PDA

View Full Version : குழந்தையின் அழுகை.



ஆதவா
09-02-2009, 12:49 PM
அந்த குழந்தை
எதற்காகவோ அழுகிறது
அவள் வாயிலிருந்து
ஒழுகும் எச்சில்,
எப்பொழுதோ எதிர்பார்த்து
உமிழும் ஒற்றைச் சொல்லைப் போன்று
ஒழுகிக் கொண்டு இருக்கிறது
குழந்தையின் கண்கள் வீங்கியிருக்கின்றன

அவள் எதையோ தேடுகிறாள்
காய்ந்து போன சேற்றுப் படிமத்தில்
குத்தி முளைத்திருக்கும்
தக்காளிச் செடியினருகே
அவளின் தேடுதல் இருக்கலாம்

அவள் பக்குவப்பட்டிருக்கவில்லை
அழுகைகள் மாறி மாறி ஒலிக்கின்றன
ஒரு தக்காளி உதிரப்பார்க்கிறது
இவள் கைப்பட்டும் தாங்கி நிற்கிறது

அந்த குழந்தைக்குத் தேவையானது
தக்காளிச் செடியிடம் கிடைக்கவில்லை
அவள் சபிக்கிறாள்,
விமோசனமில்லாத சாபத்திற்கு
தக்காளி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது

குழந்தை திரும்புகிறாள்
அவளுக்கு அழுத காரணங்கள் தெரியவில்லை
ஒருவேளை, எந்த காரணமுமின்றி
சிதறிக் கிடக்கும் அம்மாவுக்காக இருக்கலாம்.

இளசு
10-02-2009, 07:31 PM
குழுக்கள், இனங்கள் போராடி மாய்த்துக்கொள்ளவது
இன்றா நேற்றா?
நாளையாவது நிற்குமா??

அங்கோலா, ராவாண்டா, குர்திஷ், அயர்லாந்து, ஸ்லோவோக்கியா...
எங்கும் கண்டதுதான்..
என் மனதில் ரணம் தந்ததுதான்...

வன்னியில் காணும்போதுமட்டும் நெஞ்சம் வெடிக்கிறதே..
என் இனம் என்பதால்.....

என் மகளையே இக்காட்சியில் கண்டதுபோல் மனச்சுக்கலானேன்.....................

அமரன்
10-02-2009, 07:40 PM
சூழல்தான் குழந்தையின் ஆதர்சம்.
இந்தக் குழந்தையின் சூழல் அழுகௌயால் ஆனதாக இருக்கலாம்.

கனத்த மனதுடன்
-அமரன்