்றி பாரதி..