PDA

View Full Version : களவு போகும் கனவுகள்...



சசிதரன்
26-01-2009, 02:30 PM
வண்ணங்களை வாரி இறைத்து...
ஓவியம் வரைய ஆசைபட்டேன்.
வண்ணங்களுக்கான என் தேடலில்...
கண்ணில் பட்டது வானவில்.

வானவில் தொட்டு வண்ணம் பறிக்க...
சிறகுகள் வளர்க்க தொடங்கினேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் வளரத் தொடங்கின...
சிறகுகளும்... உடன் கனவுகளும்.

பின் வந்த ஒவ்வொரு இரவுகளும்...
கனவுகள் கொண்டே கழிந்தன.
சிறகுகள் கொண்டு வானம் பறப்பதாய்...
வானவில் பறித்து வண்ணம் தெளிப்பதாய்...

வண்ணங்கள்... வண்ணங்கள்....
கனவு முழுக்க வண்ணங்கள்.
என் இரவுகள் மொத்தமும் வண்ணமானது.

சட்டென்று மறைய தொடங்கின வண்ணங்கள்...
பறக்க தொடங்கும் முன்னே...
உதிர தொடங்கின சிறகுகள்.
வண்ணங்களை தொலைத்துவிடும் பயம் என்னுள்.

சிதிலமடைந்த சிறகுகள் கொண்டு...
மீண்டும் மீண்டும் பறக்க முயற்சித்தேன்.
ஒவ்வொரு முறை மண்ணில் விழும்போதும்...
வண்ணம் தொலைத்தபடி இருந்தது வானவில்.

சிறகுகளை மொத்தமாய் இழந்து...
இன்று மண்ணில் விழுந்து கிடக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் வண்ணம் தொலைக்கும்
வானவில் பார்த்தபடி.

சிறகுகள் இழந்த வலியை விட...
வண்ணம் இழக்கும் வானவில்..
அதிகம் வலிக்கிறது.

இனி என் வாழ்வினில்...
வண்ணங்களற்ற இரவுகள் மட்டுமே மிச்சமிருக்கும்.
எப்பொழுதாவது வரும் கனவுகளிலும் வரக்கூடும்...
கருப்பு-வெள்ளை வானவில்.

சிவா.ஜி
26-01-2009, 02:41 PM
மேலோட்டமாகப் பார்க்கும்போது தன் லட்சியத்துக்காகப் போராடி அதைப் பெறமுடியா ஒருவனின் இயலாநிலை வரிகளாக வடிக்கப்பட்டதாக தெரிந்தாலும், ஊடுபொருள் எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வார்த்தைகள் வசீகரிக்கின்றன. வாழ்த்துகள் சசி.

பாரதி
26-01-2009, 03:25 PM
இரசிக்க வைக்கும் கவிதை சசிதரன்.

கானல் வண்ணம் காண
கற்பனைச் சிறகுகள் ஏன்?
கருப்பு வெள்ளை போதும்
கணினி யுகத்தில்...
கண்கவர் வண்ணம்
கண்சிமிட்டும் நேரத்தில்.

சசிதரன்
28-01-2009, 04:27 PM
மேலோட்டமாகப் பார்க்கும்போது தன் லட்சியத்துக்காகப் போராடி அதைப் பெறமுடியா ஒருவனின் இயலாநிலை வரிகளாக வடிக்கப்பட்டதாக தெரிந்தாலும், ஊடுபொருள் எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வார்த்தைகள் வசீகரிக்கின்றன. வாழ்த்துகள் சசி.

கனவுகள் தொலைந்த வலியை பதிவு செய்ய எண்ணினேன் சிவா அண்ணா... மிக்க நன்றி...:)

சசிதரன்
28-01-2009, 04:31 PM
இரசிக்க வைக்கும் கவிதை சசிதரன்.

கானல் வண்ணம் காண
கற்பனைச் சிறகுகள் ஏன்?
கருப்பு வெள்ளை போதும்
கணினி யுகத்தில்...
கண்கவர் வண்ணம்
கண்சிமிட்டும் நேரத்தில்.

பாராட்டிற்கு மிக்க நன்றி பாரதி அவர்களே...:)

செல்வா
28-01-2009, 04:59 PM
வசீகரக் கவிஞர் சசீதரன் எனப் பட்டம் கொடுக்கலாம்.
பட்டங்கள் செய்யும் ஆதவனை அழைப்போமா...
கவலைப்படாதீர்கள்... உங்களுக்காக
மழைவிழும் நாளில் ஆதவனை அழைத்து
வானவில்லை வரவழைப்போம்...
வானவில் வண்ணங்கள் ஒருபோதும் கலைவதில்லை...
சிறகுகள் முறிந்தாலும்....
சிந்தனைகள் முறிவதில்லை....
கனவுகளும் தான்.... கலைவதில்லை ...
கலைக்கப் படுகின்றன.
தன்னால் அல்லது பிறரால்.

ஆதி
29-01-2009, 11:44 AM
மிக அழகிய கவிதை சசிதரன், சொல்ல வந்ததையும் தெளிவாக சொல்கிறது கவிதை..

என் கனவுகளின் சிறகுகள்
பீலிகளாலானது
ஆகையாலவை
வானவில்லுக்காக ஏங்குவதில்லை..


பாராட்டுக்கள் சசி..

ஆதவா
29-01-2009, 03:39 PM
வண்ணங்களை வாரி இறைத்து...
ஓவியம் வரைய ஆசைபட்டேன்.
வண்ணங்களுக்கான என் தேடலில்...
கண்ணில் பட்டது வானவில்.

வானவில் தொட்டு வண்ணம் பறிக்க...
சிறகுகள் வளர்க்க தொடங்கினேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் வளரத் தொடங்கின...
சிறகுகளும்... உடன் கனவுகளும்.

பின் வந்த ஒவ்வொரு இரவுகளும்...
கனவுகள் கொண்டே கழிந்தன.
சிறகுகள் கொண்டு வானம் பறப்பதாய்...
வானவில் பறித்து வண்ணம் தெளிப்பதாய்...

வண்ணங்கள்... வண்ணங்கள்....
கனவு முழுக்க வண்ணங்கள்.
என் இரவுகள் மொத்தமும் வண்ணமானது.

சட்டென்று மறைய தொடங்கின வண்ணங்கள்...
பறக்க தொடங்கும் முன்னே...
உதிர தொடங்கின சிறகுகள்.
வண்ணங்களை தொலைத்துவிடும் பயம் என்னுள்.

சிதிலமடைந்த சிறகுகள் கொண்டு...
மீண்டும் மீண்டும் பறக்க முயற்சித்தேன்.
ஒவ்வொரு முறை மண்ணில் விழும்போதும்...
வண்ணம் தொலைத்தபடி இருந்தது வானவில்.

சிறகுகளை மொத்தமாய் இழந்து...
இன்று மண்ணில் விழுந்து கிடக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் வண்ணம் தொலைக்கும்
வானவில் பார்த்தபடி.

சிறகுகள் இழந்த வலியை விட...
வண்ணம் இழக்கும் வானவில்..
அதிகம் வலிக்கிறது.

இனி என் வாழ்வினில்...
வண்ணங்களற்ற இரவுகள் மட்டுமே மிச்சமிருக்கும்.
எப்பொழுதாவது வரும் கனவுகளிலும் வரக்கூடும்...
கருப்பு-வெள்ளை வானவில்.

அழகான கவிதை சசிதரன். கனவு தொலைதல் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை... அதில் உங்களுடையதும் ஒருவிதம்..

கனவுகள் தொலைந்த வலியா? அல்லது எண்ணங்களோடு தொலைந்த கனவின் வலியா? சற்று குழப்பம்தான்.

நீங்கள் வண்ணங்களை இறைத்து வரைய ஆசைப்பட்டது உங்களால் நினைக்கப்பட்ட எண்ணங்கள்.. அதன் வழியே, வளர்கிறது, கனவுகள்... எண்ணங்களின் வளர்ச்சிதான் கனவுகள். சிலருக்கு எண்ண நிலை தாண்டி நிஜத்திற்குள் நுழைந்துவிடுகிறது... பெரும்பாலானோருக்கு நிழல்நிலைதான்... சரி...

வானவில் தொட்டு வண்ணம் பறிக்க, சிறகுகள் ..

என்ன நினைக்கிறோமோ அதற்கான முயற்சிகள்தான் சிறகுகள்.. ஒவ்வொரு எண்ணத்திற்குப் பின்னாலும் முளைக்கும் சிறகுகளை நாம் கண்டுகொள்வதில்லை... ஆனால் கண்டுகொள்ளப்பட்ட சிறகுகள் மட்டுமே கனவு என்ற நிலைதாண்டி நிற்க முடிகிறது.

கழியும் இரவுகள், எண்ணங்களுக்கும், அதன் செயலாக்க அல்லது வெளிவந்த செயலுக்குமிடையே உண்டான தூரத்தை அளப்பது. எத்தனை இரவுகள் என்பது முக்கியமல்ல. அத்தனைக்குள்ளும் என்ன செய்தோம் என்பதே முக்கியம். எண்ணத்தின் பாதை கனவுகளாக இருப்பதால், அவை கனவுகளைக் கொண்டு கழிவதில் மாற்று உடன்பாடே இல்லை.

திடீரென்று சிறகொடிந்து போவது அடுத்த எண்ணத்தின் ஊடுறுவலாலா? அல்லது ஒருங்கிணைப்பில்லாத மனத்தினாலா? காரணம் கூறப்படவில்லை... ஆனால் கூறப்படாத காரணங்களால் நாம் எத்தனை காரணமேனும் எடுத்துக் கொள்ளலாம் இல்லையா,,, அந்த இடத்தில் உங்களைப் பாராட்டுகிறேன் சசி..

முயற்சிகள் தோல்வியடைந்தால் முழுமையும் தோற்பதில்லை. எண்ணங்கள் தோல்வியுற்றால் மறு எண்ணங்கள் நம்மை ஆக்ரமிக்கலாம். அல்லது முன்பு கூறியதைப் போன்று, மறு எண்ணங்களின் ஆக்ரமிப்புகளால் கூட தோல்வியில் முடிவதுண்டு இல்லையா...

சிறகுகள் = முயற்சிகள்,
வண்ணங்கள் = எண்ணங்கள்

முயற்சி இழந்த வலியைக் காட்டிலும் எண்ணங்கள் இழந்த வலி நம்மை துருத்தலாம்... சிலவகையானவை, குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றி முடிக்கக் கூடியவையாக அமையும். அத்தகைய சூழ்நிலை திரும்பவும் ஏற்பட நாட்கள் ஆகலாம்..... ஆனால்

சிறகுகள் மீண்டும் முளைப்பது சகஜமில்லையா....

இனி, என்ற வார்த்தையைத் தவிர்த்து, வரும் கருப்பு வெள்ளை வர்ணங்களான எண்ணமும் கூட ஒருவகையான எண்ணம்தானே!!! :)


ஷீ-நிசியின் பூமிப்புறா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16456)படித்திருக்கிறீர்களா? இதே போன்றதொரு கருத்தில்...
நேரடி பொருள், அழகு நடை, தெளிவான கரு, போன்றவை அடங்கியிருக்கும்... இக்கவிதையினைப் போலவே!!!

kulirthazhal
29-05-2010, 04:51 AM
கனவினில் வந்ததெது, காட்சியானதெது, வண்ணங்கள் மறைந்தது கண்கலிளிருந்தா? விண்ணிலிருந்தா.... கனவின் இன்பங்கள் நினைவினை பிழியும்போது நிஜங்களில் பதியும் சோகம் நிச்சயம் கவிதை....... கண்கள் எப்போதேனும் வண்ணங்களை வானவில் எனும்... அதுவரை காத்திருக்க தேவையில்லை......... கவிதை எல்லாவற்றையும் ரசனையாக்கிவிடும்..............

பென்ஸ்
02-06-2010, 01:23 AM
சிறகுகள் இழந்த வலியை விட...
வண்ணம் இழக்கும் வானவில்..
அதிகம் வலிக்கிறது.

இது நச்...

என் கையில் கத்தி பட்ட போது கூட
கவனமாய் பிடித்து மருந்து இட்டேனே
உன் கையில் ஊசி குத்திய போது மட்டும்
ஏன் துடித்து போகிறேன்...

காதல் வலி மையானது ... (இங்கே எங்கோ வாசித்தது)

nambi
02-06-2010, 01:33 AM
கவிதை அருமை. வரிகள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி!

அக்னி
08-06-2010, 06:26 AM
பூமியெங்கும் நிறைந்து கிடக்கின்றன
வண்ணங்கள்...
வானவில் கரைந்து போகின்றதே
என்ற கவலை எதற்கு...
சிறகுகள் கூட இனித் தேவையில்லை...

இந்தக் கவிதை ஏதோ ஓர் உவகையை மனதுக்குள் ஊற்றுகின்றது.
சசிதரனுக்குப் பாராட்டு...

ஆதவா...
உங்களை மிகவும் எதிர்பார்க்கின்றோம். இந்தக் கவிதையில் உங்கள் விமர்சனம் பார்க்கும் எவரும், அவ்வாறே எண்ணுவர். விரைந்து வாருங்கள் மன்றம்...
விமர்சனத்திற்கு விசேட பாராட்டு...