PDA

View Full Version : இம்சைகள்

ஆதவா
28-01-2009, 06:48 AM
இம்சைகள்

அதிகாலைப் பொழுதில்
கனவைத் துரத்திவிட்ட நொடியிலிருந்து
எனக்கான இம்சைகள் ஆரம்பிக்கின்றன

அவை
எழுதுபொருளும் காகிதமுமாய்
பல்துலக்கும் முன்
துருத்திக் கொண்டு நிற்கின்றன

என் சலிப்பு தழுவிய இம்சைகள்
மோகனப்புன்னகை ஒன்றை
இதழோரம் புதைத்து
விழியோரம் காத்துக்கிடக்கின்றன

செல்லும் வழியெங்கும் இரைந்து
என் பாதச்சுவட்டை
அரித்துச் சிரிக்கின்றன

இஷ்டமில்லாத என்மீது தழுவி
மூர்க்கத்தனமாய் முத்தங்களைப்
பொழிகின்றன

கொடும்பகல் அடங்கிய இருளில்
என் படுக்கைக்கு அருகே
மாளாத மயக்கத்துடன்
நெளிந்து வளைகின்றன

இம்சைகளிடமிருந்து இன்னும்
விடுபடாத சூழ்நிலையில்
பொழுது புலர்கிறது

இம்சைகள் ஆரம்பிக்கின்றன மீண்டும்

பாரதி
28-01-2009, 07:20 AM
அன்பு ஆதவா,
இன்னல்களிலேயே இன்றைய பொழுதும் கழிந்து கொண்டிருக்கிறதா?
கவிதையில் ஒருமை, பன்மை சரியாக கையாளப்பட்டிருக்கிறதா என்று ஒருமுறை பாருங்களேன்.
"கொடும் பகல் அடங்கிய இருளில்" - இரு பொருள் வருகிறதே.

கவிதை இம்சைகள் இன்னும் தொடரட்டும்.

ஆதவா
28-01-2009, 08:24 AM

இன்றைய பொழுதல்ல.... அன்றைய பொழுதுகள் அண்ணா...

நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. ஆனால் சில இடங்களில் மாறுதல் செய்திருக்கிறேன்... பாருங்கள்.

நன்றி அண்ணா

சசிதரன்
28-01-2009, 04:17 PM
பல சமயங்களில் என்னையும் ஆளும் இம்சை ஆதவா இது. வார்த்தைகளில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...:)

செல்வா
28-01-2009, 05:04 PM
மனிதன் உருவானதிலிருந்தே பலவிதமான இம்சைகள் அவனைத் தொடரவாரம்பிக்கின்றன.

இங்கே கவிதை இம்சைகளைச் சொல்லுகிறீர்கள் என எண்ணுகிறேன்.
எதையும் குறிப்பிட்டுச் சொல்லாததால்
பொருந்துகின்ற எதையும் பொருத்திப் பார்க்கலாம்...
இதே இம்சைகள் மன்றம் வரும் பலருக்கும் இருக்கும்...
இறக்கி வைக்க முடிகிறது உங்களால்....
இறக்கும் வழிதெரியாது இம்சைகளை சுமந்து கொண்டே இருப்போர் பலர்
அவர்களில் அடியேனும் ஒருவன்.

சிவா.ஜி
28-01-2009, 06:37 PM
செல்வா சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். இமசைகள் தொடராதவரே இல்லை. இமசைகளை இப்போதெல்லாம் வாரியணைத்து இடுப்பில் வைத்துக்கொள்(ல்)கிறேன். ஆதவாவின் இமசைகள் வாழ்க. அதனால் அழகான கவிதையொன்று நமக்கு கிடைத்ததே.

அழகான வார்த்தையாடல் ஆதவா...அருமை. வாழ்த்துகள்.

ஆதவா
29-01-2009, 01:22 AM
பல சமயங்களில் என்னையும் ஆளும் இம்சை ஆதவா இது. வார்த்தைகளில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...:)

மிக்க நன்றி சசிதரன்.

மனிதன் உருவானதிலிருந்தே பலவிதமான இம்சைகள் அவனைத் தொடரவாரம்பிக்கின்றன.

இங்கே கவிதை இம்சைகளைச் சொல்லுகிறீர்கள் என எண்ணுகிறேன்.
எதையும் குறிப்பிட்டுச் சொல்லாததால்
பொருந்துகின்ற எதையும் பொருத்திப் பார்க்கலாம்...
இதே இம்சைகள் மன்றம் வரும் பலருக்கும் இருக்கும்...
இறக்கி வைக்க முடிகிறது உங்களால்....
இறக்கும் வழிதெரியாது இம்சைகளை சுமந்து கொண்டே இருப்போர் பலர்
அவர்களில் அடியேனும் ஒருவன்.

ஆமாம் செல்வா கவிதை என்று சொல்வதைக் காட்டிலும் இன்னும் பலதை சொல்லலாம்.. அதனால்தான் இம்சைகளோடு நிறுத்திவிட்டேன்..

நன்றி நண்பரே!

செல்வா சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். இமசைகள் தொடராதவரே இல்லை. இமசைகளை இப்போதெல்லாம் வாரியணைத்து இடுப்பில் வைத்துக்கொள்(ல்)கிறேன். ஆதவாவின் இமசைகள் வாழ்க. அதனால் அழகான கவிதையொன்று நமக்கு கிடைத்ததே.

அழகான வார்த்தையாடல் ஆதவா...அருமை. வாழ்த்துகள்.

மிக்க நன்றி சிவா.அண்ணா.

எண்ணங்கள் என்றொரு தொடர் எழுதியிருந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.. அதன் தொடர்ச்சிதான் இக்கவிதை.

ஆதி
29-01-2009, 11:01 AM
அழகிய சொற்கோவைகள் ஆதவா..

அதிலும் இவை அருமை..

என் சலிப்பு தழுவிய இம்சைகள்
மோகனப்புன்னகை ஒன்றை
இதழோரம் புதைத்து
விழியோரம் காத்துக்கிடக்கின்றன

இந்த வரிகளில்
//கொடும்பகல் அடங்கிய இருளில்//

இருளுள் அடங்கிய பகல்
பகல்மேல் படர்ந்த இருள் என்றும்

பாரதியண்ணன் சொன்னது போல் இரு பொருள்கள் உள்ளது..

ஆயினும் இரு பொருளையும் தொடர்ந்து வரும் வரிகள் தாங்கி பிடிக்கின்றன..

தொடக்க புள்ளியாகவும் முற்று புள்ளியாகவும் இம்சையை வகை படுத்திருப்பது மிக அருமை ஆதவா..

பாராட்டுக்கள்..

பென்ஸ்
30-01-2009, 12:09 AM
காதல் இம்சை என்று அறிந்தே அவலாய் பற்றி கொள்ளும் மனது...
இங்கு கவிதை மீது காதல் கொண்டவனுக்கு , கவிதையும் இம்சையாய்...

சீ போ என்று காதலி சொன்னாலும் விலகாத காதலன் போல் பகலிலும்
மன்மத அம்பினால் காயபட்டவளாய் இரவிலும் இந்த கவிதையில் அவஸ்தை படுவதை
நான் ரசிக்கிறேன் இந்த வரிகளில்....

ஆனால்

கனவினை துரத்தி எழும்பிய நீங்கள்...
இம்சையின் சூழலில் விடுபடாத சூழலில் மீண்டும் எழுவதாக முடித்தது முரனோ????

இப்படிக்கு புதுமுகம்

ஆதவா
30-01-2009, 12:17 AM
மிக்க நன்றி ஆதி... எனக்கும் பிடித்தமான வரிகள்தாம் அவை..
-----------------------------------------------------------

நன்றி புதியவரே! :D

தொடர்ந்து இம்சிக்கிறாள்.... ஒருநாளில் முடிவதாகத் தெரியவில்லை. திரும்பிப் பார்த்தால் நாட்கள் மட்டுமே நகர்ந்து கொண்டிருக்கிறது.. நாளும் புதுப்புது இம்சைகள்...

நன்றி பென்ஸ் அண்ணா.. :)

இளசு
02-03-2009, 10:54 PM
இம்சைகளும் இனிக்கலாம்..ஆதவா..

காதல், கவிதை, குழந்தை என..

செல்வா, சிவா, இனிய பென்ஸ் - விமர்சனங்கள்
இம்சையின் இனிய விளைவுகள்... ரசித்தேன்!