PDA

View Full Version : இது காதல் மாதம்!ஷீ-நிசி
10-02-2009, 12:39 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/IthuKaadhalMaathamNew.jpg


உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!


*************


பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...

என் தேவதையே....

வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!


*************


நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!


*************

ஓவியன்
10-02-2009, 12:57 AM
சின்ன வார்த்தைகளை அழகாகக் கோர்த்து
ஷீயின் தனித்தன்மைக் கவிதைகளை
காதல் மாதத்தில், காதலாகவே காண்பதில்
கொள்ளை மகிழ்ச்சி..!!


வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!

:icon_b: :icon_b: :icon_b: :icon_b:

மனதார்ந்த பாராட்டுக்கள் ஷீ..!!

ஷீ-நிசி
10-02-2009, 07:51 AM
நன்றி ஓவியன்!

ஆதவா
10-02-2009, 08:17 AM
என்னங்க,,, காதல் கவிதைகளோட வந்திருக்கீங்க??
உங்களுக்கு வரவேற்புகள்..

காதலுக்கென்று தனிமொழி இருக்கிறது, அதில் புகுந்து கொள்ளும் எல்லாருக்குமே அம்மொழி வசப்படுகிறது. உங்களுக்கும் அப்படித்தான்.. எல்லாருக்கும் காதல் இனிக்கிறது.. ஏதோ ஒரு விதத்தில் நாம் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்..

ஆனால் உங்களின் தனிப்பட்டு நிற்கும் கவிதைகள் வேறு... அது வேற பாதை, இது வேற பாதை.. இரண்டுமே சிறந்தவை.

மூன்றாம் கவிதை தனித்து நிற்கிறது.. அதில் காதல் கோபம் எனும் நிலைமாறி, கொஞ்சுகிறது...

தொடருங்கள்....

உங்கள் கவிதைகளை இங்கேயும் கொஞ்சம் அனுப்புங்களேன் : youthful@vikatan.com

ஷீ-நிசி
10-02-2009, 11:26 AM
என்னங்க,,, காதல் கவிதைகளோட வந்திருக்கீங்க??
உங்களுக்கு வரவேற்புகள்..

காதலுக்கென்று தனிமொழி இருக்கிறது, அதில் புகுந்து கொள்ளும் எல்லாருக்குமே அம்மொழி வசப்படுகிறது. உங்களுக்கும் அப்படித்தான்.. எல்லாருக்கும் காதல் இனிக்கிறது.. ஏதோ ஒரு விதத்தில் நாம் அதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்..

ஆனால் உங்களின் தனிப்பட்டு நிற்கும் கவிதைகள் வேறு... அது வேற பாதை, இது வேற பாதை.. இரண்டுமே சிறந்தவை.

மூன்றாம் கவிதை தனித்து நிற்கிறது.. அதில் காதல் கோபம் எனும் நிலைமாறி, கொஞ்சுகிறது...

தொடருங்கள்....

உங்கள் கவிதைகளை இங்கேயும் கொஞ்சம் அனுப்புங்களேன் : youthful@vikatan.com


நன்றி ஆதவா...

உடனே அனுப்புகிறேன்!:)

சிவா.ஜி
10-02-2009, 11:39 AM
காதல் மாதத்தில் காதல்கவியின் காதல் சொட்டும் வரிகள் மயக்குகின்றன. ஷீ-நிசியின் வரிகளில் ஆதவா சொன்னதைப்போல காதல் சொட்டுகிறது இனிய தேனாக.

எல்லா வரிகளையுமே ரசித்தேன் ஷீ...குறிப்பாக ஓவியனைக் கவர்ந்த அதே வரிகளை அதிகமாக.

வாழ்த்துகள் ஷீ-நிசி.

நிரன்
10-02-2009, 11:40 AM
காதலியை உயர்த்திக்காட்டும் கவிதைகள் சிறுசிறு வரிகளாக் கோர்த்து இம்மாதத்திற்கேற்றவாறு கவிதையைக் கொடுத்திருக்கிறீங்க!

உங்கள் பல கவிதைகளைப் படித்துள்ளேன்.. போர்களமா வாழ்க்கை என்ற கவி மூலம் உங்கள் கவிக்கு நான் அடிமையாகிவிட்டேன்.

அருமையாகவுள்ளது வரிகள்.


நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!

காதலியைக் கோபப்படுத்துவதன் மூலமும் அதனால் உருவாகும் சிறு சண்டையும் அதன் பின்னர் மனதில் இருந்த வரும் சொற்கள் அணைத்தும் உண்மையான அன்பினை வெளிப்படுத்தும், சிறு சிறு கோபங்கள் சண்டைகளுக்குப் பிறகு உறவு மிகவும் நெருக்கமாகிறது. இக்கவிதைகள் நன்றாகக் கூறுகிறது கோபத்தின் நேசத்தை.


வாழ்த்துக்கள் ஷீ அண்ணா!

ஷீ-நிசி
10-02-2009, 11:54 AM
காதல் மாதத்தில் காதல்கவியின் காதல் சொட்டும் வரிகள் மயக்குகின்றன. ஷீ-நிசியின் வரிகளில் ஆதவா சொன்னதைப்போல காதல் சொட்டுகிறது இனிய தேனாக.

எல்லா வரிகளையுமே ரசித்தேன் ஷீ...குறிப்பாக ஓவியனைக் கவர்ந்த அதே வரிகளை அதிகமாக.

வாழ்த்துகள் ஷீ-நிசி.

நன்றிகள் சிவா.ஜி!

ஷீ-நிசி
10-02-2009, 11:55 AM
உங்கள் அன்பிற்கு நன்றி நிரன்!

அமரன்
10-02-2009, 07:33 PM
வாங்க அற்புதரே!
நீங்கள் மன்றம் வந்தால் நமக்கு அவை காதல் கணங்கள்தான்.
கவிஞர் நீங்கள் இப்படியே எழுதிட்டு இருங்க.
சுவைஞர் நாங்கள் இப்படியே சொல்லிட்டு இருக்கோம்..
கடைசீல இருபகுதியும் சர்க்கரை வியாதிக்காரர் ஆகிடலாம்.

ஆமா.. எவ்வளவோ இனிப்பு சாப்பிடுதே எறும்பு. அதுக்கும் சர்க்கரை வியாதி வருமா??

நேசிப்பை வைத்து விளையாடி உள்ளீர்களே. அதை சுவைத்த போது "கோபத்தில் ஒருவன் தன்னை மறக்கிறான்" என்று அறிஞர் சொன்னது (நம்ம அறிஞர் இல்லீங்க) நினைவுக்கு வந்தது. :)

ஷீ-நிசி
11-02-2009, 12:20 AM
நன்றி அமரரே!

"கோபத்தில் ஒருவன் தன்னை மறக்கிறான்" நம்ம அறிஞர் சொல்லலையா?! அறிஞரே ஒரு தபா சொல்லிட்டுப் போயிடுங்க... :) இனிமே நீங்க சொல்லலைன்னு யா.....ரும் சொல்ல முடியாது.... :)

எப்பிடி! எப்பிடி!

துளசி
17-02-2009, 08:40 PM
//உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!//

இந்த கவிதையை ரசித்தேன் நல்லா ஏழுதறீங்க ஷீ-நிசி அவர்களே

samuthraselvam
18-02-2009, 05:33 AM
அழகான காதல் மாதத்தில் சுவையான காதல் கவிதை...

உங்களின் காதலியை தேவர்களுடன் ஒப்பிட்டு உங்கள் காதலியையும் காதலையும் வானளவு உயர்தியிருக்கிறீர்கள்......

அன்பு என்பது யார் மீது வேண்டுமானாலும் காட்டலாம், ஆனால் கோபம் என்பதை உயிருக்கும் மேலான உரிமை உள்ளவர்களின் மீது மட்டுமே காட்டமுடியும் அல்லவா?

பாராட்டுக்கள்.... ஷீ-நிசி !!!

ஷீ-நிசி
18-02-2009, 01:19 PM
நன்றி துளசி! நன்றி சமுத்திரசெல்வம்!

இளசு
25-02-2009, 06:51 AM
உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!
இதழமுத இனிப்பு காத்திருக்கிறது..
சர்க்கரைக்குத் தேன் மாற்றாம்!

----------------------------------------

என் தேவதையே....

வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!
இப்படி உன்னைப் படைத்ததற்காக
அந்தக் காதலிகள் கோருகிறார்கள் -
பிரம்மனின் பதவி விலகல்!


நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!


நேசிக்கும் நேரங்கள் அதிகமாகட்டும்...
மிக அதிகமாய் நேசிக்கும் நேரங்கள் குறையட்டும்!!------------------------

வாழ்த்துகள் அழகுக்காதல் கவிஞன் ஷீ-க்கு!..

ஷீ-நிசி
25-02-2009, 12:50 PM
தனித்தனியாக இ(ரு)ரசித்து பின்னூட்டமிட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் இளசு ஜி!

வசீகரன்
26-02-2009, 05:30 AM
[
நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!
*************[/COLOR]

ஆஹா.... மீண்டும் ஒரு ஆழ்ந்த காதலை சொல்கிறது இந்த வரிகள்... கடலை போடுபவர்கள்..
காதல் வசனங்கள் பேசுபவர்கள் உண்மை காதலர்கள்
அல்லர்....

உரிமையுடன் ஊடலும் கூடலும் கொள்பவர்கள்தான்
காதலர்கள் என்பதை அழகிய வரிகளில் கவிதை தந்திருக்கிறீர்கள் நிஷி...

அழகான காதல் நாணம்....!!!

ஷீ-நிசி
26-02-2009, 02:01 PM
நன்றி வசீகரன்!