PDA

View Full Version : பள்ளிகூட நண்பர்கள்



umakarthick
27-01-2009, 07:37 AM
பள்ளிகூட நண்பர்கள்

தொடக்க பள்ளியில் உங்களுடன் படித்த நண்பர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இன்று வரை யாராவது LKG ல் இருந்து உங்களுடம் படித்து கல்லூரி/வேலையிலும் தொடர்கிறார்களா??


சில சமயம் என் பள்ளி வாழ்க்கையை பற்றி யோசித்து பார்க்கும் போதும் எழும் கேள்விகள் தான் மேலே...


எனக்கும் இன்னமும் நியாபமிருக்கிற சில நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என தெரிய வில்லை..அவர்களை எங்கேயாது எப்போவாது பார்க்க நேரும் போது பெரும்பாலும் பேச முடிவதில்லை ,சற்றென கடந்து போயிருக்கிறேன், வீட்டிற்கு வந்த போது ஏன் நான் அவன்/அவளோடு பேச வில்லை என எனக்கே என் மேல் கோபமாய் வரும்..


நான் சில பள்ளி நண்பர்களை இன்று மீண்டும் பார்க்க விரும்புகிறேன் , பார்த்தும் இருக்கிறேன்.

ஆம் என் திருமணத்தின் போது பொட்டல்புதூரில் பஸ் திருப்பம் பக்கத்தில் இருக்கும் பலசரக்கு கடையில் வேலைபார்க்கும் தங்கராஜை போய் பார்த்து திருமண பத்திரிக்கையை கொடுத்தேன்.





தங்கராஜ் என்னுடம் 6ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரை படித்தான் , என்னுடனே இருப்பான், என் வீட்டிற்கெல்லாம் வந்திருக்கிறான்.புட்பாலில் எப்போதும் என் டீமில் தான் விளையாடுவான்.உயரம் கொஞ்சம் கம்மியாய் இருப்பதால் அவனை பசங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவார்கள் ஆனால் அவன் யாரையும் பார்த்து பயந்ததில்லை.அவனை என் மனதில் பதிய செய்த ஒரு நிகழ்ச்சி இது..

"ஒரு முறை SL சார் வகுப்பில் கொய்யாக்கா தின்று கொண்டிருந்தோம் எங்கள் பெஞ்சில் ஆனால் இவன் மட்டும் அவர் கண்ணில் பட்டு விட்டான், அவர் இவனை பார்க்கும் போது சவைத்து கொண்டிருந்தான் , அவ்வளோ தான் அவருக்கு வந்ததே கோபம் , கையால் தான் அவர் எல்லாரையும் அடிப்பார், முதுகில் அடித்தான் 'தொம்' என வகுப்பறையே அலரும்..அவனை வரவைத்து ஓங்கி அடிக்க போனார் திருப்பி நிப்பாட்டி ஆனால் அவன் உருவிக்கொண்டு கீழே படுத்து விட்டான் , எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்து விட்டது , மறுபடு SL சார் தன் தொப்பையயும் பொருட்படுத்தாமல் குனிந்த அவனை நிப்பாட்டி அடிக்க போய் அவனும் மறுபடி அதே மாதிரி படுக்க எல்லாரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தோம் , sL சாருக்கும் சிரிப்பு வந்தது ஆனால் அதே சமயம நம்மை இப்படி படுத்துகிறானே என அவமானாய் இருந்திருக்கும் போல முதுகில் அடிக்க ஆரம்பித்தார் 10 அடிகளில் 4 அடி தான் பட்டிருக்கும் அவர் சோர்ந்து போய் வகுப்பை விட்டு வெளியில் போக சொன்னார் அவனை."

அவன் நான் போய் பைக்கை நிப்பாட்டி அவனை அழைத்த போது டக்கென்று என்னை அடையாளம் கண்டு கொண்டான் ..'ஏலே நல்லாயிருக்கியா' என்றான் எங்களூருக்கு செல்லும் போது மட்டும் எப்படியோ தெரியாது இந்த 'ஏலே' ஒட்டிக்கொள்ளும் ஆனால் அதுக்காக தமிழ் சினிமாவில் வருவது போல 100 வார்த்தைக்கு 110 தபா ஏலே சொல்ல மாட்டோம்..சினிமாவில் வருவதெல்லாம் மிகைபடுத்த பட்ட காட்சிகள்..


அவனது முதலாளி என்னை அவனையும் ஒரு முறை முறைத்தார்,பின்னார் வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்..

'நான் நல்லாயிருக்கேன் ,பஸ்ஸில போவும் போது உன்ன பார்த்தேன்,இங்க தான் வேலை செய்தியா'

'ஆமாம் நீ எங்க இருக்க என்ன வேல பாக்க'

'நான் மெட்ராசில இருக்கேன்,சாப்ட்வேர் கம்பெனில, எனக்கு கல்யாணம் தென்காசில வச்சு வந்துரு' என பத்திரிக்கை நீட்டினேன்.


என் திருமணம் நடந்தது வியாழகிழமை, அவன் வர மாட்டான் என நினைத்தது என் தவறு ..தாலி கட்டு நடந்த கோவிலுக்கும் , மற்ற நிகழ்ச்சிகள் நடந்த மண்டபத்திலும் , இறுதியில் ரிசப்சனிலும் இருந்தான்..

அவனுக்கு அன்றைய சம்பளம் போயிருக்கும், ரிசப்சன் இடைவெளியில் அவனிடம் போய் பேசினேன் என் நண்பர்களை அறிமுகபடுத்தினேன்..திடீரென என் கையை பிடித்து ஒரு கவரை அழுத்தினான் கையில்..டேய் என்னடா என்பதற்குள் ..நான் கிளம்புறேண்டா ஊருல பார்க்கலாம் என கிளம்ப எத்தனித்தான்

'டேய் மேடைக்கு வாடா போட்டோ எடுக்கலாம்'

'இல்லலே இருக்கட்டும் ' என கிளம்பி சென்று விட்டான்..

அன்று இரவு மொய் கவரில் அவன் கவரை எடுத்து பார்த்தேன் 'தங்க ராஜ், கடையம்' என்று அதே கோணல் மானல் எழுத்துக்கள்..உள்ளே 20 ரூபாயும் இருந்தது !!!..

அந்த கவர் இன்னுமும் என் டைரியில் இருக்கிறது..

arun
29-01-2009, 02:16 AM
பள்ளியில் கூட படித்தவர்களின் முகம் நினைவு இருந்தால் கண்டிப்பாக நான் நின்று பேசி விட்டு தான் வருவேன்

ஆனாலும் பலரின் முகம் மறந்து விட்டது ஆனால் எனது முகம் மட்டும் இன்னமும் மாறாமல் இருப்பதாக எனது பள்ளிக்கால நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்

umakarthick
05-02-2009, 12:56 PM
என் நண்பர்களும் அதே தான் சொல்வார்கள் :))

விகடன்
04-03-2009, 08:30 AM
படிக்க படிக்க ஆனந்தமாக இருந்தது. ஆனால் படித்து முடியுந்தறுவாயில் ஏதோ என் கண் பார்வை குறைந்துகொண்டே சென்றுவிட்டது. சற்று நேரம் கழித்துத்தான் இறுதி வரிகளை மீளப்படித்தேன்.

அவரின் அந்த அன்பளிப்பைப் பார்க்கிலும், திருமண வைபவங்களில் சரி, ஏனைய இடங்களில் சரி, குடும்பந்தில் ஒருவனைப்போல இறுதிவரை நின்றமையே பெரிதாக நான் கருதுகிறேன்.

umakarthick
03-06-2009, 01:11 PM
நன்றி விராடன்

என் கண் பார்வை குறைந்துகொண்டே சென்றுவிட்டது. சற்று நேரம் கழித்துத்தான்//

ஏன் என்னாச்சு?

பாரதி
03-06-2009, 03:27 PM
தங்கராஜ் உண்மையில் கடையாத்தங்கம்தான்...!
பலருடைய உண்மையான அன்பும் வெளிப்பகட்டாக இருந்ததில்லை. அழைப்பை ஏற்று வந்து அத்தனையிலும் கலந்த அந்த அன்பு நண்பர் நன்றாக இருக்கட்டும்.

அறிஞர்
03-06-2009, 04:39 PM
மலரும் நினைவுகளில் நச்சென்று ஒரு பதிவு..
சிறு வயது நட்பு வட்டாரங்கள் பலவற்றை இன்று தொலைத்துவிட்டோம்...
அவர்களை காணும்பொழுது.. தனி மகிழ்ச்சி தான்.
திருமணத்தில் பல நூறு, ஆயிரம் கவர்கள் வந்தாலும், அந்த 20 ரூபாய் கவர் பல நினைவுகளை எதிர்காலத்தில் கொண்டு வரும்.

அமரன்
03-06-2009, 04:49 PM
பழகியவர்களைப் பாதையில் கண்டால் பழக மறப்பதில்லை நான்.

ஆனால் சிம நேரங்களில் பழகியவர்கள் முகம் மறந்து விடுகிறது.
உங்கள் ஆட்டோகிராப் நன்று உமா கார்த்திக்.

எளிமையான வைரமாக ஜொலிக்கும் தங்கராசுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அவனை ஆரத்தழுவிய உங்களையும் நினைத்தும்தான்.

முத்துகள் எப்போதும் மறைந்தே இருக்கும். அவற்றை எடுத்து பட்டை தீட்டவேண்டியவர்கள் நாங்களே!.

சிவா.ஜி
03-06-2009, 06:32 PM
ஒன்றுமறியாத வயதில் ஏற்படும் நட்பு என்றைக்குமே நிலைத்திருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாத அந்த நட்பு மிக உயர்ந்தது. தங்கராசு திருமணத்தில் கலந்துகொண்டதுமில்லாமல், கூடவே இருந்து நடத்திக்கொடுத்தது நெகிழ்வாக இருக்கிறது.

இதேபோல என் நண்பனும் என் திருமணத்துக்கு வந்தான். அந்த ஏழ்மையிலும் ஒரு எவர்சில்வர் தட்டைப் பரிசளித்தான். அதைப் பாதுகாக்கத் தவறிவிட்டேன். ஆனாலும் இன்றும் அது என் இதயத்தில் இருக்கிறது. ஆனால் அவன்தான் இன்று உயிரோடு இல்லை.

நல்லதொரு பகிர்வு கார்த்திக். நட்பின் மேன்மையை பாராட்டும் உங்களையும் மனதார பாராட்டுகிறேன்.

கா.ரமேஷ்
04-06-2009, 07:01 AM
நல்லதொரு பகிர்வு...

அந்த நண்பனின் இருபது ரூபாய் பணத்தை விட உங்களை கண்டவுடன் "ஏலே நல்லாயிருக்கியாடா" என உதிர்த்த அவர் மனம் பெரிது அதர்க்காகவே அந்த பரிசை பத்திரபடுத்தி பல ஆண்டுகள் வைத்திருக்கலாம்.

umakarthick
07-08-2009, 08:08 AM
நல்லதொரு பகிர்வு...

அந்த நண்பனின் இருபது ரூபாய் பணத்தை விட உங்களை கண்டவுடன் "ஏலே நல்லாயிருக்கியாடா" என உதிர்த்த அவர் மனம் பெரிது அதர்க்காகவே அந்த பரிசை பத்திரபடுத்தி பல ஆண்டுகள் வைத்திருக்கலாம்.

கண்டிப்பா