PDA

View Full Version : முரளி சாதனை



அன்புரசிகன்
05-02-2009, 11:40 AM
ஒருநாள் சர்வதேச போட்டியில் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முரளி 503 விக்கட்டுக்களை கைப்பற்றி அதிக விக்கட்டுக்களை கைப்பற்றி பாக்கிஸ்த்தான் துடுப்பாட்ட வீரர் வாசிமின் சாதனையை முறியடித்துள்ளார்....

இன்று நடந்துகொண்டிருக்கும் இந்தியா இலங்கை துடுப்பாட்ட போட்டியில் காம்பீரின் விக்கட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அடைந்துள்ளார் முரளீதரன்.

முன்னதாக டெஸ்ட் விளையாட்டிலும் முரளீதரன் அதிக விக்கட்டுக்களை கைப்பற்றியவர் என்ற பெருமையை ஏலவே பெற்றிருக்கிறார்...

வாழ்த்துக்கள் முரளீதரனுக்கு....

ஆதி
05-02-2009, 11:57 AM
இந்தியாவின் ஒவ்வொரு விக்கட்டுக்கள் சரியும் போதும் முரளியா பந்து வீசினார் என்று ஆவலாய் ஓடியோடி பார்த்து சோர்ந்து திரும்பினேன், கடைசியில் அவரின் இறுதி ஓவரில் கம்பீரை 150-ல் நிறுதி வெளியேற்றி சாதனை படைத்தார்..

பாராட்டுக்கள் முரளிதரன்.. இன்னும் எவரும் எட்டமுடியா அளவுக்கு விக்கெட்டுக்களை சாய்த்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்..

பாரதி
05-02-2009, 12:18 PM
இனிய பாராட்டு முரளிக்கு!

எத்தனையோ முறை இடையூறு வந்த போதிலும், அவை எல்லாவற்றையும் முறியடித்து சாதித்து காட்டிய சாதனையாளர். அவரது சாதனையை முறியடிப்பது என்பது பந்துவீச்சாளர்களுக்கு மிக மிக கடினமானது.

பொதுவாக பந்து வீசும் போதே, மட்டையாளரை கண்டிப்பாக வீழ்த்துவேன் என்ற மன உறுதியுடன் விளையாடும் முரளியின் ஆட்டத்திறன் கண்டிப்பாக பாராட்டத்தக்கது. இனி வரும் ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாட வாழ்த்துகிறேன் முரளி.

அறிஞர்
05-02-2009, 12:57 PM
சாதனையாளர் முரளிக்கு வாழ்த்துக்கள்.
எவரும் எளிதில் எட்டமுடியா சாதனையை இன்னும் படைக்க வாழ்த்துக்கள்.

தென்னாட்டு சிங்கம்
06-02-2009, 01:01 PM
சாதனை சிங்கம் முரளிக்கு வாழ்த்துக்கள்.. இலங்கை நாட்டின் சார்பில் என்றாலும் தமிழன் என்று சொல்வதில் பெருமைதான்..

அமரன்
06-02-2009, 02:05 PM
ஐந்துநாள் போட்டிகளிலும் அதிக விக்கட் சாதனை..
ஒரு நாள் போட்டிகளிலும் அதிக விக்கட் சாதனை.
இருபதுக்கு இருபது ரிலீசாக லேட்டாகி பொன்னான வாய்ப்பை இழந்து விட்டதோ.

வாழ்த்துகள் முரளி.

இங்கிலாந்துக்கு எதிராக நீங்கள் ஆடிய முதல் ஆட்டத்தின் பின் நண்பர்கள் வட்டத்தில் நீங்கள் சொன்ன கருத்துகளை நினைவாடலில்.

விளையாட்டுத்துறையில் இருக்கும் ஒற்றுமை எல்லாவற்றிலும் விசாலித்திருந்தால் இலங்காபுரி நிஜமான சொர்க்கபுரி ஆகி இருக்கும்.

அறிஞர்
06-02-2009, 02:13 PM
இருபதுக்கு இருபது ரிலீசாக லேட்டாகி பொன்னான வாய்ப்பை இழந்து விட்டதோ.
20-20 போட்டிகளில் முரளி சரியாக பிரகாசிவில்லை...
இந்த வருடம் ஏதாவது சாதனை படைக்க வாழ்த்துவோம்.

சிவா.ஜி
07-02-2009, 10:39 AM
சாதனை வீரர் முரளிக்கு வாழ்த்துகள். இன்னும் பல உயரங்களை எட்டுவார்.