Log in

View Full Version : முடிவைத் தேடி...



lenram80
03-02-2009, 02:45 PM
தலைவர்களைக் கொன்றது மடமையின் உச்சம்!
போராளி தன்னை தீவிரவாதி எனக் காட்டியதுதான் மிச்சம்!

அவசர ஆயுத உபயோகிப்புகள்!
அமைதித் தீர்வுக்கு அணைக்கட்டுகள்!

அகில அங்கீகாரம் பெற்ற அரசை
ஆயுதம் தூக்கி எதிர்த்தால்
அழிக்கப்பட்டு விடும் அபாயம் அறி!

வரலாறுகளைப் புரட்டு!
நேதாஜியால் அரட்டத் தான் முடிந்தது!
காந்தியால் தான் விரட்ட முடிந்தது!

வெள்ளை மாளிகையில் கறுப்பின முதல்வன்!
ஆயுதம் ஏந்தி இந்த அங்கீகாரம் வரவில்லை!

தவறான கீதை தரமான பாதை தருவதில்லை!
முற்றிய நிலைமையில் இப்போது என்ன செய்வது?
முகமூடி கழட்டி முகத்தைக் காட்டு!
தென்னாசியாவை தென்னாப்பிரிக்காவாய் மாற்று!

போதும் உன் இனம் கசிந்த கண்ணீர்!
போதும் உன் இனம் சிந்திய செந்நீர்!

உனை நம்பிய உன் இனத்திற்கு ஏதாவது செய்!
நித்தம் துடிக்கும் இனத்திற்கு நிம்மதி வை!

தீவிரவாத முத்திரை களை!
அதற்காக ஆயுத நித்திரைக்கும் தயாராய் இரு!
தனி நாடு கேட்காதே! தனி மாநிலம் கேள்!
தனி மனித சுதந்திரம் கொள்!
தேர்தல் நடத்தி உன்னை நீ தேர்ந்தெடு!
நாடாளமன்றம் செல்!அரசில் பங்கெடு!
ஆண்டுகள் கழிந்தால் அரசாள்வாய்!!
புலிகள் நீங்கள் சிங்கங்களோடு சேர்ந்து
புது இனம் கண்டு வாழ்!
புது மணம் கொண்டு வாழ்!

அருகில் இருந்து பார்க்காததால் உன் துயர் அறியவில்லை!
எட்டிய அறிவுக்கு இதை விட எதுவும் தெரியவில்லை!

இளசு
03-02-2009, 07:49 PM
முக்கால் கிணறு தாண்டிய நிலையா?
முக்கி முழுதும் தாண்டிட முடியும்..?

எப்படி திரும்பினாலும் பேரழிவுதான் முடிவா?
எடுத்த நிலை நீடித்தலே அழிவு குறைக்கும் வழி..?

எடுத்த பாதையில் முடிப்போமா? முடிவோமா?

களத்தில் இருக்கும் தளகர்த்தர்களுக்கே
முழு ஒளி விளங்கும்..

எட்டி இருந்து பதைக்கும் நெஞ்சில்
பலப்பல எண்ணவோட்டம்..

எல்லாமே நம்மினம் இனியேனும்
தழைக்கட்டும் என்ற எண்ணவோட்டம்...