PDA

View Full Version : இலங்கைக்கு தமிழகம் வழியாக இந்திய இராணுவ பீரங்கி அனுப்பப்பட்டதா?: அதிர்ச்சித் தகவல்தூயவன்
28-01-2009, 03:05 AM
இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி திடீரென இன்று செவ்வாய்கிழமை இலங்கை சென்றுள்ளார். இந்நிலையில் இலங்கை இராணுவத்திற்கு தமிழகம் வழியாக கொச்சி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் இந்தியா இராணுவ தளபாடங்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் சிங்கள இராணுவம் கண்மூடித்தனமாக எறிகணை, மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. திங்கட்கிழமை முல்லைத்தீவில் சிங்கள இராணுவம் நடத்திய சரமாரியான குண்டு வீச்சுத் தாக்குதலில் பெண்கள், கைக்குழந்தைகள், சிறுவர், சிறுமியர் உள்பட 300 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1000 ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு தற்போது நவீன ரக பீரங்கிகளையும், இராணுவ தளபாடங்களையும் அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வழியாக கொச்சி கொண்டு செல்லப்பட்ட இந்த இராணுவ தளபாடங்கள் அங்கிருந்து திங்கட்கிழமை கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீரங்கியை ஏற்றிச் சென்ற ரெயிலை ஈரோட்டில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது, ரெயில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தபோது, பீரங்கி வண்டி நின்றது. விசாரித்ததில் இந்த பீரங்கி இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர், இராணுவத் தடபாளங்களும், பீரங்கிகளும் ஈரோட்டில் இருந்து கொச்சி வழியாக இலங்கைக்கு அனுப்பப்படுவதாக கூறியதோடு, செய்தித்தாள்களில் வந்த புகைப்படங்களையும் காண்பித்தனர்.

இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசின் இச்செயலை பல்வேறு தமிழ் அமைப்புகளும் கண்டித்துள்ளதோடு, இதுகுறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இராணுவ தளபாடங்களை அனுப்பியதை கண்டித்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

http://i39.tinypic.com/oldnt.jpg

நன்றி : தமிழ்வின்

அய்யா
28-01-2009, 10:25 AM
இந்த பீரங்கிகள் இலங்கைக்குத்தான் போகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது..?

ஆதவா
28-01-2009, 02:34 PM
நம்மாளுங்கள கொல்ல வேற ஒருத்தன் வேணாம்யா... நாமளே போதுமே!!!

அய்யா அவர்களே!

இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்ன? இல்லை, பக்கத்து நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனவா?

அதான், திருவனந்த புரம் என்று தினத்தந்தி காரர்களே சொல்லிட்டாங்கள்ல... பிறகு வேற எங்க போகும்??? தமிழ் மக்களை அழிக்கத்தானே!!!

ஆதவன்...

நிரன்
28-01-2009, 02:43 PM
அதான், திருவனந்த புரம் என்று தினத்தந்தி காரர்களே சொல்லிட்டாங்கள்ல... பிறகு வேற எங்க போகும்??? தமிழ் மக்களை அழிக்கத்தானே!!!

ஆதவன்...

safe ஆக போய் சேர்திட்டுதாம் என்றும் செய்திகள் பரவுது:D:D:D:D:D

160சீனா + 100 இந்தியா:confused:

தூயவன்
28-01-2009, 04:23 PM
இந்த பீரங்கிகள் இலங்கைக்குத்தான் போகின்றன என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது..?

தமிழ்நாட்டுல ஏதாவது சண்டையா என்ன ?

160சீனா + 100 இந்தியா
கோவிந்தா..... கோவிந்தா.........

அய்யா
28-01-2009, 04:52 PM
நம்மாளுங்கள கொல்ல வேற ஒருத்தன் வேணாம்யா... நாமளே போதுமே!!!

அய்யா அவர்களே!

இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்ன? இல்லை, பக்கத்து நாடுகள் போரிட்டுக் கொண்டிருக்கின்றனவா?

அதான், திருவனந்த புரம் என்று தினத்தந்தி காரர்களே சொல்லிட்டாங்கள்ல... பிறகு வேற எங்க போகும்??? தமிழ் மக்களை அழிக்கத்தானே!!!

ஆதவன்...

தினத்தந்தி செய்திகூட திட்டவட்டமாகச் சொல்லவில்லை ஆதவா! சந்தேகிக்கப்படுகிறது; பேசிக்கொள்கிறார்கள் என்றுதான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆதாரம் கேட்பதை வைத்து இனப்பற்றை எடைபோடுவது விந்தைதான்!

அறிஞர்
28-01-2009, 05:15 PM
தெளிவான செய்திகள் இல்லாவிட்டாலும்... இலங்கைக்கு தான் என யூகிக்கமுடிகிறது.
இது ஒரு தேவையற்ற செயல்..
எரிகிற தீயில் எண்ணெய் ஊறுவது போல்...

Mano.G.
29-01-2009, 01:55 AM
நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லைனா,
வழியில போறவனும் தலையில
தட்டித்தான் பார்ப்பான்.
தமிழர்கள் ஏங்கு இருக்காங்களோ
அங்கெல்லாம் இதே கதிதான்.

erode
30-01-2009, 09:38 AM
இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்னஇது ஒரு முட்டாள்களின் கூற்று தான், நம் நாட்டின் பாதுக்காப்புக்கு எங்கு வேண்டும்னாலும் போகலாம் , நாம் முதலில் நமது நாட்டு குடிமகனாக இருக்கலாம்

அன்புரசிகன்
30-01-2009, 10:21 AM
இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்னஇது ஒரு முட்டாள்களின் கூற்று தான், நம் நாட்டின் பாதுக்காப்புக்கு எங்கு வேண்டும்னாலும் போகலாம் , நாம் முதலில் நமது நாட்டு குடிமகனாக இருக்கலாம்
மனுசனா இருக்க. அப்புறம் குடிமகனா இருக்கிறதப்பற்றி சிந்திக்கலாம்...

உங்களுக்கும் கெகலியவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை............

நிரன்
30-01-2009, 10:45 AM
இப்போது ஈரோட்டுக்கு பீரங்கிகள் வரவேண்டிய அவசியமென்னஇது ஒரு முட்டாள்களின் கூற்று தான், நம் நாட்டின் பாதுக்காப்புக்கு எங்கு வேண்டும்னாலும் போகலாம் , நாம் முதலில் நமது நாட்டு குடிமகனாக இருக்கலாம்

உள்நாட்டுப் போர் ஏதாவது நடக்குதா??? பாதுகாப்புக்கு இவ்வளவு பீரங்கிகள் வேண்டுமோ??

பிறநாட்டுத் தழிழனை மதிக்க வேண்டாம் அன்பரே மிதிக்காமலாவது இருக்கலாமே. சிலர் இலங்கைத் தமிழர் எனப் பார்ப்பதில்லை.. நம்
தமிழ் உறவுகள் என்றுதான் சொல்கிறார்கள் :( உங்களின் இது போன்று சுயநலக் கூற்றிற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். :(

erode
30-01-2009, 11:12 AM
நண்பா நானும் மனுசன் தான், முதலில் என் நாட்டை தான் நான் பாக்கனும், அதுவும் இல்லாமல் தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு , முதலில் இந்திய குடிமகனாக இருக்கனும் அது தான் நமது கடமை

அக்னி
30-01-2009, 11:21 AM

உங்கள் கூற்றைச் சொல்வதற்குத் தகுந்த எடுகோல்களை எடுங்கள்.
இந்த இராணுவ தளவாடங்கள் அந்நிய நாட்டுக்கு அனுப்பி வைக்கத்தான் ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தனவோ என்ற பதிவின் கீழ்,
முரண்பாடாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

சரி...
இந்திய அரசு படைக்கல உதவிகளை வழங்குவது நியாயமானது என்றால்,
அதனை வெளிப்படையாக வழங்க ஏன் தயங்குகின்றது?
ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
புரிய முயற்சியுங்கள்.

நிரன்
30-01-2009, 11:26 AM
நண்பா நானும் மனுசன் தான், முதலில் என் நாட்டை தான் நான் பாக்கனும், அதுவும் இல்லாமல் தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு , முதலில் இந்திய குடிமகனாக இருக்கனும் அது தான் நமது கடமை

மன்றத்தில் 1வாரத்திற்கு முதல் ஒரு செய்தியைப்படித்தேன். அதில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் இலங்கை இரணுவத்தின் படுகொலைகளுக்காக ஆதாரம் திரட்டி இலங்கை அரசின் மீது வழக்குத் தொடரப்போகிறார் என்று. அத்திரியில் ஒருவர் கூறியது தமிழனே மற்றவனுக்கு துரேகம் செய்கிறான் வெளிநாட்டவர் ஒருவர் இப்படி வந்திருக்கின்றாரே என்று ஒரு கூற்றிற்காக நானும் விவாதம் செய்தேன்... அக் கூற்றிற்காக இப்பொழுதுதான் நான் அதைத் தவறு என்று என்னுகிறேன்.. அவரிற்கு உண்மையில் பென்னாடை போர்க்க வேண்டும்.

மன்றத்தில் உள்ளவர்கள் பலர் இந்தியத் தமிழர்கள்தான் நண்பரே.. இங்கு சாதி மதம் நாடு எனும் பிரிவினை நாங்கள் பார்த்ததில்லை எல்லோரும் சந்தோசமாகவுள்ளோம்,

தற்பொழுத ஈழத்திற்காக இந்திய மண்ணிலேயே பல போராட்டங்கள் நடக்கின்றன இதை எல்லாம் செய்பவர்கள் இந்திய நாட்டில் பற்றில்லாதவர்களா, இல்லையெனி்ன் தீவிரவாதிகளா??? உங்களைப்போன்று வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேடிக்கை எங்களைப் போன்று அணுபவித்தவர்களுக்கு கொடுமை, இதை உலகத் தமிழர்களில் 90சதவீதமானோர் நன்றாகப் புரிந்துள்ளனர்.

என்னவன் விஜய்
30-01-2009, 01:35 PM
நண்பா நானும் மனுசன் தான், முதலில் என் நாட்டை தான் நான் பாக்கனும், அதுவும் இல்லாமல் தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு , முதலில் இந்திய குடிமகனாக இருக்கனும் அது தான் நமது கடமை

அட, உங்க முதலமைச்சர்க்கூடதான் 'தமிழ், தமிழ், தமிழ், தமிழர், தமிழினம் என முழக்கமிடுகிறார்.

இலங்கை தமிழர்களுக்காக என் உயிரையும் விடுவேன் என்று வீரமுழக்கமிட்டார். அவரிடம் அங்கே போய் இதை சொன்னீர்களா நண்பரே?

உங்கள் அரசாங்கம் பீரங்கிக்கு வழி கொடுத்தால், நீங்கள் இங்கு எரியும் திரியில் எண்ணை ஊற்றுகின்றீர்களே!!

அமரன்
30-01-2009, 01:45 PM
அன்பு நண்பர்களுக்கு!

ஸ்ரீலங்காவுக்கு எந்த நாடு உதவுகிறது என்று வெளிப்படுத்த, உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுவல்ல. தமிழர் இன்னல்களை உலகின் பார்வைக்கு எடுத்துசெல்வதே தற்போதைய அவசர, அவசியத் தேவை. நிலமை அப்படி இருக்க இது போன்ற செய்திப்பகிர்வுகள் நேரவிரயங்கள் என்பது என் கருத்து.

கனடாவில் சில முன்னணிப் பத்திரிக்கைகள் முதன் முதலாக ஈழவிடயத்தை பிரசுரித்துள்ளன. அங்கு வாழ் தமிழர்கள் அந்த செய்திஸ்தாபனக்களுக்கு கடிதம், மின்னஞ்சல், தொலைநகல் என பலவழிகளில் ஈழத்தின் உண்மை நிலையை ஆதராத்தோடு அனுப்பியதன் விளைவு இது.

இதேபோல் பிரான்ஸின் சில தொலைக்காட்சிகளும் முதன் முதறையாக ஈழவிடயம் தொடர்பான நிலவரத்தை காட்சிப்படுத்தியுள்ளது. இலண்டன் நாடாளுமன்றத்தின் ஐம்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உண்மையை உணர்ந்துள்ளார்கள். தமிழரின் அரசியல் அபிலாசையை பூர்த்தி செய்ய ஆதரவு நல்கியுள்ளார்கள். ஐவை எல்லாம் எதனால் நிகழ்ந்தவை.

தாமரை அண்ணா கேள்வி பதிலில் சொன்னது போல சரியான முறையில் ஈழப்பிரச்சினையை வெளிக்கொணர்ந்ததால் நிகழ்தவை. இந்த தூரம் நிச்சயமாகப் போதாது. இன்னும் பல ஊடகங்கள் மூலம் உலக மக்களுக்கு மெய்நிலை உணர்த்தப்படல் வேண்டும். ஒரு அரசுக்கு அந்நாட்டு மக்கள் மூலம் கொடுக்கப்படும் அழுத்தம் போன்று வேறு எவராலும் கொடுக்க இயலாது.

இந்தச் செய்திப் பகிர்வால் அத்தகைய அழுத்தம் கொடுக்கப்படும் என நினைத்தால் கடந்த கால மன்ற வரலாற்றை ஒரு முறை அனைவரும் நினைத்துப் பாருங்கள். ஆளுக்காள் கருத்து வீசி மனம் நொந்ததுதான் மிச்சம்.

எனவே, காலத்தின் தேவை கருதி மக்களின் அவலங்களை, தமிழர்களின் உணர்வுகளை உலகின் பார்வைக்கு வைப்பதுக்கு உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்.

அவற்றுக்கு இவை உங்களுக்கு உதவும்.

http://www.nerudal.com/content/view/5865/1/

http://www.tamilsforum.com/

தமிழ்ஸ் ஃபோரம்ஸ்.காமில் சில பதிவுகள் புத்தக வடிவில் கிடைக்கும். அவற்றை அப்படியேயோ அல்லது கூகிள் உதவியுடன் பிற மொழிகளில் பெயர்த்தோ உங்கள் சக மொழி நண்பர்களுக்கு அனுப்புங்கள்.

நன்றி.

அய்யா
30-01-2009, 02:28 PM
சில உறுப்பினர்கள் எங்கள் முதலமைச்சர் குறித்தெல்லாம் விமர்சித்திருப்பது வருத்தத்துக்குரியது. தவிர்த்தல் நலம்.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் பாதுகாப்புக்காக வேண்டும் ஆயுதங்களை வர்த்தகமுறையில் விற்பது இயல்பானதுதான். அதை நாட்டின் பாதுகாப்புக்காக பயன்படுத்தாமல் தன் மக்களையே அழிப்பதில் ஈடுபடுவது, அந்நாட்டு ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதி.

இந்திய பீரங்கி இல்லையெனில் சீன பீரங்கி. கொடூர ஆட்சியாளர்களின் விருப்பப்படி இன அழிப்பு தொடரவே செய்யும். எனவே, தேவையில்லாமல் இந்திய நாட்டை விமர்சித்து, நம் நட்புக்கும் உறவுக்கும் குந்தகம் விளைவிக்க வேண்டாம் என்று தொடர்புடையோரை பணிவுடன் வேண்டுகிறேன்.

என்னவன் விஜய்
30-01-2009, 07:25 PM

வணக்கம் நண்பரே,

உங்கள் நாட்டு அமைச்சர் கூறியதைதானே நாங்கள் குறிப்பிடுகிறோம், இதில் என்ன குற்றம் கண்டீர்கள்? இதில் வருந்த என்ன உண்டு?

அமைச்சர்களின் வார்த்தைகளை இங்கு சுட்டிக்காட்டக்கூடாது என்றும்
விமர்சிக்ககூடாது என்றும் மன்றத்தில் எந்த விதியும் இல்லை? அவரை அவமரியாதையாக நாங்கள் கூறவுமில்லை?

எனக்கு தெரிந்ததெல்லாம் இங்கு ஒருவரின்/அவரின் 'பர்சனல்' விடயத்தை மட்டுமே இங்கு அலசக்கூடாது. அதுவே மன்றத்தின் விதி :redface:

ஏன் அவர்களின் வார்த்தைகளை விமர்சிக்ககூடாது என்று தாங்கள் விளக்கமளித்தால் தவறினை நாங்கள் மாற்றிக்கொள்வோம்.

அய்யா
31-01-2009, 02:54 AM
நண்பா நானும் மனுசன் தான், முதலில் என் நாட்டை தான் நான் பாக்கனும், அதுவும் இல்லாமல் தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு , முதலில் இந்திய குடிமகனாக இருக்கனும் அது தான் நமது கடமை

நண்பர் ஈரோடு அவர்களின் இந்தப்பதிவுக்கு...

அட, உங்க முதலமைச்சர்க்கூடதான் 'தமிழ், தமிழ், தமிழ், தமிழர், தமிழினம் என முழக்கமிடுகிறார்.

இலங்கை தமிழர்களுக்காக என் உயிரையும் விடுவேன் என்று வீரமுழக்கமிட்டார். அவரிடம் அங்கே போய் இதை சொன்னீர்களா நண்பரே?

உங்கள் அரசாங்கம் பீரங்கிக்கு வழி கொடுத்தால், நீங்கள் இங்கு எரியும் திரியில் எண்ணை ஊற்றுகின்றீர்களே!!

இவ்வாறு பதிலிட்டு எங்கள் முதல்வரை விமர்சிக்கும் அவசியம் என்ன வந்தது? சொல்லுங்கள் விஜய்

எங்கள் ஆட்சியாளர்கள் எவரும் தன் மக்களையே வெறிநாயைபோல அடித்துக் கொல்பவர்கள் அல்லர்.

உதயசூரியன்
31-01-2009, 03:36 AM
இப்பொழுது அல்ல.. எப்பொழுதும்..
இந்தியா.. தமிழகத்திற்க்கும் தமிழனுக்கும் எதிரிகள் தான்..

50 வருடங்களாக தமிழர்களுக்கு.. மத்திய அமைச்சரவையில்.. காபினட் அமைச்சராக்காமல் இருந்தது தானே இந்த காங்கிரசார்..
தி.மு.க மூலமாக தானே.. காபினெட் தமிழனுக்கு கிடைத்தது..

அதே.. நேரத்தில்..

உணர்வு பூர்வமாக.. தமிழகத்துக்கு கிடைத்த ஒரு நல்ல தலைவர் கலைஞர்..

அவரின் பல விஷயங்கள் அவரின் இள வயதில் சாதித்து விட்டார்..
தற்போது அவருக்கு.. வயது ஆகிவிட்டது..

அது சரி உலக தமிழர்கள் பிரச்சினை என்றால்..கலைஞரை மட்டுமே குறி வைக்கும்.. தமிழர் என்ற போர்வையில் இருக்கும் ஆரியர்களுடன் சேரும் தமிழர்களே..
இலங்கை விஷயத்தில்.. கலைஞர் இரு முறை ஆட்சி இழந்த போது,,..
அவரை அந்த காரணத்துக்காகவாடா ஆட்சியை கலைத்தீர்கள்.. என்று 234 தொகுதியையும் மீண்டும் கொடுத்து விட்டு பேசினால்.. கலைஞருக்கு இன்று செருப்பால் அடித்தது போல் இருக்கும்..

தி.மு.கவிற்கு இணையாக வாக்கு வங்கி வைத்திருக்கும் அ.தி.மு.க தலைவராக மலையாளிகளுக்கும், கன்னடர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் கொடுத்து விட்டு..
தமிழையும், தமிழனையும் தமிழ் நாட்டினில் இருந்தே கேவல படுத்தும் போது.. எப்படி ஒரு தலைவரை மட்டும் எதிர் பார்க்கிறீர்கள்..

தமிழனா.. மலயாளியா..
தமிழனா
கர்னாடகமா

என்று களம் கன்ட போது.. அனைவரும் தமிழன் என்று தமிழக மக்கள் அடித்து சொல்லியிருந்தால்.. இன்று கலைஞரை சட்டையை பிடித்து கேட்கலாம்..

ராஜிவ் காந்தி கொலையை செய்த காங்கிரசாரும் சரி.. அது நடந்தால் தான் வெற்றி பெறுவோம் என்று காத்திருந்த அ. தி.மு.க வும் சரி.. அன்று நடந்த வெறியாட்டம் இன்னும் என் கண் முன்னே வருகிறது..
அதில் இழக்காத ...??
சாதாரண தொண்டனும்.. இழந்தான் ..??
இப்படி எவ்வளவு வேன்டுமானாலும் சொல்லலாம்..

சரி அ.தி.மு.க தானே.. விடுதலை புலிகளை உருவாக்கியது..
ஆயுத போராட்டத்திற்கு ஆதரவளித்தது..
எம்.ஜி.ஆர் சொத்து மட்டும் வேண்டும் விடுதலை புலிகள் வேண்டாமா..

கலைஞர் இருப்பதால் தான் ஈழ தமிழர்களுக்காக அழவாவது முடிகிறது..

கலைஞர் ஒன்றும் கடவுள் அல்ல..

நம்முடைய பங்களிப்பும்.. இந்திய தேச துரோகத்தையும் வெளி கொணருவோம்..
பாவம் கலைஞர் அவர்...

எதிர்ப்போம்..
உனர்த்துவோம்..
அது கலைஞராக இருந்தாலும்..
ஈழத்துக்காக..
புரிந்து கொள்வோம் கலைஞர் நிலைமை..
அவரும் நம் உனர்வை புரிந்து கொள்வார்..

அவரும் சும்மா இருக்க மாட்டார்..

இந்திய தேசத்தில் பிறந்தமைக்காக வெட்க படுகிறேன்..

மன்னித்தருள்க என் இனிய ஈழ மக்களே..

தமிழ் நாடு தனி நாடாக வேண்டும் என்று அப்பொழுதே எல்லோரும் சொன்னார்கள்...
அப்படி நடந்தால்..
அண்டை நாடு நல்லுறவிற்க்காக காவிரி கிடைக்கும்.. ஈழமும் உருவாகும்..
இரு தமிழ் நாடாக இருந்திருக்கும்..

இனி இந்திய அரசாங்கம் பாராமுகம் இருக்குமானால்.. காங்கிரசை நாட்டை விட்டே விரட்டும் பணியை செய்வோம்.. அதற்கு தயாராகுங்கள்..
முடிந்தால்.. தனி நாடாகட்டும் தமிழ் நாடு

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அய்யா
31-01-2009, 03:57 AM
இப்பொழுது அல்ல.. எப்பொழுதும்..
இந்தியா.. தமிழகத்திற்க்கும் தமிழனுக்கும் எதிரிகள் தான்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

நன்றி உதயசூரியன்! கலைஞரின் நிலையைத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

இனியாவது ஈழப்பதிவர்கள் கலைஞரை விமர்சிக்காமல் இருப்பார்கள் என நம்புகிறேன்.

அன்புரசிகன்
31-01-2009, 04:59 AM
நண்பா நானும் மனுசன் தான், முதலில் என் நாட்டை தான் நான் பாக்கனும், அதுவும் இல்லாமல் தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு , முதலில் இந்திய குடிமகனாக இருக்கனும் அது தான் நமது கடமை

அட, உங்க முதலமைச்சர்க்கூடதான் 'தமிழ், தமிழ், தமிழ், தமிழர், தமிழினம் என முழக்கமிடுகிறார்.

இலங்கை தமிழர்களுக்காக என் உயிரையும் விடுவேன் என்று வீரமுழக்கமிட்டார். அவரிடம் அங்கே போய் இதை சொன்னீர்களா நண்பரே?

உங்கள் அரசாங்கம் பீரங்கிக்கு வழி கொடுத்தால், நீங்கள் இங்கு எரியும் திரியில் எண்ணை ஊற்றுகின்றீர்களே!!

நண்பர் ஈரோடு அவர்களின் இந்தப்பதிவுக்கு...இவ்வாறு பதிலிட்டு எங்கள் முதல்வரை விமர்சிக்கும் அவசியம் என்ன வந்தது? சொல்லுங்கள் விஜய்

எங்கள் ஆட்சியாளர்கள் எவரும் தன் மக்களையே வெறிநாயைபோல அடித்துக் கொல்பவர்கள் அல்லர்.

கலைஞர் அவ்வாறு முழக்கமிடவில்லை என்றால் விஜய் சொன்னது தப்பு. தப்பு. தப்பு...

ஆனால் என்ன செய்வது முழங்கியிருக்கிறாரே...

யாரும் அதை தப்பு எனவில்லை. ஈரோடு அவர்கள் அவ்வாறு முழங்குவது தவறு என்றிருக்கிறார்...

தமிழ் தமிழ் என்ற காரணத்துக்குக அந்நிய நாட்டு விவகாரங்களில் தலையிடுவது நல்லது இல்லை , அவர்கள் அங்கத்து குடிமகனாக இருக்கும் போது நமக்கு என்ன உரிமை இருக்கு ,

தவிர உங்கள் ஆட்சியாளர்கள் உங்களை கொலை செய்பவர்கள் என்று இங்கு யார் சொன்னது....????

அய்யா
31-01-2009, 05:28 AM
அன்பின் உதய சூரியன் இதற்கு தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார் அன்பண்ணா!

இன்றையச் சூழலில் நமக்கிருக்கும் தலைவர்களில் ஈழமக்களுக்கு சாதகமானவர் முதல்வர் ஒருவரே!

அவரை விமர்சிக்கும் போக்கு, மெல்ல மெல்ல ஈழ ஆதரவை நீர்த்துப்போகச் செய்துவிடும்.

அவர் முழுமையாக ஈழத்தமிழர் சார்பில் வெளிப்படையாக இயங்கமுடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன.

அவர் இன்று ஆட்சியிலிருப்பதால்தான் மத்திய அரசு ஓரளவாவது, பணிகிறது. அம்மையார் ஆட்சியிலிருந்தால் இன்னேரம் ஈழம் பூண்டற்றுப் போயிருக்கும்.

இது என் கருத்து. ஒப்புவதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.

உதயசூரியன்
31-01-2009, 05:28 AM
தமிழனுக்கு தமிழ் தமிழ் என்று முழங்குபவனை விட.. மலயாளம், கன்னடம், தெலுங்கு இது தான் பிடிக்கும்.. அது தான் ஈசியா கிடைக்கும்..

என்ன செய்வது தமிழுக்கு கிடைத்தவர் ஒருவரே..

கன்னடம் கேரளம்.. ஆந்திரம் என்று கலவியின்பம் கண்டு விட்டு..
தமிழை மட்டும் குறை சொல்லுவர்..

கலைஞருக்காக நான் காத்து கிடக்க வில்லை..

எப்படி ஈழ தமிழர்கள் உடனடியாக இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் கொன்டு வர முடியாதோ..
ஏன் இந்தியர்களாலே முடியாது.. அதுவும் தமிழ்னாட்டு இந்தியர்களால் முடியவே முடியாது..
அதற்கு காரணம் இந்திய ஏகாதிபத்தியம் தான்..

அது போல் சில இலங்கை விஷயங்களை இந்தியர்களாலும் மாற்ற முடிவதில்லை..

ஆனால்.. அதற்கான ஆதரவு பேச்சு கூட கூடாதென்பது.. அனியாயம்..

கலைஞரே வரவில்லையென்றாலும்.. என்னுடைய.. பிரச்சாரம் தொடரும்..
அவருக்காக நான் ஏன் உனர்வை கட்டி வைத்து காத்து இருக்க வேன்டும்..

அவர் தமிழ் நாட்டிற்க்கு நல்லது செய்கிறார்.. மறுப்பு இல்லை..
தமிழ் இனத்துக்கும் நல்லது செய்கிறார்..
ஆனால் சில சந்தர்ப்பம் சில சம்பவங்கள் அவரின் தீவிர தன்மையை குரைத்து கொண்டன..

ஆனால்.. அவரை மீண்டும் தீவிரமாக இறங்க சொல்ல நமக்கு என்ன அருகதை இருக்கு...

அவர் செய்த விஷயத்தை நாம் முனெடுத்து செல்வோம்..

அவருக்காக காத்திராமல்.. ஈழத்தில் கலம் காணுவோம்..

அண்ணா பெரியாரிடம் கோபித்து வெற்றியை பெரியாரிடமே காணிக்கையாக்கியதை போல..
காணிக்கையாக்க.. தனி மனித ஆதரவு.. கலைஞரையும் மீறி எனக்கு உள்ளது..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அய்யா
31-01-2009, 05:42 AM
தமிழனுக்கு தமிழ் தமிழ் என்று முழங்குபவனை விட.. மலயாளம், கன்னடம், தெலுங்கு இது தான் பிடிக்கும்.. அது தான் ஈசியா கிடைக்கும்..

வாழ்க தமிழ்

'தமிழனின்' மனப்போக்கு நீங்கள் சொல்வதுபோலத்தான் இருக்கிறது உதயசூரியன்.

என்ன செய்வது? கலைஞரின் தலையெழுத்து அது. தமிழனிடமே பாட்டு வாங்கவேண்டுமென்று. தமிழ் தமிழ் என்று முழங்குவது குற்றமாகிப் போய்விட்டது!!

நம் ஊரில் ஒரு பிச்சைக்காரன் பழமொழி சொல்வார்களே,

"என்னிக்கும் இல்லேன்னு சொல்ற புண்ணியவதி இன்னிக்கும் இல்லேன்னுட்டா .

தினமும் போடற &&&&&&க்கு என்ன கேடு? இன்னிக்கு இல்லேன்னு சொல்றாளே!! "

அதுபோல இருக்கிறது!

அன்புரசிகன்
31-01-2009, 06:11 AM
நான் நினைக்கிறேன் அய்யா அவர்கள் தவறாக புரிந்துகொண்டு பதிவிடுகிறீர்கள்...

நானோ விஜயோ கலைஞரை தவறாக விமர்சிக்கவில்லை...

ஈரோடு அவர்கள் சொன்னது தான் தவறு என்றோம். ஈரோடு அவர்கள் சொன்னது சரி என்றால் கலைஞர் செய்வது தவறு தானே...

கலைஞர் செய்த உதவிகளை நாம் மறக்கவுமில்லை. மறுப்பதும் இல்லை... சர்வதேசத்தில் இருக்கும் ஒரே ஒரு உதவுகரம் அவர் தான் என்பதையும் மறுக்கவில்லை...

ஈரோடின் பதிலை நீங்கள் சரியாக புரியாது நம்பதிவில் குறைகாணக்கூடாது....

நீங்கள் தெரிந்து தான் பதிவிடுகிறீர்களா அல்லாது தெரியாது குற்றம் காண்கிறீர்களா என்று எனக்கு தெரியவில்லை...

வருத்தத்துடன்
அன்பு...

அமரன்
31-01-2009, 07:28 AM
எது நடக்ககூடாது என்று பயந்தேனோ அது நடந்துவிட்டது. திரி திசை மாறிவிட்டது. கலைஞரை இங்கே யாரும் தவறாக விமர்சிக்கவில்லை. கலைஞரின் கூற்றை ஈரோட்டின் கருத்துக்கு எடுத்துக்காட்டி இருக்கிறார் என்னவன் விஜய். அவ்வளவுதான். அதை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்து கொள்கிறோம்.

கலைஞர் தன் எல்லைக்குட்பட்டு என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்துகொண்டுதான் இருக்கிறார். தமிழினாகவும் இந்தியக் குடிமகனாகவும் சிறப்பாக நடந்துகொள்கிறார். பலர் எதிர்பார்க்கும் சிலதை கலைஞரால் மட்டுமல்ல புரட்சித்தலைவர் இருந்தால்கூட செய்ய இயலாது.

பிறநாட்டு விடயங்களில் மூக்கை நுழைப்பது நல்லதல்லத்தான். அதைக் கடைப்பிடியுங்கள் என்று கேட்கும் சிலருக்கு நான் சொன்ன பதில் தன்னாட்டின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உதவிகள் மூக்கு நுழைப்புகளல்ல என்பதே. ஆனால் இப்போது இராணுவ வீரர்களை நேரடியாக களமுனைக்கு அனுப்பியதுகூட அப்படித்தானா என்ற கேள்விக்குபதில்சொல்ல என்னால் இயலவிலை. இராணுவம் அனுப்பப்பட்டமைக்கு என்ன ஆதாரம் என்று பலர் கேட்கலாம். சர்வதேச ஊடகங்கள் அடங்கலாக அனைவரும் ஊமைகளாக்கப்பட்டதன் நோக்கம் இதுதானே. எதற்கும் ஆதாரம் இருகக்கூடாது. அதையும் மீறி சில செய்திக்கசிவுகள் ஏற்படத்தான் செய்கிறது. ஒரு சிலரால் உறவு முறையை பகடையாக்கி தகவல்களை கறக்க முடிகிறது. அதே உறவுகள் உயிருடன் இருக்க வேண்டும் என்பதுக்காக உண்மையை உள்ளுக்குள் புதைத்து புழுங்கத்தான் முடிகிறது.

கலைஞரின் கூற்றை முன்வைத்த என்னவன் விஜய், பிற நாட்டு விடயங்களில் ஏன் தலை இடுகின்றீர்கள்? எமக்கே எல்லைகளில் ஏகப்பட்ட பிரச்சினை? இதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டீர்கள்?? என்ற கேள்வியை எழுப்புவதாகத்தான் என்னால் கற்பனை செய்துகொள்ள முடிகிறது. ஏனெனில் உள்ளத்தின் உணர்வலைகள்தான் கற்பனையை நெறிப்படுத்துகிறன.

praveen
31-01-2009, 10:59 AM
எது நடக்ககூடாது என்று பயந்தேனோ அது நடந்துவிட்டது. திரி திசை மாறிவிட்டது. கலைஞரை இங்கே யாரும் தவறாக விமர்சிக்கவில்லை. கலைஞரின் கூற்றை ஈரோட்டின் கருத்துக்கு எடுத்துக்காட்டி இருக்கிறார் என்னவன் விஜய். அவ்வளவுதான். அதை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்து கொள்கிறோம்.

ஆமாம், இலங்கை தமிழர் பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழக அரசியல் தலைவர் கலைஞர் தான். இதனை விளக்கமாக பதிக்கலாம் என்று பார்த்தேன். அமரன் பதிவு என்னை குளிர்வடைய வைத்து விட்டது.

இருந்தாலும் சில வரிகள் பதிவிட்டால் தான் எனக்கு திருப்தி.

இந்த தள்ளாத வயதிலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இளைஞரை போல தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்ய அவரை விட்டால் வேறு நாதி இல்லை. அவரை பற்றி விமர்சனம் சொல்லத்தான் செய்வார்கள், வேலையற்றவர்கள். மகாதமா காந்தியை கூட விமர்சிக்கத்தான் செய்தார்கள். ஒருவர் உயிரோடு இருக்கையில் அவரை போற்றி பாதுகாக்காதவர்கள் தமிழர்கள் தான். அவர் அனுபவம் அரசியில் முதிர்ச்சி, தம் ஆட்சி அதிகார எல்லை, கூட்டனி பலம் இதனை வைத்து காய் நகர்த்துகிறார். அவசரப்பட்டு ஏதாவது செய்து, தமிழக மக்களுக்கும் சிக்கல் வந்து விடக்கூடாது என்று நினைக்கலாம் இல்லையா?.