PDA

View Full Version : தோனி வாழ்க..நடுவர்கள் ஒழிக..loshan
03-02-2009, 05:21 PM
http://loshan-loshan.blogspot.com/2009/02/blog-post_03.html
(http://loshan-loshan.blogspot.com/2009/02/blog-post_03.html)
இலங்கை அணிக்கெதிராக இந்தியா அடுத்தடுத்து இரண்டு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம்,தனது அண்மைக்கால வளர்ச்சி தொடர்ந்து வருவதை உறுதிப் படுத்தியுள்ளது..தோனியின் நுட்பமான,அதிரடியான,அதே வேளை திட்டமிட்ட தலைமைத்துவம் புதிய பரிமாணத்துக்கும்,தொடர்ந்து வெற்றிகளைப் பெறும் பலமான நிலைக்கும் கொண்டு சென்று கொண்டிருக்கிறது..


அதேவேளையில் அஜந்த மென்டிஸ் என்ற மாயவலை கொஞ்சம்,கொஞ்சமாக சிதறடிக்கப் படுகிறதோ என்ற எண்ணமும் இந்திய அணியால் உருவாக்கப்பட்ட்டு வருகிறது. இதே இந்திய அணிதான் மென்டிசிடம் அகப்பட்டு சுருண்டு அவரைப் பெரியதொரு மந்திரவாதியாக மாற்றியது..இன்று அதே இந்திய அணி மென்டிசைத் தொடர்ந்து சிறப்பாக எதிர்கொண்டு வருகிறது.முரளிதரனும் உலகசாதனைக்கான விக்கெட்டுக்களை எடுக்கமுடியாமல் இந்தியவீரர்கள் அவரையும் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்கள்.

http://1.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SYfyxnPRBII/AAAAAAAABds/V-JZ13lqVvY/s320/murali%26mendis.jpg
'மு' வும் 'மெ' வும் இனி என்ன செய்வார்கள்?


முரளியும்,மென்டிசும் சேர்ந்து இந்த முதலிரு போட்டிகளில் வீசிய தமது நாற்பது ஓவர்களில் கைப்பற்றிய விக்கெட்டுக்கள் மூன்று மட்டுமே..


இலங்கை அணி இரண்டு போட்டிகளிலும் மோசமாகத் தோற்கவில்லை என்பதும்,மகெல ஜெயவர்தன மீண்டும் ஓட்டங்கள் குவிக்க ஆரம்பிதிருப்பதுமே இப்போது இலங்கை ரசிகர்களுக்கும்,அணிக்கும் திருப்தி அளிக்கக்கூடிய விஷயங்கள்.. கண்டம்பியும்,ஜயசூரியவும் சிறப்பாக ஆடியதும் குறிப்பிடத் தக்கது.


எனினும் இந்த அசகாயசூர,யாரையும் வீழ்த்தும் வல்லமை கொண்ட இந்திய அணியை வீழ்த்த இவை மட்டுமே போதாது..ஏழு போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ள இந்தியாவின் தொடர் வெற்றியைத் தடுத்து நிறுத்த மூன்று Mகளும் (Mahela,Murali,Mendis) தங்கள் உச்சபட்ச திறனை மீண்டும் வெளிப்படுத்த ஆரம்பிக்கவேண்டும்.


இந்திய அணியின் எல்லோருமே பிரகாசித்தாலும் சொல்லிவைத்தாற்போல, சச்சின் டெண்டுல்கருக்கு இரண்டு போட்டிகளிலுமே நடுவர்கள் பிழையான தீர்ப்புக்கள் வழங்கியது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல்,இலங்கை ரசிகர்களுக்குமே எரிச்சலை அளித்துள்ளது..
முதலாவது போட்டியில் நடுவராகத் தனது அறிமுகத்தை மேற்கொண்ட முன்னாள் இலங்கை வீரர் குமார தர்மசேனவும்(ஒரு வேளை முன்பு சச்சின் இவரைப் போட்டுத் துவைத்தெடுத்த கோபமோ???) பின்னர் சர்வதேச நடுவரான பிரையன் ஜெர்லிங்கும் LBWமுறையில் விக்கெட்டுக்கு செல்லாத பந்தொன்றுக்கு சச்சினை ஆட்டமிழந்ததாக அறிவித்தார்கள்.


http://2.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SYfxfr_yq5I/AAAAAAAABdc/EtfyTyO4JN4/s320/sach1.jpg
குலசேகர (நடுவரின் உதவியுடன்) சச்சினை ஆட்டமிழக்க செய்கிறார்

இரண்டாவது போட்டியில் யுவராஜுக்கு இதைவிட மிகமோசமாக துடுப்பில் பட்டு,கால் காப்பில் பட்ட பந்தொன்றுக்கு LBWமுறைமூலம் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய கொடுமை.சாதாரண ஒருவருக்கே அது ஆட்டமிழப்பு இல்லை என்று தெரியும் நேரம் நடுவர் காமினி சில்வாவுக்கு மட்டும் யுவராஜை ஆட்டமிழந்தார் என்று அறிவிக்க எங்கிருந்து தான் ஐடியா வந்ததோ?? நடுவரின் தீர்ப்புக்கு யுவராஜ் அதிருப்தியை தெரிவித்தும் அவர் தண்டனைக்கோ,தண்டப் பண விதிப்புக்கோ உட்படாதது அவர் மீதுள்ள நியாயத்தைக் காட்டியுள்ளது..


இந்த மூன்று நடுவர்களுமே உண்மையில் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களே..
ஜேர்லிங்,தர்மசேன,காமினி சில்வா ஒழிக..


மறுபக்கம்,மக்ரூபின் பந்துவீச்சில் சங்கக்காரவிடம் பிடிகொடுத்தபோது நடுவர் ஜெர்லிங்கினால் அது பிடியல்ல என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் கூட,இந்திய அணியின் சிக்கலான நிலையையும் பொருட்படுத்தாமல் உண்மையான,நேர்மையான வீரராக ஆடுகளம் விட்டு வெளியேறிய இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி எல்லா கிரிக்கெட் ரசிகர் மனதிலும் ஓங்கி, உயர்ந்து நிற்கிறார்.

http://2.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SYfxfjP2uzI/AAAAAAAABdU/4I5cjVy1rCQ/s320/msdhoni-sanga_313.jpg
இரு நல்ல மனிதர்கள் - சங்கா,தோனி


பல இலங்கை ஊடகங்களும் மனம் திறந்து தோனியின் நன்னடத்தையைப் பாராட்டி இருக்கின்றன..


நல்லவர் ஒரு சிலர் இன்னமும் கிரிக்கட்டில் இருக்கின்றார்கள்..


முன்பு அடம் கில்க்ரிஸ்ட்,இலங்கையின் ரொஷான் மகாநாம,அரவிந்த டீசில்வா,ராகுல் திராவிட்,மைக்கல் ஹசி ஆகியோருக்குப் பின் தோனியும் இந்த கனவான்களின் வரிசையில் ஒரு walkerஆக சேர்ந்திருப்பது மகிழ்ச்சி..


முன் எப்போதையும் விட இப்போது தோனி எனது கண்களுக்கு ஒரு ஆரோக்கியமான கிரிக்கெட்டை எதிர்காலத்துக்கு வழங்கக்கூடிய ஒருவராகத் தெரிகிறார்..அவர் மீது அவரது அணி வீரர்கள் வைத்திருந்த மரியாதையோடு,எதிரணி வீரர்களும் இனி அவர் மேல் மரியாதை வைக்கப் போகிறார்கள்.

http://2.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SYfxfWmP59I/AAAAAAAABdM/EikeafXr6ao/s320/msdhoni_big.jpg

இவை எல்லாவற்றிலும் இலங்கை ரசிகர்கள் அனைவரையும் கேவலப்படுத்திய சம்பவம்,இஷாந்த் ஷர்மா மீது யாரோ ஒரு ரசிகர் பொருளொன்றை வீசிய சம்பவம்.


ஆஸ்திரேலியாவில் கூட இப்படியான சம்பவங்கள் நடந்திருந்த போதிலும் இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வந்ததே இல்லை.. பாருங்கப்பா தொடர்ச்சியான தோல்விகள் இலங்கை ரசிகர்களை எப்படி மாற்றிவிடுகின்றன.இந்தியாவுக்கு அண்மைக்காலமாக நம் சகோதர இனத்தவர்கள் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்(காரணம் உங்களுக்கே தெரியுமே..) முன்பெல்லாம் இந்திய அணிக்குத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தபோதெல்லாம் புலி,புலி என்று பொங்கியவர்களே இவர்கள் தான்..


வாங்குவதெல்லாம் இந்தியாவிடம்..ஆனால் கிரிக்கெட்டில் வாங்கிக்கட்டும் போது மட்டும் அப்செட் ஆயிட்டாங்களோ?


http://1.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/SYfxfq_tBSI/AAAAAAAABdk/uhv2MpFKrmw/s320/sl+team.jpg

எப்போது மீண்டும் வெற்றி கிடைக்கும்? இலங்கை அணி பயிற்சியில்..


இன்று இன்னும் இரு மணித்தியாலங்களுக்குள் மூன்றாவது போட்டி ஆரம்பிக்கவுள்ளது..
இலங்கை அணிக்கு இது வாழ்வா,சாவா போட்டி..தொடரை வெல்ல இன்றும்,இனித் தொடர்ந்துவரும் இரு போட்டிகளிலும் வென்றே ஆக வேண்டும். முடியுமா?


முயன்றால் முடியும்.. முயல்வார்களா இலங்கை அணியினர்?
முரளியும் உலக சாதனைக்கான தனது இரு விக்கெட்டுக்களை இன்று கைப்பற்றுவார் என்று என் மனசு சொல்கிறது..


இன்று இலங்கை வென்றால் தான் தொடர்ந்து வருகின்ற இரு போட்டிகளும் விறுவிறுப்பாக அமையும்..

http://loshan-loshan.blogspot.com/2009/02/blog-post_03.html
இன்று இந்திய அணி வெற்றி பெற்ற போட்டி ஆரம்பிக்க முன் எழுதிய பதிவு இது..

**** அந்தோ பரிதாபம்.. மறுபடியுமா? சச்சின் மீண்டும் LBW.. HAT TRICK!!!மறுபடி நடுவர் காமினி சில்வா..
இது கொடுமை.. இலங்கை ரசிகர்களே வெட்கப்படவேண்டிய விடயம்.
ஒரு தடவை,இரு தடவை என்றால் பரவாயில்லை..
தொடர்ச்சியாக மூன்றாவது தடவை.. மூன்றும் LBW.

arun
03-02-2009, 05:35 PM
ஆம் தாங்கள் சொல்வது சரியே தோனியின் தலைமையில் இந்திய அணி எழுச்சி கண்டுள்ளது அதிர்ஷ்டமும் அவர் பக்கம் உள்ளது

அவரது தலைமையில் தொடர் வெற்றி பெற்று வருகிறது ஆனால் தோல்வி என்று ஒன்று வந்தால் அவர் எப்படி கையாள போகிறார் என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

"பொத்தனூர்"பிரபு
03-02-2009, 10:22 PM
முன்பு அடம் கில்க்ரிஸ்ட்,இலங்கையின் ரொஷான் மகாநாம,அரவிந்த டீசில்வா,ராகுல் திராவிட்,மைக்கல் ஹசி ஆகியோருக்குப் பின் தோனியும் இந்த கனவான்களின் வரிசையில் ஒரு walkerஆக சேர்ந்திருப்பது மகிழ்ச்சி..
///////////////////

சச்சின் பெயரை விட்டு விட்டீங்களே
சார்ஜாவில் ஆஸ்த்ரேலியாவுக்கு எதிரான போட்டி உள்ளிட்ட பல போட்டிகளில்
http://www.youtube.com/watch?v=QXRkHervQJc
8.30 நிமிடத்தில் பார்க்க

தாமரை
03-02-2009, 11:57 PM
1. தோனியின் தலைமை.

இரண்டாம் போட்டியில் கவனித்திருக்கலாம், பந்து வீச்சாளர்கள் தடுமாறியபோது தோனியின் முகம் மாறியது. இஷாந்த் ஷர்மாவிடம் சென்று பேசி வந்தார். காட்சி மாறியது.. ஆட்டம் முடிந்த பின் அதைப் பற்றிக் கேட்டபோது பந்து வீச்சாளருக்கு என்ன செய்கிறோம் என்ற தெளிவு இருக்க வேண்டும், தான் நிதானமிழப்பதையும் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் விழிப்பதையும் வெளிக்காட்டக் கூடாது. அது ஏற்படும் போல் தெரிந்தது. தெளிவாக இருங்கள்.. வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட வேண்டாம் எனச் சொல்லி வந்ததாகச் சொன்னார்.

2. தெண்டுல்கர்..

ஆஃப் ஸ்டம் லைனிலே அல்லது மிடில் ஸ்டம்ப் லைனிலோ பட்டு இன் கட்டராகும் பந்தை சற்றே ஸ்டம்புகளுக்கு குறுக்கே முன் வந்து ஸ்கொயர் லெக் பகுதிக்கு விரட்ட முயற்சிக்கிறார் டெண்டுல்கர்.. பந்து மட்டையை விட்டு விலகிச் செல்லும் கோணத்தில் அமைந்த இந்த ஷாட்டை ஆட டைமிங் மிக முக்கியம். ஆரம்பத்திலேயே இதை ஆடுவதால் பந்தை அடிக்க முடியாமல் அது பேடில் படுகிற்து.

டெண்டுல்கர் குறுக்கே நகர்ந்ததால் ஸ்டம்புகள் நடுவர் கண்களுக்கு மறைந்து போகின்றன. ஆஃப் ஸ்டம்பும் தெரியலை.. லெக் ஸ்டம்பும் தெரியலை. தெண்டுல்கள் குறுக்கே நகர்ந்தது தெரிகிறது. இதனால் நடுவர் தடுமாறிப் போகிறார்.
குத்து மதிப்பாக தீர்ப்பு வழங்கி விடுகிறார்.

தெண்டுல்கர் தன்னுடைய ஆட்டத்தை வீடியோவில் பார்த்து கீழ்கண்டவாறு சரி செய்து கொள்ளலாம். இது மாதிரி பந்துகளுக்கு குறுக்கே முன் செல்லாமல், சற்றே வலது காலை மிடில் ஸ்டம்பை நோக்கி பின்புறம் நகர்த்தி, மிட்விக்கெட், ஸ்கொயர் லெக் இவைகளுக்கு இடையில் பந்தை விரட்டலாம். ஆஃப் ஸ்டம் தெளிவாகத் தெரிவதால் அம்பயர் தவறு செய்யவும் மாட்டார். அதே சமயம் பின்னோக்கி நகர்வதால் பந்தின் டைமிங்கை நன்கு கணிக்கலாம்.

pasaam
04-02-2009, 05:28 AM
முரளி பரவாயில்லை. எதிர்காலங்களில் ஒரு விக்கட்டை அகைப்பற்றினால் சாதனை படைக்கலாம். ஆனால் “கன்மன்“ என்ன செய்வார்?
இஷாந்த் சர்மாவுக்கு மட்டுமல்ல - நேற்று பிரவீன்னகுமாருக்கு கல் எறி விழுந்ததே. வாழ்க நமது பண்பு மேலோங்கும் விதம்.

mania
04-02-2009, 05:53 AM
நல்லதொரு அலசல் தாமரை. சச்சின் அடுத்த ஆட்டத்தில் நாலாவதாக களம் இறங்கி பார்க்கலாம்.
அன்புடன்
மணியா

ஓவியன்
04-02-2009, 06:32 AM
நல்ல அலசல், லோஷன் அண்ணா, செல்வன் அண்ணா..!!

யுவராஜ் சிங் எப்போவுமே அடிபட்டால், அடிபட்டால் புலியாக சீறியெழுவாரென்பதனை மீளவும் நேற்றைய போட்டியில் நிரூபித்திருந்தார், இரண்டாவது போட்டியில் வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு மற்றும் அது தொடர்பாக யுவராஜ் சினத்தை வெளிக்காட்டியபடி களம் விட்டு அகன்ற விதம் தொடர்பான சர்ச்சைகள் எல்லாவற்றுக்கும் ஒன்றாக சேர்ந்து நேற்றுப் புலியாகவே பாய்ந்துவிட்டார், யுவராஜ்சிங்..!!

சச்சின் கொஞ்சம் ஒதுங்கி ஆரம்பத்துடுப்பாட்டக்காரராக தனக்குப் பதிலாக கம்பீரை களத்திற்கு அனுப்பலாம். டெண்டுல்கருடன் இணைவதிலும் கம்பீருடன் இணைந்தால் சேவக்கின் பலம் இன்னும் அதிகரிக்கலாம்.

"பொத்தனூர்"பிரபு
04-02-2009, 09:28 AM
//
தெண்டுல்கர்..

ஆஃப் ஸ்டம் லைனிலே அல்லது மிடில் ஸ்டம்ப் லைனிலோ பட்டு இன் கட்டராகும் பந்தை சற்றே ஸ்டம்புகளுக்கு குறுக்கே முன் வந்து ஸ்கொயர் லெக் பகுதிக்கு விரட்ட முயற்சிக்கிறார் டெண்டுல்கர்.. பந்து மட்டையை விட்டு விலகிச் செல்லும் கோணத்தில் அமைந்த இந்த ஷாட்டை ஆட டைமிங் மிக முக்கியம். ஆரம்பத்திலேயே இதை ஆடுவதால் பந்தை அடிக்க முடியாமல் அது பேடில் படுகிற்து.

டெண்டுல்கர் குறுக்கே நகர்ந்ததால் ஸ்டம்புகள் நடுவர் கண்களுக்கு மறைந்து போகின்றன. ஆஃப் ஸ்டம்பும் தெரியலை.. லெக் ஸ்டம்பும் தெரியலை. தெண்டுல்கள் குறுக்கே நகர்ந்தது தெரிகிறது. இதனால் நடுவர் தடுமாறிப் போகிறார்.
குத்து மதிப்பாக தீர்ப்பு வழங்கி விடுகிறார்.

தெண்டுல்கர் தன்னுடைய ஆட்டத்தை வீடியோவில் பார்த்து கீழ்கண்டவாறு சரி செய்து கொள்ளலாம். இது மாதிரி பந்துகளுக்கு குறுக்கே முன் செல்லாமல், சற்றே வலது காலை மிடில் ஸ்டம்பை நோக்கி பின்புறம் நகர்த்தி, மிட்விக்கெட், ஸ்கொயர் லெக் இவைகளுக்கு இடையில் பந்தை விரட்டலாம். ஆஃப் ஸ்டம் தெளிவாகத் தெரிவதால் அம்பயர் தவறு செய்யவும் மாட்டார். அதே சமயம் பின்னோக்கி நகர்வதால் பந்தின் டைமிங்கை நன்கு கணிக்கலாம்.///சரியாக சொன்னீற்கள்
ஆனாலும் நெடுங்காலமாக சச்சின் அப்படித்தான் அடிவருகிறார்
மிடில் ஸ்டெம்பில் விழும் பந்து உள்ளே நகர்ந்தால் கண்டிப்பாக லெக் ஸ்டெம்பை தாண்டி செல்லும் அனவே அவுட் ஆக வாய்ப்பில்லை என்ற கணக்குடன் அவர் விளையாடுகிறார்.நடுவர்கள் செய்யும் தவறுக்கு அவர் என்ன செய்வார்

aren
04-02-2009, 09:37 AM
டெண்டுல்கர் அடுத்த ஆட்டத்தில் அனைதையும் சரிசெய்துவிடுவார். கவலை வேண்டாம்.

தாமரை சொல்வது சரியே, ஆனால் டெண்டுல்கர் கடந்த இருபது வருடங்களாக ஆடிக்கொண்டுதானே இருக்கிறார். அவர் நிச்சயம் இந்த பிரச்சனையை சரிசெய்துவிடுவார்.

தாமரை
04-02-2009, 10:53 AM
அது டெண்டுல்கரின் வழக்கம். தனது நுட்பத்தில் எது தவறு என்று தெரிந்தாலும் அதைத் திருத்திக் கொள்வதில் அவர் தயக்கம் காட்டுவது கிடையாது.

இது நடுவரின் தவறு என்ற கோணத்தில் இருந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஏனென்றால் இழப்பு டெண்டுல்கருக்கும் இந்திய அணிக்கும்தான். இழந்தது இழந்ததுதானே. எத்தனை முறை இப்படி டெண்டுல்கர் அவுட்டாகி இருக்கிறார் எனக் கணக்கிட்டால் இதன் விளைவு புரியும். முதன் முறையாக தொடர்ச்சியாக மூன்று முறை இப்படி அவுட் ஆவதால் கவனத்திற்கு வந்தது.


நாங்கள் கிரிக்கெட் விளையாடும் பொழுது எல்.பி.டபிள்யூ விதி என்ன தெரியுமா? மூன்று முறை பந்து காலில் பட்டால் அவுட். அது எந்த லைனாக இருந்தாலும் சரி.

நான் வெகுவாக இதனால் பாதிக்கப் பட்டேன். காரணம் ஆராய்ந்தபோது புரிந்த விஷயம், நமது இடதுகாலை பந்து பிட்ச் ஆகும் லைனுக்கு வெளியில் நகர்த்து பந்தை லெக்சைடில் ஆட முற்படும்பொழுது நமது மட்டை குறுக்காக வீசப்படுகிறது, இதனால் பந்து மட்டையைச் சந்திக்க கிடைக்கும் நேரம் மிகக் குறைவு.

அதே பின்காலை மிடில் ஸ்டம்பிற்கு நகர்த்துவதின் மூலம் மட்டை ஆஃப் ஸ்டம்பிலிருந்து லெக்ஸ்டம்ப் லைனுக்கு வீசப்படுவதால், பந்துக்கும் மட்டைக்கும் தொடர்பு ஏற்பட மிகுந்த வாய்ப்பு கிடைக்கிறது. அடிக்கும் நேரத்தில் கொடுக்கும் மிகச் சிறிய மணிக்கட்டுத் திருப்பல் பந்தை காற்றில் எழும்பாமல் தரையோடு அனுப்பும்.

ஓவர் பிட்ச் என்னும் போது பின்னகர்வு சரியல்ல. முன்னே நகர்ந்து பந்தை பிட்ச் ஆகும் இடத்திலே சந்திக்கலாம். ஆனால் இங்கு வீசப்படுபவை அளவான நீளத்தில், அல்லது அதற்கும் சற்றே குறைவான நீளத்தில் வீசப்படும் பந்து ஆகும்.

இந்த மாற்றத்தை செய்த பிறகு கடந்த மூன்றுவாரங்களில் ஆறு இன்னிங்க்ஸ்களில் நான் நாட் அவுட்டாகவே நீடித்து வந்தேன்.போனவாரம் கடைசியாக கடைசிப் பந்தில் கவரில் ஒரு கேட்ச் கொடுக்கும் வரை.. ஹி ஹி ...

மதி
04-02-2009, 01:31 PM
இந்த மாற்றத்தை செய்த பிறகு கடந்த மூன்றுவாரங்களில் ஆறு இன்னிங்க்ஸ்களில் நான் நாட் அவுட்டாகவே நீடித்து வந்தேன்.போனவாரம் கடைசியாக கடைசிப் பந்தில் கவரில் ஒரு கேட்ச் கொடுக்கும் வரை.. ஹி ஹி ...
வீட்ல அநிருத் கூட விளையாட ஆரம்பிச்சாச்சா?

loshan
04-02-2009, 04:27 PM
தாமரை, ஒரு தேர்ந்த கிரிக்கெட் வீரராக,விமர்சகராக உங்கள் அலசல் அபாரம்.. :)
ஆங்கிலத்தில் SHUFFLING ACROSS என்று சொல்லப்படும் இந்த சறுக்கல் மூலமாக உலகின் மூன்று பெரும் துடுப்பாட்ட வீரர்களுமே அடிக்கடி ஆட்டமிழப்பது குறிப்பிடத்தக்கது..

சச்சின், சனத் ஜெயசூரிய,ரிக்கி பொண்டிங்.

முன்பு லாராவும் அடிக்கடி இவ்வாறு LBW முறையில் ஆட்டமிழந்து வந்தார்.. எனினும் தாமரை போல ஒருவர் (;)) சொல்லி அதைப் பின்னாளில் ஓரளவு லாரா திருத்திக் கொண்டார்..

சச்சின் தனது நீண்ட அனுபவத்திலும் இன்னும் இவ்வாறு இதே LBWமுறையில் நடுவர்களிடம் பலிக்கடா ஆவது தொடர்கிறது..

அறிஞர்
05-02-2009, 02:46 PM
லோஷன், தாமரை அலசல்கள் அருமை..

நல்லதொரு அலசல் தாமரை. சச்சின் அடுத்த ஆட்டத்தில் நாலாவதாக களம் இறங்கி பார்க்கலாம்.
அன்புடன்
மணியா
மீண்டும் சச்சினை பலிகடாவாக்க இந்திய அணி விரும்பவில்லை.