PDA

View Full Version : அவன் பெயர் தமிழன்



சுகந்தப்ரீதன்
05-02-2009, 08:15 AM
அவன் பெயர் தமிழன்
ஒரிசாவில் புயல் அடித்த போது
இவன் கண்கள் கலங்கின.

மும்பையில் குண்டு வெடித்த போது
இவனின் நெஞ்சு வெடித்தது.

குஜராத்தில் பூகம்பம் வந்தது
உணவு உடைகளோடு ஓடினான்

கார்கிலில் சண்டை என்றார்கள்
இங்கே உண்டியல் தூக்கினான்.

இப்போது-
அவன் பிள்ளைகள் சாகின்றன.
அவன் பெண்டுகள் மானம் காக்கவும் வழியற்று மாய்கிறார்கள்
அவன் சகோதரனோ-
பதுங்கு குழிகளையோ புதைகுழிகளையோ வெட்டிக் கொண்டிருக்கிறான்.

அவர்களின் கதறலும் அவர்களுக்கான கதறலும்
வங்காள விரிகுடாவில் கரைகிறது.

சொந்தமென்று அவனை நம்ப வைத்தவர்கள்
சும்மா இருந்தார்கள்

கொஞ்சமாவது சூடு வரட்டும்.
கொஞ்சமாவது சொரணை ஊறட்டும் என்று-
செத்துச் சொல்லிக் காண்பித்தான் முத்துக்குமரன்.

சூடும் வரவில்லை;
சொரணையும் வரவில்லை;
கவிதைதான் வருகிறது.


--------------------------
நன்றி: உண்மையை உரைத்தவருக்கு

இளசு
10-02-2009, 07:49 PM
உண்மைக்குப் பல பக்கங்கள்...

சில உளப்பூர்வமானவை..
சில உள்வட்ட பேச்சுவரை நீள்பவை..
சில மனுக்களாக, ஊர்வலங்களாக
சில முழக்கங்களாக, அறிக்கைகளாக..

நோய்வந்த உறவுகண்டு நொந்தநிலையில் தமிழன்..
நோய்தீர விரும்புகிறான், வேண்டுகிறான், வெம்புகிறான்..

சிகிச்சை அவன் கையிலா??? தெரியவில்லை..
தெரியாத இயலாமையும் மேற்சொன்ன உண்மையின் ஒரு பரிமாணமே!

பாரதி
11-02-2009, 08:51 AM
பகிர்ந்தமைக்கு நன்றி சுகந்தப்ரீதன்.
தினம் தினம் கேட்கும்/படிக்கும் செய்திகள் மிகவும் வேதனையைத் தருகின்றன.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்..?

துளசி
17-02-2009, 08:31 PM
கவிதை நல்லாயிருக்கு நன்றி