PDA

View Full Version : காதல் மழை......



"பொத்தனூர்"பிரபு
26-01-2009, 12:43 PM
காதல் மழை......




http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SXsTbfqGh2I/AAAAAAAAAO8/_ShL8oBayKE/s400/rain1111.jpg (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/SXsTbfqGh2I/AAAAAAAAAO8/_ShL8oBayKE/s1600-h/rain1111.jpg)


" சீ சீ இந்த மழை விடாது போல் இருக்கே "

" மழை ஒரு லட்சியவாதி , அதன் லட்சியம் நிறைவேறும் வரை பொழிந்து கொண்டேத்தான் இருக்கும் "

" ம்ம்... அப்படியென்ன லட்சியம் ? "

" உன்னை தொட்டு பார்ப்பதுதான்...!! "

" ம்ம்.. ஏற்க்கனவே ரொம்ப குளிரா இருக்கு , இதுல இந்த ஐஸ் வேரயா ? " - சிரிக்கிறாள்

" நிஜம்தான் உன்னை தொட்டுபார்க்கும் ஆசையிலத்தான் வானத்துல இருந்து பூமிய நோக்கி நெடும் பயணம் செய்யுது இந்த மழை
ஆனா அதை புரிஞ்சுக்காமா நீதான் கருப்பு குடை புடிக்கிற
, அதனால துக்கம் தாங்காம தொடர்ந்து அழுகிறது ஆனாலும் தரையில விழுந்ததும் சிரிக்கிது ஏன் தெரியுமா?? , உன் பாதத்தையாவது தொடும் சந்தோசத்துலத்தான். "

" அதுக்காக என்னை மழையில நனைய சொல்லுரியா?? ஜலதோசம் பிடுச்சுக்காதா? "

" நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "

" ஆகா !!! ஆரம்பிச்சுட்டியா ?? இதுக்கு இந்த மழையே தேவல " -
என்று கூறி
குடையை தூக்கியெறிந்து விட்டு நடக்கிறாய் , குஷியில் கொட்டித்தீர்த்தது மழை

வசீகரன்
11-02-2009, 09:56 AM
செம கிலு கிலு... ஜிலு ஜிலுப்பான கவிதை... உடன் இருக்கும் படத்தை பார்ப்பவர்களுக்கு
ஜலதோஷம் பிடிச்சிகோமுங்க....
நல்ல மழை கவிதை மழையில் நனைந்த உணர்வை ஏற்படுத்தியது...

ஆதவா
11-02-2009, 10:18 AM
தமிழிஷ்ல் நம்பர் ஒன்......

கலக்குங்க பிரபு.....

ஷீ-நிசி
11-02-2009, 12:37 PM
நீ நனைந்தால் உனக்கு மட்டும்தான் ஜலதோசம் பிடிக்கும் நனையாவிட்டால் ஜலத்துக்கெல்லாம் தோசம் பிடிச்சுக்காதா?? "

இந்த வரிகளை என் இதழோரம் வெளிவந்த மெல்லிய புன்னகை வாசித்துவிட்டு சென்றது.


தபூ சங்கர் ஸ்டைல்! நல்லாவே கைகூடியிருக்கு! வாழ்த்துக்கள்!

"பொத்தனூர்"பிரபு
11-02-2009, 10:12 PM
செம கிலு கிலு... ஜிலு ஜிலுப்பான கவிதை... உடன் இருக்கும் படத்தை பார்ப்பவர்களுக்கு
ஜலதோஷம் பிடிச்சிகோமுங்க....
நல்ல மழை கவிதை மழையில் நனைந்த உணர்வை ஏற்படுத்தியது...


நன்றி வசீகரன்

"பொத்தனூர்"பிரபு
11-02-2009, 10:15 PM
தமிழிஷ்ல் நம்பர் ஒன்......

கலக்குங்க பிரபு.....


நன்றி ஆதவா






இந்த வரிகளை என் இதழோரம் வெளிவந்த மெல்லிய புன்னகை வாசித்துவிட்டு சென்றது.


தபூ சங்கர் ஸ்டைல்! நல்லாவே கைகூடியிருக்கு! வாழ்த்துக்கள்!


நன்றி ஷீ- நிசி
தபூ சங்கர் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் ,