PDA

View Full Version : சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்?



பாரதி
09-02-2009, 03:33 PM
சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்?

பொதுவாச் சொல்லறதுன்னா முக்கண்ணன்; திருமுகத்தில் இரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணுமாய் மூன்று கண்கள்!

ஆனாப் பாருங்க, இல்லவே இல்லை, என்று சாதிக்கிறார் காளமேகம்!

சரி எத்தனை கண்ணுன்னு நீயே சொல்லுப்பா என்று கேட்டால், அரைக் கண்ணு தான் என்கிறார்!
துரைக்கண்ணு தெரியும்; அது என்னா அரைக்கண்ணு?
இது என்ன சின்னபுள்ளத்தனமா-ல்ல இருக்கு? சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க! ஆனா, அது என்னா அரைக்கண்ணு? அவர் சொல்ற கணக்கைப் பாருங்க!

சிவபெருமானில் சரி பாதி அன்னை பார்வதி.
அப்படின்னா, இருக்குற மூன்று கண்ணில், சரி பாதியான ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தம்!
அப்ப மீதி இருப்பது ஒன்றரைக் கண் தான்! ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம்! அதுல ஒரு கண்ணு, கண்ணப்ப நாயனார் தன்னுடையதைப் பிடுங்கி வைத்த கண்!
அப்படிப் பாத்தா, ஒன்றரை கண்ணில் ஒரு கண்ணு, கண்ணப்பருடையது!
அப்ப, பாக்கி எவ்ளோ இருக்கு? - அரைக் கண்ணு தான்!

எனவே சிவபிரானின் ஒரிஜினல் கண், அரைக் கண் மட்டும் தான் என்று சாதிக்கிறாரு காளமேகம்! :-)))

முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரை மற்றுஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

பாருங்க, கவிஞருக்கு என்னமா கலாய்த்தல் தெறமை!

அன்னிக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு சொன்னாரு ஒருத்தரு! இங்க என்னடான்னா, அதுக்கும் வழி கொடுக்காம, முக்கண்ணனை அரைக்கண்ணன் ஆக்கிட்டாரு காளமேகம்!

இப்படி இறைவனிடமே கலாய்த்து விளையாடும் உரிமை தெய்வத் தமிழுக்கு அல்லால் வேறு ஏது?

நன்றி : வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலைப்பூ.

ஆதி
09-02-2009, 04:46 PM
திரியின் தலைப்பை பார்த்தது இந்த அரை கண் மேட்டராதான் இருக்கும் னு நினைச்சேன், அதேதான்..

ஓடிருக்கும் - தேங்காயும் நாயும்

ஆடி குடத்தடையும் - பாம்பும் எள்ளும்

தீண்டினால் திரும்பாது - வாழைப்பழமும் பாம்பு

போரிருக்கும் - யானையும் வைக்கோலும்

இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள், காளமேகனை பேசி கொண்டேப்போகலாம், வள்ளுவன், கபிலன், கம்பன், இவர்களுக்கு பின் என்னை வியப்பிலாழ்த்தி மயங்க வைத்தவன் காளமேகன் தான்..

பகிர்ந்தமை நன்றிகள் அண்ணா..

ஆதவா
10-02-2009, 01:49 AM
அவரு மனைவியோட இருக்கும்போது வேண்டும்னா அரைக்கண் (மயக்கத்தில :D) அப்பறம் நார்மலா இருக்கும் பொழுது மூணு (அவருக்கு ஒடம்பெல்லாம் கண்ணுன்னு சொல்லுவாய்ங்க சார்..)

எந்த கடவுளா இருந்தாலும்
இப்போதெல்லாம் கண்ணைத் திறப்பதே இல்லை.... அப்படியொரு நித்திரை....

விகடன்
10-02-2009, 09:34 AM
இப்படிப் பார்க்கப்போனால் சிவன் இதயமே அற்றவர் என்றாகிவிடுமே...

பாரதி
10-02-2009, 12:10 PM
கருத்துக்கு நன்றி ஆதவா.

வாங்க விராடன். நலமா..?
முக்கண்ணன் என்ற பெயர் சிவபெருமானுக்கு உண்டு என்பதை தமிழின் மூலம் விளையாடி மறுக்கவே காளமேகப்புலவர் இதை இயற்றினார் என்பதைக்கூறவே இந்த திரி.

ஒரு வகையில் நீங்க சொன்னது சரிதான்.. "அன்பே சிவம்" அப்டீன்னு எடுத்துக்க வேண்டியதுதான்.

என்னவன் விஜய்
10-02-2009, 02:19 PM
மகேஸ்வரனிடமே கலாய்ப்பா!! சிந்திக்க வேண்டிய விசயம்தான்.

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா,



அவரு மனைவியோட இருக்கும்போது வேண்டும்னா அரைக்கண் (மயக்கத்தில :D) அப்பறம் நார்மலா இருக்கும் பொழுது மூணு (அவருக்கு ஒடம்பெல்லாம் கண்ணுன்னு சொல்லுவாய்ங்க சார்..)

எந்த கடவுளா இருந்தாலும்
இப்போதெல்லாம் கண்ணைத் திறப்பதே இல்லை.... அப்படியொரு நித்திரை....

நல்ல டைமிங் ஜோக். :icon_b:

இளசு
10-02-2009, 07:09 PM
புராணங்களில் சில இடங்களில் சொல்லப்பட்டவற்றை
ஒன்றாய்க் கோர்த்து ஒன்றரை - ஒன்று = அரை எனப்
புதுக்கணக்குச் சொன்ன காளமேகனின் திறன் - அரிதே!

ஆதி சொன்ன மற்ற எடுத்துக்காட்டுகள் சொல்லும் காளமேகன் சிறப்பை!


பகிர்ந்தமைக்கு நன்றி பாரதி..

இது என்ன வ.வா.ச? - தலைவர் - கைப்புள்ளயா???????

பாரதி
11-02-2009, 08:54 AM
கருத்துக்களுக்கு நன்றி விஜய், அண்ணா.
வ.வா.ச தலைவர் கைப்புள்ளயாங்கிறது எனக்குத் தெரியாது. ஆனா நம்ம இராகவன் முன்னாடி அங்க கலாய்ச்சிருக்காரு.

நிரன்
11-02-2009, 11:44 AM
காளமேகம் இப்படிச் சொன்னாருன்னா நக்கீரர் எப்படிச் சொல்லுவார் ''நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே''-ன்னு அப்படீன்னா சிவன் என்ன கண்ணை மூடிக் கொண்டா இருப்பது:rolleyes::):D

நல்லவொரு அலசல்தான் :lachen001::lachen001:

நன்றி அண்ணா!

பாரதி
11-02-2009, 05:10 PM
கருத்துக்கு நன்றி நிரன்.