PDA

View Full Version : வரப் போகும் தேவதைக்கு....



சசிதரன்
28-01-2009, 04:46 PM
இன்னும் எத்தனை நாட்கள்தான் தவிக்க விடுவாய்...
ஒவ்வொரு நாளும் எத்தனை காதலை....
நீ இழக்கிறாய் தெரியுமா...
என்னை சந்திக்கும் நாளில்...
நிச்சயம் வருந்த போகிறாய்...

உன்னை எப்பொழுது பார்ப்பேனோ தெரியாது...
ஆனால் பார்த்தபின்... அந்த நொடியிலேயே...
துவங்கிவிடும் உன்னுடன் என் வாழ்வு...
இத்தனை காதலை நீ நிச்சயம் மறுக்க மாட்டாய்...
சந்திக்கும் நொடிக்காய் காத்திருக்கிறேன்...

என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...
முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...
உங்களை தொட்டுப் பறிக்க...
தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...
அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...

நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க...

உன் கைக் கோர்த்தபடி...
மழையில் நனைய வேண்டும்...
உன் விரல் பிடித்தபடி...
வாழ்வின் எல்லை வரை நடக்க வேண்டும்...

உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...

உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்...

அதிகம் காத்திருக்க வைக்காதே....
வீணாவது உனக்கான காதல்தான்...
பின் வந்து என்னை குற்றம் சொல்லாதே...

தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள்...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்...
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்...
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்...

செல்வா
28-01-2009, 04:52 PM
வசீகரிக்கும் வரிகள்.....
மனதைக் கவர்ந்த கவிதை
ஆர்பாட்டமில்லாத அமைதியானத்
தெளிந்த நீரோடை போல.....
வாழ்த்துக்கள் சசீதரன்.

ஆதி
29-01-2009, 12:31 PM
மெல்லிய வார்த்தைகளால் பின்னிய
தெள்ளிய நடைபயிலும் கவிதை..

தபூசங்கரின் வரிகளை போல
மனதுக்குள் மென்மையான ஏக்கத்தை
தூண்டு விடுகின்றன
தங்களின் வரிகளும்..

பாராட்டுக்கள் சசி..

சிவா.ஜி
29-01-2009, 02:16 PM
அழகான, மென்மையான...காதல் நிரப்பிய கவிவரிகள். அழகு. வரப்போகும் தேவதை ஒரு காதல் மழையில் நனையப்போகிறாள். அவள் தும்மலும் கவிதைகளை தூவப்போகின்றன.

வாழ்த்துகள் சசி.

arun
03-02-2009, 05:40 PM
வாவ் கவிதை சூப்பர் அழகான மற்றும் அற்புதமான வரிகள் பாராட்டுக்கள்

lenram80
03-02-2009, 06:09 PM
ஆறு நிரப்பட்டும் உன் காதல்!
அணை உடைக்கட்டும் உன் காதல்!
அவள் காதல் கடல்!
உன் காதல் வெள்ளம் தாங்குவாள்!
பொருத்திரு!
பின் உயிரையும் வாங்குவாள்! :)

அட!!! சும்ம அருமையாக இருக்குங்க சசி!!!

இன்பா
05-02-2009, 03:43 AM
மெய் சிலிர்க்கிறது ...

முழு கவிதையும் ரசித்தேன்...:)

நட்சத்திரங்களை பரிசாக அளிக்கிறேன்...

வசீகரன்
11-02-2009, 09:44 AM
...
தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள்...
உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்...
நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்...
முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
நானும் என் இதயமும்...

வார்த்தை விளையாடல்கள்... வசந்தமான வரிகள்..
அற்புதம் சசி...
ரொம்பவே அழகான கவிதை இது...
உங்கள் தேவதை மிகுந்த அதிர்ஷ்டசாலிதான்
இப்படி அழகழகான வரிகளில் கவி பாடினால்...
எந்த தேவதையும் சொக்கித்தான் போய் ஆகவேண்டும்...

நிரன்
11-02-2009, 10:29 AM
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...

வரப்போகும் காதலிக்காக இதயமும் முழுக்கு நிரப்பி வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் உணர்ச்சி வரி...


அன்பை மட்டும் கோர்த்துள்ள வரிகள், அங்கு அமைதி மட்டும் நிலவுகிறது. கவிதையைப் படிக்கும் போது இரு கைகளாலும் கதி்னை இறுகப்பொத்தி கண்களை மூடிக்கொண்டிருக்கும் போது அமைதியாக நகரும் ஒவ்வெறு செக்கன்களென.. அமைதியாக நகர்கிறது கவி வரிகள்.

ரசித்தேன்... வாழ்த்துக்கள் வெகுவிரைவில் உங்கள் கவிதையில் இருக்கும் அன்பு கிடைக்கப்போகும் காதலிக்கு. அதைக்கொடுக்கும் காதலனுக்கும்

ஷீ-நிசி
11-02-2009, 12:34 PM
உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...

நல்லாருக்கு! ரொம்பவே!

அந்தக் காதலி இதைப் படிக்கவேண்டும்! அவ்வளவுதான் நீங்கள் செய்யவேண்டியது!

வாழ்த்துக்கள்!

சசிதரன்
18-02-2009, 04:32 AM
ரசித்து பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...:)

samuthraselvam
18-02-2009, 05:52 AM
படிக்கப்படிக்க அற்புதமான கவதை வரிகள்..

உங்கள் தேவதை விரைவில் வர வாழ்த்துக்கள்..

(லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாங்களோ?)

காத்திருப்பது தான் காதலில் சுகம்...

உங்கள் காத்திருப்புகளில் பிறக்கட்டும் பல கவிதைக் குழந்தைகள்....

சசிதரன்
19-02-2009, 05:22 AM
பாராட்டியமைக்கு மிக்க நன்றி தோழி... காத்திருத்தல்தான் காதலில் சுகம்.. அனுபவமோ..:D:D:D

samuthraselvam
19-02-2009, 06:51 AM
பாராட்டியமைக்கு மிக்க நன்றி தோழி... காத்திருத்தல்தான் காதலில் சுகம்.. அனுபவமோ..:D:D:D

கண்டிப்பாக அனுபவம் தான். அந்த அனுபவம் இல்லாத ஆளே இல்லை. அப்படி நான் இருக்கிறேன் என கையை தூக்கினால் அது சுத்தப் பொய். காதலில் மட்டுமல்ல காத்திருப்பு என்பது எல்லா விசயங்களிலும் நல்லதுதான். ஏன் என்றால் காத்திருந்து பெறுவதற்கு மதிப்பு அதிகம்.