PDA

View Full Version : உயிரினும் ஓம்பப்படும்



ஐரேனிபுரம் பால்ராசய்யா
05-02-2009, 07:51 AM
திருமண பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்து முருகேசன் இலையை எதிர் திசையில் மடக்க முயற்சிக்கவும், அருகிலிருந்த செந்தில் தடுத்தான்.

"இலைய எதிர் திசையுல மடக்கினா உறவு வேண்டாமுன்னு அர்த்தம். உள் பக்கமா மடக்கினா உறவு வேணுமுன்னு அர்த்தம் என்றான் செந்தில்.

"சரி இலைய மடக்காமலேயே விட்டுட்டா? என்று எதிர்க் கேள்வி கேட்டான் முருகேசன்.

"மடக்காம விட்டுட்டா நீ திருப்தியா சாப்பிட்டுட்டன்னு அர்த்தம் என்றான்.

முருகேசன் சட்டென்று இலையை தூக்கி எடுத்து கொண்டு வந்து இலை போடும் இடத்தில் போட்டு விட்டு கை அலம்பிவிட்டு,

"இதுக்கு ஏதாவது காரணமிருக்கா?" என்றான்.

"இலை எடுக்க ஆட்கள் இருக்கும் போது நீயே எடுத்துட்டு வந்தியே. உன் கிட்ட அடுத்தவங்களுக்கு உதவி பண்ற மனிதாபிமானம் இருக்குன்னு அர்த்தம்!" என்ற போது அசந்து போனான் முருகேசன்.

சிவா.ஜி
05-02-2009, 11:38 AM
எதெதற்கோ எத்தனையோ காரணங்கள் இருக்க முருகேசன் செய்த செயல் மனிதாபிமானத்தை பறைசாற்றியது அருமை.

(அசந்து போனது செந்திலாகத்தானே இருக்கும் ஐ.பா.ரா. அவர்களே..)

நல்ல கருத்து சொல்லும் குறுங்கதை. பாராட்டுக்கள்.

ஆதவா
05-02-2009, 01:45 PM
அருமையாக இருக்கிறது... ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு அர்த்தம்..

இந்த இலை பற்றி தாமரை அண்ணா ஒருமுறை என்னிடம் சொன்னார்... அது 5 ஸ்டார் திருமணத்தின் போது...

அதை இங்கே சொல்வார் என்று எதிர்பார்த்து...
ஆதவன்

ஓவியன்
18-02-2009, 11:24 AM
சின்ன சின்ன காரியங்கள்
அழகான
பெரிய சிந்தனைகளுடன்....

கடந்த வார குமுதம் இதழில்,
‘ஹலோ' என்றொரு உங்களது
குட்டிக் கதை கண்டேன்.....

இரண்டு கதைகளுக்கும்
என் மனதார்ந்த வாழ்த்துக்கள்..!!

ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-02-2009, 04:56 AM
இனிய நண்பர்களுக்கு எனது கதையை படித்து பாராட்டியமைக்கு நன்றி.

இளசு
26-02-2009, 08:20 PM
மனம் செப்பனிடும் காரணங்கள் கற்பிக்கப்படும்போது
சராசரி செயல்களும் வாழ்வும் அழகு கூடி சோபிக்கின்றன..

பாராட்டுகள் ஐபாரா அவர்களே!

சுகந்தப்ரீதன்
01-03-2009, 10:04 AM
நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது ஒவ்வொரு செயலின் உயர்வும் தாழ்வும்..!!

நல்லதொரு குட்டிக்கதை.. வாழ்த்துக்கள் பால்ராசையா அண்ணா..!!

பாலகன்
01-03-2009, 01:56 PM
அருமையான ஒரு நல்நெறியை கற்பிக்கும் சிரிப்பு இது... வாழ்த்துக்கள் பால் ராசைய்யா.....

அப்படியே நாம் உண்ணாமல் விட்ட லட்டு மற்றும் வாழைபழத்தை கையில் எடுத்துக்கொன்டால் அதை மற்றவர்கள் குப்பை தொட்டியில் எடுக்க சண்டையிடும் அவலமும் குறையும்.... நாமே வெளியில் செல்லும்போது அவர்களுக்கு கொடுத்துவிடலாமே....

உங்க பதிப்பை பார்த்து நான் கற்றுக்கொன்டது... :)