PDA

View Full Version : மைக்ரோசாப்டின் தமிழ்வழி கருத்தரங்கு பிப்-5ல்

selvamurali
03-02-2009, 04:59 AM
விண்டோஸ் இயங்குதளங்ளை வெளியிட்டு மென்பொருள் நிறுவனங்களின் சக்கரவர்த்தியாக விளங்கிவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அவ்வப்போது தனது மென்பொருள் பயன்பாடு மற்றும் புதிய மென்பொருள் வெளியீடுகள் குறித்து கருத்தரங்குகளை இணையத்தின் வழியாகவும், சில முக்கிய இடங்களிலும் நடத்தி வருகிறது. அதனடிப்படையில் தற்போது அதன் புகழ்ப்பெற்ற வெளியீடான ASP.NET-யினை கொண்டு எவ்வாறு சிறந்த இணைய தளங்களை வடிவமைப்பது ? என்ற வழிமுறைகளை இணையத்தின் வழியே அனைவருக்கும் சொல்லித்தர இருக்கிறது.

இதில் என்ன புதுமை என்கிறீர்களா?
ஆம் முதன் முதலாக நம் தாய் மொழியான தமிழில் தனது கருத்தரங்கினை நடத்த உள்ளது.

வரும் பிப்ரவரி 5ம் தேதி அதன் புகழ்பெற்ற வெளியீடுகளில் ஒன்றான ASP.NET னை கொண்டு எவ்வாறு இணைய தளங்களை வடிவமைப்பது ? என்ற தலைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திரு. ஹரிஸ் ரங்கநாதன் 90 நிமிடங்கள் தமிழில் பயிற்சி தரவிருக்கிறார்.

இதுநாள் வரை அனைவருக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் கருத்தரங்கை நடத்தி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது மாநிலம் சார்ந்த மொழிகளிலும் கருத்தரங்கை நடத்துவது மிகவும் பயனுள்ளது.

இந்த கருத்தரங்கு இணைய வடிவமைப்பாளர்களுக்கும், இணையம் சார்ந்த துறைகளில் உள்ளோருக்கும் , மாணவர்களுக்கும் பயன்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த இணைய கருத்தரங்கில் நீங்கள் கலந்துகொள்ள செய்ய வேண்டியது கீழேயுள்ள இணைப்பை சுட்டுங்கள்(Click)

மைக்ரோசாப்ட் கருத்தரங்கில் கலந்துகொள்ள என்னை கிளிக் செய்யுங்கள் (http://msevents.microsoft.com/CUI/WebCastEventDetails.aspx?EventID=1032403876&EventCategory=4&culture=en-IN&CountryCode=IN)
http://www.tamilvanigam.in/2008-09-28-12-28-29/598-----5