PDA

View Full Version : தவம்...!

பூமகள்
09-02-2009, 04:49 AM
http://2.bp.blogspot.com/_ATCRNmCxu-E/SYhDyKN_2mI/AAAAAAAAAp4/JhafPVKx5go/s400/paper+and+pen+blue_62.jpg (http://2.bp.blogspot.com/_ATCRNmCxu-E/SYhDyKN_2mI/AAAAAAAAAp4/JhafPVKx5go/s1600-h/paper+and+pen+blue_62.jpg)

தவம்...!

நெடிய பிரிவுக்கு பின்
தாய் விரல் இறுகப் பற்றும்
மழலை போல
தொலைந்து போன
எழுத்துச் சுவடுகள்
தேடி வந்து
விரல் பிடித்து
உயிர்த்தெழ
காத்திருக்கின்றன..

தன் மழலை வாசம்
தாயறிவதைப் போல
என் எழுத்துகளின் வாசம்
நானறியத் தலைப்படுகிறேன்...

வெகு நாட்கள்
முக்காடு இட்டு
புழுதி படிந்து
உறங்கிய சுவடுகள்
அதன் மேனியெங்கும்
மழலை கதக்கிய
பால் வாசனையை நினைவூட்டின..!

மழலையால்
கலைத்து போடப்பட்ட
விளையாட்டு பொம்மை போல
ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன
கவிக்கருக்கள்..!

மறந்து போனாலும்
நினைவூட்டியபடியே இருக்கின்றன
என்றோ நட்டு வைத்த
நட்புப் பூக்கள்..

விடியலுக்காக ஏங்கும்
குருவிக் குஞ்சின் மனதைப் போல்
கவி வருகைக்காக ஏங்கித் தவிக்கும்
உள்ளத்தின் ஓர் பிம்பம்..!!

செல்வா
09-02-2009, 04:58 AM
வாங்க.....
நலமா?
வரும்போதே தவத்தோடு வந்திருக்கிறீர்கள்....
தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்..

சிவா.ஜி
09-02-2009, 06:32 AM
அடடே...யார் இது..? வாம்மா...நலமா? தவம் கலைந்த நிலையில் உன் ‘தவம்' பிரமாதம். கவிதாயினியின் எழுத்தை மீண்டும் மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கவி விருந்து படைத்திட வேண்டுமென்பது இந்த அண்ணனின் வேண்டுகோள்.

வாழ்த்துகள்.

மதி
09-02-2009, 12:52 PM
வாங்க பூமகள்...
நல்ல கவிதையோடு மன்றம் வந்துள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
09-02-2009, 01:11 PM
பூமகளின் கவிதைச்சோலையில் பூக்களென்னவோ அவ்வபோது முளைத்துக்கொண்டுதானிருந்தன.. ஆனால் இன்றைக்குத்தான் அவர் நம் பார்வைக்கு வைத்திருக்கிறார்.... வாழ்த்துக்கள் பூமகள்!

கவிதையின் வரிகளில் உள்ளத்தின் ஏக்கம் வெளிப்படுகிறது.....

இளசு
10-02-2009, 07:02 PM
தவமகள் மீள்வரவுக்கு வரவேற்பு!

ஈரமண்ணில் விழும் கோடுகள் வடுக்களில்லை!
பாசமழை குழைத்து மெழுகிவிடுவதால்..

மன்றநேச மனரணங்கள் ஆழமில்லை...!
அன்புறவுகள் தேனிறகு வருடுவதால்...

நலமா பாமகளே?

அமரன்
10-02-2009, 07:28 PM
நல் மீள் வரவு பூமகள்.
அண்மையில் ஒரு கவிதை படித்தேன்.

குழந்தைகள்
கலைத்துப் போட்டு விளையாடுவதை
மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தன
பொம்மைகள்.

நமது படைப்புகள், பழக்கங்கள், நினைவுகள் போறவற்றுக்கு நாங்கள் பொம்மைகள்.

பாராட்டுகள் பூமகள்.

mukilan
11-02-2009, 01:27 AM
என்றோ நட்டு வைத்த நட்"பூ"க்கள் எப்பொழுதும் மணம் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. மீள்வருகைக்கும் வரவேற்புகளும் இன்னமும் படைக்கப் படவிருக்கும் படைப்புகளுக்கு பாராட்டுகளும்.

பூமகள்
11-02-2009, 01:27 AM
வாங்க.....
நலமா?
நலம்.. நாடலும் அஃதே செல்வா அண்ணா. முதல் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கு நன்றிகள்.

அடடே...யார் இது..? வாம்மா...நலமா? தவம் கலைந்த நிலையில் உன் ‘தவம்' பிரமாதம். கவிதாயினியின் எழுத்தை மீண்டும் மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து கவி விருந்து படைத்திட வேண்டுமென்பது இந்த அண்ணனின் வேண்டுகோள்.
வாழ்த்துகள்.
நலமே சிவா அண்ணா. நீங்கள் நலம் தானே? வாழ்த்துகளுக்கு நன்றிகள் அண்ணா.

வாங்க பூமகள்...
வாழ்த்துக்கள்
இனிய வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மதி.

கவிதையின் வரிகளில் உள்ளத்தின் ஏக்கம் வெளிப்படுகிறது.....
கவிதையின் நாடி பிடித்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஷீ.

பூமகள்
11-02-2009, 01:35 AM
தவமகள் மீள்வரவுக்கு வரவேற்பு!

ஈரமண்ணில் விழும் கோடுகள் வடுக்களில்லை!
பாசமழை குழைத்து மெழுகிவிடுவதால்..

மன்றநேச மனரணங்கள் ஆழமில்லை...!
அன்புறவுகள் தேனிறகு வருடுவதால்...

நலமா பாமகளே?
உங்கள் தங்கை இவள்
தவமகள் ஆகியிருக்கிறாள்..

தேனிறகு கொண்டு வருடினாலும்..
.......

அன்பிற்கினிய உங்களின் வரவேற்பு கண்டு அகமகிழ்ந்தேன் பெரியண்ணா..

பாமகள் நலமே. பாசமிகு என் பெரியண்ணா நலம் தானே?

நல் மீள் வரவு பூமகள்.
அண்மையில் ஒரு கவிதை படித்தேன்.

குழந்தைகள்
கலைத்துப் போட்டு விளையாடுவதை
மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தன
பொம்மைகள்.

நமது படைப்புகள், பழக்கங்கள், நினைவுகள் போன்றவற்றுக்கு நாங்கள் பொம்மைகள்.
பாராட்டுகள் பூமகள்.
சிகரரின் இனிய வரவேற்புக்கு நன்றிகள்..

கவிதை மழலையின் புன்னகை போலவே பூரிப்பூட்டுகிறது..

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் அமரன் அண்ணா.

என்றோ நட்டு வைத்த நட்"பூ"க்கள் எப்பொழுதும் மணம் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. மீள்வருகைக்கும் வரவேற்புகளும் இன்னமும் படைக்கப் படவிருக்கும் படைப்புகளுக்கு பாராட்டுகளும்.
முகில் மணம் இக்கவிப் பூ முழுதும் மேவி மண் வாசனையை நினைவுறுத்திவிட்டது.. இத்தங்கை மனம் நிறைந்துவிட்டது..

நன்றிகள் பல முகிலண்ணா.

தாமரை
11-02-2009, 02:36 AM
இலையுதிர்காலம் போய் துளிர்க்கும் முதல் துளிர், வசந்தத்தின் வருகை நோக்கி மெல்ல தலை தூக்கிப் பார்ப்பது போல்..

போன வசந்தம் நிழலாட வரும் வசந்தம் நினைவாட

சின்ன வாசம் காற்றில் பரவுவது போல்

உன்கவிதை,

வா தங்கையே!

வசீகரன்
11-02-2009, 09:31 AM
அடடே யாரு பூ வா... வாங்க பூமகள்.... வெகு நாட்கள் ஆகிவிட்டது...
உங்களை மன்றத்தில் பார்த்து... இந்த மறுபிரவேச
கவிதை ரொம்பவே அழகாக இருக்கிறது...
தொடர்ந்து எழுதுங்கள்... மன்றத்தில்

நிரன்
11-02-2009, 10:39 AM
நெடிய பிரிவுக்கு பின்
தாய் விரல் இறுகப் பற்றும்

வாங்க பூ அக்கா!
வெகுநாட்களுக்குப் பிறகு (நான் மன்றத்திற்கு ஒழுங்காக வரத் தொடங்கியபிறகு) இன்றுதான் உங்கள் கவிதையைப் பார்த்தேன்.

நன்றாகவுள்ளது உங்கள் கவிதைகள்.(பழையகவிதைகளும்)

உங்கள் மீள்வரவில் அமரன்,இளசு,சிவா...... அண்ணாக்கள் வரிசையில் நானும் மகிழ்ச்சியடைகி்றேன்:)

அன்புடன்
°°நிரன்

நாட்டாமை
12-02-2009, 07:32 AM
பூமகள் அக்காவின் படைப்பை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சியே...
வாங்கோ... அக்கா.. நலமா...
உங்களின் பழைய கவிதை அண்டு கதைகளை பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்...
மீண்டும் எப்போது வருவீர்கள் என்று....???

மனம் நிறைந்த சந்தோசத்தோடு இனிய வாழ்த்துக்கள்..... :):)

விக்ரம்
12-02-2009, 04:32 PM
வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்க...

பூமகளின் வரவு, எனக்கு உண்மையாலுமே ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப, ரொம்ப... வரவுக்கு மிக்க மகிழ்ச்சி பூ...

பூமகள்
13-02-2009, 12:44 AM
இலையுதிர்காலம் போய் துளிர்க்கும் முதல் துளிர், வசந்தத்தின் வருகை நோக்கி மெல்ல தலை தூக்கிப் பார்ப்பது போல்..
போன வசந்தம் நிழலாட வரும் வசந்தம் நினைவாட
சின்ன வாசம் காற்றில் பரவுவது போல்
உன்கவிதை,
வா தங்கையே!
வரவேற்பிற்கு நன்றிகள் அண்ணா.

அடடே யாரு பூ வா... வாங்க பூமகள்.... வெகு நாட்கள் ஆகிவிட்டது...
உங்களை மன்றத்தில் பார்த்து...
நன்றிகள் வசீ.. நலமா?
அன்பான வரவேற்புக்கு நன்றிகள்..

வாங்க பூ அக்கா!
வெகுநாட்களுக்குப் பிறகு (நான் மன்றத்திற்கு ஒழுங்காக வரத் தொடங்கியபிறகு) இன்றுதான் உங்கள் கவிதையைப் பார்த்தேன்.
நன்றாகவுள்ளது உங்கள் கவிதைகள்.(பழையகவிதைகளும்)
உங்கள் மீள்வரவில் அமரன்,இளசு,சிவா...... அண்ணாக்கள் வரிசையில் நானும் மகிழ்ச்சியடைகி்றேன்.:)
நன்றிகள் சகோதரர் நிரன்..
உங்களின் இனிய வரவேற்பு கண்டு மகிழ்ந்தேன். நன்றிகள் பல.

பூமகள் அக்காவின் படைப்பை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சியே...
வாங்கோ... அக்கா.. நலமா...
உங்களின் பழைய கவிதை அண்டு கதைகளை பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்...
மீண்டும் எப்போது வருவீர்கள் என்று....???
மனம் நிறைந்த சந்தோசத்தோடு இனிய வாழ்த்துக்கள்..... :):)
நலமே நாட்டாமை.. நீங்கள் நலம் தானே?

மகிழ்ந்து வரவேற்றமைக்கு நன்றிகள் பல.

வந்துட்டாங்கய்யா... வந்துட்டாங்க...
பூமகளின் வரவு, எனக்கு உண்மையாலுமே ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப, ரொம்ப... வரவுக்கு மிக்க மகிழ்ச்சி பூ...
உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி. நன்றிகள் விக்ரம்.

aren
13-02-2009, 02:41 AM
யார் இது பூமகள் அக்காவா?

வாங்க வாங்க!!!

உங்கள் மீள்வரவுகண்டு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து எங்கள் கவிதை மழையில் நனையவைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அமரன்
13-02-2009, 07:05 AM
யார் இது பூமகள் அக்காவா?.
உங்களுக்கு வயது ஏற ஏற குறும்பும் ஏறுது அண்ணா.
இந்த வயசுல என்னாமா குறும்பு செய்யுறீங்க.
சும்மாவா சொன்னாங்க தாத்தாவுக்கும் பேராண்டிக்கும் எந்தளவு ஒற்றுமை என்று..

aren
13-02-2009, 10:04 AM
உங்களுக்கு வயது ஏற ஏற குறும்பும் ஏறுது அண்ணா.
இந்த வயசுல என்னாமா குறும்பு செய்யுறீங்க.
சும்மாவா சொன்னாங்க தாத்தாவுக்கும் பேராண்டிக்கும் எந்தளவு ஒற்றுமை என்று..

என் பேர் மணியா இல்லை அமரன்.

அமரன்
13-02-2009, 10:43 AM
என் பேர் மணியா இல்லை அமரன்.

உங்க பேர் "மணியா"த்தான் அண்ணா இருக்கு.

சசிதரன்
14-02-2009, 03:25 PM
நான் மன்றம் வந்த பின் காணும் உங்கள் முதல் கவிதை இது... மிக சிறப்பாக உள்ளது... வரிகளை மிகவும் ரசித்தேன்...:)

நாகரா
18-02-2009, 08:46 AM
உன் விரல்களில் வடியும்
இருதய ரசம்
பருகக் காத்திருந்த எம் தவம்
இனி முடியும்!

வருக பா மகளே
கவிப் பூ தூவு எம்மிடைப்
பூ மகளே!

தமிழ்க் காதலின்
விரக தாபம் வெளிப்படுத்திய
அழகுக் கவிதை

வாழ்த்துக்கள் தங்காய்