PDA

View Full Version : தனிமை இருளில் மூன்று கவிதைகள்.....



ஆதவா
06-02-2009, 01:43 PM
அடர் இருளின் உட்புறத்தில்
உரக்கக் கத்திக் கொண்டு கிடந்தது
மெளனம்
பாதைகளற்ற இடைவெளியில்
பயணித்துக் கொண்டிருந்த
மொழியைப் பிடித்து
மெளனத்தோடு புணரச் செய்தேன்

அகண்ட வெளியில்
துப்பியது
கவிதையாக..

____________________________________

முடிவிலியாக நீண்டு கிடக்கிறது
உன் மெளனம்
பேசப்படாத வார்த்தைகள்
ஒன்றோடொன்று
சண்டையிட்டுக் கொள்கின்றன

நுரைகுமிழ்கள் அடங்கிய கிழமைகள்
நொடிகளுக்கிடையே அமர்ந்து
சுவாரசியமாக பொழுது போக்குகின்றன
அது வெடித்து தெறிக்கும் பொழுது
உன் மெளனம் நீள்கிறது

நீ உடுத்திய கவிதைகள்
கனம் தாழாது உதிர்கின்றன
உன் மெளனத்தின் அடர்த்தியில்
கும்மிருளும் மிரளுகிறது.

ஒருமுறையேனும் அதை உடைத்துவிடு
விரிசல்களோடு பயணித்து
பெரும் மின்னலாக மறைகிறேன்.


____________________________________

அசுத்தமற்ற வான்வெளிகளில்
சாயுங்கால நேரத்தில்
வெண் இறகுகளுடைய
தேவதைகள்
இறங்கி வருகின்றனர்

ஏதாவதொரு விளிம்பில்
அமர்ந்து கொண்டு
வலம் வரும் தேவதைகளை
கண்காணிப்பதே என் பணி

அமர்ந்து இருக்கும் இடத்துக்கு
நேரெதிரே இறக்கைகளை மடித்து ஒடுக்கி
என்னை அழைக்கிறார்கள்

தயக்கம் விலக்கிய என்னிடமிருந்து
ஒரு உருவம் தேவதைகளை நோக்கிச் செல்கிறது
அதை அவர்கள் அணைத்துக் கொள்கிறார்கள்

தினமும் நீளும் இத்தொடர்பினை
முறிக்க இயலாமல் தவிக்கிறார்கள்
தேவதைகளைக் காணமுடியாதவர்கள்

தேவதைகளை அணைக்காமல் இருக்கமுடிவதில்லை
அல்லது அவர்களின் முலைகளையேனும்.

amuthuramalingam5
04-06-2009, 02:42 AM
மூன்றும் மிக நல்லக் கவிதைகள் ஆதவா.
இது எப்போது எழுதியது. உங்கள் தளத்தில் பதிவிடவில்லையா இன்னும்.