PDA

View Full Version : ஊர் மணம் மாறாத பிஞ்சுகள்.



அமரன்
05-02-2009, 02:26 PM
பெற்றவர் கற்ற முற்றம்
சுற்றம் சூழ்ந்திருக்க
முற்றத்தில் கற்றதுவும்..

அம்புலியை அருகாக்கி
கதைகள் பல சொல்லி
அம்புலியாய் ஆனதுவும்..

பானை பசி இருக்க
பால் சோறு தனைத் தந்து
பால் வீதி காட்டியதுவும்.

வெள்ளத்தில் எறிந்த கல்
பூவரசங் கம்பாகி
கால்களை வீங்க வைத்ததும்.

ஆந்தையாய் நான் இருக்க
இதயம் துடித்து
இரவுப் பறவையாய் ஆனதுவும்..

எல்லாமும் பசுமையாய்
பதுங்கி இருக்க
ஊர் மணம் மட்டும்
எதுக்கம்மா கிளம்புகிறது.

இளசு
10-02-2009, 08:18 PM
மன நினைவுகளுக்கும்
மண நினைவுகளுக்கும்
சேமிப்பு ஒரே இடந்தான் -
மூளையின் காலச்சுளை ( Temporal Lobe)...

பாசநினைவுகள் பதுங்கியகாலத்தும்
வாசநினைவுகள் ஊதிக்கிளப்புவது -
ஆதியில் பொதிந்த பண்பு...

வீடிழந்து, படிப்பழிந்து
நீருக்கும் சோறுக்கும் ஏந்தி
உயிர்நிலைக்க நிதமும் போராடும்
இந்தப் பிஞ்சின் மணநினைவுகள் -
நிலைபெறட்டும்..
விடியல் வரட்டும்!