PDA

View Full Version : ஊடகவியளாளர் தீக்குளிப்பு...அன்புரசிகன்
29-01-2009, 07:21 AM
இன்று சென்னையிலுள்ள மத்திய அரசின் தலமைச்செயலகம் சாஸ்திரிபவன் முன்னிலையில் தூத்துக்குடியைச்சேர்ந்த முத்துக்குமார் என்ற பெண்ணே நீ என்ற பத்திரிக்கை ஊடகவியளாளர் இந்திய அரசின் நடவெடிக்கையை எதிர்த்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார்...

இது தொடர்பான தமிழ்நெட் இணையத்திலுள்ள மேலதிக தகவல்....Tamil Nadu journalist burns himself to death condemning Indian inaction

[TamilNet, Thursday, 29 January 2009, 07:02 GMT]
A young Tamil activist burnt himself to death in front of the Shastri Bhavan, the Indian Central Government's Chennai Head office Thursday, reports from Chennai said. The activist, Mr. Muthukumar, from Thooththukkudi, who works for Pe'n'nea Nee feminist magazine as typist and also writes articles, doused himself with petrol and set himself afire, condemning the futile visit by Indian Foreign Minister Pranab Mukherjee, who failed to stop the war in Sri Lanka and save Eezham Tamils.

With 95% burn injuries, the victim was rushed to the Kilpauk Medical College in a critical condition, with slim chances of survival. He succumbed within a short span of time, according to medical sources.

Tension prevails in the capital city of Chennai following the news of the young Tamil activist burning himself to death in front of Shastri Bhavan office.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28193

ஈழத்தமிழனுக்காக உயிர்நீத்த அந்த மறவனுக்காக என் கண்ணீரஞ்சலிகள்.... என்ன சொல்லி அவரின் குடும்பத்தினரை ஆறுதல் படுத்துவது... மனது உறுத்துகிறது.........

சுகந்தப்ரீதன்
29-01-2009, 08:07 AM
அஹிம்சாவாதிகளே... இறந்துப்போன என் சகோதரனுக்கு என்னபதில் சொல்ல போகிறீர்கள் நீங்கள்...?!

praveen
29-01-2009, 08:29 AM
இலங்கையில் ஆதரவின்றி தவிக்கும் 6 லட்சம் தமிழர்களை காப்பாற்ற 6 கோடி தமிழரின் மனக்குமுறலில் ஒன்று, ஒரு வேளை, தங்கள் கையாலாகதனத்தை எண்ணி, எல்லோரும் தற்கொலை செய்து கொண்டால் தான் இந்த பிரச்சினை முடியும் என்று நினைக்கிறேன்.

இதற்கெல்லாம் மத்திய அரசு மனமிறங்காது, மாறாக இனி இம்மாதிரி யாரும் அதிக உணர்ச்சிவசப்படாமல், சமீபத்தில் சென்னை வந்த தலாய்லாமா சொன்னது போல,

"நல்லது நடக்கவே நாம் பிரார்த்திப்போம். தலைவிதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை" என்று இருக்க வேண்டியது தான்.

அன்புரசிகன்
29-01-2009, 08:41 AM
இந்த செய்தியை படித்தவுடன் இவ்வளவு காலமும் இல்லாத ஒரு குற்றஉணர்வு இன்று என் மனதில்...

தலைவிதியை கடிந்து என்ன பயன் பிரவீன்....... ஆனாலும் வேறு வழி இல்லைத்தான்.........

அன்புரசிகன்
29-01-2009, 08:48 AM
வைத்தியசாலையில் வைத்தியருக்கு முத்துக்குமார் கூறிய பதில்...உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.


இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.


மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.


இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.


26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2643

மொத்தத்தில் இலங்கை அரசுக்கு வெற்றி தான். கடைசியில் இறப்பது தமிழனே.... நடப்பது நடக்கட்டும். இனியும் இவ்வாறான தீக்குளிப்புக்கள் நிகழாதிருக்கவேண்டும்.

Mano.G.
29-01-2009, 09:23 AM
செய்தி கேட்டு மனம் தழு தழுக்கிரது, தமிழ் மக்களே ஒற்றுமையுடன்
இந்த போராட்டத்தில் இணைவோம்,
அதோடு உயிர் சேதமின்றி போராடுவோம்

ரங்கராஜன்
29-01-2009, 09:39 AM
இலங்கை தமிழர்கள் சாவுக்கு தான் மத்திய அரசு பதில் சொல்லவில்லை, முத்துகுமாரின் சாவுக்காவது பதில் சொல்லட்டும்.

சுகந்தப்ரீதன்
29-01-2009, 09:42 AM
செய்தி கேட்டு மனம் தழு தழுக்கிரது, தமிழ் மக்களே ஒற்றுமையுடன்
இந்த போராட்டத்தில் இணைவோம்,
அதோடு உயிர் சேதமின்றி போராடுவோம்அண்ணா.. "தமிழினத்தின் தலைவன்" "தமிழினத்தின் தலைவி" "தமிழின காவலன்" "தமிழின போராளி" ன்னு தங்களோட பெயருக்கு முன்னால போஸ்டர்ல போட்டுக்கிட்டு ஏ.ஸி ரூம்ல உட்காந்துக்கிட்டு கடிதம் எழுதிக்கிட்டு, அறிக்கை விட்டுக்கிட்டு இருக்குற இவனுங்க எல்லாம் இருக்குற வரைக்கும் எங்க அண்ணா மக்களை ஒன்னுசேர விடப்போறானுங்க...?? இவனுங்களுக்கு சாமானிய மக்களோட உணர்வுகள் புரியும்ங்கிற நம்பிக்கை மக்கள்கிட்ட சுத்தமா செத்துப்போச்சு... வழக்கம்போல இந்த சாவையும் ரசிச்சிக்கிட்டு இருந்துருவானுங்களோன்னு நினைக்கும்போது நெஞ்சுவலிக்குது அண்ணா...!!

ப்ரவீன் அண்ணா சொன்னதுபோல "அழறதுக்கு மட்டும்தான் ஆண்டவன் நம்மளை படைச்சானான்னு நினைக்க தோணுது".

கா.ரமேஷ்
29-01-2009, 09:51 AM
எரிதழழுக்கு இன்னுயிர தந்த என் சகோதரனுக்கு என்ன பதில் சொல்ல போகிறது இந்த உலகம்.எறிகணையால் கொன்றுவிட்டு கணக்கு சொல்லும் உலக சமுதாயமே இதற்க்கும் ஒரு காரணம் வைதிருப்பீர்களே என்ன அது...?

மனம் உடைந்த உன் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்களும், உனக்கு என் கண்ணீரஞ்சலிகள் மற்றும் வீரவணக்கம் தோழனே

என்னவன் விஜய்
29-01-2009, 10:46 AM
வருத்தமான செய்தி, மனம் கலங்கி வேதனை கொள்கிறேன். இன்னும் எத்தனை உயிர்களை பலிக்கொள்ள போகுதோ இந்தப்போர்.

வீரமரணமடைந்தவருக்கு என் கண்ணிர் அஞ்சலிகள். அவரின் குடும்பத்தினற்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

நேசம்
29-01-2009, 12:04 PM
அவரின் உணர்வை கண்டு உணர்ச்சிவசப்படலாம்.ஆனால் எந்தவித குற்றஉணர்வு இல்லாதவர்களுக்கு இவரது மரணம் ஒரு சாதாரணமான விசயம்.சகோதரனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

அன்புரசிகன்
29-01-2009, 12:25 PM
http://www.vikatan.com/jv/2009/feb/01022009/29fire2.jpg (http://www.slcues.net/mantram/books/muthukumar1.pdf)

நன்றி - விகடன்.

அறிஞர்
29-01-2009, 01:13 PM
இது மனதை பாதிக்கிற விசயம் தான்.
உயிர் கொடுத்த... அன்பரின் குடுமப்த்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த தீக்குளித்தல் யார் மனதையும் மாற்றுமா.... என காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

kampan
29-01-2009, 01:32 PM
தமிழனினத்திற்காக தன் உயிர் நீத்த முத்துக்குமாரனுக்கு எமது அஞ்சலிகள். இவரைப்பற்றி தெரிந்தவற்றை தாருங்கள்.

அய்யா
29-01-2009, 02:47 PM
உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முட்டாள்தனமான முடிவு!

இதைப் படிக்கும் சிலருக்கு என்மீது கோபம் வரலாம். ஆனால் இவரது சாவு இப்போதைய சூழலில் எள்முனையளவுகூட மாற்றம் கொண்டுவரப்போவதில்லை. முத்துக்குமார் குடும்பத்துக்குதான் பேரிழப்பு. அவரின் பாட்டியான மூதாட்டியின் கதறலை நான் மறக்க மிகக் காலம் எடுக்கும்.

ஆனால் முத்துக்குமாரின் சாவு இன்னும் சில நாட்கள் பரபரப்பாகப் பேசப்படும். பின்னர் மறக்கப்பட்டுவிடும்.

தூயவன்
29-01-2009, 03:12 PM
தமிழனினத்திற்காக தன் உயிர் நீத்த முத்துக்குமாரனுக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !
தமிழன்

சிவா.ஜி
29-01-2009, 03:13 PM
உண்மையான ஒரு தியாகம்...ஆனால்...உபயோகமில்லாமலாகப்போகிறது. இந்திய அரசோ, தமிழக அரசோ இதை ஒரு பொருட்டாகவே மதிக்காது. உலகத்தமிழினத்தலைவரும் இதன்மூலம் என்ன ஆதாயம் கிடைக்குமென்று இப்போதே கணக்குபோட்டிருப்பார்.

இன்னும் எத்தனை முத்துகுமார்கள் தீக்குளித்தாலும் தமிழனின் வாழ்வு இருட்டில்தான்.

ஓவியன்
29-01-2009, 03:49 PM
நினைத்துப் பார்க்க முடியாத தியாகம்,

சகோதரனின் தியாகத்துக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்..!!
அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...!!

இழந்தவை போதும், இனியும் வேண்டாம் இழப்புக்களும் இறப்புக்களும்...!!

புதியவன்
29-01-2009, 03:56 PM
ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களில் ஒருவனாகிவிட்ட என் மதிப்புக்குரிய சகோதரன் முத்துக்குமரனுக்கு என் வீர வணக்கம். அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் :- வீரமிக்க தமிழ் இளைஞர்களே ! தயவுசெய்து இது போன்ற தற்கொலை போராட்டங்களில் இறங்க வேண்டாம். ஈழத்தில் போராடும் எம் சொந்தங்களுக்காக உங்கள் போராட்டத்தை மாற்று வழிகளில் நடத்துங்கள். எமது விடுதலைப் போராட்டங்கள் இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் உறவை உடைத்தெறிந்து வெல்லவேண்டும். உங்கள் குரலை உயர்த்திக் கொடுங்கள். நம்புங்கள் நிச்சயம் தமிழீழம் மலரும். வணக்கம்.

ஆதவா
29-01-2009, 04:47 PM
வெகு முட்டாள்தனமான முடிவு.. அவருக்கு என் கண்டனங்கள்...

இங்குள்ளவர்கள் அனைவரும் ஒத்துழைத்து போராட்டங்கள் நடத்தவேண்டும். அப்படி நடந்தால் நானும் பங்கெடுக்கத் தயாராக இருக்கிறேன்.. சும்மா, அங்கொன்றும் இங்கொன்றுமா உண்ணாவிரதம், தீக்குளிப்பு எல்லாம், வீண்.... பேருக்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது..

ஒருப் பக்கம் பீரங்கிகளை அனுப்பிவைத்துவிட்டு, மறுபக்கம் அமைதி (பேசுவதாக) பேசும் சாக்கடைகளிடம் எந்தத் தழலும் அமுங்கிவிடும்....

வாழ்க ஜனநாயகம்...

ஆத்திரத்துடன்
ஆதவன்

மயூ
29-01-2009, 06:18 PM
உலகத் தமிழர்களின் தலைவரை ஒரு கவிதை எழுதி தொலைக்காட்சியில் வாசிக்க சொல்லுங்க...!

முள்ளந்தண்டில்லாதவர்கள்...! வெட்க கேடு..! (வாயில ஏதோதோலாம் வருது.. இங்க பொதுவில எழுத முடியாது)

வீரவேங்கை முத்துக்குமாருக்கு என் வீர வணக்கங்கள்..., நீ தமிழன்... உன்னைப் போன்றவர்களால் நான் தமிழன் என்று சொல்வதைப் பெருமையாக்கஃ கொள்கின்றேன்.

தமிழக இளைஞர்களே... உங்கள் உயிரை மாய்க்காதீர்கள்..! அங்கிருந்து உரத்துச் சத்தம் போடுங்கள்... அப்பத்தான் டெல்லிக்கு கேட்கும்... சென்னைக்கு கேட்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.. அதிக பட்சம் ஒரு சட்ட மன்ற தீர்மானம், அனைத்து கட்சி கூட்டம், ஒரு கவிதை... இதுக்கு மேல எதுவும் வராது

erode
30-01-2009, 09:20 AM
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்

Mano.G.
30-01-2009, 10:01 AM
நாம் தமிழர்கள் எதை ஒற்றுமையாக
சேர்ந்து சாதிதுள்ளோம்,
ஒற்றுமையா அப்படி என்றால் என்ன என கேட்கும் இனம் நமது இனம்,

எல்லாம் சுய நலம் , சுய நலம்.
கடவுளே காப்பாத்து இவர்களை

மனோ.ஜி

அக்னி
30-01-2009, 10:38 AM
வேதனையான நிகழ்வு...

அவர் கொண்ட பற்று வரவேற்புக்குரியது என்றாலும்,
அதனை எடுத்துச் சொல்ல, அவர் மேற்கொண்ட வழிமுறை என்னைப்பொறுத்தவரையிற் தவறானது.

ஊடகத்துறையில் இருந்து கொண்டு,
அவர் தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்திருக்கலாம்.

தீக்குளித்தல் என்பதற்கு இருந்த மனோபலத்தை,
தன் எழுத்துக்களிற் பிரயோகித்து, எரித்திருக்கலாம்...

இருப்பினும்,
ஈழத்தமிழர்களுக்காக எரியூட்டிக் கொண்ட தீபத்திற்குத் தலைவணங்குகின்றேன்.

முத்துக்குமார்...
ஈழத் தமிழர்களின் இன்னல்களை
உலகிற்கு வெளிச்சம் போட,
எரியூட்டிக் கொண்டீரோ...
உம் தற்கொடையால்,
நெஞ்சம் நெகிழ்கின்றது...
உமது இழப்பால்
துயருறும் நெஞ்சத்தில்,
உமது நினைவுகளை
நிரப்பிக் கொள்கின்றோம்...
வீரவணக்கம் செலுத்துகின்றோம்...

எனது இதயவஞ்சலிகளும், அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல்களும்...

முத்துக்குமார் அவர்களின் மரணம்,
தொடர்கதையாக ஆகாதிருக்கப் பிரார்த்திக்கின்றேன்...

அக்னி
30-01-2009, 10:39 AM
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
காந்தியும் கலாமும் பிறந்த நாட்டில்,
உங்களைப்போன்ற வக்கிர, இரக்கமற்ற மனம் படைத்தவர்களே இருக்கையில்,
ஓரத்தில் முட்டாள் மனிதர்களும் இருந்துவிட்டுப் போகட்டுமே...

தூயவன்
30-01-2009, 10:58 AM
காந்தியும் கலாமும் பிறந்த நாட்டில்,
உங்களைப்போன்ற வக்கிர, இரக்கமற்ற மனம் படைத்தவர்களே இருக்கையில்,
ஓரத்தில் முட்டாள் மனிதர்களும் இருந்துவிட்டுப் போகட்டுமே...
:D :D :D

இவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பது ??? நல்ல போடு அண்ணா.

கா.ரமேஷ்
30-01-2009, 11:05 AM
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்

காந்தி,கலாம் நாட்டிற்க்காக உழைத்தார்கள்.முத்துகுமரன் என்ற இந்த சகோதரன் தமிழ் என்ற இனத்திற்க்காக உயிர்விட்டிருக்கிறார்கள். அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ஒரு தீப்பொறிதான் தீ சுவாலை உருவாக்கும் அவர் பாதிக்கப்படும் அப்பாவி தமிழ் மக்களுக்கு தன்னால் சிறு மாற்றம் நடந்து விடாதா என நினைத்திருக்கலாம்.

தமிழ் இன உணர்வுள்ள எல்லா தமிழனும் எதவது ஒருவகையில் ஈழ தமிழ் இனத்திற்க்கு உதவ முயர்ச்சி செய்வார்கள் இவர் கொஞ்சம் தாண்டி உயிரையே மாய்த்திருக்கிறார்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழ் இனத்திற்க்காக போரடியவர்கள் அனைவருமே முட்டாள்கள் என்று சொல்வீர்கள் போல.

நிரன்
30-01-2009, 11:15 AM
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்

நீங்கள் சொல்வதைப்பார்க்க எனக்கு மிகவும் வேடிக்கையாகவுள்ளது
உங்களுக்கு மற்றையவர் மீது இரக்கமில்லை என்பதற்காகவல்ல.

காந்திபிறந்த நாட்டில் அவர்களைப் போன்றும் முட்டாள்கள் இருக்கிறார்கள்
உங்ளைப்போன்று மற்றவருடன் முட்டுபவர்களும் உள்ளனர்தானே
இரண்டிற்கும் ஒரு வித்தியாசமுமே இல்லை. நாணற் புல்லும், ஆலமரமும் என்று என்னிவிட்டுப் போகிறோம்

ஆதவா
30-01-2009, 12:23 PM
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்


காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்

உங்களின் முதல்வரியை பாராட்டுக்கிறேன். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல... இது என் கருத்து... . ஆனால் இரண்டாம் வரி வேதனை அளிக்கிறது.. அவரின் கடிதம் படித்திருந்தால் இப்படி பேசியிருப்பீர்களா என்று நினைக்கிறேன்...

முத்துக்குமரனின் கடிதத்திலிருந்தே அவர் எத்தனை பற்றுள்ளவர் என்பது தெரிகிறது. ஆனால் அந்த பற்றெல்லாம் இப்படி கருகிப் போய்விட்டதே என்று எண்ணும்போதுதான் வேதனை அளிக்கிறது.

மிஞ்சி மிஞ்சிப்போனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொந்தளிப்பார்களா???? இல்லை ஒருவாரம்??? ஆனால் பிரயோசனமென்ன?? அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும்படி, அல்லது ஆணையிட்டிருக்கும்படி ஏதாவது நிகழப்போகிறதா?

ஒன்று செய்யலாம்... இவரின் வீரச்சாவு.. (அப்படி மனதார சொல்லமுடியவில்லை) மற்ற தமிழர்களை தூண்டியெழச் செய்யவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் போராட்டங்கள் ஒருங்கிணைந்து அரசை அசைக்க வேண்டும்...

முத்துக்குமரன் இறந்ததற்கு அர்த்தம் வேண்டுமல்லவா.... இவையெல்லாம் நிகழ்ந்தால்தான்.

இந்திய அரசு ஒரு பக்கம் பீரங்கிகளை அனுப்பிவிட்டு, மறுபக்கம் சமாதானத்தை சத்தமாகப் பேசுகிறது... முத்துக்குமரன் போன்றவர்களின் கதறல்கள் அதன் காதில் கேட்கப்போவதில்லை....

ஆதங்க
ஆதவன்.

என்னவன் விஜய்
30-01-2009, 01:20 PM
காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்

நண்பர் இரோட் அவர்களே,

முத்துக்குமார் எந்த நாட்டுக்காக உயிர் விட்டார் என்ற உங்களின் ஆராய்ச்சி என்னை வியக்க வைக்கின்றது.

உங்களைப்போன்ற சுயநலம் காக்கும் மனிதர்களினால்தான் அங்கு சாகும் அப்பாவி மக்களின் உயிரை இன்றுமுன் காப்பாற்ற முடியாமல் இருக்கின்றது.

அமரன்
30-01-2009, 02:27 PM
இன்னுயி ஈந்த சொந்ததின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அதற்கான பணிகள் காத்துக்கிடக்கின்றன. கவனத்தில் கொண்டு செயற்படுவோம்.

எழிலரசன்
30-01-2009, 03:08 PM
காந்தி தேசமும் புத்ததேசமுமா இதற்காக கவலைப்படப்போகிறது? அங்கும் இங்கும் எத்தனை மாறுபட்ட கருத்துக்கள். மௌனித்து அழுவதைத் தவிர அப்பாவி தமிழர்கள் வேறு என்ன செய்வது?
எழிலரசன்

பாரதி
30-01-2009, 03:28 PM
எந்த நாட்டிற்காக உயிரைவிட்டார் என்ற கேள்வி பலரையும் வருத்தமடையச் செய்யக்கூடியது. நீங்கள் குறிப்பிட்ட மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் எந்த அளவிற்கு போராடி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தது இல்லையா..? அங்கு நடந்த போராட்டங்களையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் குறித்து காந்தியே தன்னுடைய சுயசரிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

முத்துக்குமாரின் நோக்கம் சரியானது; அதே நேரத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவு சரியானதல்ல. ஆனால் அதற்காக அவரின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதை தயவு செய்து தவிருங்கள்.

இனியொரு மரணம் இவ்விதம் எங்குமே நிகழாதிருக்கட்டும்.

மனித நேயத்துடன் இவ்வுலகில் வாழும் மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

தென்னாட்டு சிங்கம்
30-01-2009, 05:19 PM
ஆங்கிலேயர்கள் காலத்தில் யாராவது ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் உடனே ஓடிவந்து ஏன், ஏதற்க்காக என்று கேள்வி கேட்க அதன் சம்மந்த பட்ட உயரதிகாரிகள் ஓடி வருவார்கள்.. ஆனால் இன்று உண்ணாவிரதம் வெறும் டீவிகளுக்காக உள்ள ப்ளாஸ் நியுஸாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.. அதே போல்தான் இந்த நண்பரின் தற்கொலை நிலவரமும்.. வெறும் பத்திரிக்கை மற்றும் டீவிகளின் இரண்டு நாள் செய்தியாகவே இது அமையும் என்பதில் ஐயமில்லை.. ஏன் நம் இத்தமிழ் மன்றத்தில் கூட புதிதாய் படிக்கும் நண்பர்கள் ஒரு நாள் படித்ததும் அதன் பின் வேறு பக்கங்கள் போய் விடுவார்கள்..

இது அரசியல் கலந்த பிரச்சினை..

முதலில் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் ஒழுங்காக அரசியல் செய்யட்டும்.. அப்போதுதான் இதுபோல் உள்ள முடிவுகளுக்கு சரியான தீர்வு காணமுடியும்..

அதுவரை எத்தனை முத்துகுமார் உயிர் நீத்தாலும்.. அவை வெறும் கடலில் இருந்து எடுக்கும் முத்துச்சிற்ப்பியாகவே காய்ந்து கருகாகிவிடும்..

உதயசூரியன்
31-01-2009, 02:54 AM
இந்தியாவில் வாழும் கையாலாகாத..தமிழனாக பிறந்த அனைத்து உணர்வுள்ளவர்களின் உள்ளுணர்வை வெளி கொணர்ந்த.. முத்து குமாரின் மரணம்..
மனதை கலங்க செய்தது...

அவரால் அதாவது செய்ய முடிந்தது..
அதை கூட செய்ய முடியா கோழையாய்..நான்(நாம்)

அவர் போன்ற இளைஞர்கள் பெண்களுக்காகவும்.. பணத்துக்காகம்.. சிற்றின்பத்திற்க்காகவும் உயிரை விடுவதை பார்த்த போது இளைஞர்களின் பேடை தனத்தை கண்டு நொந்து போனேன்...

ஆனால் ஒரு மாபெரும் கொள்கைக்காக..
தன்னலமில்லாத தியாகம் செய்த முத்துக்குமாரை.. பார்த்து பிரமிக்க வைக்கிறது...

அவரின் கடிதம்.. சாதரணமானது அல்ல..
சிங்களர்களையும் அரவனைக்க சொன்ன அந்த கடிதம்.. தமிழன் எப்பொழுதும் மேன்மக்கள் தான் என்று சிங்களனுக்கு செருப்பால் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்..
அதே போல்.. அவரின் கருத்துக்கள்.. அற்புதமானவை..
அவரின் இறப்பு.. மிக பெரிய இழப்பாகும்..

அவர் சாதரணமாக சொல்லியிருந்தால்.. அவருக்கு தீவிரவாதி பட்டம் கொடுத்திருப்பார்கள்..

சுதந்திர போராட்டம் செய்தவர்கள் தானே.. காங்கிரசாரும்..

ஆங்கிலேயனை எதிர்த்த போது அடக்கு முறைக்கே.. காலம் காலமாக கூக்குரல் இட்டனரே..
இப்பொழுது ஒரு இனமே.. சொந்த நாட்டினில் உள்ள அரசே.. குண்டு வீசி அழிக்கிறதே..
பெங்களூரில் ஒரு திவிர வாதி இருந்தால்..
ஐதராபாத்தில் ஒரு தீவிர வாதி இருந்தால்.. காஷ்மீரில் ஒரு திவிர வாதி இருந்தால்..
பல நாட்டு அயுதங்களுடன்.. முப்படை போர் நடத்தியா பொது மக்களை சாகடித்தா கண்டு பிடிப்பார்கள் ????

தமிழர்கள் செய்த தவறு இது..
ஆம்..
தமிழக பொது மக்கள்..
உணர்வு பூர்வமாக..
தமிழர்களை.. தலைவர்களாக வைத்து இருந்தால்.. உணர்வாவது வெளிப்படும்..

தமிழர்கள் சாவதை கூட.. நியாய படுத்தும் ஜெ வை.. சிங்களர்களின் பொண்டாட்டியாக நினைக்கிறார் போல...

முத்துகுமாரின் மலத்தை தின்னாலும் பித்தம் தெளியா.. தலைகள் இருக்கலாம்.. தொண்டர்களே.. நீங்கள் இவ்விஷயத்தில்.. உணர்வை மட்டுமே வெளிபடுத்த வேண்டும்..

நாடாண்ட தமிழினம்.. இனி..
ஒரு காலத்தில் தமிழன் என்ற இனம் இருந்தது என்று ஆக்கி விடாதீர்கள்...
வாழ்க தமிழ்

erode
31-01-2009, 04:19 AM
முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இலங்கை மக்களாக பாருங்கள் அது தான் அவர்களுக்கு உள்ள உரிமை அதை விடுட்டு அந்த மக்களை இரு பிரிவுகலக பிரித்து வேற்மை படுத்த வேண்டாம் இப்படி பிரிவினை பண்ணித்தான் அவர்களை பிரித்து வைத்து விளையாடுகின்றனர்
இதை முதலில் அவர்கள் புரிந்துவைக்கவும்

கார்கில் மற்றும் மும்பை தாக்குதலுக்காக இந்தியாவுக்காக எந்த இலங்கை(தமிழனும் தான்) மக்கள் உயிரை விட்டார்கள் அங்கு

இலங்கையில் த்மிழன் என்று பார்க்காமல் இலங்கை மக்களாக பாருங்கள் முதலில்

அன்புரசிகன்
31-01-2009, 04:50 AM
முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இலங்கை மக்களாக பாருங்கள் அது தான் அவர்களுக்கு உள்ள உரிமை அதை விடுட்டு அந்த மக்களை இரு பிரிவுகலக பிரித்து வேற்மை படுத்த வேண்டாம் இப்படி பிரிவினை பண்ணித்தான் அவர்களை பிரித்து வைத்து விளையாடுகின்றனர்
இதை முதலில் அவர்கள் புரிந்துவைக்கவும்

கார்கில் மற்றும் மும்பை தாக்குதலுக்காக இந்தியாவுக்காக எந்த இலங்கை(தமிழனும் தான்) மக்கள் உயிரை விட்டார்கள் அங்கு

இலங்கையில் த்மிழன் என்று பார்க்காமல் இலங்கை மக்களாக பாருங்கள் முதலில்


நீங்களே என்ன பேசுகிறது என்று தெரியாது பேசுகிறீர்கள்...

கார்கில் போர் உள்நாட்டு போரா???

அந்த போரில் இலங்கையரின் பங்கை எதிர்பார்க்கிறீர்கள். தவறில்லை... அப்படியானால் கார்கில் போருடன் இலங்கையின் உள்நாட்டு போரை ஒப்பிடுவதன் மூலம் நீங்களே இருவேறு மக்கள் இலங்கையில் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்....

நன்றி....

உதயசூரியன்
31-01-2009, 04:50 AM
ஈரோடு அவர்களே.. நமது நாட்டை பாகிஸ்தானியர்கள் மற்றும் அரேபியர்கள் ஆண்டால் சும்மா இருப்பீர்களா..
அவர்கள் இங்கு மத நாடாக மாற்றினால்.. தங்கள் சித்தம் என்று சும்மா இருப்பீர்களா..
அப்படி சும்மா இருப்பேன் என்றால்.. உங்கள் வீட்டில் உப்பையே காட்டாமல் வாழும்.. இனத்துக்கு சமம்..
அதனால் இதில் நீங்கள் கலக்காமல் இருப்பதே நலம்...
அப்பொழுது ஏன் வெள்ளையர்கள் ஆண்ட போது எதிர்த்தீர்கள்..
சுத்தந்திர போராட்டத்திற்கு பிறகு தானே இந்தியா.. பாரதம் என்ற நாடே உருவானது..
அதற்கு முன்னர் ஏன் இந்தியா என்று சொன்னீர்கள்...
இந்தியாவுடன் இணைந்தது தானே.. பாகிஸ்தான் இலங்கை....அதை ஏன் பிரித்திர்கள்..
தமிழர்கள் ஆண்ட லெமுரியா கண்டமே.. அழிந்ததில் மீதம் தானே இலங்கை..
ஒற்றுமையான பாகிஸ்தானை ஏன் பிரீத்தீர்கள்..
ஏதோ 100 பேரை திவிரவாதிகள் கொன்றனர் என்பதற்காக ஒரு நாட்டையே போர் தொடுக்க முயற்சி எதற்க்காக..???

ஒரு இனமே லட்ச கணக்கானோரை இழந்துகொன்டிருப்பதை.. மனித நேயமிக்க எவனும் பார்த்து கொண்டிருக்க மாட்டான்..
திபெத் தலாய்லாமா மற்றும் நேபாளத்தை எதற்கு பாது காக்கிறீர்கள்..
அரபு நாடினில் இருப்பவரையும்.. மலேசிய இந்தியர்களையும் பாது காக்கிறிர்கள்..

எங்கோ இருக்கும் பிஜி திவில்.. இந்திய வம்சாவளி வடஃ இந்தியன் பிரமராக இருக்கும் போது.. அவனுக்கு பிரச்சினை.. அங்கு வாழும் இந்திய வம்சா வழியினருக்கு பிரச்சினை என்றவுடன் 3 போர் கப்பல்கள் எதற்கு சென்றது>>??

வரலாறு தெரிந்து பேச வேண்டும்..

புத்தி சாலி தனமாக பேசுகிறோம் என்று.. பெண்கள் போலும்..
மற்ற இனத்தவர் கொடுக்கும் அறிக்கைகளையும் சொல்லாதீர்..

வாழ்க தமிழ்

தூயவன்
31-01-2009, 05:19 AM
அஞ்சலி
http://www.tubetamil.com/view_video.php?viewkey=dece0dae5d302675f160

கா.ரமேஷ்
31-01-2009, 05:39 AM
முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இலங்கை மக்களாக பாருங்கள் அது தான் அவர்களுக்கு உள்ள உரிமை அதை விடுட்டு அந்த மக்களை இரு பிரிவுகலக பிரித்து வேற்மை படுத்த வேண்டாம் இப்படி பிரிவினை பண்ணித்தான் அவர்களை பிரித்து வைத்து விளையாடுகின்றனர்
இதை முதலில் அவர்கள் புரிந்துவைக்கவும்

கார்கில் மற்றும் மும்பை தாக்குதலுக்காக இந்தியாவுக்காக எந்த இலங்கை(தமிழனும் தான்) மக்கள் உயிரை விட்டார்கள் அங்கு

இலங்கையில் த்மிழன் என்று பார்க்காமல் இலங்கை மக்களாக பாருங்கள் முதலில்

அப்படியே அயல்நாட்டு விவகாரம் என வைத்துக்கொண்டாலும்.இலங்கை தனி நாடு எனவே வைத்துக்கொள்வோம்...இவர்கள்(இந்திய அரசு) ரஜபக்சேவுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் மாமனா மச்சானா... இல்லை இலங்கை என்ற நாடு என்கே இருக்கிறது இந்தியாவுக்குள்ளா?ஏன் நீ ராடார் கொடுக்கிறாய் ராணுவத்தை கொடுக்கிறாய்.தைரியம் இருந்தால் அவர்கள் விடுதலை புலிகளிடம் தனிநாடாக மோதி பார்க்கட்டும் எந்த சர்வதேச நாடும் இலங்கைக்கு பங்களிக்காமல் இருக்கட்டும், அப்பொழுது பார்க்கலாம் அது ஸ்ரீஈ லங்காவா இல்லை...வேர ஏதாவது லங்காவா என்று...

எம் தமிழ் மக்களை அழிப்பதற்க்கு எம் வரிப்பணத்தில் இருந்து ஏன் உதவுகிறாய்???. முதலில் தமிழ் இனத்தை அழிக்கும் அவன் நட்பை முறி அப்புறம் பார்க்கலாம்...

முதலில் ஏன் இலங்கை இன பிரிவு ஏற்பட்டது என படித்து தெரிந்து கொள்ளுங்கள்.அல்லது மக்கள் தொலைக்காட்சி (ஈழம் வரலாறு நிகழ்ச்சி)IST 8:30 PM தவறாமல் பாருங்கள். உங்ளை போன்றவர்களுக்கு கொஞமாவது புரியும்.

உதயசூரியன்
31-01-2009, 05:45 AM
அப்படியே அயல்நாட்டு விவகாரம் என வைத்துக்கொண்டாலும்.இலங்கை தனி நாடு எனவே வைத்துக்கொள்வோம்...இவர்கள்(இந்திய அரசு) ரஜபக்சேவுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் மாமனா மச்சானா... இல்லை இலங்கை என்ற நாடு என்கே இருக்கிறது இந்தியாவுக்குள்ளா?ஏன் நீ ராடார் கொடுக்கிறாய் ராணுவத்தை கொடுக்கிறாய்.தைரியம் இருந்தால் அவர்கள் விடுதலை புலிகளிடம் தனிநாடாக மோதி பார்க்கட்டும் எந்த சர்வதேச நாடும் இலங்கைக்கு பங்களிக்காமல் இருக்கட்டும், அப்பொழுது பார்க்கலாம் அது ஸ்ரீஈ லங்காவா இல்லை...வேர ஏதாவது லங்காவா என்று...

எம் தமிழ் மக்களை அழிப்பதற்க்கு எம் வரிப்பணத்தில் இருந்து ஏன் உதவுகிறாய்???. முதலில் தமிழ் இனத்தை அழிக்கும் அவன் நட்பை முறி அப்புறம் பார்க்கலாம்...

.
100 சதம் சரியான வார்த்தை

ஈரோடு பகுத்தறிவு பகலவன் இருந்த இடம்..
அப்பெயரை வைத்து.. தார் ரோடு மாதிரி பேச கூடாது

வாழ்க தமிழ்

அமரன்
31-01-2009, 07:31 AM
முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இலங்கை மக்களாக பாருங்கள் அது தான் அவர்களுக்கு உள்ள உரிமை

தலை வணங்குகிறேன் தலைவா. இதை எங்கும் சொல்லுங்கள். குறிப்பாக 1956 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் அதிகாரத்திலிருந்த இருக்கின்ற இருக்கப்போகின்ற அத்தனை பேரிடமும் சொல்லுங்கள். உலக அரங்கில் இதைத்தான் அப்போதும் இப்போதும் எப்போதும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் சொல்லி வருகின்றோம். உள்ளூர்க்காரர்களுக்கும் உங்களைப் போல் பலர் சொல்லிவிட்டால் விடிஞ்சிடும்.

ஓவியன்
31-01-2009, 07:54 AM
ஈழத்தமிழர்களுக்காக இன்னுமொரு சகோதரன் இன்று மதுரையில் தீக்குளித்ததாக வரும் செய்தி கேட்டு கலங்கினேன்...

விடயம் உண்மைதானா...??

அமரன்
31-01-2009, 08:07 AM
ஓவியன்..
செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் முத்துக்குமாரின் தற்கொடைத் தீ ஐ நா முன்றலில் உண்ணா நோன்புப் போராட்டம் நிகழ்த்திய இளைஞனிலும் பற்றிக்கொண்டது. அதன் விளைவாக ஐ.நா அதிகாரிகள் நிகழ்விடத்திற்குப் பிரசன்னமாகி கணிசமான மக்கள் குழுமினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றிருக்கிறார்கள். ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு அவரசர அழைப்புகள் பறந்து ஐ.நா முன்றலில் கூடுதவதாக அறியமுடிகிறது. இந்த வகையில் முத்துக்குமாரன் தியாகம் வீண் போகவில்லை என்ற திருப்தி எனக்கு.

தூயவன்
31-01-2009, 11:31 AM
நல்ல செய்தி அமரன் அண்ணா.. ஐ.நா ஆவது எதாவது செய்யுமா ???

praveen
31-01-2009, 11:46 AM
ஈழத்தமிழர்களுக்காக இன்னுமொரு சகோதரன் இன்று மதுரையில் தீக்குளித்ததாக வரும் செய்தி கேட்டு கலங்கினேன்...

விடயம் உண்மைதானா...??

மதுரையில் அல்ல, அருகில் உள்ள திண்டுக்கல்லில், ஒருவர் தீக்குளித்திருக்கிறார். மருத்துவ கிசிக்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

பின்னர் கூடுதலாக பதிந்தது

இந்த நபர், இலங்கை பிரச்சினைக்காக தீக்குளித்ததாக தவறுதலாக பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது, பழைய குற்றவாளியான இந்த நபர் ஒரு போதைபொருள் விற்பனையாளர். இவர் தீக்குளித்தற்கும் இந்த திரி தலைப்பில் குறிப்பிடப்பட்டதற்கும் துளிக்கூட சம்பந்தமில்லை. இது முதலில் தீக்குளித்தவர் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகி விடும்.

ஆதவா
31-01-2009, 11:58 AM
ஈழத்தமிழர்களுக்காக இன்னுமொரு சகோதரன் இன்று மதுரையில் தீக்குளித்ததாக வரும் செய்தி கேட்டு கலங்கினேன்...

விடயம் உண்மைதானா...??

இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை... அவர் இறந்ததற்கு பின்னணியில் ஏதும் இருக்கலாம் என்று ஆராய்கிறார்கள்... முத்துகுமார் போல நீண்ட கடிதம் ஏதும் கைக்ககப்படவில்லை...

இவை நீளாமல் இருக்கவேண்டும்... இந்தியா இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறதே!!! :traurig001:
ஈரோடு பகுத்தறிவு பகலவன் இருந்த இடம்..
அப்பெயரை வைத்து.. தார் ரோடு மாதிரி பேச கூடாது

வாழ்க தமிழ்

என்ன செய்வது, அந்த பெரியவர் சொன்னது/கண்டதெல்லாம் உதாசீனப்படுத்திச் செல்லும் கூட்டத்தில் பலரும் இருக்கிறார்கள்..
நீங்கள் கோபப்பட்டே சொல்லியிருந்தாலும் ரசிக்க வைத்தது.. :)

மறத்தமிழன்
01-02-2009, 03:41 PM
அகிம்சைவழி- பலனில்லை... ஆயுதவழி- தீவிரவாதம்... அதனால்தான், அகிம்சைவழியில் தன்மீதான வன்முறை பிரயோகத்தின்மூலம் காட்டமாக தெரிவித்துள்ளான் இந்த வீரத்தமிழன். இதை பலனற்றதென்றோ, முட்டாள்தனமென்றோ தவறென்றோ சொல்லும் தகுதி நம்மில் எவருக்குமில்லை..! இந்தவளியேனும் சின்ன உதவியை ஈழத்தமிழனுக்கு தருமா என்ற ஆதங்கத்தின் பாதைதான் இது..! தீ அவனைமட்டும் சுடவில்லை... எம்மையும்தான்! ஈழத்து சிவகுமரன் தொடங்கிவைத்த வேள்வி தமிழக முத்துக்குமரனையும் தாண்டி நீள்கிறது. முற்றுப்புள்ளி வைக்க எந்தக் குமரன் வருவான்...!!?

ஓவியன்
13-02-2009, 02:59 PM
முத்துக்குமார் மூட்டிய தீ ஐநா முன்றலிலும் மூண்டிருக்கிறது..... (http://www.puthinam.com/full.php?2b1VoKe0dUcYe0ecAA4K3b4M6Dr4d2f1e3cc2AmS2d424OO3a030Mt3e)

இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கள் வீணே போகாது, நம் மக்களின் விடிவுக்கு வெளிச்சமாகதா......??

பாரதி
13-02-2009, 03:52 PM
மிகவும் வேதனையாக இருக்கிறது. எமனையும் எதிர்கொள்ள அஞ்சாது இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை விடுவது தொடர்வதைக் கண்டும் முழுமையான முயற்சி எடுக்க முன்வர மாட்டார்களா..?

ஓவியன்
13-02-2009, 04:34 PM
மேலதிக தகவல்களுக்கு... (http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28403)

அமரன்
13-02-2009, 06:08 PM
மிகவும் வேதனையாக இருக்கிறது. எமனையும் எதிர்கொள்ள அஞ்சாது இளைஞர்கள் தங்கள் இன்னுயிரை விடுவது தொடர்வதைக் கண்டும் முழுமையான முயற்சி எடுக்க முன்வர மாட்டார்களா..?

அண்ணா.. நேற்று வன்னியில் மாண்டவர்களுடன் சேர்த்து இன்னொருவர் என்ற கணக்கெடுப்புத்தான் நிகழும். வேறெதுவும் நிகழாது.