PDA

View Full Version : மாற்றின் விளைவுகள்ஆதவா
30-01-2009, 04:39 PM
கொஞ்சம் இடைவெளி விட்டு ஜெஸிகாவை பின் தொடருகிறேன். ஜெஸியைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், தெரிந்துகொள்ளாமலே இருப்பதுதான் நல்லது. ஒருமுறை நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே, அதை அளவில் அளக்கமுடியாது ;

பனி மயக்கும் மார்கழி கோலங்களைச் சிதைத்தவாறே வண்டியை நிறுத்தி, அவசராவசரமாக என் அறைக்குள் நுழைந்தேன்.. ஏன் என்கிறீர்களா?, 'அவளை' பார்த்தேன்.. அவளா? அவள் யார் என்று கேட்கிறீர்களா?, இப்போது சொல்லமாட்டேன், இந்த விசயம் ஜெஸிகாவுக்குத் தெரியாது. தெரிந்தால் அவள் பத்ரகாளி ஆகிவிடுவாள். சரி விட்ட இடத்தில் தொடருகிறேன், அவள் என்னிடம் கொடுத்து வைத்திருந்த ஒரு பழைய நோட்டு என் அறையின் வலது மூலையில்.... ஆங்.. இல்லையில்லை, இடது மூலையில் தேமேயென்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரும்பு அலமாரியில் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருக்கிறது..

என்ன தைரியம்? 'அவளுடைய' புத்தகம் ஜெஸியின் புடவைகளுக்கு மத்தியில் இருந்தால் ஜெஸி கவனிக்காமல் இருக்கமாட்டாளா... ம்ஹூம்.... இப்பொழுதெல்லாம் அதிகம் ஜீன்ஸ் டாப்ஸ் அணிவதால் எப்போதாவது உடுத்தும் புடவைகளுக்கு மத்தியில் வைப்பதுதான் பிரச்சனை இல்லாதது.. மேலும் அவள் உடுத்தும் புடவை எது என்று தேர்ந்தெடுப்பதும் நானே!! நூறுசத பாதுகாப்பு..

திரும்பவும் விட்ட இடத்திற்கு வருகிறேன். அந்த பழைய நோட்டில் அவள் எனக்காக எழுதிக் கொடுத்த கவிதைகள் இருந்தது.. கவிதைகள் என்பது சாதாரணமானவை அல்ல, அவை மறைந்து போயிருந்த ஞாபகக் கிடங்கை திறக்க வல்லவை. ஒரு கவிதை படித்தால், தலைசுற்றும், இன்னொன்று, மூக்கு சிவக்கும், அட, இன்னொன்று சிரிக்க வைக்கும். அவள் பல பரிணாமங்கள் தொட்டு எழுதக் கூடியவள்.

திடீரென்று படித்துக் கொண்டிருக்கும்பொழுதே, ஜெஸியும் வந்துவிட்டாள்.. என்ன செய்வது?? சிறிது நேரம் என்னை நான் அவளிடம் தொலைத்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னிடம் தொலைந்தவள் என்னைத் தொலைக்க வந்தாள். சட்டென்று மூடிய அந்த பழைய புத்தகத்தை கவனிக்காமல், என்மீது ஒரு கிறங்கப் பார்வை வீசிவிட்டு, இடைவெளியேதுமின்றி தழுவினாள்.. அவள் மந்தகார தழுவலில் அந்த பழைய நோட்டு நொறுங்கிப் போயிருந்தது...

இனி, இக்கதை பற்றிய என் கருத்து :


வெளிக்காட்டாமல் அடங்கியிருந்த
மெளனப்படலத்தைக் கிழித்து
நீர்த் திரை கோர்த்து
எனக்குள்ளான வாயிலில்
காத்துக்கிடந்தது
உன் பழைய கவிதைகள்

நீண்டும் குறுகியுமிருந்த
அதன் வடிவங்களையும்
படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும்
வார்த்தையினடி கோடுகளையும்
என்னுள் அடர்ந்து வளர்ந்திருந்த
மொழியை சுண்டியெழுப்பியது

பெரும் இருளில் பயணித்து
எங்கோ ஒரு புள்ளியில் மறைந்து போன
நம் முதல் முத்தத்தை
உன் பழைய கவிதையொன்று
நினைவாறாமல் கூறிற்று

நான் என்ற தொடர்பு முதல்
கண்ணீர் என்ற முடிவு வரையிலும்
அங்குல அங்குலமாக
அடுக்கி வைக்கப்பட்டிருந்தது
கவிதை எனும் பலகையினூடு

ஒற்றைச் சாளர வழிதிறந்து
அறை நிரப்பிய காற்றாய்
அருகிருந்த மனைவி என்னை
இருக்கினாள்

தவறவிட்ட உன் பழைய புத்தகம்
கைக்ககப்படாத தூரத்தில்
பயணித்துக் கொண்டிருந்தது.

பின்குறிப்பு :

மாற்றின் விளைவுகள் : மாற்று = instead of ஒன்றுக்கு மாற்று இன்னொன்றாக... (நல்ல தலைப்புக்கு வேண்டி நிற்கிறேன்.)

ஷீ-நிசி
05-02-2009, 01:16 AM
கவிதை படிக்கல.. மேலிருக்கும் கதையை மட்டும் படிச்சேன்.... அதாவது வசீகரிக்க கூடியதாயிருக்கிறது.. கதைகளில் உனது எழுத்துக்கள் ஆதவா.... என்ன சொல்றது எழுத்தாளர் சுஜாதா போலன்னு வச்சிக்கோயேன்....

கவிதை படிச்சிட்டு பதில் போடறேன்.. இப்ப நான் போறேன்....

ஆதவா
05-02-2009, 09:53 AM
வாங்க வாங்க.... கொஞ்சம் புதுசா இருக்கட்டுமேன்னுதான் கதையப் போட்டேன். உங்கள் பதில் கண்டதும் மகிழ்ச்சி... (அப்பாடா....) கவிதைக்கான விமர்சனம் தேடி காத்திருக்கிறேன்..

ஷீ-நிசி
05-02-2009, 12:29 PM
பழையகாதலியை சந்தித்தபின், தித்தித்த அவளின் நினைவுகள் மனதோரம் ஊறியதில், என்றோ அவளுக்கும் அவனுக்கும் உண்டான காதல்நினைவுகள் அடங்கின புத்தகம்வழியே பயணிக்க ஆரம்பித்தது காதலர்களின் பின்னான நினைவுகள்... பூஜையில் கரடியாய், நினைவுகளின் இடையில் மனைவி....

அந்த தழுவலில்
நொறுங்கிபோனது
கவிதைத்தாள் மட்டுமல்ல...
கவிதையான அவளின் நினைவுகளும் தான்...

ஒரு சின்ன சம்பவம்.. அழகான சம்பவமும்.....

வித்தியாசமான வார்த்தைகள்... தேடிப்பிடித்த வார்த்தைகளா?! இல்லை தானே நாடி வந்த வார்த்தைகளா?!

வாழ்த்துக்கள் ஆதவா!

ஆதவா
05-02-2009, 01:41 PM
நன்றி ஷீ-நிசி.. நீண்ட நாட்களுக்குப் பிறகு உ்்கள் விமர்சனம் காண்கிறேன்.

இ்்கே பார்வையிட்டு கவிதை படித்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றி..

இளசு
10-02-2009, 08:05 PM
நேற்றையது சர்க்கரை..
இன்றையது இலுப்பைப்பூவா?

எட்டாதது கங்கை..
எட்டியது காவிரியா?

மனம் விழித்துறங்கும் அதிகாலைகளில்
அருகிருக்கும் துணையுணர்ந்து மனமதிர்ந்து விடுத்த வினாக்கள்...

அது ஒரு வினாக்காலம்!

விடைகள் - மனோபாவம் பொருத்து மாறும்!

காலமாறும்போது மாற்றுகள் மாற்றுகூடி மதிப்பேறும்!

வாழ்த்துகள் ஆதவா...