PDA

View Full Version : கருணமோட்சம் (வித்தியாசமான முயற்சி)



ரங்கராஜன்
01-02-2009, 11:54 AM
வணக்கம் உறவுகளே
எனக்கு எப்பவும் குறுபடங்களின் மேல் ஒரு ஈடுபாடு உண்டு, காரணம் பெரிய சிந்தனையை அல்லது தாக்கத்தை அவை குறைந்த நேரத்திலே உண்டாக்க கூடிய தன்மையுடையது இது ஒரு சவாலான விஷயமும் கூட, சிறுகதைகளை குறும்படமாகும் முயற்சியில் நான் சில முறை எடுத்து, அதற்கான சரியான முயற்சிகள் எடுக்காமலே தோற்று போய் இருக்கிறேன் (சிவாஜி அண்ணன் சொன்ன லாட்டரி கதையை போல). இப்படி இருக்க என்னுடைய நண்பன் ஒருவன் மூலமாக ஒரு குறும்படத்தை பார்க்க நேர்ந்தது. படத்தின் பெயர் கருணமோட்சம், இந்த குறும்படம் பல விருதுகளை வாங்கிய படம். இந்த குறும்படத்திற்கான வசனங்களை திரு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி இருக்கிறார். இந்த குறும்படத்தை நான் மன்ற உறவுகளுக்காக ஒரு சிறுகதையாக எழுதி இருக்கிறேன், அதன் இறுதியில் அந்த குறும்படத்தின் வீடியோ வடிவத்தையும் கொடுத்து இருக்கிறேன். உறவுகள் இதை இரண்டையும் படித்தும் பார்த்தும் மகிழுங்கள். தயவுசெய்து நேராக வீடியோவுக்கு போகாதீர்கள் சிறுகதையை படித்து விட்டு போங்க, நான் எழுதி இருக்கிறேன் என்பதால் சொல்லவில்லை. ஒரு படைப்பை நீங்கள் படித்து விட்டு அதையே நீங்கள் வீடியோ வடிவத்தில் பார்க்கும் பொழுது உங்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படும். உங்களின் கற்பனையும், எழுத்தும் ஒத்து போகிறதா? என்று சோதித்து பார்க்கவும்.

http://in.youtube.com/watch?v=siG-AL5mAF8

http://in.youtube.com/watch?v=-OlJ--rWWEQ

என்னுடைய புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுத்தற்கு நன்றி, இனி சிறுகதையை தொடர்வோம்.

கருணமோட்சம்.

ஒரு அருமையான காலைப் பொழுது மிதமான வெளிச்சம், குளிர், பனி, என்று அந்த காலையே தெய்வீகமாக இருந்தது. சாலையின் ஓரத்தில் ஃபளாட்பாரத்தில் கர்ணன் வேஷம் கட்டிக் கொண்டு ஒருவர் ஒய்யாரமாக நடந்து வந்து கொண்டு இருந்தார், அவரின் பெயர் கோவிந்தன். ஜிகினா சட்டை, முறம் போல பாவாடை, இடுப்பில் வாள், முகத்தில் சாயம், பெரிய மீசை, தலையில் கீரிடம் என்று நடந்து வந்தார். அவர் பின்னாடியே அவரின் 10 வயது மகன் கையில் தோள் பையை மாட்டிக் கொண்டு, கீழே இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக பொறுக்கி பார்த்து கொண்டு இருந்தான். முன்னாடி சென்ற அவனின் தந்தை கோவிந்தன் அவனை திரும்பி பார்த்து, அவனை நோக்கி கோபமாக நடந்து வந்தார்.

“டேய் கீழே போடுடா அத, கண்டத எல்லாம் கையில் எடுத்துக்குனு”

ஆனால் மகன் அதை செய்யவில்லை, அவன் கையிலே வைத்து இருப்பதை பார்த்து கோபத்துடன் அதை வாங்கி கீழே பிடுங்கி போட்டுவிட்டு.

“வாடா போலாம்” என்றார். ஆனால் மகன் அந்த இடத்தை விட்டு நகராமல் கோபத்துடன் கோவிந்தனை முறைக்கிறான். கோவிந்தன் பெருமூச்சு விட்டவராக.

“டேய் கதிரு, என்னடா வேணும் உனக்கு”

“எனக்கு ஒண்ணும் வேணா போ, வீட்டிலயாவது நான் விளாடினு இருப்பேன், என்ன என்னாத்துக்கு நீ கூட்டினு வந்த”

“இல்லடா இங்க ஒரு ஸ்கூல்ல கூத்து ஆட கூப்பிட்டு இருக்காங்க, 500 கடைக்கும் டா”

“அப்பா அப்பா எனக்கு டெண்டூல்கர் பேட்டு வாங்கி தரியா?, என்னுடைய ஸ்கூல்ல இருக்குற சி.சுந்தரு கூட வச்சினு இருக்கா ப்பா”

“சரி சரி வா” என்று மகனை அழைத்துக் கொண்டு கோவிந்தன் ஸ்கூலுக்குள் சென்றார். பள்ளி ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருந்தது, கோவிந்தன் தயங்கிய படி பள்ளிக்குள் சென்றார், உள்ளே யாரும் இல்லை, அறைகள் எல்லாம்
இருட்டாக இருந்தது. கோவிந்தன் உள்ளே இருக்கும் மைதானத்தை நோக்கி நடந்தார். மைதானத்தில் பள்ளியின் வாட்ச்மேன் உக்கார்ந்து உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். கோவிந்தனை பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்து, அப்புறம்
சகஜநிலைக்கு வந்தவராக தன்னுடைய வேலையை தொடர்ந்துக் கொண்டு இருந்தார்.

“ஐயா இன்னிக்கு பள்ளிக்கூடம் இல்லைங்களா?, என் பெயரு கோவிந்தன் ஸ்கூல் பிரிண்சிப்பால் என்ன கூத்து ஆட வரச்சொன்னாங்க”

“இல்லங்க ஸ்கூலோட பேட்டர்ன் செத்துட்டாரு, அதனால ஸ்கூல் லீவுங்க” என்று வாயில் சாதத்தை திணித்தபடி சொன்னான் வாட்ச்மேன்”

“ஐயோ நான் எல்லாத்துக்கும் தயார வந்துட்டனே, என்னங்க பண்றது”

“பிரிண்சிப்பால் அம்மாவை தான் கேட்கணும்”

“அவங்க உள்ள இருக்காங்களா?” சந்தோஷத்துடன் கேட்டார் கோவிந்தன்.

“இல்லங்க அவங்க வீடு மந்தவேளில இருக்கு”.

சோகத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் நடந்து வெளியே வந்தார் கோவிந்தன், கதிர் அங்கு இருக்கும் சருக்கு மரத்தில் ஏறி விளையாடிக் கொண்டு இருந்தான், அவனிடம் சென்று அவன் முதுகில் ஒரு அறை விட்டு

“வர வர உனக்கு திமிரு அதிகமாயிடுச்சி, எதுக்கு அது மேல ஏறன, மேல இருந்து கைய காலை உடைச்சிகறதுக்கா”

தன்னுடைய மகனை அதட்டி விட்டு கடைக்கு சென்று பிரின்சிபாலுக்கு போனை போட்டார் கோவிந்தன்

“ஹலோ அம்மா, நான் கர்ண வேஷம் கட்ற கோவிந்தன் பேசறேன் மா, இன்னிக்கு என்ன கூத்தாட வரச் சொன்னீங்கம்மா”

“ஆ ஞாபகம் இருக்கு கோவிந்தன், இன்னிக்கு முக்கியமானவர் இறந்துட்டார் அதனால் நீங்க அப்புறம் வாங்க கோவிந்தன்”

“அம்மா இல்ல ம்மா, நான் வீட்டுல இருந்து வரும் பொழுது வேறும் 50 ரூபாவுடன் வந்தேன், வழியிலே மேக்கப் எல்லாம் போட்டுனு வந்துட்டேன், கையில் காசு இல்ல”

“ஓ அப்படியா, நீங்க நேரா என் வீட்டுக்கு வந்துடுங்க, விலாசம் தெரியும்ல்ல”

சந்தோஷத்துடன் “வாட்ச்மேன் கிட்ட கேட்டுனு வந்துடறேன்ம்மா”

“இப்ப நான் வெளியே இருக்கேன், ராத்திரி 8.00 மணிக்கு தான் வருவேன்”

சோகத்துடன் “சரிம்மா”

சோகத்துடன் தன்னுடைய மகன் இருக்கும் இடத்திற்கு வருகிறான் கோவிந்தன்.

“எப்பா என்ன கூத்து ஆடலையா”

“இன்னிக்கு ஸ்கூல் லீவுடா”

“அப்ப எனக்கு பேட்டு வாங்கி தரமாட்டியா”

“டேய் நானே கையில காசு இல்லாம இன்னிக்கு ராத்திரி வரை எப்படி ஓட்றதுனு இருக்கேன், நீ வேற”. பையன் கோபத்தில் பையை தூக்கி எறிகிறான். பக்கத்தில் இருக்கும் டீ கடையில் மகனுக்கு
ஒரு வடையை வாங்கி தந்து அவனுடைய பசியை போக்குகிறார் கோவிந்தன் . அந்த டீ கடையில் அடிமையை போல வேலை செய்யும் ஒரு சிறுமி அவரையே பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.
சிறிது நேரம் அங்கு உக்கார்ந்து விட்டு பக்கத்தில் இருக்கும் தண்ணீர் தோட்டியில் தண்ணீர் குடிக்க கோவிந்தன் வருகிறான், சிறுது நேரத்தில் அந்த சிறுமியும் எச்சை தட்டை கழுவ வருகிறாள்.

“என்னம்மா உன்னுடைய பேரு”

அந்த சிறுமி மண்ணில் தன்னுடைய பெயரை எழுதி காட்டுகிறாள் அந்த ஊமைச் சிறுமி.

“ ஜா.... ன..... கி...., ஓ ஜானகியா நல்ல பேரு, என்னுடைய பேரு என்ன தெரியுமா (குதுகலத்துடன் எழுந்து நின்று) கர்ணன்.............. கர்ணமகாராஜா...... கர்ண ராஜா யாரு தெரியுமா, பெரிய ராஜா
யாராவது அவன் கிட்ட வந்து நின்னு, இந்த பூமியை குடுன்னு சொன்னான்னு வச்சிக்கோ, பூமியை பேத்து (தன்னுடைய இரு கைகளையும் சேர்த்து தானம் குடுப்பது போல வைத்துக் கொண்ட கோவிந்தன்)
இந்தா வச்சிக்கோன்னு குடுப்பான், அவ்வளவு பெரிய ஆளு நம்ம கர்ணன்” என்று குதுகலமாக தன்னுடைய கூத்து பற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது, தூரத்தில் அந்த டீ கடை முதலாளியின் குரல் கேட்க, கடையை நோக்கி ஓடுகிறாள் அந்த
சிறுமி. குதுகலம் குறைந்து போனவனாக வந்து ஒரு கல்லின் மீது அமர்கிறார் கோவிந்தன். சிறிது நேரத்தில் அந்த பெண் அங்கு வருகிறாள் கையை பின்னாடி கட்டிக் கொண்டு. கோவிந்தனிடம் வந்து அந்த பொட்டலத்தை நீட்டுகிறாள். அந்த பொட்டல்த்தில்
நான்கு இட்லி இருக்கிறது, கர்ண வேஷத்தில் இருக்கும் கோவிந்தன் தயக்கத்துடன் வாங்கி பசியின் அவசரத்தில் உண்கிறார். அந்த சிறுமிக்கு பதிலுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார், அவரிடம் இருப்பது எல்லாம் ஒன்று மட்டும் தான்

“பாப்பா உனக்கு கூத்து பிடிக்குமா? என் கிட்ட கத்துக்கிறீயா”

அந்த ஊமைப்பெண் தலை ஆட்டுகிறாள்.

“முதல்ல குருவணக்கம், இந்த கலையை கத்து தரவங்கல தெய்வமா மதிச்சி செய்யணும். அவங்களுக்கு தச்சனை வைத்துவிட்டு அவங்களை சுற்றி வந்து வணங்க வேண்டும்” என்று கூறி ஆட்டத்தை சொல்லிக் கொடுத்து கொண்டு இருக்கும் பொழுது அந்த டீ கடை
ஆசாமி வந்து அந்த சிறுமியை குச்சால் விளாசி விட்டு, கோவிந்தனை நோக்கி

“யோவ் நீயே அஞ்சி, பத்துக்கு பிச்சை எடுக்கிற, இப்ப இவளுக்கு இதை சொல்லி குடுத்து, இவளை நிமித்த போறீயாக்கும், போயா அப்படி” என்கிறான் கோபமாக. கோவிந்தனுக்கு அவமானமாக இருந்தது, அந்த இடத்தை விட்டு போய்விடலாம்
என்று அங்கு இருந்து தூரத்தில் விளையாடிக் கொண்டு இருந்த மகனை அழைத்துக் கொண்டு செல்கிறார் கோவிந்தன். பின்னாடி ஓடிவரும் அந்த சிறுமி கோவிந்தனின் முன்னால் வந்து நின்று அவரின் கையில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து விட்டு அவரை
கையை கூப்பிய படி ஒரு சுற்று சுற்றி விட்டு திரும்பி பார்க்காமல் ஓடுகிறாள். கர்ணன் வேஷத்தில் இருக்கும் குருவுக்கு தச்சனை வழங்கி விட்டு செல்கிறாள் அந்த சிறுமி. கோவிந்தன் தன்னுடைய நடையை தொடர்கிறார், இரண்டு சிறுவர்கள் கோவிந்தனை பார்த்து
பேசுகிறார்கள்

“டேய் அங்க பாருடா ராஜா வராரூ”

அவர்களிடம் போய் “நான் ராஜா இல்லடா கர்ணமகாராஜா, இந்த வச்சிக்கோ” என்று தன்னுடைய தலைப்பாகையை கழற்றிவிட்டு செல்கிறார் கோவிந்தன், கலியுகத்தில் கர்ணனின் நிலை இது??????????

குறும்படத்தை பார்த்து விட்டுங்கள்.

ஆதவா
01-02-2009, 12:43 PM
நல்ல முயற்சி மூர்த்தி..

கதை படித்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு,,, வித்தியாசமான முயற்சி எடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

ரங்கராஜன்
01-02-2009, 01:17 PM
நல்ல முயற்சி மூர்த்தி..

கதை படித்தேன்.. ரொம்ப நல்லா இருக்கு,,, வித்தியாசமான முயற்சி எடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.


நன்றி ஆதவா

என்னடா எப்பவும் தம்மூ கூப்பிடுவ, இப்ப திடீர்னு பழைய படி மூர்த்தினு கூப்பிடுற, உங்களுக்குனு மரியாதையா கூப்பிடுற. என்ன ஆச்சு? சரி குறும்படம் பார்த்தியா, எப்படி இருந்தது.

ஆதவா
01-02-2009, 09:17 PM
நன்றி ஆதவா

என்னடா எப்பவும் தம்மூ கூப்பிடுவ, இப்ப திடீர்னு பழைய படி மூர்த்தினு கூப்பிடுற, உங்களுக்குனு மரியாதையா கூப்பிடுற. என்ன ஆச்சு? சரி குறும்படம் பார்த்தியா, எப்படி இருந்தது.

ஆமா சார்.... நீ(ங்க) குறும்படம் நாவல்னு பெரிய ஆளா ஆகிட்டு இருக்கீங்க.... இடையில நான் எப்படி மரியாதையில்லாம கூப்பிடறது??? (டேய்! அடங்குடா என்று சொல்வது கேட்குது....)

குறும்படம் பார்க்க அளவுக்கு வசதி இல்லடா.. அதான் எதுவும் சொல்லலை... உன்னுடைய எழுத்தே பார்த்தமாதிரிதான் இருந்துச்சு.. நான் கற்பனித்த அளவுக்கு இருக்குமுனு நினைக்கிறேன்.....

பாரதி
02-02-2009, 06:04 AM
கர்ண மோட்சம் படித்தேன், பார்த்தேன். ஒரு நல்ல படத்தை காண உதவியதற்கு நன்றி மூர்த்தி.

நிமிடங்களில் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படத்தக்கூடியவை நல்ல குறும்படங்கள். குறும்படங்கள் தயாரிப்பதும், அதில் வெற்றி பெறுவதும் சவாலான விடயங்கள். நிச்சயம் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது.

கலிகாலத்தில் கர்ண வேடம் போடுபவர்களின் நிலை இப்படித்தான். அப்படி இருந்தாலும் அவர்களின் வெள்ளை மனது நமது மனங்களை கொள்ளை கொள்கிறது.

பொதுவாக அதிகமான ஒப்பனைகள் இருந்தால் நம்மால் நடிப்பை இரசிப்பதற்கு சிரமம் இருக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படியின்றி அரிதாரம் கூட நடிப்பதற்கு அற்புதமாய் ஒத்துழைத்திருக்கிறது. கோவிந்தனாக நடித்தவரின் நடிப்பு, குரல் அபாரம். (மக்கள் தொலைக்காட்சியில் வரும் "அவருக்கு பதில் இவரு" தொடரில் பங்கேற்பவரைப் போன்றே தோன்றுகிறது. நான் நினைப்பது சரியா?)

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பார்களே, அது போல நல்ல கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் இந்த குறும்படமும் நம் அனைவரின் பாராட்டிற்குரியது.

நடிப்பு : ஜார்ஜ், யுவராஜ், கலியமூர்த்தி, பூர்ணிமா, சண்முகம்
கதை - உரையாடல் : இராமகிருஷ்ணன்.
இசை: இரா. ப்ரபாகர்
ஒளிப்பதிவு : ஜி. சிவராமன்
துணை ஒளிப்பதிவு : நிரன் சந்தர், திலீப் கிருஷ்ணா
ஒலிப்பதிவு, ஒலிப்பொறியியல் : ஜி. முத்துராமன்
படத்தொகுப்பு : வி. கோபிகிருஷ்ணா
படப்பகுனிடல் : எல்.கே. கீர்த்தி பாசு
துணை இயக்கம் : நெடுநாயகம், ஸ்ரீநிவாசன், சக்தி சரவணன், ஆர். கோவிந்தராஜ்,
திரைக்கதை, இயக்கம் : ச. முரளி மனோகர்
தயாரிப்பு : எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்

சிவா.ஜி
02-02-2009, 07:16 AM
நல்லாருக்கு மூர்த்தி. வீடியோதான் பாக்க முடிஞ்சது. ஒலியில்லாம...ஆபீஸ்ல இருக்கறதால. நீ எழுதினதைப் படிச்சிட்டு பாக்கும்போது ஒலியில்லாமயே நல்லா புரியுது. நீ கதையா கொடுத்தது எவ்ளோ உபயோகமா இருக்கு பாத்தியா?

கூடிய விரைவில் நீயும் ஒரு நல்ல குறும்பட இயக்குநராக வெற்றியடைய வாழ்த்துகள்.

இளசு
26-02-2009, 07:16 PM
ஓய்வு நிமிடங்களை உபயோகமான நிமிடங்களாக்கும்
மன்றத்துக்கு நன்றி என்று அடிக்கடி சொல்வேன்..

மிக நல்ல சான்று - இத்திரி..

இதை அளித்த தக்ஸுக்கு என் நெஞ்சு விம்மிய நன்றி..

இப்படக்குழுவை எத்தனை பாராட்டினாலும் தகும்..
(பட்டியலுக்கு நன்றி பாரதி..
படப்பகுனிடல் என்றால் என்ன?)

-----------------------------------http://www.tamilmantram.com/vb/showthread.php?t=2811

இந்த சுட்டியில் லாவண்யா அவர்கள்
தெருக்கூத்து கலையின் நிலை பற்றி எழுதி இருக்கிறார்...
படியுங்கள்..

---------------------------

தக்ஸ்
கதை படித்து லேசாய் மனம் நெகிழ்ந்தேன் - கடைசி வரியில்..

குறும்படம் பார்த்தபோது
இரு முறை கண் கசிந்தேன் -
இரு முறை ''கர்ணன்'' கை ஏந்தியபோது!

-----------------------

செஞ்சி தம்பிரானின் குருகுலம்
சிவாஜிகணேசன் ஆக்ட்டு குடுத்தாரு..
நேரமாயிடுமேன்னு வழியில் மைதானத்திலேயே மேக்கப் போட்டுக்கிட்டேன்..

-- இராமகிருஷ்ணனின் வசனங்கள் அருமை.

---------------------------
பிரின்ஸ்பால் -
வாளமீன் ரிங்டோன்
புரவலர் மரண விடுப்பில் முட்டுக்காடு மாலை 7 மணி வரை..
பாமரனிடம் ''டிமைஸ்'' என ஆங்கிலம் பேசும் ''பண்பு''
- குரல் மட்டும் காட்டி ஒரு குணச்-சித்திரம் தீட்டிய இயக்குனர்- பலே!
---------------------------

குறைவான அளவில்
இத்தனை நிறைவான அனுபவம் தந்த
குறும்படம் -
அகத்தியர் வாமனர்களை ஒத்தது..