PDA

View Full Version : புது வசதிகள்



அறிஞர்
26-01-2009, 02:36 PM
அன்பு மன்ற உறவுகளே....

குடியரசு தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் சில புதிய வசதிகளை உருவாக்கி வருகிறோம். அவை பின்வருமாறு:

1) நமது தளத்தின் முன்பக்கம் முன்பிருந்தபடி Portal (போர்டல்) போன்ற வசதி மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

2) முன்பு இருந்த Last 15 posts வசதி தற்போது வேலை செய்வதில்லை, அதனால் தற்காலிகமாக வேலை செய்யும், Latest 5 posts என்ற வசதியை நிறுவியுள்ளோம். விரைவில் அது உயர்த்தப்படும்.

3) நமது தளத்தினுள் உள்ள ஒலி-ஒளிப் பகுதி தவிர, அவற்றினுள் பதிக்கப் படுபவைகளை எளிதில் காணும், தேடும் வகையில் "புதிய ஒலி-ஒளிப் பகுதி (http://www.tamilmantram.com/vb/video.php)" (Video Directory) ஒன்றை நிறுவியுள்ளோம். இதில் எளிய முறையில் Youtube, Metacafe, DailyMotion போன்ற தளங்களில் உள்ள அசைபடங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

தற்போது சில பிரிவிகளை (Categories) மட்டும் உருவாக்கியுள்ளோம், உங்கள் ஆலோசனைகளை கருத்தில் கொண்டு மேலும் பிரிவுகள் உருவாக்கப் படும்.(மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்)

தற்போது Navigation Bar-ல் இடமில்லாததினால், Quick Links பகுதியில் இதன் சுட்டி உள்ளது, அல்லது http://www.tamilmantram.com/vb/video.php என்ற முகவரி தட்டச்சு செய்து செல்லலாம்.

4) புதிய "New posts" என்னும் வசதியை சோதித்து வருகிறோம்.

5) புதிய "Live Search" என்று திரிகளின் தலைப்பைத் தேடும் வசதியும், பரிசோதனையில் உள்ளது இன்று சேர்க்கப் படுகிறது.

இவைகளை உபயோகித்து பார்த்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.

தூயவன்
26-01-2009, 02:43 PM
நல்ல முயற்சி நன்றி அறிஞர் அண்ணா.

நிரன்
26-01-2009, 02:50 PM
மன்றத்தில் வீடியோப் பகுதி நன்றாகவுள்ளது மற்றும் புது அறிமுகங்கள் வரவேற்புக்குரியதொன்றே.

ஆனால் ஒரு கவலை. எப்பொழுது New Podts பட்டனைக் கிளிக் செய்தாலும் இன்று பதிந்த அனைத்தும் வருவதில்லை அதனால் எல்லாத் திரிகளிற்கும் பயணிக்க வேண்டிய நிலை மற்றும் பெரும் சிரமமாக உள்ளது. new posts பட்டனை கிளிக் செய்தவுடன் நாம் Log out செய்து விட்டு சென்றதிலிருந்து வந்த புதிய பதிப்பபுக்களைக் காண ஏதாவது வளி செய்யுங்களேன் மிக்க புண்ணியமாப் போகும்:)

இல்லாவிட்டால் அதற்கு ஏதாவது வளி்கள் உண்டா!!!!!

பாரதி
26-01-2009, 03:11 PM
நல்ல முயற்சிகளுக்கு நன்றியும் பாராட்டும் அறிஞரே.

அன்பு நிரன்,
New Posts In சுட்டியில் View all new posts என்ற வசதி இருக்கிறதே! கூடவே இன்றைய தினம் பதிவான புதிய பதிவுகள் எவை என்பதையும் கண்டுகொள்ளும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளதே.

நிரன்
26-01-2009, 03:39 PM
நன்றி பாரதி அண்ணா இப்பொழுதுதான் அருகில் இருக்கும் கவிழ்ந்த முக்கோணத்தைப் பார்த்தேன். :)

மிகவும் அருமையாகவுள்ளது

தமிழ்தாசன்
26-01-2009, 09:34 PM
பாராட்டுக்கள்.

மன்றம் மேலும் சிறப்புறுகிறது.