PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 8



rambal
09-09-2003, 02:22 PM
விகாஸின் சரித்திர நாவலுக்கு ராமின் விமர்சணக் கடிதம்..

ஆரம்பம் முதலே விகாஸிற்கு கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா
மேலும், இது போன்ற சரித்திர நாவல்கள் மேல் தனி ப்ரியம் இருக்கிறது..
இதில், சமீபத்தில் படித்த பிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற நாவல் சமீபத்திய புதுச்சேரி
ப்ரெஞ்சுக்காரர்களின் வாழ்க்கையை நிதர்சணமாகக் காட்டியது வேறு அவருக்கு
ஒரு உந்துதல் ஏற்படக்காரணமாகிவிட்டது.. மேலும், சுஜாதாவின் மேஜிக் ரியலிசம் மேல்
அவருக்கு ஒரு தனி ஆர்வம்.. ஆக மொத்தத்தில் செவ்வியலும், மேஜிக் ரியலிசமும்
கலந்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை..
ஆதற்காக கோவாவில் இருக்கும் டோனாபவுலை சரித்திரமாக்கி ரீட்டாவின் காதலை
மேஜிக் ரியலிசத்தோடு கொண்டு வர முயற்சித்து.. மொத்தத்தில் அந்த நாவல் வெளியாகி இருந்தால்
அது குப்பையாகத்தான் இருந்திருக்கும்.. இதற்கு கல்லறைப் பூக்கள் என்று தலைப்பும், காதல் புனிதம்
என்ற பாசாங்கும் காட்டி தன்னை ஒரு ஜெண்டில்மேன் எழுத்தாளராக காட்டிக் கொள்ள
முயற்சித்திருக்கிறார். உண்மையில் டோனா பவுலுக்கு ரெமோ மீது இருந்தது காதல் அல்ல.. காமம்..
அவர்கள் கடற்கரையில் கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதுதான் ஜெப்ரியால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு
கொல்லப்பட்டாள்.. ரீட்டாவின் கதையும் ஏறக்குறைய இதே போன்றதுதான். அவளும் திருமணத்திற்கு முன்பே கருவுற்றதால்தான்
வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். இது போன்ற அபத்தங்களை விகாஸ் புனிதமாக காட்ட முயன்று..
நல்ல வேளையாக அந்த நாவலை பிரதியெடுப்பதற்கு முன்பே அவர் காணாமல் போய்விட்டார்.

இதனால், தமிழ் கூறும் நல்லுலகம் தப்பித்துவிட்டது..

இது போன்ற எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவிற்கு கதை எழுதப் போகலாம் என்றும் தமிழ் இலக்கியத்தை
கெடுக்கக்கூடாது என்பதே எனது ஆசை என்றும் இப்படியாக தொடரும் ராமின் கடிதம் இந்த வார்த்தையில்
இந்த வாக்கியத்தில் நிறைவுபெறுகிறது..

உண்மையில் விகாஸ் இப்போது எங்கிருக்கிறார்?

தங்களைக் கொல்லும் முயற்சியில் விகாஸ் ஈடுபட்டதாகவும் அதற்கு முன்பே அவரது குறிப்புகளில் இருந்து
தப்பித்து நாங்கள் வேறு ஓர் இடத்திற்கு பாதுகாப்பாக சென்றுவிட்டதாலும், இதனால் குழம்பிப் போன விகாஸ்
மனசிதைவிற்கு உண்டாகி எங்கோ சென்று விட்டார் என்றும் அவரது சரித்திர நாவலில் இடம் பெறாமல்
தப்பித்த வார்த்தைகள் வாக்குமூலம் கொடுத்துள்ளன..

வார்த்தைகளுக்கும் விகாஸ் பற்றி தெரியாமல் போகவே, அவரைப்பற்றி ஜடாமுனி சித்தரை விஜாரித்தால்
உண்மை புலனாகும் என்று அவரை சந்தித்தேன்.. அவர் கூறிய விபரங்கள் பின் வருமாறு:

சவத்திற்கு போடும் கோடித் துணியடா
கோடித் துணி அணியும் ஜாதியடா
மத்திய கிழக்கு ஆசியாவின் சொர்க்கமடா
நவீனத்தின் புரியாத கணணியடா
குடித்தனம் போனானடா!

இப்படியாக சித்தர் தனது பாடலைக் கூறி விட்டு மாயமாய் மறைந்து விட புரிந்தும் புரியாமல் புரிந்தது போல் இருந்தது..

கோடித் துணியை தலையில் கட்டிக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை பாலைவனத்தில் இருக்கும் முகமதியர்களைக் குறிக்கிறது.
மத்திய கிழக்கு ஆசியா எனும் பொழுது அது அரபு தேசம் ஒன்றைக் குறிக்கிறது. அரபுதேசத்தில் சொர்க்கம் என்றால்
அநேகமாக பஹ்ரைன் அல்லது துபாய். அங்கு கணணியில் வேலை செய்ய சென்று விட்டார்...

அப்படியென்றால், ராமின் கடிதத்தால் மிகவும் புண்படுத்தப்பட்டு இலக்கியம் என்றால் கிலோ எத்தனை என்று கேட்கும்
தேசத்திற்கு சென்று விட்டான். இதனால், தமிழ் இலக்கிய உலகம் ஒரு எழுத்தாளனை இழந்துவிட்டது.

இதைப் புரிந்து கொண்ட ஜடாமுனி சித்தர் திடீரென்று அருந்தெருளி:

உன் எண்ணம் உண்மையடா
விகாஸிற்கு தமிழ் மேல் வன்மமடா
எழுதுவான் நாவலை அரபியில்
க்ருந்தேவில் ஸ்பானிஸில் லத்தீனில்
ஹ¥ப்ரூவில் ஓரியில் - இதுவே
அவனது திண்ணமடா!

இந்தப்பாடலைக் கேட்ட ராம்,
அவன் ஏற்கனவே தமிழுக்கு நிறைய எழுதிக் கிழித்துவிட்டான் என்று மீதமிருக்கும் இந்த மொழிகளிலும் எழுதி
அந்த மொழிகளின் வார்த்தைகளையும் ஓட ஓட விரட்டப்போகிறானாக்கும்..
அவன் அரபு தேசம் போனதெல்லாம் கண் துடைப்பு. அவன் இங்குதான் மதுரையில் இருக்கும் சங்கராக கூடு விட்டு கூடு
பாய்ந்திருக்கிறான். ஏனெனில், சங்கர்தான் இப்போது விகாஸ் போலவே எழுதிக் கொண்டிருக்கிறான்.
மேலும், அவன் கூடு விட்டு கூடு பாய்ந்ததை ஜடாமுனி சித்தர் தெள்ளத்தெளிவாக பார்த்துள்ளார்.
இதை விடுத்து அவன் அரபு தேசம் போன பழைய கதையெல்லாம் சொல்லி உன்னைக் குழப்பப்பார்க்கிறார் என்று சொன்னதின் பேரில்
சங்கரை காண மதுரைக்குப் புறப்பட்டேன்..

பாரதி
09-09-2003, 02:33 PM
இப்போதுதான் கதை சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

இக்பால்
09-09-2003, 05:51 PM
ராம்பால் நண்பரே...இந்த அத்தியாயத்தை படித்தவுடன் அடுத்த
அத்தியாயத்திற்குப் போகலாம் என இருந்தேன். கடைசி வரிகளை
படித்த பிறகு மதுரையில் இருப்பதாக முன்னால் வந்தவர் பெயர்
காண முந்திய அத்தியாயத்திற்கு போக வேண்டியதாகி விட்டது.
-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
11-09-2003, 05:07 AM
ஓ...ஓ...ஓ...
கூடுவிடு கூடு பாய்கிறதெல்லாம் வேறு இருக்கிறதா...சரியா போச்சு...
(மணியா...கொஞ்சம் எலுமிச்சம் பழம் கொடுப்பா...)