umakarthick
27-01-2009, 07:40 AM
மழைக்கு எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்: [Jan. 27th, 2009|04:04 pm]
பெருமழைக் காலங்களில்
உன் வீட்டு வாசலிலமர்ந்து
நீ விடும் காகித கப்பல்களை
என் வீட்டு வாசலை கடக்கும்
போது நான் கவர்ந்து விடுவேன்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அந்தக் கப்பல்கள் ஒரு போதும்
என் வீட்டைத் தாண்டிப்
போனதில்லை என்று
அது எனக்கும் மழைக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம்.
பெருமழைக் காலங்களில்
உன் வீட்டு வாசலிலமர்ந்து
நீ விடும் காகித கப்பல்களை
என் வீட்டு வாசலை கடக்கும்
போது நான் கவர்ந்து விடுவேன்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அந்தக் கப்பல்கள் ஒரு போதும்
என் வீட்டைத் தாண்டிப்
போனதில்லை என்று
அது எனக்கும் மழைக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம்.