PDA

View Full Version : மின்மினிகள்



ஆதி
27-01-2009, 07:20 AM
முற்பொழுதில் கழுதைகள்
தற்பொழுது
"கான்வெண்ட் குழந்தைகள்"
-முதுகில் பொதி

ஆதி
27-01-2009, 07:38 AM
அம்மா என்றழைக்க அடித்தாள்
"மம்மி" என்றழ திளைத்தாள்
தமிழ்த்தாய்

umakarthick
27-01-2009, 07:39 AM
அது காண்வெண்ட் தானே?

ஆதி
27-01-2009, 07:40 AM
அது காண்வெண்ட் தானே?

மன்னிக்கவும் மாற்றிவிடுகிறேன்

பாரதி
27-01-2009, 09:21 AM
குறும்பாக்கள் நன்றாக இருக்கின்றன ஆதி.

பல வருடங்களுக்கு முன்பு செய்திமலரில் "நம்ம ஊரு பள்ளிக்கூடம்" என்ற பெயரில் வந்த செய்தியில் படித்த கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது.
------------------------
கழுதைகள் மிரண்டன
கான்வெண்ட் குழந்தைகளின்
முதுகைப்பார்த்து.
------------------------
பள்ளிக்குழந்தைகள் குழந்தைகளாக எப்போதுதான் கல்வித்துறையால் பார்க்கப்படப்போகிறார்களோ தெரியவில்லை...ஹும்..

தொடருங்கள் ஆதி.

ஓவியன்
18-02-2009, 03:10 PM
முன்பு ஏதோ ஒரு வார மலரில் படித்தது,

”படிப்பதோ
எல்.கே.ஜி, யு.கே.ஜி
சுமப்பதோ
15.கே.ஜி, 20.கே.ஜி..!!”

மீள, இந்தக் வரிகளை ஞாபக அலைக்குள்
சிக்க வைத்த மின்மினி வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஆதி..!!

தொடர்ந்து மின்னட்டும் மின்மினி வரிகள்...!! :)

அறிஞர்
18-02-2009, 04:41 PM
நம்மூர் கான்வெண்ட் குழந்தைகளின் நிலை பற்றி கதைகள் அருமை...
"பொதி சுமக்கும் குழந்தைகள்"

நாகரா
19-02-2009, 03:25 AM
புத்தகச் சுமையில்
நசுங்கும்
குழந்தைப் பருவம்!

குறும்பாக்கள் அருமை ஆதி

ravy
19-02-2009, 03:35 AM
வாழ்க்கையை நிமிர்த்த
கூனுடன் போராடும்
குழந்தைகள்!

ஓவியன்
19-02-2009, 03:51 AM
வாழ்க்கையை நிமிர்த்த
கூனுடன் போராடும்
குழந்தைகள்!

வாருங்கள் ரவி, நல்லதோர் பின்னூட்டக் கவி....

மன்றத்தின் புதியவர்களுக்கான அறிமுகப் பகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)உங்களைப் பற்றி ஒரு அறிமுகத் திரியினைத் தரலாமே....

aren
19-02-2009, 03:56 AM
குழந்தை அம்மா என்று கத்தியவுடன்
ஓடிவந்தாள்
*
*
*
*
வேலைக்கார ஆயா!!!!!

நாகரா
19-02-2009, 04:00 AM
ரவி, ஆரென் இவர்களின் குறும்பாக்கள் அருமை

samuthraselvam
19-02-2009, 04:16 AM
முதியோர் இல்லத்திலிருந்து அப்பாவை

வீட்டுக்கு அழைத்து வந்தான் மகன்.

இன்று ஓய்வூதியம் வரும் தினமாம்.

செல்வா
19-02-2009, 05:44 AM
குறும்பாக்கள் அனைத்தும் அருமை தொடருங்கள்... மக்களே

அமரன்
19-02-2009, 08:31 PM
முற்பொழுதில் கழுதைகள்
தற்பொழுது
"கான்வெண்ட் குழந்தைகள்"
-முதுகில் பொதி

உருப் பெருத்த பொதியுடன்
எறும்புகள் ஊர்வலம்.



அம்மா என்றழைக்க அடித்தாள்
"மம்மி" என்றழ திளைத்தாள்
தமிழ்த்தாய்

அம்மா மம்மியாக...
மின்மினிகளுடன் சேர்ந்து உள்ளமும் பறக்குது ஆதி.

பாராட்டுகள்.