PDA

View Full Version : கணினி பாதிக்கப்பட்டிருக்கிறதா...?



பாரதி
11-02-2009, 08:38 AM
அன்பு நண்பர்களே,

நம்முடைய கணினியில் பல ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களை நிறுவி இருந்தாலும் சில நேரம் நமது கணினி வழக்கமான வேகத்தில் இயங்காமல் போவது போல தோன்றினால் கவுண்டர் ஸ்பை எனும் மென்பொருளை பதிவிறக்கி, நிறுவி இயக்கிப் பாருங்கள். அவஸ்ட், நார்டன், ஸ்பைபாட், ஆட்-அவேர் ஆகியவற்றால் கண்டுபிடிக்க அல்லது நீக்க இயலாதவற்றை கண்டுபிடித்து அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

இது இலவச மென்பொருள் அல்ல. விலைக்கு வாங்குவது எனில் 20 அமெரிக்க டாலர்களை செலவழிக்க வேண்டி இருக்கும். சோதனை மென்பொருளைப் பதிவிறக்கி நிறுவுவதன், மூலம் 15 தினங்கள் வரை நாம் கணினியை சோதித்துக்கொள்ள முடியும். அனைவரும் ஒருமுறையாவது தங்கள் கணினிகளை இதன் மூலம் சோதித்துப்பார்த்துக் கொள்வது நலம்.

கோப்பின் அளவு : 67.6 எம்.பி
பதிவிறக்கச்சுட்டி: http://www.sunbeltsoftware.com/Home-Home-Office/Anti-Spyware/

anna
11-02-2009, 03:09 PM
இலவச மென்பொருளாக இருந்தால் உபயோகமாக இருக்கும். சரி போன போகுது டிரையல் வேர்சன் பதிவிரக்கி 15 நாட்களாவது சோதித்து பார்க்கலாம் என்றால் இந்த பைலின் கொள்ளவு 67.6 எம்.பி யாக உள்ளதே. தகவல் தந்தமைக்கு நன்றி

இளசு
12-02-2009, 06:45 AM
நேற்று செய்து பார்த்தேன் பாரதி..

கணினி நலமென்று அறிக்கை வந்தது..

நன்றி உன் சேவைக்கு!

பாரதி
12-02-2009, 11:11 AM
நன்றி அண்ணாமலை, அண்ணா.

என்னுடைய கணினியில் இருந்த நச்சு நிரல்கள் நீக்கப்பட்டு, இப்போது கணினி பாதுகாப்பான நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.