PDA

View Full Version : இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கர் வழக்கு:கா.ரமேஷ்
27-01-2009, 09:50 AM
அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபரும், அமெரிக்க தமிழர் அமைப்பின் சட்ட ஆலோசகருமான புரூஸ் பெய்ன் தமிழீழ விடுதலைப் புலிகளை காப்பாற்றும் நோக்கில் அண்மையில் சென்னைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

வன்னியில் தற்போது இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து புரூஸ் பெய்ன் தகவல்களை திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இயக்கும் மெக்ஸ் பவுண்டேசன் எனப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் அழைப்பின் பேரில் பெய்ன் சென்னைக்கு விஜயம் செய்துள்ளார்.

இலங்கை அரச படையினருக்கு எதிராக தமிழக புலி ஆதரவாளர்களிடம் சாட்சியங்களை திரட்டுவதற்காக பெய்ன் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு கிழக்கில் சுமார் 189 இராணுவ முகாம்கள் காணப்படுவதாகவும், இவை அகற்றப்பட வேண்டும் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இவர் மிகவிரைவில் கோத்தபாய, இராணுவத் தளபதி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

::ஒரு அமெரிக்கருக்கு இருக்கும் உணர்வுகூட நம்மவர்க்கு இல்லையா???

அன்புரசிகன்
27-01-2009, 10:23 AM
சில வருடங்களுக்கு முன்னதாகவும் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாய் நினைவு...

நல்லதாகவே நடக்கட்டும்.

நிரன்
27-01-2009, 10:52 AM
::ஒரு அமெரிக்கருக்கு இருக்கும் உணர்வுகூட நம்மவர்க்கு இல்லையா???

நம்மவர்களுக்கு இல்லையென கூறிவிட முடியாது ரமேஷ் அவர்களே!

நம் மக்களைக் காப்பதற்கு பல நாடுகளில் உள்ள தமிழர்கள் உலகமெங்கும் போரட்டங்களையும் பல எதிர்ப்புக் கோசங்களையும் எழுப்பிக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்கள் போன்று வெளிநாட்டவர்களும் தமிழர்களுக்கு உறுதுணையாக பல நாடுகளில் உள்ளார்கள்.

நல்லதொரு காரியத்தை யார் செய்தால் என்ன நாமும் மனிதர் அவரும் ஒரு மனிதர் இன மொழி வோறுபாடுகளைக் கடந்த உணர்வுகள் நாட்டில் பலருக்கு உண்டு ரமேஷ் அவர்களே.

கா.ரமேஷ்
27-01-2009, 12:11 PM

அன்பு தோழரே...

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நம் தமிழ் இன மக்கள் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக வதைக்கப் பட்டு கொண்டு இருக்கிறார்கள்.இந்த அறிவியல் உலகத்தில் தமிழன் சில விஷயங்களில் உயர்ந்த நிலைகளில் இருந்தாலும் தமிழின மக்களின் உரிமைகளையும் உடைமைகளும் ஏதாவது ஒரு காரணங்களினால் பறிக்கப்படுகிறது...களவாட படுகிறது...(உயர்ந்த நிலையில் இருப்பவர் எவரும் தங்களுடைய சுயலாபத்திற்காக பச்சோந்திகளாகவே செயல்படுகின்றனர்:எ.கா.அரசியல்வாதிகள்...ஊடகதுறை..இன்னும் பல).கடந்த 35 வருடங்களில் எத்தனையோ அப்பாவி தமிழர்கள் பழியானதற்க்கு யார் பொறுப்பேற்பார்கள்???.இன்னும் அது தொடர வேண்டுமா??. அப்பாவிகளை பற்றி எவரும் கவலைபடுவதாக தெரியவில்லையே.

இதுபோன்ற சில அடிமனதின் வேதனைகள்தான் அப்படி எழுத தோன்றியது மற்றபடி தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.எல்லா தமிழரோடு ஒற்றுமையுடனும் ஒரு இறுதி தீர்வு எட்ட வேண்டும் என்பதே அவா.

praveen
27-01-2009, 12:17 PM
உண்மை நிலை தெரியாமல் நம்மவர்களை குறைபட்டு கொள்ளாதீர்கள்.

ஜூனியர் விகடனில் இது சம்பந்தமாக ஒரு செய்திக்கட்டூரை வெளியாயிறுந்தது, நேரம் கிடைத்தால் பதிக்கிறேன்.

இலங்கை அரசில் இருக்கும் இரண்டு புள்ளிகள் அமெரிக்க பிராஜா உரிமை பெற்றவர்கள். அவர்கள் செய்யும் இனப்படுகொலை காரணமாக அவர்கள் மீது தான் வழக்கு தொடரப்போவதாக பார்த்தேன்.

மற்றபடி, திருமாவளவனும், நெடுமாறனும், வை.கோ வும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களா, இவர்களை தலைவராக கொண்ட எண்ணற்ற கட்சி தொண்டர்கள் எல்லோரும் வேறு நாட்டை சேர்ந்தவர்களா என்ன?.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள்.

கா.ரமேஷ்
27-01-2009, 12:48 PM
உண்மை நிலை தெரியாமல் நம்மவர்களை குறைபட்டு கொள்ளாதீர்கள்.

ஜூனியர் விகடனில் இது சம்பந்தமாக ஒரு செய்திக்கட்டூரை வெளியாயிறுந்தது, நேரம் கிடைத்தால் பதிக்கிறேன்.

இலங்கை அரசில் இருக்கும் இரண்டு புள்ளிகள் அமெரிக்க பிராஜா உரிமை பெற்றவர்கள். அவர்கள் செய்யும் இனப்படுகொலை காரணமாக அவர்கள் மீது தான் வழக்கு தொடரப்போவதாக பார்த்தேன்.

மற்றபடி, திருமாவளவனும், நெடுமாறனும், வை.கோ வும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களா, இவர்களை தலைவராக கொண்ட எண்ணற்ற கட்சி தொண்டர்கள் எல்லோரும் வேறு நாட்டை சேர்ந்தவர்களா என்ன?.

இது தமிழ்வின்.காம் ல் வெளிவந்த செய்தி அதில் கோத்தபாய, இராணுவத் தளபதி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.குறிப்பிடபட்டவர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களா என தெரியவில்லை.யாராக இருந்தாலும் தமிழினத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் விருப்பம்.

நானும்கூட நெடுமாறன் அய்யா போன்றவர்களிடம் மிகுந்த மரியாதை கொண்டவன் தான்.இவ்வளவு முயற்ச்சி எடுத்தும் இலங்கையில் போர் நிறுத்தம் அடைவதாகவோ ,(நேற்றுகூட 300 அப்பவி தமிழ்மக்கள் பழியானதாக சொல்லப்படுகிறதே).தமிழ்மக்களை பாதுகாக்க ஏற்பாடுகள் முனைவதாகவோ தெரியவில்லையே என்பதுதான் வருத்தம்.

http://www.tamilwin.com/view.php?2a36QVH4b3dF9Eq34d0IWnJ3b02R7GQb4d2aYpD4e0dTZLukce0cg2h32cceFj0K3e

நிரன்
27-01-2009, 01:21 PM
ஆம் நண்பரே இத்தகவல் உண்மைதான் தமிழ் நெட்போன்ற தளங்களிலும் நான் பார்த்தேன் இதே தகவல் அங்கும் உள்ளது.

செய்திச்சோலையில் யாரும் விவாதம் மேற்கெள்ளவேண்டாம் எல்லாவற்றையும் செய்திகள் எனப் பார்ப்போம். கருத்துக்களை விவதமாக்காமல் தொடர்வோம்

நன்றி நண்பர்களே!

ஓவியன்
27-01-2009, 01:52 PM
ப்ரூஸ் பெய்ன் தொடர்ச்சியாக ஈழத்தில் நடக்கும் தமிழினப்படு கொலைகளுக்கு எதிராக உழைத்து வருபவர்...

பல்வேறு வகையில் சட்ட ரீதியாக தமிழ் மக்களின் அவலங்களுக்கு எதிராக போராடுபவர்களில் முன்னிற்பவர்களில் ஒருவர்...

உண்மையில் ப்ரூஸ் பெய்ன் தொடுத்திருப்பது இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான வழக்கென்பதிலும் அமெரிக்க பிரஜையான இலங்கையின் கோத்தபாய ராஜபக்சேக்கும் அமரிக்க வதிவிடப் பிரஜையான இலங்கையின் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கும் எதிரான வழக்கு என்பதே சரியானது....

மேலதிக விபரங்களுக்கு...

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26077

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26704

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27732

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27747

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28130

ஓவியன்
07-02-2009, 01:40 PM
ப்ரூஸ் பெய்ன் வழக்கினைத் தாக்கல் செய்து விட்டார்....

http://www.tamilnet.com/img/publish/2009/02/CoverLetterToEricHolder0206.pdf

பிரதிவாதிகளுக்கெதிராக தகுந்த சாட்சியங்களிருப்பதால் வழக்கு வெற்றியடையுமென நம்புகிறேன்...