PDA

View Full Version : கலியுகம்



ஆதவா
10-02-2009, 07:35 AM
வருடம் 2010
உலகப்போர்

சிப்பாய் உடையில் என் மகன்,
யுத்தகளத்தில் எதையோ ஜெபித்தபடி
கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும்
சிலுவையைப் பிடித்து நிற்கிறான்

குண்டுகள் தெறிந்து
சிதைந்து போயிருந்த கட்டிடத்தினருகே
ஆவேசமாக ஓடிவரும்
ரஷ்ய காம்ரேடுகளை
பாரபட்சமின்றி
சுட்டுத்தள்ளுகிறான்

அவனது குறிகள் மாறாமல் இருக்கின்றன
அவனுக்கான கட்டளைகள்
காத்துக்கிடக்கின்றன

எவ்வளவு நேரம்தான் கொன்றுகுவிக்கமுடியும்?
ஆசுவாசப்படுத்திக் கொள்ள அமர்கிறான்
அவன் என்று சாப்பிட்டான் என்பது தெரியவில்லை
ஆனால் பசியில்லை..

இப்பொழுது என்ன செய்வது
அமர்ந்திருக்கும் சிப்பாய்களோடு
ஆலோசிக்கிறான்.

எதிரிகள் எங்கு மறைந்திருப்பார்கள்
என்பது புதிராகவே இருக்கிறது

சிறிது நேரங்கழித்து
என்னிடம் கேட்கிறான்,,

"How can I advance this level dad?"

இளசு
10-02-2009, 07:16 PM
கதைகள் படித்தால் -
காட்சிகள் மனதில் விரியும்..
கருத்துகள், எண்ணங்கள் ஊறும்..
எப்படி முடியும், என்ன ஆகும்
ஏக்கம் கூடும்..

மூளை இயலாளர்கள் சிலாகிக்கிறார்கள் -
வாசிக்கும் வழக்கமே மனிதத்தின் உச்சங்களில் ஒன்றென...!


கொன்று, துவம்சம் செய்து, குருதி சிந்தவைத்து
மோதி உடைத்து அழித்து நாசமாக்கி
முந்தி, வென்று, அடக்கி, துவம்சம் செய்யும்
வீடீயோ கேம்கள் - இன்று வாசிப்பின் மாற்றாக
நம் அடுத்த தலைமுறைக்கு!

மூளைகளின் சில சுளைகள் மழுங்கலாம் இனி...
மற்ற சுளைகள் பருத்து தழைக்கலாம்..
எவை நல்லவை? எவை அல்லவை??
காலம் சொல்லும் சுளையாக ஒரு பதில்!


கவர்ந்த கவிதைக்கு என் பாராட்டுகள் ஆதவா..
(ஃப்யூச்சரிசம் நம் இருவர் மனங்கவரிசம்... இல்லையா?)

ஷீ-நிசி
11-02-2009, 12:16 PM
ஹா! ஹா! கடைசி ஒற்றை வரியில்தான் எனக்கு அர்த்தமே விளங்கியது....

ம்ம்ம்ம்.. இந்தக் க(வி)தை இப்ப இருக்கும் தலைமுறைக்கும் கூட பொருந்துமே!

குறுங்கவிதைகள் பகுதியில் இருந்ததால் நான்கு வரிகளில் இருக்கும் என்று நினைத்தேன்...

ம்ம்ம்ம்.. இதை நாலே வரிகளில் எழுது ஆதவா!

ஆதவா
11-02-2009, 01:14 PM
உலகப்போர்

இரத்தமும் செல்களும்
ஒரே நேரத்தில் தெறிக்க,
ஓடிவரும் சிப்பாய்களைக்
கொன்று குவித்து,
சுவரிடிந்த வீட்டுக்குள் நுழைந்து
அடுத்த குறிக்காக
ஆசுவாசப்படுகிறான்
Call of Duty
ஆடிக் கொண்டிருக்கும் என் மகன்,.

ஷீ!! இது ஓகேயா????

நன்றி கபாலி.....

ஆதவா
11-02-2009, 01:24 PM
நன்றி அண்ணா...

First person shooter வகை விளையாட்டுக்கள் எனக்குப்பிடித்தமானவை..

ஃயூச்சரிசம்... எனக்குப் பிடித்தமானவை... அதற்கு ஒரு கட்டுரையே கொடுக்கவேண்டும்.....

பாரதி
11-02-2009, 03:02 PM
சிந்தனைக்குரிய கவிதை ஆதவா.

கணினி விளையாட்டுக்களை வைத்து, இளைய சமுதாயத்தை போதையில் ஆழ்த்தி, பணம் செய்ய முயலும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்தே வருகின்றன என்பது கண்கூடு. இரவையும் பகலையும் அறியாதபடி எப்போதும் விளையாடும் கணினி விளையாட்டால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று செய்திகளில் அவ்வப்போது படிக்கத்தான் செய்கிறோம்.

கவிதையின் முதல்பத்தி சற்று தனித்திருப்பதாகப்படுகிறது. அதே போல் ஆனால் பசியில்லை என்ற வாக்கியமும் சரியாக அமையாததாக தோன்றுகிறது. கவிதையின் கடைசி வரி அபாரம். அதுவும் தமிழிலே அமைக்கப்பெற்றிருப்பின் வெகு சிறப்பாக அமைந்திருக்கும்.

இனிய வாழ்த்து ஆதவா.

ஆதவா
11-02-2009, 04:03 PM
இது ஒரு சிறுகதை உத்தி பாரதி அண்ணா..
நீங்கள் வருடம் 2010 எனும் பொழுது நிஜத்தை உணருவீர்கள், அதே கேம் எனும் பொழுது நீங்கள் நிஜத்தை விட்டு, அது ஒரு விளையாட்டுத்தான் என்று திருப்பத்தை ரசிப்பீர்கள்..

நான் 1942 என்று எழுதமுடியாது... அதாவது முதல் வரியிலேயே சஸ்பென்ஸை திறக்க முடியாது...

ஆங்கில வரிகள்...

தங்களது வீட்டுக் கணிணியில் நிறைய பணம் கொடுத்து கேம் ஆடும் குடும்பங்கள், ஆங்கிலம் பேசுகின்றன என்று நான் எடுத்துக் கொண்டேன்.. அல்லது, இது ஒரு ஆங்கிலக் குடும்பத்தில் நடப்பதாக...... ஓ.. வேண்டாம்.. அப்படியென்றால் முழுக்கவிதையும் இருக்கவேண்டுமல்லவா///

நன்றி அண்ணா..

பாரதி
11-02-2009, 04:10 PM
விளக்கத்திற்கு நன்றி ஆதவா.

ஷீ-நிசி
14-02-2009, 01:17 AM
உலகப்போர்

இரத்தமும் செல்களும்
ஒரே நேரத்தில் தெறிக்க,
ஓடிவரும் சிப்பாய்களைக்
கொன்று குவித்து,
சுவரிடிந்த வீட்டுக்குள் நுழைந்து
அடுத்த குறிக்காக
ஆசுவாசப்படுகிறான்
Call of Duty
ஆடிக் கொண்டிருக்கும் என் மகன்,.

ஷீ!! இது ஓகேயா????

நன்றி கபாலி.....

ஆதவா... நல்லாருக்கு.. ஆனா ஒரு இன்னும் கொஞ்சம் கூட சுருக்கலாம் என்பது என் அபிப்ராயம்!

எனக்கு தோன்றியது ஆதவா!

போரில் எதிரிகளை
கொன்று குவித்தே.....
களைத்துபோனவனை,
ஒரு குரல் அழைத்தது......

போதும் போதும்...
கம்ப்யூட்டரில் கேம்ஸ்,
விளையாடியது!!

ஆதவா
14-02-2009, 01:26 AM
ஹா..... அருமை ஷீ!!!! இது உண்ண்மையிலேயே குறுங்கவிதையாக எழுதி வைத்ததுதான்.... இப்போ நீளப்படுத்திட்டேன்......

பாராட்டும் நன்றியும்.......

ஷீ-நிசி
14-02-2009, 01:35 AM
ஹா..... அருமை ஷீ!!!! இது உண்ண்மையிலேயே குறுங்கவிதையாக எழுதி வைத்ததுதான்.... இப்போ நீளப்படுத்திட்டேன்......

பாராட்டும் நன்றியும்.......

குறுங்கவிதான் பெருங்கவியாகிவிட்டதா!....

நன்றி ஆதவா! :mini023:

இளசு
14-02-2009, 04:41 AM
போரில் எதிரிகளை
கொன்று குவித்தே.....
களைத்துபோனவனை,
ஒரு குரல் அழைத்தது......

போதும் போதும்...
கம்ப்யூட்டரில் கேம்ஸ்,
விளையாடியது!!


ஆதவனும் ஷீயும் இங்கே ஓசையின்றி
ஒரு சிறு கவிதைப்பட்டறை ( மினி வொர்க்ஷாப்) நடத்துகிறார்கள்..

கற்பவனாய் எனக்கு வரவும், மகிழ்வும்..

பாராட்டுகள் இருவருக்கும்!

ஆதவா
14-02-2009, 05:09 AM
ஆதவனும் ஷீயும் இங்கே ஓசையின்றி
ஒரு சிறு கவிதைப்பட்டறை ( மினி வொர்க்ஷாப்) நடத்துகிறார்கள்..

கற்பவனாய் எனக்கு வரவும், மகிழ்வும்..

பாராட்டுகள் இருவருக்கும்!

ஆஹ.அ..... அப்படியெல்லாம் ஏதுமில்லை அண்ணா...

ஆனால் நீங்கள் சொன்ன பிறகு இப்படியும் ஒரு யோசனை.... நீள கவிதைகளைக் குறைத்து எழுதி ஒரு திரி ஆரம்பிக்கலாம்.....

ஷீ.... ஓகேயயஅ???

நாகரா
15-02-2009, 04:25 AM
அகத்தே குடி கொண்ட வன்புப் பேய்
புறத்தே தலை விரித்தாடுது
நிஜப் போர்க்கள இரத்த சகதியாய்!
அச்சகதியே மையாக
கணினியில் எழுதப்படும்
போர்க்கள விளையாட்டுக்கள்
அன்பே சிவத்தை
மொத்தமாய் மறக்கடிக்குது!

இரு கவிதைகளும்
கலாச்சாரச் சீரழிவால்
ரோபாக்களாய் மாறித்
தம் குழந்தைத் தனத்தைத்
தொலைத்துக் கொண்டிருக்கும்
சிறுவர்களைப் படம் பிடித்துக்
காட்டுவது அருமை

வாழ்த்துக்கள் ஆதவா

ஷீ-நிசி
16-02-2009, 01:01 AM
ஆதவனும் ஷீயும் இங்கே ஓசையின்றி
ஒரு சிறு கவிதைப்பட்டறை ( மினி வொர்க்ஷாப்) நடத்துகிறார்கள்..

கற்பவனாய் எனக்கு வரவும், மகிழ்வும்..

பாராட்டுகள் இருவருக்கும்!

இப்படி செதுக்கி செதுக்கி எழுததோன்றுவதெல்லாம், உங்களின் விமர்சனங்களை படித்து படித்துப் பழகியே வந்தவைகள்தானே இளசு ஜி!

நன்றி வொர்க்ஷாப் ஓனருக்கு! :icon_ush:

ஷீ-நிசி
16-02-2009, 01:07 AM
ஆஹ.அ..... அப்படியெல்லாம் ஏதுமில்லை அண்ணா...

ஆனால் நீங்கள் சொன்ன பிறகு இப்படியும் ஒரு யோசனை.... நீள கவிதைகளைக் குறைத்து எழுதி ஒரு திரி ஆரம்பிக்கலாம்.....

ஷீ.... ஓகேயயஅ???

ஆதவா.. ஓகே லாம் கேட்கவே வேணாம்... நிச்சயம் இதை ஆரம்பிப்போம்... இந்த திரியிலேயே கூட தொடரலாம்.. இந்த திரி வெற்றியடைந்தால், உன்னுடைய கவிதையே அதின் மூலக்காரணம் என்று அறிந்துக்கொள்ளட்டும் எந்த புதியவர்களுக்கும்..

இங்கே தினம் ஒரு கதையின் கருவைக் கொடு ஆதவா.... ஒரு நாளைக்கு ஒன்று வீதம். கதையை வைத்து நான்கு வரிகளில் கவிதை அமைக்கட்டும் அனைத்து கவிஞர்களும்.

ஆதவா உன்னுடைய கருத்துக்களையும் கூறவும்!

மற்றும் அன்பு மன்ற நண்பர்களே உங்கள் கருத்துக்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள். :icon_b:

ஓவியன்
18-02-2009, 02:16 PM
இது கூட நல்லதுக்குத்தான் ஆதவா,
ஏனெனின் வரும் காலங்களில் போர்கள்,
வீடியோ கேம்களில் மட்டுமே இருந்திட்டால்
எவ்வளவு நன்றாக இருக்கும்....

அழகான கவிதைகளும்,
அழகான பின்னூட்டங்களும்
இரசித்து, லயிக்க வைத்தன,
வாழ்த்துக்கள் மக்களே...!!