PDA

View Full Version : சக்கரகட்டி

ரங்கராஜன்
09-02-2009, 04:19 PM
போன வாரம் ரொம்ப நாள் கழித்து என்னுடைய நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன், போகும் பொழுது வேறும் கையொடு போககூடாது என்று ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்று அல்வாவும் மிச்சரும் வாங்கிக் கொண்டு நண்பர் வீட்டை அடைந்தேன். வழக்கம் போல நண்பன் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு இருக்க, அவங்க அம்மாவும் அப்பாவும் வாய் நிறைய மனம் நிறைய வரவேற் உபசரித்தார்கள். நண்பன் காலை உணவே அப்பொழுது தான் சாப்பிட்டு கொண்டு இருந்தான் மணி 11.00, என்னையும் அவங்க அம்மா சாப்பிட சொன்னார்கள்,

“டேய் சப்பாத்தி போட்டு தரேன் சாப்பிடுறீயா”

“வேண்டாம் மா, காலையில் தோசை சாப்பிட்டு வந்தேன்”

“உனக்கு என்ன சப்பாத்தி சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும்”

“அம்மா உண்மையை சொன்ன நான் சப்பாத்தி சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிறது, எப்பவும் இட்லி, தோசை, உப்புமா அந்த மாதிரி தான், அப்புறம் சாதம்”

“அப்ப சாப்பிடேன் டா”

“அய்யோ எனக்கு சப்பாத்தி பு(பி)டிக்காது மா”

“சரி அப்ப இந்தா நீ வாங்கி வந்த அல்வாவை சாப்பிடு” என்றாள் அம்மா பாசமாக, நான் வீட்டுக்கு சென்றால் எனக்கு எதாவது சாப்பிட கொடுத்து விடவேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு மனம் நிறையும். எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். நான் சாப்பிட்டு விட்டு உக்கார்ந்து இருந்தேன். நண்பனின் அப்பா வந்தார்

”அப்பா நீங்க கொஞ்சம் அல்வா சாப்பிடுங்களே”

“ஏண்டா சொத்து மீது உனக்கு ரொம்ப நாளா கண்ணா”

”புரியவில்லையே”

“எனக்கு சக்கரை வியாதிடா, சோலியை முடிக்க பாக்கிறீயா”

“ஐயோ சாரிப்பா மறந்துட்டேன்”

“பரவாயில்லை கொஞ்சம் கோடு”

அம்மா உள்ளே இருந்து “நல்லா இருக்கே கதை, டேய் தஸ்னா எழுந்து வாடா இந்த பக்கம், அந்த மனுஷன் வாயில் இருந்து கூட புடுங்கி திண்ணுடுவாரு”

”அடிப்பாவி ஒரு துண்டு அல்வாவுக்கா இப்படி ஊர கூப்பிடுற”

“ஆ துண்னுபுட்டு தூக்கம் வரல, உடம்பு அரிக்குதுனு சொல்லுவதற்கா?, அவருக்கு சுகரு 250 இருக்குடா தஸ்னா?”

எனக்கு சுகர் பற்றி எதுவும் தெரியாது, இருந்தாலும் அவர்கள் சண்டைப் போடுவதை தலை ஆட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். என் நண்பன் கொலையே விழுந்தாலும் திரும்ப மாட்டான், கிரிக்கெடில் அப்படி அவன் பைத்தியம்.

“ஏய் ஏய் பொய் சொல்லாத நான் இப்போ 200 க்கு குறைச்சிட்டேன்”

“கிழிச்சிங்க”

இரு இப்பவே காட்றேன் என்று auqacheck (சக்கரை அளவை கண்டுபிடிக்கும் மீட்டரை) எடுத்து தன்னுடைய விரலில் ரத்ததை எடுத்து செக் செய்தார். 230 காட்டியது.

“பார்த்தீயாடா தஸ்னா இவரு இப்படி தான் டா சரியான ஆளு, இப்படி வச்சுனு பொய் சொல்றார் பாரு”

நான் ஆமாம் என்பது போல தலையை ஆட்டினேன், ஆனால் என்னுடைய ஆர்வம் பூரா அந்த மீட்டர் மேலே தான் இருந்தது, இதை இதற்கு முன் பார்த்து இருக்கிறேன், ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியாது என்று அதை வாங்கி பார்த்தேன்.

“என்னடா நீயும் சுகர் சேக் பண்றீயா”

“ம்ம்ம்ம்ம்” என்று தலையை ஆட்டினேன்.

என்னுடைய விரலில் நுனியில் ரத்தத்தை எடுத்து மீட்டரில் வைத்தேன். அது ரீடிங் காட்டியது, அப்பாவின் முகம் மாறியது, எனக்கு தூக்கி வாரி போட்டது.

”என்னப்பா எவ்வளவு”

“.........”

மீட்டரை வாங்கிப் பார்த்தேன். 240 காட்டியது, எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

“அப்பா என்னப்பா இது”

“........”

”எவ்வளவு ப்பா நார்மல்”

“120...130...”

கனத்த மெளனம் நிலவியது, இதை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்த அம்மா

“எங்க புள்ள இப்ப தானே அல்வா சாப்பிட்டான், அதனால அதிகமா காட்டி இருக்கும்”

“சாப்பிட்டு இரண்டு நிமிஷம் கூட ஆவல, எப்படி ரத்தத்தில் அது கலந்து இருக்கும்”

அம்மா “..........”

“அவனுக்கு ஏற்கனவே சுகர் இருந்து இருக்கு, டேய் எப்ப பார்த்தாலும் சாதம் தான் சாப்பிடுவியா”

“இல்.....இல்ல.....ப்பா தோசை இட்லி கூட சாப்பிடுவேன்”

“அது மட்டும் என்ன அரசியில் இருந்து தானே வருது, எல்லாம் கார்போ-ஹய்ட்ரேட் தான்”

“.......”

“சரி பரவாயில்லை கவலைப்படாதே, கண்ரோல் பண்ணிவிடலாம், காலையில் எழுந்து வாக்கிங் போ, ராத்திரி சப்பாத்தி மட்டும் சாப்பிடு, மதியம் சாதம் கொஞ்சமா சாப்பிடு. அதுக்கு தான் சொல்லுவாங்க

Breakfast like a king
lunch like a ordinary man
dinner like a begger ன்னு

சொல்லுவாங்க என்றார்.

”என்னப்பா Grammer தப்பு என்று சொல்ல நினைத்து சொல்லவில்லை, என்னுடைய சுகர் என்னை கொன்றது”

திடீர்னு எழுந்து என்னுடைய பிரண்டு என்னிடம் வந்து கையை கொடுத்து

”எப்படா ரீட்டு” என்றான்.

அம்மா அப்பா இருந்ததால் என்னால் அவனை திட்ட முடியவில்லை, மனதிற்குள் சென்னை பாஷையில் திட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டேன்.
மூவரும் வீட்டு வாசலுக்கு வந்து என்னை வழி அனுப்பினார்கள். எனக்கு என்னவோ போல இருந்தது, எங்கோ வழி அனுப்புவது போல இருந்தது. மனம் தளர்ந்தது, வீட்டுக்கு சென்று படுத்து விட்டேன், யாரிடமும் பேசவில்லை. அடுத்த நாள் மூன்று வேலை சப்பாத்தி சாப்பிட்டேன், வாந்தி வருவது போல ஆகிவிட்டது, அடுத்த நாள் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டேன் வாந்தியே வந்துவிட்டது. காலையில் எழுந்து ஜாகிங் போனேன், அங்கு பார்த்தால் பல மாமி, மாமாக்கள் தெருவையே குலுக்கிக் கொண்டு ஓடினார்கள். ரொம்ப நாள் கழித்து ஓடியதால் கை கால்கள் எல்லாம் எனக்கு பிடித்துக் கொண்டது. அப்படியே நொண்டி நொண்டி வீடு வந்து சேர்ந்தேன். என் மேல் அப்படியே சக்கரை ஒட்டிக் கொண்டு இருப்பது போல ஒரு பிரமை என்னை அறியாமல் என்னுடைய கைகளால் தட்டிவிட்டேன். நண்பர்களிடம் வேறு அந்த நண்பன் சக்கரை விஷயத்தை சொல்லிவிட்டான். என்னிடம் வந்து

“மச்சான் படத்துக்கு போலாமா டா?”

“என்ன படம் டா”

“சக்கரைக்கட்டி”

அவனை கொடூரமாக நான் பார்க்க, அவன் எந்த சலனமும் இல்லாமல்

”எஹே ஹா ஹாஹே” என்று ராகமாக சிரித்தான். இன்னொருவன் வந்து என்னுடைய தோள் மீது கையை போட்டு

“விடுறா மச்சான், 40 வயசு ஆனால் இதெல்லாம் சகஜம் டா”

சென்னை தமிழில் அவனை திட்டிவிட்டு. இன்னொருவன்

”டேய் டேய் அவனை தொடாதீங்க டா, சக்கரை வியாதி ஒட்டிக்கும்”

நான் “அது ஒண்ணு பரவர வியாதி இல்ல”

“இருந்தாலும் ஜாக்கிரதையா இருப்பது நல்லது தானே” என்று வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினான்.

இன்னொருவன் கோபமாக எங்களிடம் வந்து அவர்களை நோக்கி

“ஏண்டா உங்களுக்கு அறிவு கிடையாது, அவனை போய் இப்படி கிண்டல் பண்றீங்களே மனசாட்சியில்லாமல்......... அவன் இருக்கப்போறதே கொஞ்ச காலம் தான்........”

நான் “அடி செருப்பால நாயிங்களா.............................(சென்சார் கட்)”

அன்று மாலை டாக்டரிடம் போய் மறுபடியும் செக் செய்தேன், 130 இருந்தது. எனக்கு ஒரே ஆச்சர்யம்

“டாக்டர் இரண்டு நாளைக்கு முன் 240 இருந்தது டாக்டர்”

“வெரி குட், நல்ல டயட்டுல இருக்கீங்க போல ஆனால் இரண்டு நாள்ல இவ்வளவு குறைய சான்ஸ் இல்லையே”

”..................”

“டெஸ்டு எடுக்கும் பொழுது ஸ்வீட் எதாவது சாப்டீங்களா”

“ஆமா டாக்டர் அல்வா சாப்பிட்டேன், ஆனா அது ரத்ததில் கலக்க லேட் ஆகுமே டாக்டர்”

“எந்த விரலில் ரத்தம் எடுத்தீங்க”

என்னுடைய வலது கையின் ஆள்காட்டி விரலை காண்பித்தேன்.

”குட் அல்வா சாப்பிட்டு கையை கழுவினீங்களா”

“இ...............இல்.......இல்ல டாக்டர்”

”அதனால தான் குழப்பமே, ரத்தம் வெளியே வரும் பொழுது விரல் மேல் பரப்பில் உள்ள சக்கரையுடன் கலந்து இருக்கு, அவ்வளவு தான். யூ ஆர் ஆல்ரேட்”

அப்படியே அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது, ஆண் டாக்டர் என்பதால் விட்டு விட்டேன். என்ன இருந்தாலும் அவர் தான் என்னுடைய சக்கரைகட்டி.

mukilan
10-02-2009, 01:12 AM
மூர்த்தி இதை எழுதின உங்க வாய்க்கு சர்க்கரை போடலாமா? கைக்கு போட முடியாதே! நிகழ்வுகளில் உங்கள் மனம்பட்ட பாட்டை அருமையாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

ரங்கராஜன்
10-02-2009, 02:42 AM
மூர்த்தி இதை எழுதின உங்க வாய்க்கு சர்க்கரை போடலாமா? கைக்கு போட முடியாதே! நிகழ்வுகளில் உங்கள் மனம்பட்ட பாட்டை அருமையாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

நன்றி முகிலன்
ரொம்ப நாள் கழித்து வரீங்கபோல, வீட்டில் எல்லாரும் சவுக்கியமா?.

sssraj
10-02-2009, 03:00 AM
உங்களின் நிலையில் யார் இருந்தாலும், அவர்களின் மனநிலையும் உங்களை போலவே இருந்திருக்கும்..இருப்பினும், எனக்கு இது ஒரு புது தகவல்.. இதுவரை இந்த மாதிரி சொல்லி கேள்விபட்டதில்லை...இனிமேலே, யார் மருத்துவ செக் பண்ணும்போதும், ஜாக்கிரதையாக அதுவும் சுத்தமாக இருந்து சோதிக்கனும்..

ஆதவா
10-02-2009, 03:01 AM
நல்லவேலை... அவர் ஆண் டாக்டரா போய்ட்டார்... இல்லாட்டி, தினத்தந்தியில செய்தி வந்திருக்கும்...

எனின்வே... சர்க்கரை என்பது வரப்பிரசாதம்.. சிலருக்கு வரட்டு பிரசாதம்... உணவை கட்டுப் படுத்தும்... ஆரோக்கியமாக வாழச் சொல்லும்..

சர்க்கரை ஒரு நோயல்ல..

சிவா.ஜி
10-02-2009, 03:02 AM
சர்க்கரை படுத்தின பாடுன்னு ஒரு பாட்டு பாடு தக்ஸ். அனுபவிச்சு எழுதியிருக்க.

கவலைப்படாத....130 கூட ஜாஸ்திதான். சரியா செக் பண்ணிப்பாக்கனுன்னா...காலையில வெறும் வயித்துல போய் செக் பண்ணனும் அப்புறம் சாப்டுட்டு ரெண்டுமணி நேரம் கழிச்சு செக் பண்ணனும். 110 ஃபாஸ்டிங்லயும், 140 சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழிச்சும் இருக்கனும்.

உனக்கு நிச்சயம் நார்மலாத்தான் இருக்கும்.

(அப்புறம் சக்கரக்கட்டி படம் பாத்தியா இல்லையா?)

samuthraselvam
10-02-2009, 03:06 AM
அண்ணா படிக்கும் போதே இவ்வளவு சின்ன வயசு உள்ளவங்களுக்கும் சக்கரை வியாதி வருமா? என அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் உங்களுக்கு போய்ன்னு. அப்பாக்கு இருக்கு இந்த பணக்கார வியாதி. அதனால எனக்கு தெரியும் அதன் கொடுமை. அவருக்கு வந்ததால் அம்மாக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதனால உடல் உழைப்பு கம்மியா இருக்கிறவுங்க நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள். சரியான அளவு கலோரியை எடுத்து கொள்ளுங்கள். நம் மன்றத்தில் தான் பாவம் வயசானவுங்க நிறையபேர் இருக்காங்களே.....! (உண்மையை சொன்னா கோவிச்சுக்க கூடாதுங்ண்ணா.)

ரங்கராஜன்
10-02-2009, 03:57 AM
உங்களின் நிலையில் யார் இருந்தாலும், அவர்களின் மனநிலையும் உங்களை போலவே இருந்திருக்கும்..இருப்பினும், எனக்கு இது ஒரு புது தகவல்.. இதுவரை இந்த மாதிரி சொல்லி கேள்விபட்டதில்லை...இனிமேலே, யார் மருத்துவ செக் பண்ணும்போதும், ஜாக்கிரதையாக அதுவும் சுத்தமாக இருந்து சோதிக்கனும்..

நன்றி ராஜ்
உண்மையில் நீங்க மருத்துவமனையில் போய் சக்கரை செக் பண்ணா, அவங்க இரத்தத்தை எடுப்பதுக்கு முன்னால் விரலின் மேல் பரப்பை ஒரு பஞ்சால் துடைத்து விட்டு தான் எடுப்பார்கள், ஆனால் வீட்டில் செய்ததினால் இந்த பிரச்சனை வந்தது.

ரங்கராஜன்
10-02-2009, 03:58 AM
நல்லவேலை... அவர் ஆண் டாக்டரா போய்ட்டார்... இல்லாட்டி, தினத்தந்தியில செய்தி வந்திருக்கும்...

எனின்வே... சர்க்கரை என்பது வரப்பிரசாதம்.. சிலருக்கு வரட்டு பிரசாதம்... உணவை கட்டுப் படுத்தும்... ஆரோக்கியமாக வாழச் சொல்லும்..

சர்க்கரை ஒரு நோயல்ல..

நன்றி ஆதவா அவர்களே

ரங்கராஜன்
10-02-2009, 04:00 AM
சர்க்கரை படுத்தின பாடுன்னு ஒரு பாட்டு பாடு தக்ஸ். அனுபவிச்சு எழுதியிருக்க.

கவலைப்படாத....130 கூட ஜாஸ்திதான். சரியா செக் பண்ணிப்பாக்கனுன்னா...காலையில வெறும் வயித்துல போய் செக் பண்ணனும் அப்புறம் சாப்டுட்டு ரெண்டுமணி நேரம் கழிச்சு செக் பண்ணனும். 110 ஃபாஸ்டிங்லயும், 140 சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழிச்சும் இருக்கனும்.

உனக்கு நிச்சயம் நார்மலாத்தான் இருக்கும்.

(அப்புறம் சக்கரக்கட்டி படம் பாத்தியா இல்லையா?)

என்ன அண்ணா குண்டை தூக்கி போடறீங்க, 130 ஜாஸ்தியா?, சக்கரக்கட்டி படமா???????:sauer028::sauer028::sauer028::sauer028:

ரங்கராஜன்
10-02-2009, 04:02 AM
அண்ணா படிக்கும் போதே இவ்வளவு சின்ன வயசு உள்ளவங்களுக்கும் சக்கரை வியாதி வருமா? என அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் உங்களுக்கு போய்ன்னு. அப்பாக்கு இருக்கு இந்த பணக்கார வியாதி. அதனால எனக்கு தெரியும் அதன் கொடுமை. அவருக்கு வந்ததால் அம்மாக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதனால உடல் உழைப்பு கம்மியா இருக்கிறவுங்க நல்லா உடற்பயிற்சி செய்யுங்கள். சரியான அளவு கலோரியை எடுத்து கொள்ளுங்கள். நம் மன்றத்தில் தான் பாவம் வயசானவுங்க நிறையபேர் இருக்காங்களே.....! (உண்மையை சொன்னா கோவிச்சுக்க கூடாதுங்ண்ணா.)

நீ சொல்வது சரி தான் உடல் உழைப்பே எனக்கு கிடையாது, ஒன்லி மூளை உழைப்பு தான்.

பரவாயில்லையே மூளை உழைப்பா????? ஆச்சர்யமாக இருக்கிறது உங்களுக்கு மூளை இருக்கிறதா? என்று நக்கல் செய்யக்கூடாது.

அன்புரசிகன்
10-02-2009, 04:11 AM
“எந்த விரலில் ரத்தம் எடுத்தீங்க”

என்னுடைய வலது கையின் ஆள்காட்டி விரலை காண்பித்தேன்.

”குட் அல்வா சாப்பிட்டு கையை கழுவினீங்களா”

“இ...............இல்.......இல்ல டாக்டர்”

உங்க முகம் தெரியாது ஆனால் ஒரு முகத்தினை கற்பனை பண்ணிப்பார்த்தேன்.

:lachen001: :lachen001: :lachen001:

சிரிப்பு தாங்கலப்பா..........

அப்போ உறைப்பா சாப்பிட்டு கை கழுவாமல் செக்பண்ணினா மைனஸில் காட்டுமா??? (அந்த டாக்டரிடம் கேட்டிருக்கலாமே.........):D

ரங்கராஜன்
10-02-2009, 04:21 AM

என்னங்க அன்பு சம்பந்தம் இல்லாம பேசறீங்க, உங்க சிரிப்பை நிறுத்துங்கள் முதலில். கையில் காசு இருக்கா, அப்படி இருந்தா, இரண்டு ரூபாய்க்கு மிட்டாய் வாங்கி விரலில் வைத்து சப்பிக் கொண்டே, விரலை துடைக்காமல் போய் ஒரு டெஸ்டு எடுங்க, 60 ரூபாய் தான் ஆவும். ரிசல்ட் உடனே சொல்லி விடுவார்கள், பார்த்துவிட்டு அப்புறம் உங்களுடைய சிரிப்பை தொடருங்கள்

விகடன்
04-03-2009, 10:44 AM
நிகழ்ச்சிகளைப்படிக்கும்போது நான் கூட கவலை அடைந்துவிட்டேன்.
இந்தியா சென்று உங்கள் எல்லோரையும் சந்திக்கும் காலம் தள்ளிப்போய்க்கொண்டே போனால், நான் இந்தியா வரும்போது தக்ஸ்சை காண முடியுமா??? என்று...

எனக்கு சென்னைத்தமிழ் எல்லாம் விளங்காது. ஹா...ஹா....ஹா....

ரங்கராஜன்
04-03-2009, 11:57 AM
நிகழ்ச்சிகளைப்படிக்கும்போது நான் கூட கவலை அடைந்துவிட்டேன்.
இந்தியா சென்று உங்கள் எல்லோரையும் சந்திக்கும் காலம் தள்ளிப்போய்க்கொண்டே போனால், நான் இந்தியா வரும்போது தக்ஸ்சை காண முடியுமா??? என்று...

எனக்கு சென்னைத்தமிழ் எல்லாம் விளங்காது. ஹா...ஹா....ஹா....

முதலில் எனக்கு புரியவில்லை அப்புறம் தான் புரிந்தது,, சத்தமாக சிரித்து விட்டேன். நன்றி விராடன்

பா.ராஜேஷ்
07-03-2009, 05:22 AM
இயல்பான கதை. உண்மையில் யாருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். சுவாரசியமாக இருந்தது. பாராட்டுக்கள்.

SureshAMI
07-03-2009, 09:03 AM
நல்லா இருக்கு...

அக்னி
07-03-2009, 10:28 AM
daksக்கு இப்படியும் ஒரு சோதனையா...
நண்பர்கள் காமெண்ட் :icon_b:

ஆமா... உண்மையிலேயே சர்க்க்ரையை வைத்தால் அதிகம் காட்டுமா?

காலையில வெறும் வயித்துல போய் செக் பண்ணனும் அப்புறம் சாப்டுட்டு ரெண்டுமணி நேரம் கழிச்சு செக் பண்ணனும். 110 ஃபாஸ்டிங்லயும், 140 சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழிச்சும் இருக்கனும்.
வந்துட்டாரு மருத்துவரு...
ஆஸ்பிட்டல்லயே விரல்ல செக் பண்ணுறாங்க. இவரு வெறும் வயித்தில செக் பண்ணட்டுமாம்.
விட்டா, கழுத்த அறுத்து வாற ரத்தத்திலதான் டெஸ்ட் பண்ணனும் என்று சொல்லுவீங்க போலிருக்கே...

daks நம்பாதீங்க...

அப்போ உறைப்பா சாப்பிட்டு கை கழுவாமல் செக்பண்ணினா மைனஸில் காட்டுமா??? (அந்த டாக்டரிடம் கேட்டிருக்கலாமே.........):D
:eek::eek::eek:
நல்லா கேக்கிறாங்கையா டீடெயிலு...