PDA

View Full Version : குளியலறை பல்லி (அ) பிரமை



ஆதவா
09-02-2009, 07:28 AM
குளியலறையின் கதவிடுக்கில்
கண்களை உருட்டியபடி
காத்துக் கிடக்கிறது
ஒரு பல்லி

எனது ஆடை அவிழ்ப்பையும்
மறைந்து கிடக்கும் ரகசியங்களையும்
கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது

பல்லி எந்த பாலினம்
நான் நிர்வாணம் மறைப்பதற்கு?

பல்லி அசையும் பொழுது
தவறி விழுந்திடுமோ என்ற அச்சமும்
எனக்குள்ளே நெளிகிறது
அதுவோ சுவற்றின் மறுபக்கத்தில்
வாலை அலைகழித்தபடி ஒட்டிநிற்கிறது

என்னைச் சுற்றிலும் பல்லிகளின் கூட்டம்
நீரை மொண்டெடுக்கையிலும்
வாளியின் அடிப்பகுதியிலும்
நுரை தேய்க்கும் பொழுதிலும்
நீர் இறைக்கும் நிமிடத்திலும்
கீழ் அமர்ந்து பாதம் பிசையும் நாழிகையிலும்
பல்லிகள் ஊர்ந்து கொண்டிருக்கும்
எனும் பிரமை

குளித்து முடிந்த பின்
குளியலறை விட்டு
அவசராவசரமாக நீங்கினேன்
என் முதுகில் ஒரு பல்லி
நீந்திக் கொண்டிருந்தது.

இளசு
22-02-2009, 07:10 PM
உள்ளுணர்வு, எச்சரிக்கை மணியோசை
இவை பெண்ணிடம் அதிகம்..

இயற்கை அளித்த வரம்..

பல்லி,கரப்பு, பாம்பு போன்றவற்றுக்கு
அளிக்கும் பயமரியாதை அதீதம்..

அது பரிணாமம் தந்த நினைவுப் பரிசு..

உள்ளுணர்வு சொல்லும் மொய்த்தல்களை
பல்லியாய் உணர்வது பொருத்தமே...

பல்லிகளின் பிறவிக்குண மொய்த்தல் தேடலும்
பெண்களின் இயல்புக்குண மறைத்தல், அருவருத்தல், ஒதுங்கலும்...

இயற்கை நடுவரான காலகால கண்ணாமூச்சி..
ஒவ்வொரு ஆட்ட முடிவிலும்
உருமாறி வரும் பல்லிகள் வென்றபடியே...


பாராட்டுகள் ஆதவா...

ஆதவா
23-02-2009, 12:25 AM
ஆஹா!!! நன்றி அண்ணா... என்ன எழுத நினைத்து எழுதினேனோ அதை அப்படியே படம் பிடித்தாற்போல் விமர்சனம் கொடுத்திருக்கிறீர்கள்~!!!!

மிகவும் நன்றி அண்ணா!!

சசிதரன்
25-02-2009, 09:54 AM
கலக்கல் ஆதவா... நல்ல கவிதை.. இளசு அண்ணாவின் பின்னூட்டம் கூடுதல் பலம்..:)

மன்மதன்
28-03-2009, 01:23 PM
கலக்கல் ஆதவா... நல்ல கவிதை.. இளசு அண்ணாவின் பின்னூட்டம் கூடுதல் பலம்..:)

கண்டிப்பா..கவிதையை சரியான கோணத்தில் புரிந்து கொள்ள
பின்னூட்டங்கள் உதவுகின்றன..


அருமையான கவிதை ஆதவா..


பல்லி என்றாலே ஒரு விதமான அறுவெறுப்புதான்..
அப்புறம் ஏன் பல்லிளிச்சாங்கிறாங்க..:rolleyes:

ஓவியா
07-04-2009, 03:00 PM
கருவும் கவிதையும் ரொம்பவே நல்லாயிருக்கு. பாராட்டுக்கள் ஆதவா.

இளசுவின் பின்னுட்டம் அருமை.