PDA

View Full Version : சுஜாதா அன்புள்ள சுஜாதா



umakarthick
05-02-2009, 01:02 PM
சுஜாதா மறைவிற்கு பின் எழுதியது


பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ,சுந்தர் ராமன் என்னும் ஒரு நண்பன் தான் சுஜாதாவை அறிமுகப் படுத்தினான்.அப்போது கெமிஸ்ட்ரி புத்தகத்திலும்,பிசிக்ஸ் புத்தகத்திலும் நாங்கள் விகடன்,அல்லது மற்ற கதை புத்தங்களை ஒளித்து வைத்து படிப்போம்.சுந்தர் சுஜாதாவை படிப்பான், நான் அப்போது கத்துக்குட்டி ஆதாலால் ராஜேஸ்குமார் படித்துக் கொண்டிருப்பேன்.

'வசந்த கால குற்றங்கள் ' (இந்த நாவலில் கணேஷ்,வசந்த கிடையாது)தான் நான் முதன் முதலில் படித்த சுஜாதா நாவல் .கோடை விடுமுறையில் ஏனோதானோ என்று தான் அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்,சுஜாதாவின் சொல்லாடலும்,தமிழை எளிய முறையில் அதே சமயம் வித்தியாசாமாகவும் அவர் பயன்படுத்தியிருந்த விதம் என்னை வெகுவாய் கவர்ந்தது.
முதல் மதிப்பெண் எடுத்தால் வண்டி வண்டியாய் பாத்திரங்களை பரிசாய் கொடுக்கு எங்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்ததற்க்கு , முதன் முறையாக புத்தங்கள் கொடுத்தார்கள், அதில் ஒரு புத்தகம் ' ஏன்?எதற்கு?எப்படி?'. அந்த புத்தகத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டது பல விஷயங்கள் , உதாரணத்திற்கு , அதில் ஒரு வாசகர் கேட்ட கேள்வி , 'மனிதன் இறக்கும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் உறுப்பு எது ' அதற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

வசந்த கால குற்றங்களுக்கு பிறகு எனக்கு படிக்க கிடைத்தது 'காந்தளூர் வசந்த குமாரன் கதை' , சரித்திர நாவலாய் இருக்கிறதே போர் அடிக்குமோ என எண்ணி தான் ஆரம்பித்தேன்,ஆனால் வாத்தியார் பிண்ணி எடுத்திருந்தார். அந்த நாவலில் வரும் கணேஷ் பட்டரும்,வசந்த் ஐயரும் தான் கணேஷ்,வசந்த என பிற்காலத்தில் தான் தெரிந்தது.அதற்கு பின் 3 ஆண்டு காலங்கள் கல்லூரியில் சுஜாதாவின் எந்த புத்தகமும் படிக்க கிடைக்க வில்லை.நான்காம் ஆண்டு என் பள்ளி நண்பன் சுந்தரின் பிறந்த நாளுக்காக பரிசாய் கொடுக்க கோவை டவுன் ஹாலில் பழைய புத்தக கடைகளுக்குள் புகுந்து புரட்டிய போது சுஜாதாவின் எந்த புத்தகமும் கிடக்க வில்லை,பொதுவாக அவர் மாத நாவல்கள் எழுதியிராத காரணத்தால் அவர் புத்தங்கள் இந்த மாதிரி பழைய புத்தக கடையில் கிடைக்காது.நம்பிக்கையிழந்த கடைசியாக எதேச்சையாக ஒரு கடையில் பைண்டு பண்ணியிருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தேன்..ஆச்சர்யம் எனக்கு கிடைத்தது..'மூன்று நிமிஷா'. மறுபடியும் புத்தகங்களுக்கு தலை விட்ட போது கிடைத்தது "நைலான் கயிறு" சுஜாதாவின் முதல் நாவல்,குமுதமில் வந்தது.அந்த நாவலுக்கு "சீட்டு கட்டு மாளிகை " என்று இன்னொரு பெயரும் உண்டு. அந்த புத்தங்களை படித்து விட்டே அவனுக்கு பரிசளித்தேன்.

கற்றதும் பெற்றதும் ல் அவர் தனக்கு வரும் மெயில்கள் பற்றி எழுத அவருக்கு இமெயில்கள் அனுப்பினால் அவர் பதில் அளிப்பார் என தெரிய அவருகு என் முதல் மெயிலை அனுப்பினேன். விகடனில் அவர் இரண்டு வரிகளில் கதை எழுதி அனுப்ப சொல்லி எழுதியிருந்தார் ,நான் ஒரு சில கதைகள் யோசித்து அவருகு மெயிலினேன் ,அவரிடமிருந்து மறுநாளே ரிப்ளை வந்தது , ஒரே வரியில் 'too late ' என. ஏமாற்றத்திலும் ஒரு சந்தோசம்.

பின்னர் அவர் பிறந்த நாளுக்கு , இணையத்தில் அவரை பற்றிய பலரும் எழுதிய சிறந்த பதிப்புகள், அவர் கதை பற்றிய தீவிர விவாதங்களை தொகுத்து என் பிளாகில் இட்டேன், அதன் லின்க் கொடுத்து ,அவரை வாழ்த்தி மெயிலினேன். மறு நாள் 'தாங்க்ஸ்' என ஒற்றை வரி பதில் , அவர் என் போஸ்ட்டை படித்தாரா எனத் தெரிய வில்லை.

இன்னொரு முறை முட்டாள் தனமாய் ஒரு ஆர்வத்தில் என் கவிதைகளை அவருக்கு அனுப்பினேன், 'இதை போல இனிமேல் அனுப்பாதீர்கள்' என பதில் அனுப்பினார்.


சினிமாவில் அவரை ஒழுங்காக பயன்படுத்தியவர்கள் மணிரத்னமும், சங்கரும் மட்டுமே, இவர்கள் அல்லாது உள்ளம் கேட்குமே,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சில படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார், இந்த படங்களில் எல்லாம் சுஜாதா தான் டயலாக்ஸ் என டைட்டிலில் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

விகடன் கற்றதும் பெற்றதுமில் அவர் பல நல்ல கவிஞர்களை,இசையமைப்பாளர்களை,பாடகர்களை,எழுத்தாளர்களை இனம் கண்டு பாராட்டி பேசி அவர்கள் முன்னேற காரணமாயிருந்திருக்கிறார்.உதாரணமாக நா.முத்து குமாரின் 'தூர்' கவிதை மற்றும் 'பூனை' என்னும் கவிதைகளை வெகுவாக பாராட்டினார்.கார்டூனிஸ்ட் சிம்பு தேவனை அவரது சொந்த ஊரிலிருந்து அழைத்து சென்னை வரச் சொல்லி ,பல வாய்ப்புகள் கொடுத்து,இப்போது அவர் டைரக்டராக உயர காரண்கர்த்தா கவிஞர் தாமரை அடையாளம் கண்டவரும் இவரே. இவர் ஒரு காலத்தில் புகழ்ந்தவர்கள் எல்லாம் இப்போது நல்ல நிலையில் உள்ளார்கள்.
இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம்('ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கிற' படத்தில் 5 இசையமைப்பாளர்களில் ஒருவராய் அறிமுகமானார்.) பற்றி அவர் முன்பே எழுதியுள்ளார், 'அழகிய தீயே ' மூலம் நல்ல பயரெடுத்தவ்ர் ரமேஷ் வியாகயம் , அவர் திறமை இன்னும் முழுதும் வெளிப் பட வாய்ப்பு கிடைக்க வில்லை.


இன்போசில் வேலையில் ஜாய்ன் பண்ணி பென்ச்சில் இருந்த மாதங்களில் , கூகுளில் அவரை பற்றியும்,கதைகள், நாவள்கள்,அவர் சம்மந்தபட்ட குழுக்கள்,அவரை பற்றி பதிவு போடுபவர்களிடம் தொடர்பு கொள்வது என ஆரம்பித்தேன்.இப்படித்தான் 'என்.சொக்கன்' அறிமுகமானார்,இவர் சுஜாதாவில் தீவிர வாசகர், விடனில் 'வல்லினம் ,மெல்லினம்,இடையினம்' எழுதினார், இவரிடமும்,கிறுக்கல்.காம் குருவிடமும் நிறைய பேசி , என்னிடம் இருக்கும் நாவல்களை பகிர்ந்தும்,அவர்களிடமிருந்து பெற்றும் இருக்கிறேன்.
தேசிகன் மூலமாக ஒரு மருத்துவ விடயத்துக்காக சுஜாதா சாரிடமும் ஒரு உதவி கேட்டேன்,தேசிகன் எனக்கு உதவினார், பல பிளாகர்கள் சுஜாதாவரை பற்றி கண்ட படி பேசி விவாத்திப்பதை கண்டு தேசிகன் வருத்தம் கொண்டார், இந்த மாதிரி விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என அறிவுறுத்தினார்.

அறிஞர்
05-02-2009, 01:12 PM
சுவையான... மலரும் நினைவுகள்...
தங்களின் அனுபவம், சுஜதாவின் மீது தாங்கள் கொண்டுள்ள மரியாதையும்.. சிறப்பு.
இன்னும் தங்களின் அனுபவங்களை எழுதுங்கள்..

umakarthick
06-02-2009, 09:41 AM
கண்டிப்பாக எழுதுகிறேன்

பாரதி
06-02-2009, 10:13 AM
மன்றத்தில் மேலும் ஒரு சுஜாதாவின் தீவிர ரசிகர்!!

மூர்த்தி அவர்கள் சுஜாதாவின் இறுதி யாத்திரைக் குறித்து மன்றத்தில் பதிவிட்டுள்ளார். பார்த்தீர்களா..?

வாழும் காலத்திலேயே தனது அருமையை பலரும் உணரும் படி அமைந்தவை அவரது எழுத்துக்கள். உங்களுக்கு வந்த பதில்கள் போலவே சில வரிகளில் தான் நினைத்ததை படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தை அறிந்த வித்தகர் அவர்.

உங்கள் பதிவைப்படிக்கும் போது அவர் எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.

தொடருங்கள் கார்த்திக்.

ரங்கராஜன்
06-02-2009, 11:54 AM
நீங்களும் சுஜாதா ரசிகரா சந்தோஷம், உங்களை போலவே நானும் அவரின் வாசகன். சுஜாதா அவர்கள் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

செல்லமே : குடித்தவன் ரத்ததானம் செய்ய முடியுமா?

விக்ரம் : எந்த விலைமகளின் மகன் ராக்கெட்டை திருடியது.

நாடோடித் தென்றல் : அந்த வெள்ளக்கார கடங்காரனுக்கு மல்லிகைப்பூ வச்ச பெண்ணுங்கன்னா அதிசயமா ............

கண்ணெதிரே தோன்றினால் : டைட்டானிக் படத்தை ஜேம்ஸ் கேம்மரானைவிட அதிகம் தடை பார்த்தாச்சு. நம்ம ஊர்ல 7 மணிக்கு மேல எல்லாரும் டைட் + டானிக்ல தான் இருப்பாங்க.

கண்களால் கைது செய் : பணக்கார இளைஞர்களுக்கு வரும் வியாதி இது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் : மரணத்தை விட கொடுமையானது எது தெரியுமா?, மறக்கப்படுறது.

உள்ளம் கேட்குமே : ஷாம் farewell -ல் பேசும் வசனம்.

இவை எல்லாம் சுஜாதா ஐயாவின் எழுத்தாளுமையை உணர்த்தும், ஆனால் இவை பிரபலமாக வில்லை காரணம். இதை பேசியவர்கள் சூப்பர் ஹீரோஸ் இல்லை, அப்பொழுது சுஜாதா ஐயாவும் இந்த அளவு பிரபலமாக வில்லை. ஆனால் அவரின் திறமையை முழுமையாக உணர்ந்தவர்கள், உரிந்தவர்கள் மணிரத்னமும், ஷங்கரும் தான்.

சுஜாதா ஐயாவின் கடைசி காலத்தில் அவர் மருத்துவமனையில் இருக்கும் பொழுது ஒரு முறை ஷங்கர் அவரை பார்க்க வந்தாராம், அப்பொழுது ஐயா தூங்கிக் கொண்டு இருந்தாராம், கொஞ்ச நேரம் பார்த்து விட்டு சென்று விட்டார். சுஜாதா ஐயா எழுந்து பார்த்தால் அவரின் கட்டிலுக்கு கீழே ஒரு பெட்டி இருந்ததாம், திறந்தால் பார்த்தால் பெட்டி நிறைய பணமாம். அதிர்ந்த சுஜாதா ஷங்கருக்கு போன் செய்து கேட்டாராம், அதற்கு ஷங்கர்.

“தயவு செய்து மறுக்காதீங்க, இது என்னுடைய அப்பாவுக்கு நான் செய்யும் கடமை” என்றாராம்.

“என் மகனிடம் பாசத்தை தவிர நான் எதையும் எதிர்பார்ப்பது இல்லை” என்று மறுத்து விட்டாராம்.

இது தான் சுஜாதா. அவர் ஒண்ணும் பெரிய பணக்காரர் இல்லை, அவரின் வீட்டை சென்று பார்த்தேன். மைலாப்பூரில் சாதாரண வீடு, (முதல் மாடியில்).

கடைசி வரை சாதாரணமான மனிதராகவே வாழ்ந்தார், அவர் இறுதி சடங்கும் மிக மிக சாதாரண முறையில் தான் நடந்தது. பிறப்பிலும், மரணத்திலும் எல்லாரும் சமம் தானே. உண்மையில் அவர் ஒரு ஜீனியஸ்

umakarthick
06-02-2009, 12:32 PM
நன்றி டாக்ஸ் நான் அவரது 90 சதவீதம் புத்தகம்ஸ் படித்தி விட்டேன்..அவருடன் மெயிலில் தொடர்பு இருந்தது..இணையத்தில் அவரை பற்றி நிறைய எழுதிருக்கேன்..கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் அவர் எழுதி ஆன படத்தில் வராத வசனங்களை படித்து வியந்த நான் அதை அன்ற்று இரவே தட்டச்சி இணையத்தில் ஏற்றினேன்..தமிழில் புகுந்து விளையாடுவார்...அவரை நான் நேரில் பார்த்தது இல்லை...அவரின் புத்தகங்கள் வழியாக தான் அவர் எப்போதும் நம்முடன் பேசிகொண்டிருக்கிறாரே

umakarthick
06-02-2009, 12:32 PM
மன்றத்தில் மேலும் ஒரு சுஜாதாவின் தீவிர ரசிகர்!!

மூர்த்தி அவர்கள் சுஜாதாவின் இறுதி யாத்திரைக் குறித்து மன்றத்தில் பதிவிட்டுள்ளார். பார்த்தீர்களா..?

வாழும் காலத்திலேயே தனது அருமையை பலரும் உணரும் படி அமைந்தவை அவரது எழுத்துக்கள். உங்களுக்கு வந்த பதில்கள் போலவே சில வரிகளில் தான் நினைத்ததை படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்கும் வித்தை அறிந்த வித்தகர் அவர்.

உங்கள் பதிவைப்படிக்கும் போது அவர் எழுதிய புத்தகங்கள் நினைவுக்கு வருகின்றன.

தொடருங்கள் கார்த்திக்.


நன்றி அதை இப்போது போய் படிக்கிறேன்..லின்க் கொடுக்க முடியுமா??

ரங்கராஜன்
06-02-2009, 02:45 PM
நன்றி அதை இப்போது போய் படிக்கிறேன்..லின்க் கொடுக்க முடியுமா??

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17940

பா.ராஜேஷ்
07-03-2009, 05:43 AM
நான் சுஜாதாவின் நாவல்களை அதிகம் படித்ததில்லை. இருப்பினும் அவருடைய எழுத்தும் கருத்துகளும் பிடிக்கும். உங்கள் அனுவங்களை படிக்கும் பொழுது அவருடைய நாவல்களை தேடி படிக்க தோன்றுகிறது

அக்னி
07-03-2009, 10:03 AM
உமாகார்த்திக் அவர்களே,
தொடருங்கள் உங்கள் அனுபவத்தை...
பாராட்டுக்கள்...

சுஜாதாவின் படைப்புகள் போற்றிப்பாதுக்காக்கப்படவேண்டியவை.
வரும் காலத்தில் இணையம் அவரது முழுமையான படைப்புக்களை எல்லோருக்கும் கொண்டு செல்லும் என நம்புவோம்.

*****
daksஇன் பின்னூட்டத்திற்குச் சிறப்புப் பாராட்டுகள்...