PDA

View Full Version : ஐபிஎல்-2009



அறிஞர்
06-02-2009, 01:28 PM
இந்தியன் ப்ரிமியர் லீக் 2009
பற்றிய செய்திகளையும்,
நடைபெறும் போட்டிகள் பற்றிய விவரங்களையும்,
இங்கு பரிமாறிக்கொள்ளலாம்.

அறிஞர்
06-02-2009, 01:30 PM
இங்கிலாந்து வீரர்கள் கெவின் பீட்டர்சன், பிளிண்டாப் இன்று ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கிறார்கள் (தலா 1.55 மில்லியன் அமெரிக்க டாலர்கள்=7.5 கோடி).
பிளிண்டாப் - சென்னை சூப்பர் கிங்க்ஸ்
பீட்டர்சன் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்

arun
19-02-2009, 07:26 PM
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பீட்டர்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக தகவல்

பாவம் திராவிட் :eek:

அறிஞர்
20-02-2009, 10:25 PM
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பீட்டர்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக தகவல்

பாவம் திராவிட் :eek:
போன வருடமே... ஏகப்பட்டு திட்டு வாங்கினார்...
என்ன செய்வது.. அவரின் போதாத காலம்.

அறிஞர்
16-03-2009, 04:51 PM
இந்த வருட போட்டிகள் எப்படி நடைபெறும் எனத் தெரியவில்லை.

தேர்தல் வருவதால்.... சற்றுக் குழப்பம்.

இந்த வாரத்தில் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி புதிய அட்டவணையுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

aren
16-03-2009, 05:41 PM
பலருக்கு பணத்தை வாரி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சொதப்பாமல் வாங்கிய பணத்திற்கு ஆடி ரன்களை குவிக்கவேண்டும்.

பரஞ்சோதி
17-03-2009, 02:47 PM
இந்த வருடம் ஐபிஎல் நடக்குமா?

பெரும் பணத்தை பிசிசிஐயிடம் பிடுங்க அரசியல்வாதிகள் திட்டம் போடுற மாதிரி தெரியுது.

சூரியன்
17-03-2009, 02:49 PM
போட்டிக்கான புதிய அட்டவணை தயாரிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன்.

பரஞ்சோதி
18-03-2009, 07:04 AM
ஆமாம், புதிய அட்டவணையில் ஜெய்பூர் நகரை தூக்கிட்டாங்க.

சாம்பியன் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூரில் தான் அசத்தினாங்க.

அறிஞர்
18-03-2009, 01:12 PM
ஐபிஎல் புதிய அட்டவணை வெளியீடு
சென்னையில் 5 ஆட்டங்கள்
டெல்லி, ஜெய்ப்பூரில் போட்டி இல்லை
புதுடெல்லி, மார்ச் 18-
மக்களவை தேர்தலை ஒட்டி ஐபிஎல் 20-20 அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் போட்டி நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் சென்னையில் நடைபெறும் ஆட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட ஐபிஎல் அமைப்பு கடந்த ஆண்டு 20-20 போட்டியை நடத்தியது. இதில் விளையாட உலகின் முன்னணி வீரர்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு இந்த தொடர் பெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் 20-20 தொடர் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கி மே 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, மொகாலி, ஜெய்ப்பூர், டெல்லி, பெங்களூர் ஆகிய 8 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 முதல் மே 13-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் தேர்தல் நடைபெறும் சமயத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுவதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என அதிரடியாக தெரிவித்தன. இதனால் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்குமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டு கொண்டது.

இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 8 நகரங்களுடன் விசாகப்பட்டினம், தர்மசாலா ஆகிய 2 நகரங்களிலும் போட்டியை நடத்த ஐபிஎல் முடிவு செய்து மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்தது. இதனையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே டெல்லி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் போட்டிகளை நடத்தினால் பாதுகாப்பு வழங்க முடியாது என அம்மாநில அரசுகள் கைவிரித்தன. இதனால் புதிய அட்டவணையை மீண்டும் ஐபிஎல் தயார் செய்தது. இந்த அட்டவணை நேற்று உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.
இதன்படி ஏப்ரல் 10-ம் தேதி போட்டி தொடங்கி மே 24-ம¢ தேதி வரை நடைபெறும். டெல்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய 3 நகரங்களிலும் போட்டிகள் நடத்தப்படாது. இந்த ஆட்டங்கள் தர்மசாலா மற்றும் நாக்பூரில் நடைபெறும். அகமதாபாத், கொல்கத்தா, பெங்களூர் ஆகிய இடங்களில் நடைபெறும் போட்டிகளில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் தொடக்க போட்டி ஏப்ரல் 10-ம¢ தேதியும், இறுதிப்போட்டி மே 24-ம¢ தேதியும் நடக்கிறது. இங்கு மட்டும் மொத்தம் 14 ஆட்டங்கள் நடைபெறுகிறது.

சென்னையில் 5 ஆட்டங்கள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 8 ஆட்டங்கள் நடைபெற்றன. இம்முறை 3 லீக் ஆட்டம், 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இவை மே 15, 17, 20, 22-ம¢ தேதிகளில் நடக்கிறது. இந்த புதிய அட்டவணையை போட்டி நடைபெறும் அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள் இன்று அல்லது நாளை பதில் அளிக்கும் என தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டி அட்டவணை உறுதி செய்யப்படும்.

http://tm.dinakaran.com/1832009/18032009_TMR_CHN_06.imege-01.jpg

நன்றி - தமிழ் முரசு

அறிஞர்
18-03-2009, 01:12 PM
தெளிவான அட்டவணை விரைவில் வெளியாகும்.

சூரியன்
18-03-2009, 01:17 PM
மேலும் விவரங்களுக்கு இதை பாருங்கள்:

http://www.cricbuzz.com/component/cricket_schedule/Series/195/indian-premier-league-2009/

அறிஞர்
18-03-2009, 01:19 PM
மேலும் விவரங்களுக்கு இதை பாருங்கள்:

http://www.cricbuzz.com/component/cricket_schedule/Series/195/indian-premier-league-2009/
இது பழைய அட்டவணை...
இப்பொழுது ஜெய்ப்பூர், டெல்லியில் போட்டி கிடையாது

சூரியன்
18-03-2009, 01:20 PM
இது பழைய அட்டவணை...
இப்பொழுது ஜெய்ப்பூர், டெல்லியில் போட்டி கிடையாது

சரி அறிஞரே புதிய அட்டவணையை விரைவில் பதிகக்கின்றேன்.

சூரியன்
18-03-2009, 03:04 PM
ஐ.பி.எல்., தொடருக்கான திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான மாநிலங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதால் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் காரணமாக பாதுகாப்பு அளிக்க மறுத்த டில்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் வரும் ஏப்., 10 முதல் மே 24ம் தேதி வரை இரண்டாவது “டுவென்டி-20′ தொடர் நடக்க உள்ளது. இதே காலக் கட்டத்தில் லோக்சபா தேர்தலும் நடப்பதால் பாதுகாப்பு அளிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அட்டவணையை இரண்டு முறை மாற்றியும் சிக்கல் தொடர்ந்தது. பின்னர் மாநில அரசுகளுடன் கலந்து பேசி உரிய மாற்றங்களை செய்யும்படி ஐ.பி.எல்., நிர்வாகிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து நேற்று மூன்றாவது முறையாக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்த டில்லி, ஜெய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான போட்டிகள் மும்பை(ஏப்., 10, 12, 14, 15, 17, 23, 25, மே 3, 5, 8, 12, 18) கோல்கட்டா(ஏப்., 11, 15, 16, 18, 22, 24, 26), பெங்களூரு(மே 4, 7, 10, 11, 14, 19, 20), மொகாலி(ஏப்., 12, 19, 21, 28), ஐதராபாத்(ஏப்., 27, 29, 30, மே 6, 8, 11, 12), ஆமதாபாத்தில்(ஏப்., 11, 13, 17 மே 6, 9, 10, 13) நடக்க உள்ளன. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலா, சட்டீஸ்கரில் உள்ள ரெய்ப்பூர் புதிய இடங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவிக்கும்பட்சத்தில் ஐ.பி.எல்., புதிய அட்டவணை மிக விரைவில் வெளியிடப்படும். இதற்கிடையே ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சோனி “டிவி’ தொடுத்த வழக்கில் தீர்ப்பை மும்பை ஐகோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. புதிய ஒப்பந்தங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் இந்திய கிரிக்கெட் போர்டுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Thanks: paristamil

தாமரை
22-03-2009, 10:33 AM
தல,

நான் என்ன அப்படி பெருசா சொல்லிட்டேன். ஒரே ஒரு ஐ.பி.எல் மேட்ச் பார்க்க அனிருத்தோட சென்னை வர்ரேன்னு சொன்னேன். அவ்வளவுதானே..

இதுக்குப் போயா ஐ.பி.எல் மேட்சுகளை இந்தியாவை விட்டே தூக்கி வெளிநாட்டுக்கு கொண்டுபோறது.

முன்னயெல்லாம் நான் வர்ரேன்னு சொன்னா நீங்க மட்டும்தான் இலண்டன் தாதாகிட்ட அடைக்கலம் தேடுவீங்க..

இப்போ கிரிக்கெட் அணிக்குமா என்னைப் பத்திச் சொல்லிட்டீங்க?

இருக்கட்டும் இருக்கட்டும்.

சூரியன்
22-03-2009, 11:59 AM
தல,

நான் என்ன அப்படி பெருசா சொல்லிட்டேன். ஒரே ஒரு ஐ.பி.எல் மேட்ச் பார்க்க அனிருத்தோட சென்னை வர்ரேன்னு சொன்னேன். அவ்வளவுதானே..

இதுக்குப் போயா ஐ.பி.எல் மேட்சுகளை இந்தியாவை விட்டே தூக்கி வெளிநாட்டுக்கு கொண்டுபோறது.

முன்னயெல்லாம் நான் வர்ரேன்னு சொன்னா நீங்க மட்டும்தான் இலண்டன் தாதாகிட்ட அடைக்கலம் தேடுவீங்க..

இப்போ கிரிக்கெட் அணிக்குமா என்னைப் பத்திச் சொல்லிட்டீங்க?

இருக்கட்டும் இருக்கட்டும்.

இதெல்லாம் அரசியல்ல சாதரணம் அண்ணா.:)

பரஞ்சோதி
22-03-2009, 12:51 PM
இப்போட்டிகளை வெளிநாட்டில் வைச்சி நடத்த யோசிக்கிறாங்க போலிருக்குதே.

ஜாக்
23-03-2009, 06:22 PM
ஆமாம் போட்டிகள் வெளி நாட்டில் நடத்தபடுவது உறுதியாகிவிட்டது

முதலில் இங்கிலாந்தில் நடவிருக்கப்பதாக இருந்தது ஆனால் அங்கு வானிலை சரியில்லாத காரணத்தால் தென் ஆப்பிரிக்காவில் நடக்கலாம் என்று தெரிகிறது

இந்திய கிரிகெட் வாரியம் நடத்தும் மிக பிரபலாம போட்டி அன்னிய மண்ணில் நடப்பது மிக வருத்தமாக செய்தி என்ன செய்வது இதுவும் கடந்து போகும் என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான்

இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை


ஐ.பி.எல் சீசன் * 2 வெளிநாட்டில் நடப்பது நன்மைகள் தீமைகள் பற்றி நண்பர்கள் விவாதிக்கலாமே

அக்னி
23-03-2009, 06:34 PM
ஐபிஎல் வெளிநாட்டிலா...

பெயருக்கே அர்த்தமில்லாம ஆக்கிட்டாங்களே...
பெயரையும் மாத்திடுவாங்களோ...

அறிஞர்
23-03-2009, 06:42 PM
தேர்தல் முக்கியம் என கூறிவிட்டனர்.
அது உண்மைதான்.
-------------
லாபம் - வீரர்களுக்கு பாதுகாப்பு, டீவி மூலம் அதிக வருமானம்.

நஷ்டம் - இரசிகர்களின் வருமானம்/சப்போர்ட்....

ஜாக்
23-03-2009, 06:46 PM
எனக்கு ஒன்று புரியவில்லை

தேர்தலுக்கும் போட்டிகளுக்கும் சேர்த்து பாதுகாப்பு கொடுக்க நம்மிடம் சக்தி இல்லையா என்ன?

இல்லை தேர்தல் நேரத்தில் போட்டி நடத்தினால் மக்கள் யாரும் ஓட்டு போட வரமாட்டாங்க என்ற எண்ணமா?

தேர்வில் தோற்றுவிடுவேன் என்று பயந்து வேறு ஒருவரை தேர்வு எழுத சொல்லுவது எந்தவிதத்தில் சரிபடும்

அறிஞர்
23-03-2009, 06:47 PM
தேர்தலா... ஐபிஎல்லா என போட்டி நடக்கும்..

மாலை வேளைகளில் ஐபிஎல்லால் தேர்தல் கூட்டங்கள் பாதிக்கப்படும்.

அறிஞர்
24-03-2009, 02:35 PM
தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
------------
இன்று தெளிவான அறிவிப்புகள் வெளியாகும்.

ஓவியன்
24-03-2009, 02:42 PM
பலகோடி ரூபாக்களும் இந்தியாவுக்கு வராது தென்னாபிரிக்காவுக்கு செல்ல இருக்கின்றன எங்கிறீங்க.... :rolleyes:

சரி, பார்ப்போம் என்ன நடக்கிறாதென... :rolleyes:

ஜாக்
24-03-2009, 02:50 PM
ஆமாம் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடப்பதாக அதிகார்வபூர்வ தகவல் வந்தாயிற்று

முதலில் ஏப்ரல் 10 தேதி தொடங்குவதாக இருந்தது ஆனால் இப்போது ஏப்ரல் 18ஆம் தேதிகு மாற்றப்பட்டுள்ளது காரணம் இந்திய அணி நீயுசிலாந்தில் தனது சுற்று பயனத்தை ஏப்ரல் 7 ஆம் தேத்தி முடிப்பத்தினால்

பரஞ்சோதி
11-04-2009, 10:53 AM
ஐபிஎல் போட்டிகளை பற்றி விவாதிக்கலாமா?

நண்பர்களே! வாங்க.

ஜாக்
12-04-2009, 01:55 PM
தாரளமாக விவாதிக்கலாமே ஏதாவது ஆரம்பித்து வையுங்கள் விவாதம் கலைகட்டும்

சுட்டிபையன்
12-04-2009, 07:26 PM
புதிய அட்டவணை
http://www.500images.com/uploads/313235499IPL 2009.jpg (http://www.cricbitz.blogspot.com/)

சுட்டிபையன்
12-04-2009, 07:32 PM
ஐபிஎல் போட்டிகளை பற்றி விவாதிக்கலாமா?

நண்பர்களே! வாங்க.


தாரளமாக விவாதிக்கலாமே ஏதாவது ஆரம்பித்து வையுங்கள் விவாதம் கலைகட்டும்

தாராளமா விவாதிக்கலமே. ஐபில் 2009இல் கலக்க போவது யாரு?

சுட்டிபையன்
12-04-2009, 07:44 PM
http://www.500images.com/uploads/1885299353delhi-daredevils1.jpg
Batsmen
Owais Shah
David Warner
Gautam Gambhir
Manoj Tiwary

All Rounders
Andrew McDonald
Daniel Vettori
Tillakaratne Dilshan
Paul Collingwood
Farveez Maharoof
Rajat Bhatia
Virender Sehwag(Captain)
Mithun Manhas
AB de Villiers

Wicket Keepers
Dinesh Karthik

Bowlers
Glenn McGrath
Dirk Nannes
Vijaykumar Yo Mahesh
Ashish Nehra
Amit Mishra
Pradeep Sangwan

Coaches
Head Coach: Greg Shipperd
Assistant Head Coach: David Saker
Bowling Consultant: Dennis Lillee
Physiotherapist: Justin Steer

http://cricbitz.blogspot.com/2009/04/delhi-daredevils-squad.html

சுட்டிபையன்
12-04-2009, 07:46 PM
http://www.iplmag.com/wp-content/uploads/2009/02/dc.jpg

Batsman
Chamara Silva
Herschelle Gibbs
V.V.S.Laxman
Arjun Yadav
Venugopal Rao
Rohit Sharma
D.B.Ravi Teja
T.Suman
Abhinav Kumar

All Rounders
Dwayne Smith
Scott Styris
Andrew Symonds
Ryan Harris

Wicket Keepers
Adam Gilchrist
Halhadar Das
M.S.Bisla

Bowlers
R. P. Singh
Fidel Edwards
Chaminda Vaas
Nuwan Zoysa
D.Kalyankrishna
Pragyan Ojha
M Sarveesh Kumar
H.S.Bansal
Jaskarandeep Singh
P. Vijay Kumar

Support Staff
Head Coach: Darren Lehmann
Assistant Coaches: Kanwaljit Singh
Assistant Coaches: Mike Young
Physiotherapist: Dr Sean Slattery
Strength and Conditioning Coach: Steve Smith

http://cricbitz.blogspot.com/2009/04/deccan-chargers-team-squad-2009.html

சுட்டிபையன்
12-04-2009, 07:48 PM
http://www.indiantelevision.com/images19/rajasthan_royals_8.jpg

Batsmen
Robert Quiney
Graeme Smith
Mohammad Kaif
Niraj Patel
Swapnil Asnodkar
Taruwar Kohli
Raiphi Vincent Gomez

Wicket Keepers
Naman Ojha
Mahesh Rawat

All Rounders
Lee Carseldine
Dimitri Mascarenhas
Shane Watson
Tyron Henderson
Yusuf Pathan
Ravindra Jadeja

Bowlers
Shane Warne (captain)
Shane Harwood
Morne Morkel
Shaun Tait
Mohammad Kamran Khan
Munaf Patel
Siddharth Trivedi

Coaches
Head Coach: Shane Warne
Assistant Head Coach: Harish Joshi
High Performance Coach: Jeremy Snape
Physiotherapist: John Gloster
Performance Analyst: Mohsin Sheikh
Director Of Coaching: Darren Berry

http://cricbitz.blogspot.com/2009/04/rajasthan-royals-is-franchise-cricket.html

சுட்டிபையன்
12-04-2009, 07:51 PM
http://www.500images.com/uploads/12610389208749.jpg.jpg
Batsmen
Brad Hodge
Aakash Chopra
Debabrata Das
Cheteshwar Pujara

Wicket Keepers
Brendon McCullum
Wriddhiman Saha

Bowlers
Ashok Dinda
Murali Kartik
Ishant Sharma
Ajantha Mendis
Mohnish Parmar

All Rounders
David Hussey
Moises Henriques
Chris Gayle
Mashrafe Mortaza
Angelo Mathews
Sourav Ganguly(C)
Laxmi Ratan Shukla
Ajit Agarkar
Iqbal Abdullah
Sachin Rana

Coaches
Head Coach: John Buchanan
Assistant Head Coach: Matthew Mott
Physiotherapist: Andrew Leipus
Physical Trainer: Adrian Le Roux
Physical Trainer: Michael Buchanan

http://cricbitz.blogspot.com/2009/04/kolkata-knight-riders-team-squad.html

சுட்டிபையன்
12-04-2009, 07:56 PM
http://www.500images.com/uploads/102550499Mumbai_Indians.jpg
Batsmen
Jean-Paul Duminy
Mohammed Ashraful
Shikhar Dhawan
Sachin Tendulkar(Captain)
Saurabh Tiwary
Ajinkya Rahane
Jaydev Shah

All Rounders
Sanath Jayasuriya
Ryan McLaren
Dwayne Bravo
Graham Napier
Kyle Mills
Abhishek Nayar

Wicket Keepers
Luke Ronchi
Pinal Shah
Yogesh Takawale

Bowlers
Dilhara Fernando
Harbhajan Singh
Dhaval Kulkarni
Rohan Raje
Zaheer Khan
Lasith Malinga
Chetanya Nanda
Rahil Sheikh

Coaches
Head Coach: Lalchand Rajput
Assistant Head Coach: Sameer Dighe
Bowling Coach: Subroto Banerjee
Physiotherapist: Dr. Nitin Patel

http://cricbitz.blogspot.com/2009/04/mumbai-indians-ipl-2009-team.html

சுட்டிபையன்
12-04-2009, 07:59 PM
http://www.500images.com/uploads/2141799168royal.jpg
International players:
Jacques Kallis, Mark Boucher, Dale Steyn, Roelof van der Merwe and Dillon du Preez (South Africa), Cameroon White and Nathan Bracken (Australia), Kevin Pietersen (England), Ross Taylor and Jesse Ryder (New Zealand)

Indian players:
Rahul Dravid, Anil Kumble, Robin Uthappa, Praveen Kumar, Virat Kohli, Wasim Jaffer, Manish Pandey, Sreevats Goswami, Suteesh R, Pankaj Singh, Vinay Kumar, Bhuvanesh Kumar, Karan Sharma, Saurav Bandekar, Tinu Yohanan, Bharat Chipli, B Akhil, Devraj Patil, J Arun Kumar, KP Appana, Sunil Joshi, Gauvar Dhiman, Jitendra Patil, Udit Patel, Mithun A. Aravind, S. Kedar Jadhav, Gautam CM, Raju Bhatkal, Rajesh Bishnoi, Ishank Jaggi and Rohit Sabharwal

Team owner: Vijay Mallya

Players to watch: Dale Steyn, Uthappa, Ryder and Pietersen

http://cricbitz.blogspot.com/2009/04/bangalore-royal-challengers-in-indian.html

சுட்டிபையன்
12-04-2009, 08:01 PM
http://www.500images.com/uploads/1015535575.jpg

Squad of Kings XI Punjab in IPL 2009:
International players: Brett Lee, James Hopes, Shaun Marsh, Luke Pomersbach, Simon Katich and Burt Cockely (Australia), Jerome Taylor (West Indies), Ravi Bopara (England) and Mahela Jayawardene and Kumara Sangakkara (Sri Lanka)

Indian players: Yuvraj Singh, Irfan Pathan, S Sreesanth (will not play), Romesh Powar, VRV Singh, Karen Goel, Uday Kaul, Ryan Ninan, Wilkin Mota, Ajitesh Agral, Tanmay Srivastava, Sunny Sohal and Yash Gandhi.

Head Coach: Tom Moody
Owners - Preity Zinta, Ness Wadia, Karan Paul & Mohit Burman
CEO - Neil Maxwell [10]
Ambassador - Daler Mehndi

Players to watch: Yuvraj Singh, Brett Lee, Sangakkara and Shaun Marsh

http://cricbitz.blogspot.com/2009/04/kings-xi-punjab-in-indian-premier.html

சுட்டிபையன்
12-04-2009, 08:06 PM
http://chennaisuperkingslivestreaming.info/wp-content/uploads/2009/03/chennai-super-kings-logo.jpg
Squad of Chennai Super Kings in DLF IPL 2009:
International: Muttaih Muralitharan and Thilhan Thushara (Sri Lanka), George Bailey, Matthew Hayden and Michael Hussey (will not play)(Australia), Albie Morkel and Makhaya Ntini (South Africa), Jacob Oram and Stephen Fleming (New Zealand) and Andrew Flintoff (England)

Indian players: MS Dhoni, Parthiv Patel, S Badrinath, Suresh Raina, L. Balaji, M. Vijay, Joginder Sharma, Manpreet Singh Gony, R Ashwin, Sudeep Tyagi Abhinav Mukund, Viraj Kadbe, Shadab Jakati, Aniruddh Srikanth, Vidyut Sivaramakrishna, Palani Amarnath, KB Arun Karthik, N Einstein and Suresh Kumar

Head Coach: Stephen Fleming
Assistant Coach: Venkatesh Prasad
Physiotherapist: Tommy Simsek
Physical Trainer: Gregory King

Owner - India Cements Ltd.
CEO - TBA
Ambassadors - Joseph Vijay, Krishnamachari Srikkanth
Chief Selector - V. B. Chandrasekhar

Players to Watch:
Muttiah Muralitharan, MS Dhoni(c), Andrew Flintoff, S Raina and M Hayden

http://cricbitz.blogspot.com/search/label/Chennai%20Super%20Kings

ஜாக்
16-04-2009, 03:31 AM
தாராளமா விவாதிக்கலமே. ஐபில் 2009இல் கலக்க போவது யாரு?
போன முறையை விட இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது:icon_b:

முடிவு எதுவாக இருந்தாலும் நம்ம சப்போர் சென்னைக்குதாங்கோ:)

போன முறை ஜொளித்த ராஜஸ்தன் அணி இந்த முறையும் ஜொளிக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது பொருத்திருந்து பார்ப்போம்:mini023::icon_rollout:

aren
16-04-2009, 04:01 AM
முதல் ஆட்டத்தில் ஹேடன், ஃபிளின்டாஃப், ஆல்பி மோர்கல் ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள். தென் அமெரிக்காவில் மாட்ச் நடப்பதால் நிட்டினிக்கு சான்ஸ் கொடுப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆகையால் நான்கு வெளிநாட்டு ஆட்டக்காரர்களின் கோட்டா முடிந்துவிடும்.

அப்படியென்றால் முதல் ஆட்டத்திற்கு டீம் இதுவாகத்தான் இருக்கும்:

மேத்யூ ஹேடன்
அபினவ் முகுந்த்
சுரேஷ் ரைனா
தோனி
ஃபிளின்டாஃப்
பத்ரிநாத்
ஆல்பி மோர்கல்
அஸ்வின்
நிட்டனி
பாலாஜி
கோனி

முரளிதரனும் ஓரமும் அடுத்தடுத்த ஆட்டங்களில் உள்ளே வரலாம்.

அறிஞர்
17-04-2009, 12:52 PM
நாளை முதல் போட்டிகள் ஆரம்பிக்கிறது.
முதல் ஆட்டம் - சென்னை சூப்பர் கிங்க்ஸ் vs. மும்பை இந்தியன்ஸ் (4.00 pm IST)
இரண்டாம் ஆட்டம் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs. பெங்களூரு ராயல் சேலங்சர்ஸ் (8.00 pm IST)

அறிஞர்
20-04-2009, 01:25 AM
ஐபிஎல் போட்டிகளை பற்றி விமர்சனமே இல்லை..

பரஞ்சோதி
20-04-2009, 05:55 AM
என்னுடைய கணிப்பு மும்பை அணி கோப்பையை வெல்லும்.

"பொத்தனூர்"பிரபு
22-04-2009, 11:13 AM
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.
மும்பை அணி கோப்பையை வெல்லும்.

அறிஞர்
24-05-2009, 06:13 PM
இங்கு யாரும் கணிக்காத ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் கோப்பையை வென்றார்கள்.

மதி
24-05-2009, 06:14 PM
வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியினருக்கு பாராட்டுக்கள்...!

அமரன்
24-05-2009, 06:23 PM
வாழ்த்துகள்.

virumaandi
24-05-2009, 08:41 PM
சென்னையை போல நெருக்குதல் கொடுக்க மாட்டார்கள் என நினைத்தேன்.. ஆனால்..!!!!!!!
வாழ்த்துக்கள் டெக்கானுக்கு