PDA

View Full Version : பதவி விலகுகிறார் மகேல..loshan
11-02-2009, 08:52 AM
http://4.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SZKShFcjd2I/AAAAAAAABfU/981YEIaByGw/s320/mahe1.jpg

http://loshan-loshan.blogspot.com/2009/02/blog-post_11.html
எதிர்வரும் பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் இலங்கை அணியின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணித் தலைமைப் பதவியில் இருந்து விலகப் போவதாக இலங்கை அணியின் தலைவர் மகேல ஜெயவர்த்தன அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிராக இலங்கை மண்ணிலேயே படுமோசமாக ஒரு நாள் தொடரைத் தோற்ற பிறகு, நேற்று இடம்பெற்ற போட்டியில் மகேல விளையாடவில்லை.

இன்று தனது முடிவை அறிவிக்க முதல் தேர்வாளர்கள்,ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடிய பிறகே இந்த முடிவை அறிவித்துள்ளார் மகேல.

2011 உலகக் கிண்ணப்போட்டியில் இலங்கைக்குத் தலைமை தாங்குபவருக்கு தகுந்த கால எல்லையில் அணியைத் தயார் படுத்தும் விதத்திலேயே தான் இப்போதே விலகி,வழிவிடுவதாக மகேல தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் இது பற்றி யோசித்தே இம்முடிவை எடுத்ததாக மகேல கூறியுள்ளார்.

மூன்று வருடங்களாக இலங்கை அணியினை வழிநடத்திய மகேல, அவரது கண்ணியமான நடத்தைகளுக்காகவும்,சிறப்பான,புத்தி சாதுரியமான அனுகுமுறைகளுக்காகவும் சர்வதேச ரீதியிலும் பாராட்டப்பட்டவர்.

இலங்கை அணிக்குத் தலைமை தாங்கியவர்களில் டெஸ்ட்,ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே தலை சிறந்த வெற்றி சதவீதம் மகேலவுக்கே இருக்கிறது.

26 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி 15 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளார்.
94 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்குத் தலைமை தாங்கி 54 வெற்றிகள்;35 தோல்விகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலை சிறந்த ஒரு நாள் தலைவர் விருதையும் வென்றேடுத்தவர்.

http://1.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SZKSgjIOd_I/AAAAAAAABfM/NsAymskrAsk/s320/ICC%2BAwards%2BP2iUTOP4GrBl.jpg
ICC விருதோடு மகேல - அது ஒரு காலம்

தலைமைப் பொறுப்பேற்ற பிறகு எத்தனயோ வீரர்கள் தங்கள் துடுப்பாட்டத்தில் கவனம் குறைந்து கோட்டை விடுவதுண்டு.மகேல அதிலும் சறுக்காமல் சிறப்பாக மிளிர்ந்தவர்.

ஒரே ஒரு தொடரின் முடிவை வைத்து ஒரு நல்ல,சிந்திக்கக்கூடிய தலைவரான மகேல இந்த முடிவை எடுத்தது என்னைப் பொறுத்தவரையில் அனாவசியம் என்றே கருதுகிறேன்.அவரைப் பற்றி எல்லோருமே நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளனர்.அணியைக் கட்டுக் கோப்போடும், ஒழுக்கத்தோடும்,வெற்றியை நோக்கிய முனைப்போடும் இதுவரைகாலமும் வழி நடத்தி வந்தவர் மகேல.

எனினும் அவரது அண்மைக்கால துடுப்பாட்ட சறுக்கல்கள் , அதுபற்றி எழுந்த கடும் விமர்சனங்கள் அவரது மனதைப் பாதித்திருக்கக் கூடும்.

இந்திய அணியின் டிராவிடைப் பல விஷயங்களில் ஒத்திருக்கும் மகேல இந்த விஷயத்திலும் அவரைப் போலவே முடிவெடுத்திருப்பது தான் ஆச்சரியம்.

அண்மைக் கால சொதப்பல்கள் அவரையும்,அணியையும் பாதித்ததே மகேல ஜெயவர்த்தனவின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று தெரிகிறது.

அடுத்து இன்னொரு சிறப்பான,கண்ணியமான வீரர் குமார் சங்ககாரவிற்கு தலைமைப் பதவி செல்லும் என ஊகிக்கலாம். மகேல தொடர்ந்தும் நல்ல ஒரு துடுப்பாட்ட வீரராக தனது பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.அதற்கு முன்னர் அவரது தலைமைப் பதவியில் இறுதித் தொடரான பாகிஸ்தான் தொடரில் இலங்கை அணி பிரகாசித்து மகேலவுக்கு மகிழ்ச்சியான பிரியாவிடை கொடுக்குமா என்பதே கேள்வி.. மகேலவும் ஓட்டங்கள் குவிக்கவேண்டும் என்பதே இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பும்.

தகவல் அறிந்தவுடன், கஞ்சிபாய் என்னோடு தொடர்பு ஏற்படுத்தி தோனியிடமும்,இந்திய அணியிடமும் கேட்க சொன்னார் "இப்ப சந்தோசமா?"

http://loshan-loshan.blogspot.com/2009/02/blog-post_11.html

அறிஞர்
12-02-2009, 02:36 PM
நல்ல வீரர்...
விளையாட்டில் ஏற்றம், இறக்கம் சகஜம் தான்.....
சமீபகாலத்தில் சரியாக விளையாடதது ஒரு காரணம், அணித்தலைவர் பொறுப்பு வேறு...
அவரின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையட்டும்.

ஓவியன்
13-02-2009, 03:08 PM
தோல்விகளுக்கு மகேல மட்டுமே காரணமில்லையே....
அவருக்கும் பொறுப்பு உண்டு, அவ்வளவுதானே...

'மகேல' அணித்தலைவராக வந்த போது, அதன் பின்னணியில் அரசியல் பலாமாக இருக்கும் என்று பலர் பேசினார்கள். ஆனால் தொடர்ந்த வெற்றிகளால் அந்த பேச்சுக்களை துரத்தியடித்தவர், தன் துடுப்பாட்டத்தினால் தற்போதைய விமர்சனங்களால் துரத்தியடிக்காமல் தானே விலகுவது ஏமாற்றமே....

பாரதி
13-02-2009, 03:22 PM
சங்ககாராவுடன் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக உலகசாதனையாக 624 ஓட்டங்களை சேர்த்தவர் மகேல. கடந்த சில போட்டிகளில் அவரது மட்டையடி சரிவைத்தந்ததால், அதில் மட்டுமே கவனம் செலுத்துவது என்ற எண்ணத்துடன் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். இனி யார் இலங்கை அணித்தலைவராகப் போகிறாராரோ... பொறுத்திருந்து பார்ப்போம்.

மன்மதன்
14-02-2009, 12:38 PM
சிறந்த வீரர்..

ஒரு தொடரின் தோல்வியை வைத்து முடிவெடுத்தது சரியானதா என்று தெரியவில்லை..

அறிஞர்
14-02-2009, 01:16 PM
சிறந்த வீரர்..

ஒரு தொடரின் தோல்வியை வைத்து முடிவெடுத்தது சரியானதா என்று தெரியவில்லை..
சிலர் கேப்டன் பதவியுடன்... ஆட்டத்தில் ஜொலிப்பதில்லை. இந்தியர்கள் பலர் இதற்கு உதாரணம்.
அணித்தலைவராக இல்லாமல்... ஒரு சிறந்த மட்டையாளராக ஜொலிக்கட்டும்.

aren
14-02-2009, 11:50 PM
ஒரு அணிக்கு தலைவராக இருக்கும்பொழுது பல விஷயங்களில் விட்டுக்கொடுத்து போக வேண்டியிருக்கிறது. ஒரு சில சமயங்களில் தலைவர் தேர்வுக்குழுவிற்கு பணிந்து ஒரு நல்ல ஆட்டக்காரரை விட்டுக்கொடுத்து மற்றவருக்கு இடம் கொடுக்கும்படி ஆகிவிடுகிறது. இதனால் அணித்தலைவர் நினைத்து வைத்திருந்த உத்திகளை மாற்றி ஆட்டத்தை ஆட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அது தவிற, நாடு முழுவதும் இவர் எப்படி அணியை தலைமையேற்று நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், தலைமையேற்று நடத்துபவருக்கு பிரஷர் கூடுகிறது.

இதனாலேயே பல நல்ல ஆட்டக்காரர்களால் தொடர்ந்து தலைவராக நீடிக்க முடியவில்லை.

இதற்கு சில எடுத்துக்காட்டுக்கள்:

டெண்டுல்கர்
திராவிட்
கெவின் பீட்டர்சன்
ஆண்டுரூ ஃபிளின்டாஃப்

இப்பொழுது மஹேல*

இது இன்னும் தொடரும்.

ஓவியன்
15-02-2009, 12:30 PM
ஒரு காலத்தில் உலககிலுள்ள எல்லா நாடுகளினதும் கிரிக்கட் அணித்தலைவர்கள் அவர்களது வெற்றி தோல்வி அடிப்படையில் பதவி விலகிக் கொண்டிருக்க, நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவர் 'பிளேமிங்' மட்டும் வெற்றி தோல்விகளால் அசைக்க முடியாத தலைவராக இருந்தார் (எவக்கீரீன் கேப்டன் ஆச்சே)....

இப்போது அந்த நிலை யாருக்கும் இல்லை என்றே தோன்றுகிறது, தொடரும் தோல்விகள் தொடர்ந்தால் ‘பொண்டிங்' கூட இதே முடிவினை எடுக்க வேண்டிய நிலை வந்தே தீரும்....

arun
15-02-2009, 05:04 PM
ஒரே ஒரு தொடர் தோல்வியால் அவர் இந்த முடிவை எடுத்தால் அது ரொம்ப தவறு தான் எனினும் ஆட்டக்காரராக அவர் ஜொலிக்க வாழ்த்துவோம்

loshan
15-02-2009, 05:19 PM
உண்மை தான் நண்பர்களே.. மகேலவின் திடீர் விலகல் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் சங்ககார,முரளிதரன் போன்றோருக்கே அதிர்ச்சியை அளித்திருக்கிறது. இதன் பின்னால் அரசியல் இருப்பதாகவும் பேச்சிருக்கிறது. உண்மைகள் ஒரு நாள் வெளிவரலாம்..

ஒரு தொடரின் தோல்வியால் துவண்டு போகும் அளவுக்கு மன உறுதி அற்றவறல்ல மகேல..

அதுபோல ஏலவே ஒரு நண்பர் சொன்னது போல தலைமைத்துவ அழுத்தத்தால் தங்கள் துடுப்பாட்டப் பழம் இழந்தவர்கள் ஏராளம் பேர்.

ஆனால் மகேல மட்டுமே பிரட்மனுக்கு அடுத்தபடியாக தலைவராக இருந்து துடுப்பாட்டத்தில் மிகச் சிறந்த சராசரி வைத்திருப்பவர்.