PDA

View Full Version : கைபேசியில் தமிழ் புத்தகங்களும் செய்முறையும்



பாரதி
28-01-2009, 10:08 AM
அன்பு நண்பர்களே,

ஜாவா நிறுவப்பட்ட கைபேசிகளில் தமிழ்ப்புத்தகங்களைப் படிக்க இயலும் என்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா...? இதைக் குறித்து நீங்கள் அறிந்த விடயங்களை இங்கே தாருங்கள். நானும் இதைக்குறித்து தேடிக்கொண்டிருக்கிறேன். இதை முறையாக தெரிவிப்போமெனில் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அனைவருக்கும் நன்றி.

செல்வா
28-01-2009, 10:17 AM
சொல்லுங்க சொல்லுங்க சீக்கிரம் சொல்லுங்க....

நிரன்
28-01-2009, 11:12 AM
ஆனால் சில கையடக்கத் தொலைபேசிகளுக்கு java போன்ற கையடக்கத் தொலைபேசி மென்பொருட்கள் இயங்காதே. அப்படியெனின் nokia வில் என்95 அதுபோன்ற நவீன ரக கையடக்கத் தொலைபேசியே பாவிக்க வேண்டும் நான் 6500 என்ற நொக்கியா பாவிக்கிறேன் என் சீரிஸ் க்கு பாவனை செய்யும் மென்பொருட்கள் அதில் இயங்குவதில்லை கையடக்க தொலைபேசி மென் பொருட்கள் என் சீரிஸ் ற்கே அதிகமாகவுள்ளது.

சுட்டிபையன்
28-01-2009, 11:18 AM
பாரதி உதவிக்கு இந்த சுட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15119)யை அனுகவும்,N 95, S60, 3ம் வகையை சேர்ந்தது சிம்பியன் மற்றும் ஜாவா இரண்டுமே உபயோகிக்கலாம், 6500, S 40 வகையை சேர்ந்தது அதில் ஜாவ மட்டுமே பாவிக்கலாம்

நிரன்
28-01-2009, 11:23 AM
இணையத்தில் தற்பொழுது நானும் ஒன்று கண்டெடுத்தேன் அதின் சுட்டியை
இங்கே தருகிறேன். இது ஒரு மென் பொருள் மூலம் இயங்கும் இம்
மென் பொருளின் பொயர் Readmaniac இதை உபயோகப்படுத்தியும்
தமிழில் வாசிக்கலாம் கீழே உள்ள தொடர்பை அழுத்தி வாசியுங்கள்


http://keralastudies.blogspot.com/2006/08/thirukkural-on-mobile-phon_115678068805896452.html

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சுட்டி.. நான் கொடுத்த மென்பொருளில் என் போன் மொடலையே காணல்ல:traurig001::traurig001:

பாரதி
28-01-2009, 11:40 AM
கருத்துக்களுக்கு நன்றி செல்வா, நிரன், சுட்டிப்பையன்.

அன்பு சுட்டிப்பையன், தகவலுக்கு நன்றி. நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் அந்த தளத்தில் இருக்கும் புத்தகங்களை பதிவிறக்கி கைபேசியில் காண வேண்டும் என்பது சரி. ஆனால் நம்மிடம் இருக்கும் சில தகவல்களை நாமே மென்புத்தகமாக்கி காண வேண்டும் என்பதும் இந்தத்திரியின் முக்கிய நோக்கம்.

நிரன் தந்திருக்கும் சுட்டி அவ்விதமான பணிகளுக்கு உதவிகரமானது. அதைப்பதிவிறக்கி எவ்விதம் கைபேசிக்கான தமிழ் மென்புத்தகம் செய்வது என்றும் இங்கே விளக்குவீர்களா நண்பர்களே..?

ஸ்ரீதர்
14-02-2009, 07:48 AM
கருத்துக்களுக்கு நன்றி செல்வா, நிரன், சுட்டிப்பையன்.

அன்பு சுட்டிப்பையன், தகவலுக்கு நன்றி. நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் அந்த தளத்தில் இருக்கும் புத்தகங்களை பதிவிறக்கி கைபேசியில் காண வேண்டும் என்பது சரி. ஆனால் நம்மிடம் இருக்கும் சில தகவல்களை நாமே மென்புத்தகமாக்கி காண வேண்டும் என்பதும் இந்தத்திரியின் முக்கிய நோக்கம்.

நிரன் தந்திருக்கும் சுட்டி அவ்விதமான பணிகளுக்கு உதவிகரமானது. அதைப்பதிவிறக்கி எவ்விதம் கைபேசிக்கான தமிழ் மென்புத்தகம் செய்வது என்றும் இங்கே விளக்குவீர்களா நண்பர்களே..?


அன்பு நண்பர்களே !

இந்த சுட்டியில் உள்ள Readmaniac மென்பொருள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வாரம் மண்டையை உடைத்து தமிழில் ஒரு சோதனைப்புத்தகம் உருவாக்கியுள்ளேன். அதன் சுட்டி இதோ

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=455

பதிவிறக்கம் செய்த இந்த கோப்பினை (jar format) உங்கள் கைபேசியில் பதிந்து கொள்ளுங்கள். பின் அதனை உங்கள் கைபேசியில் இன்ஸ்டால் (Install) செய்து கொள்ளுங்கள். இன்ஸ்டால் செய்தபின் இந்த புத்தகத்தினை உங்களால் படிக்க முடியும்

பின் குறிப்பு :- எனது கைபேசி சோனி எரிக்சன் w700. இந்த கைபேசியில் என்னால் இதை நன்றாக படிக்க முடிந்தது.


இந்த முயற்சியில் எனக்கு வந்த சந்தேகங்கள்.

1) இந்த மென்பொருளில் truetype/TSC font களில் மட்டுமே புத்தகம் செய்ய முடிகிறது. ஆகவே இந்த எழுத்துறுவில் தட்டச்சுவதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். மற்ற எழுத்து முறைகளில் இருந்து யூனிகோடிற்கு மாற்ற நம் மன்றத்திலேயே கன்வர்டர் உள்ளது. யூனிகோடில் இருந்து மற்ற எழுத்துருவிற்கு மாற்ற எதாவது எளிய வழி முறை இருந்தால் மன்ற நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது மட்டும் சாத்தியம் என்றால். தமிழ் கைபேசி புத்தகங்களை மிக எளிதாக உருவாக்கலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாரதி
14-02-2009, 11:49 AM
ஆஹா.... ஆஹா.....! சபாஷ் ஸ்ரீதர்!!

இதைத்தான், இந்த முயற்சியைத்தான் நான் எதிர்பார்த்தேன். எனது இதயங்கனிந்த வாழ்த்து. நானும் இம்மாதிரி முன்பே புத்தகங்களை உருவாக்கி இருந்தேன். உங்களுடைய விடாமுயற்சியை பாராட்டுகிறேன். மேலும் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கிறேன். படிப்படியாக இதை எவ்விதம் செய்வது என்பதை மன்ற உறவுகளுக்கு கற்றுத்தருவோமா...?

கைபேசியில் தமிழ் மின்நூல்களை படிக்க என்ன தேவை? ஜாவா வசதியுடன் கூடிய கைபேசி. அதாவது உங்களிடம் இருக்கும் கைபேசியில் வசதி MIDP 1.0 MIDP 2.0 (Mobile_Information_Device_Profile )வசதி இருக்கிறதா எனப்பார்க்க வேண்டும்.
http://j2me.ngphone.com/midp2/nokia.htm

கணினியுடன் உங்கள் கைபேசியை அகச்சிவப்புகதிர் மூலமோ, ப்ளூடூத் மூலமோ அல்லது டேடா கேபிள் மூலமோ இணைக்கக்கூடிய வசதி இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

இவை இருப்பின் நாம் விரும்பியவற்றை மின்நூல்களாக மாற்றி கைபேசியில் காண இயலும்.

அன்பு ஸ்ரீதர், யுனிகோடிலிருந்து திஸ்கிக்கு மாற்ற சுரதாவின் மென்பொருளான எழுத்துரு மாற்றி பயன்படும். இதை http://www.suratha.com/uni2tsc.htm (http://www.suratha.com/uni2tsc.htm)சுட்டியிலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம்.

ஒருவேளை புதியதாக தட்டச்ச வேண்டுமெனில், நேரடியாக எ-கலப்பையை கொண்டே தட்டச்சலாம். இதை கான்பிகரேசனில் காண முடியும். பொதுவாக திஸ்கி எழுத்துருவில் தட்டச்ச Alt+2 அல்லது Alt+3 விசைகளை பயன்படுத்த வேண்டி இருக்கும். திஸ்கி எழுத்துருவில் தட்டச்சும் போது, டாஸ்க்பாரில் இருக்கும் கலப்பை ஐகானில் "அ" ஊதா நிறத்தில் காணப்படும்.

மீண்டும் எனது பாராட்டினைக்கூறி, இதைத்தொடரவேண்டும் என்றும் உங்களை வேண்டுகிறேன். நன்றி.

ஸ்ரீதர்
16-02-2009, 04:44 AM
நன்றி பாரதி!

நீங்கள் கொடுத்த சுட்டியை உபயோகித்துப் பார்த்தேன். இதில் “இ” எழுத்து இயங்கவில்லை. உங்கள் உதவியை கோருகிறேன். குறைகள் அற்ற முறையில் வெற்றி கண்டதும் நிச்சயம் நீங்கள் கூறியது போல அனைத்து மன்ற நண்பர்களுடன் இதனை (புத்தகம் செய்யும் முறையினை) பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி

பாரதி
20-02-2009, 01:58 PM
அன்பு ஸ்ரீதர்,

இப்போதும் கூட பொங்குதமிழைப் பயன்படுத்தி "இ" தட்டச்சிப்பார்த்தேன். பிழையின்றி "இ" வருகிறது. உங்களுக்கு வரும் பிழை என்ன என்பதை படமாக எடுத்து இட இயலுமா..? அப்படி வருகிறதெனில் அதைக்களைய முயற்சி எடுக்க இயலும்.

வேறு ஏதேனும் தகவல் வேண்டுமெனில் தனிமடல் அனுப்புங்கள். இணைய வசதி குறைபாடு காரணமாக அவதியுறுவதால் உடன் பதிலளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

உங்கள் முயற்சி வெகு விரைவில் வெற்றி பெறும் என்பதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை.

ஸ்ரீதர்
21-02-2009, 06:55 AM
அன்பு நண்பர்களே !

மீண்டும் ஒரு வெற்றியுடன் உங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் கைபேசி புத்தகம் உருவாக்கும் முறையினை இங்கே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளியுங்கள்.

இராமருக்கு பாலம் கட்ட உதவிய சிறு அணில் போல தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ்மன்றத்திற்கு என் சிறு பஙகளிப்பு.

இதைப்பயன்படுத்தி தமிழ்கைபேசி புத்தகங்கள் நம் தமிழ்மன்றத்தில் வர ஆரம்பித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

இந்த முயற்சியில் என்னை ஊக்குவித்த நண்பர் பாரதிக்கு எனது சிறப்பு வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.

இங்கே சரியாக பார்க்க/படிக்க முடியாதவர்கள் எனக்கு தனி மடலிட்டால் இந்த முறையின் PDF கோப்பினை அனுப்புகிறேன்.

இதோ தமிழ் புத்தகம் செய்யும் முறை.

=========================================================

அன்பு நண்பர்களே !

ஓரளவு இதில் இப்போது வெற்றி கண்டு உள்ளேன். இதோ தமிழ் கைபேசி புத்தகம் செய்ய நான் பின்பற்றிய முறை :-

தேவையான மென்பொருள்கள் :- (என்னங்க சமையல் குறிப்பு போல இருக்கா? செஞ்சு பாருங்க சமையலைவிட சூப்பரா இருக்கும் தமிழ்ன்னா சும்மாவா? )

1) Readmaniac மென்பொருளை பதிவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். அதன் சுட்டி இதோ

http://www.deep-shadows.com/hax/ReadManiac/download.htm

2) இந்த மென்பொருள் TSCII எழுத்துரு (font) கொண்டு இயங்கும் என்பதால் அதில் டைப் செய்ய வசதியாக இருக்கும் மற்றொரு மென்பொருளான சுவடி என்ற மென்பொருளையும் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். அதன் சுட்டி இதோ

http://www.tamilnation.org/fonts/Suvadi.zip

சுவடி மென்பொருளுக்கு பதிலாக மைரோசாப்ட் வேர்ட் கோப்பில் யூனிகோட் முறையில் (NHM ரைட்டர் கொண்டு) டைப் செய்து கீழ்கண்ட சுட்டி மூலம்

http://www.suratha.com/uni2tsc.htm

அதை TSC எழுத்தாகவும் மாற்றிக்கொள்ளலாம். உங்களுக்கு சுலபமான முறையை பின்பற்றிக்கொள்ளுங்கள்.

முதலில் நம் கைபேசியில் தமிழைப்படிக்க எழுத்துரு உருவாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

கீழ் கண்ட முறையை பின் பற்றுங்கள் :-

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_1.JPG

Start -> Programs -> Readmaniac -> Font Creation Utility


இதில் ஒரு விண்டோ திறக்கும் அதில் System Fonts என்பதில் Mylai TSC எழுத்துறுவை தேர்ந்தெடுங்கள். எழுத்துருவின் அளவு (font size) 12 என தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். பிறகு Create Button இ அழுத்துங்கள்.
http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_2.JPG

File save as என்று கேட்கும்போது உங்கள் Desktop இல் சேமித்துக்கொள்ளுங்கள். நம் சோதனைக்காக Tamil என்று வைத்துக்கொள்வோம்.


http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_3.JPG

இப்போது தமிழ் கைபேசி எழுத்துறு உருவாக்கியாகிவிட்டது. இனி தமிழ் புத்தகம் எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

உங்களுக்கு தேவையான விவரங்களை யூனிகோட் முறையில் (நான் NHM writer கொண்டு மைக்ரோசாப்ட் வேர்ல் கொண்டு செய்தேன்) தட்டச்சு செய்துகொள்ளவும். நான் எடுத்துக்கொண்ட சில வரிகள் இதோ :-

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

அஸ்தமனம் எல்லாம் நிரந்தரம் அல்ல
மேற்கினில் விதைத்தால் கிழக்கினில் முளைக்கும்.

இந்த வரிகளை மவுஸ் கொண்டு செலெக்ட் select செய்து Copy செய்யவும்

இப்போது http://www.suratha.com/uni2tsc.htm இணைய தளத்திற்கு சென்று பிரதி (copy) எடுத்த வரிகளை மேலே உள்ள பெட்டியில் பேஸ்ட் (Paste) செய்து உங்கள் மவுஸ்ஸில் ஒரு கிளிக் செய்யவும்.

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_4.jpg

கீழே உள்ள பெட்டியில் திஸ்கி எழுத்துக்கள் கிடைக்கும். அதை பிரதி (copy) செய்துகொண்டு உங்கள் கணிணியில் டெஸ்க்டாப் (desktop) இல் ஒரு text document உருவாக்கி அதில் பேஸ்ட் செய்துகொள்ளவும். உங்கள் txt கோப்பில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லையெனில் கவலையடைய வேண்டாம். அதை அப்படியே விட்டுவிடலாம்.

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_5.jpg

இந்த text கோப்பினை tamil.txt என பெயரிட்டு Desktop ல் சேமித்துக்கொள்வோம்.

புத்தகம் உருவாக்குவதில் 75 சதவீதம் முடித்துவிட்டோம். இன்னும் சில படிகளே உள்ளன. அதையும் இப்போது செய்து முடித்துவிடுவோம்.

இப்போது

Start -> Program files -> Readmaniac -> Readmaniac Building wizard என்பதை தேர்வு செய்து ஒரு கிளிக் செய்யவும்.

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_6.jpg


இப்போது Wizard Language Selection என்று ஒரு விண்டோ திறக்கும். அதில் English செலக்ட் செய்து Next அழுத்தவும்

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_7.jpg

அடுத்த விண்டோவிலும் Next அழுத்தவும்.

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_8.jpg

அடுத்த விண்டோவில் இரண்டாவது option ஆன Build midlet with embedded book(readmaniac lite) என்பதை தேர்வு செய்துகொள்ளவும். Next அழுத்தவும்.
http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_9.jpg
இதில் Select Phone model என்று ஒரு கேள்வி வரும் உங்கள் போன் மாடலை தேர்வு செய்து கொள்ளவும். Jar size limit என்பதை மாற்றவேண்டாம். பிறகு Next கிளிக் செய்யவும்.
http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_10.jpg


அடுத்து வரும் Select Keys configuration என்பதிலும் உங்கள் போன் மாடலை தேர்வு செய்து Next கிளிக் செய்யவும். அடுத்து Select Interface Language for midlet என்பதிலும் English – Central Europe என்பதை கிளிக் செய்து Next கிளிக் செய்யவும்.

இப்போதுதான் முக்கிய கட்டத்திற்க்கு வந்திருக்கிறோம். அடுத்து embedded fonts என்று ஒரு விண்டோ திறக்கும். அதில் 2 , 4 மற்றும் 5 மட்டும் தெரிவு செய்யத்தக்க வகையில் இருக்கும். அதில் முதலில் 2 ஆம் எண்ணுள்ள மெனுவை தெரிவு செய்து அதில் Custom என்றொரு option யை தெரிவு செய்யவும். இப்போது நாம் முதலிலேயே உருவாக்கிய tamil.fnt கோப்பினை தெரிவு செய்து கொள்ளவேண்டும். இதே முறையினை 4 மற்றும் 5 ஆகிய மெனுக்களிலும் செய்து Next கிளிக் செய்யவும்
http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_11.jpg

இப்போது Select Book to Embed என்றொரு விண்டோ வரும். அதில் +Add என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_12.jpg

அடுத்து வரும் Open என்ற விண்டோவில் நாம் ஏற்கனவே உருவாக்கிவைத்துள்ள tamil.txt என்ற கோப்பினை select செய்யவும்.

http://www.tamilmantram.com/photogal/images/4430/large/1_picture_13.jpg

பின் Next இனை கிளிக் செய்யவும். பின் வரும் இரண்டு மெனுக்களிலும் Next என்பதை கிளிக் செய்யவும். கடைசியாக Save As என்று கேட்கும்போது உங்கள் புத்தக கோப்பிற்கு ஒரு பெயரினை தெரிவு செய்து Save பட்டனை அழுத்தவும். நம் உதாரணத்திற்கு tamilbook என நான் பெயரிட்டுள்ளேன்.

இப்போது நம் தமிழ் கைபேசி புத்தகங்கள் தயார். நீங்கள் save செய்த இடத்தில் tamilbook.jad மற்றும் tamilbook.jar என இரண்டு கோப்புகள் இருக்கும். அவை இரண்டையும் உங்கள் கைபேசியில் copy செய்து Install செய்துகொள்ளுங்கள். தமிழ் புத்தகத்தை உங்கள் கைபேசியில் படித்து மகிழுங்கள்

அமரன்
21-02-2009, 07:42 AM
ஆகா.. ஆகா.. உள்ளம் பொங்குது ஸ்ரீதர். நெஞ்சார்ந்த நன்றி.. பாராட்டு.. வாழ்த்து.. இந்த திரியினை ஒட்டிவைக்க பரிந்துரைக்கிறேன்.

நிரன்
21-02-2009, 12:15 PM
மிகவும் நன்றி ஸ்ரீதர்.

உங்கள் பணியில் மனம் நெகிழ்கிறது. பல வழிமுறைகளை நானும் உபயோகித்தேன் ஆனால் என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை. இது வெற்றியளிக்குமென நினைக்கிறேன்.

இத்திரியின் ஆசானுக்கும் என் நன்றிகள்.

ஸ்ரீதர்
21-02-2009, 12:43 PM
மிகவும் நன்றி ஸ்ரீதர்.

உங்கள் பணியில் மனம் நெகிழ்கிறது. பல வழிமுறைகளை நானும் உபயோகித்தேன் ஆனால் என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை. இது வெற்றியளிக்குமென நினைக்கிறேன்.

இத்திரியின் ஆசானுக்கும் என் நன்றிகள்.
நன்றி நிரன்!

உங்கள் கைபேசி நிறுவன பெயர் மற்றும் மாடல் எண் எனக்கு தனி மடலிடுங்கள். நான் உங்களுக்காக முயற்சித்துப்பார்க்கிறேன்.

பாரதி
21-02-2009, 01:11 PM
:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

நான் முதன் முதலில் தமிழ் மின்னூல் உருவாக்கி கைபேசியில் கண்டபோது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அம்மகிழ்ச்சியை மீண்டும் உங்களின் பதிவைக் கண்ட போது பெற்றேன். சிந்திக்கத் தூண்டினால் போதும், நிச்சயம் சாதிப்பார்கள் என்ற என் நம்பிக்கையை நிலை நாட்டியதற்கு நன்றி. என்னைத் தவிர்த்து, யாரேனும் இந்த முயற்சியை செய்ய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த உங்களால் இந்தத்திரியின் எண்ணம் ஈடேறியது. உண்மையிலேயே மனம்திறந்து பாராட்டுகிறேன்; இந்த விடா முயற்சி இருக்கும் வரை வெற்றி என்றும் உங்கள் கைகளில் ஸ்ரீதர்.

அறிஞர்
23-02-2009, 07:03 PM
நன்றி பாரதி அண்ணா...
சிலரின் விருப்பப்படி.. இந்த பதிவை ஒட்டிவைக்கிறேன்.

மஸாகி
17-03-2009, 04:29 PM
நல்லதொரு பதிவு - நல்லதொரு முயற்சி..
தொடரட்டும் - வாழ்த்துக்கள்.

நட்புக்கு - மஸாகி
17.03.2009

சூரியன்
18-03-2009, 10:05 AM
மேலும் இந்த தளத்தில் கைபேசிக்கான மின்புத்தகங்கள் கிடைக்கின்றன.

http://www.fublish.com/beta/

புதியவன்
29-05-2009, 06:05 PM
எங்கும், தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையுடைய எனக்கு மட்டு மல்ல, தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் நல்லதொரு பதிவாக அமைந்துள்ளது. நன்றி வாழ்க, வளர்க உங்கள் சேவை.

நாஞ்சில் த.க.ஜெய்
03-12-2010, 06:44 AM
நானும் ஸ்ரீதர் பதிவில் கூறிய படி முயசித்து பார்த்தேன் நான் பயன் படுத்தும் 3110 கிளாசிக் அலை பேசியில் இதனை பதிவு செய்து வசிக்க முயற்சி செய்கையில் ஜாவா லாங் எர்ரர் என்று வருகிறது .இதற்க்கு தீர்வு என்ன நண்பர்களே?.
என்றும் உங்கள்
த.க.ஜெய்

jamunaarumaidoss
22-10-2011, 05:41 AM
ram enral enna

jamunaarumaidoss
22-10-2011, 05:49 AM
போடோஷாப் மென்பொருள் தேவைப்படுகிறது

velu86
25-03-2013, 08:36 AM
nokia asha 200, micromax corean போன்ற மொபைல் போன்களுக்கு எடுக்க வழி சொல்ல வேண்டும்.

அனுராகவன்
16-08-2014, 03:24 AM
நன்றி....