PDA

View Full Version : 7+5=36,000,000அன்புரசிகன்
31-01-2009, 08:27 AM
7+5=36,000,000

இதை பார்த்தவுடன் கணித வல்லுணர்களின் இரத்தம் கொதிக்குமே....

என்ன செய்வது. பணம் பாதாளம் வரைக்கும் அல்ல... எங்கும் செல்லும்...

இது இரண்டு வாகன இலக்கத்தகடுகளின் விலை. (DHS)

ஒரு ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் அதிபர் வாங்கியுள்ளார்...


http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/image002.jpg

5 என்ற அபுதாபி இலக்க தகட்டின் பெறுமதி = 25 Million DHS
7 என்ற அபுதாபி இலக்க தகட்டின் பெறுமதி = 11 Million DHS

இவற்றின் பெறுமதி ஏறத்தாள 8.6 மில்லியன் அமெரிக்க டொலர்...

அந்த வாகனத்தின் பெறுமதிகள் கூட அந்தளவு இல்லையாம்...

அக்னி
31-01-2009, 01:25 PM
1 என்ன விலை என்று யாராச்சும் கேட்டுச் சொல்லுங்க...
0 கிடைத்தால் இன்னும் நல்லது...

பிரபலங்கள் அணிந்த உள்ளாடைகளையே பெரும் பணம் கொடுத்து வாங்கி,
வரவேற்பறையில் மாட்டி வைப்போர் மத்தியில்,
இவர் பரவாயில்லை போலிருக்கே...

அன்புரசிகன்
31-01-2009, 01:45 PM
0 பற்றி தெரியவில்லை. 1 ஏற்கனவே விற்றாச்சு... அது தான் மன்னனின் மகன் ஒருவர் வைத்திருப்பதாய் ஞாபகம்....

அக்னி
31-01-2009, 01:57 PM
எப்பிடியாச்சும் 0 ஐ வாங்கி, எனக்குத் தாருங்களேன் ரசிகரே...

aren
01-02-2009, 09:00 AM
எனக்கு அந்தக் காருடன் எந்த நம்பர் கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் இலவசமாக மட்டும் இருக்கவேண்டும்.

அன்புரசிகன்
01-02-2009, 09:05 AM
அப்படி ஒரு பத்து கார் வாங்கித்தரவா???? :D

ரங்கராஜன்
01-02-2009, 10:10 AM
அன்பு அந்த தொழில் அதிபருக்கு பொண்ணு எதாவது இருந்தா, அதோ விலாசம் கொஞ்சம் .................

அன்புரசிகன்
01-02-2009, 10:24 AM
அன்பு அந்த தொழில் அதிபருக்கு பொண்ணு எதாவது இருந்தா, அதோ விலாசம் கொஞ்சம் .................
விதி யார விட்டுது...
ஷேக் நாக்க முக்க,
இலக்கம் 47.5,
அபுதாபி வடக்கு,
அபுதாபி குறுக்குச்சந்து,
துபாய் அபுதாபி பிரதான சாலைக்கு அருகாமை,
அபுதாபி,
ஐக்கிய அரபு இராச்சியம்.

ரங்கராஜன்
01-02-2009, 11:36 AM
விதி யார விட்டுது...
ஷேக் நாக்க முக்க,
இலக்கம் 47.5,
அபுதாபி வடக்கு,
அபுதாபி குறுக்குச்சந்து,
துபாய் அபுதாபி பிரதான சாலைக்கு அருகாமை,
அபுதாபி,
ஐக்கிய அரபு இராச்சியம்.


ஹா ஹா ஹா

arun
02-02-2009, 06:19 PM
பேன்சி நம்பருக்கு பொதுவாக பலர் இது போல செலவு செய்கின்றனர் ஆனால் இது ரொம்ப ஓவர்

இளசு
02-02-2009, 08:27 PM
கூந்தல் உள்ளவ அள்ளி முடிஞ்சா..

குங்குமம் மிஞ்சினா......

இவை ஷேக்கை நினைச்சா வரும் பழமொழிகள்...குடல் கூழுக்கு அழுவுதாம்.. கொண்டை பூவுக்கு அழுவுதாம்..

இது என் எண்ணத்தை நினைச்சா வருவது..அன்பு,
நல்லா கெளப்புறப்பா வயித்தெரிச்சலை!:traurig001:

அன்புரசிகன்
03-02-2009, 03:18 AM
அன்பு,
நல்லா கெளப்புறப்பா வயித்தெரிச்சலை!:traurig001:

ஏன் அண்ணா...

நீங்கள் வேறு ஏதாவது இலக்கங்கள் அதிகமாக விலை கொடுத்து வாங்கிவிட்டீர்களா???:lachen001:

அறிஞர்
04-02-2009, 10:46 PM
எங்க ஊரில் என் பெயரை நம்பர் பிளேட்டா வாங்கினா கூட 50 டாலர் தான்.
இது டூ டூ மச்.....
இளசு... சொல்வதை ஆமோத்திக்கிறேன்.
பணக்கொழுப்பை என்ன சொல்வது???

செழியன்
05-02-2009, 01:39 AM
நானும் நம்ம பெயரில் ஒரு நம்பர் பிளேட் எடுத்தூடுவம் என்று முயற்சித்தேன். விலையை கேட்டு மயங்கியதுதான் மிச்சம்(காரை விட 3-4 மடங்கு)
இந்த சுட்டியில் நீங்களும் முயற்சியுங்கள்(ஐக்கிய இராச்சிய வாசிகள்)
http://www.regtransfers.co.uk/

அன்புரசிகன்
05-02-2009, 01:57 AM
இந்த மனிதர் பணக்கொழுப்பென்று சொல்லமுடியாது. உண்மையில் இதற்கு அவர்கள் கேட்ட பணத்திற்கு அதிகமாக கொடுத்து வாங்கியிருக்கிறார். காரணம் அதன் கிராக்கியை அதிகரிக்க. அவருக்கு பின்னர் அந்த இலக்கத்தகடுகளை ஒரு அநாதைஇல்லத்திற்கு எழுதிவைத்திருக்கிறார். இறந்தபின்னர் இதனை ஏலத்திற்கு விட்டு வரும் பணத்தினை அந்த இல்லத்திற்கு வழங்கவேண்டும் என்று இப்போதே உயில் எழுதிவைத்துவிட்டாராம்...