PDA

View Full Version : நாவலாக மாற்றும் முயற்சிரங்கராஜன்
26-01-2009, 01:27 PM
உறவுகளே வணக்கம்,
நான் எழுதிய தீயில் ஒரு பனித்துளி கதையை நாவலாக எழுதி அதை ஒரு புத்தகமாக வெளியிட முடிவு செய்து இருக்கிறேன். உண்மையில் அந்த கதையின் கரு நான் நாவலாக எழுத தான் யோசித்து வைத்து இருந்தேன், நம் மன்ற உறவுகளுக்காக அதை சிறுகதையாக வெளியிட்டேன். நான் அதை நாவலாக வடிக்க உங்களுடைய அறிவுரைகள் தேவை

1) கதையில் எதாவது கதாபாத்திரம் சேர்க்க வேண்டுமா?

2) கதையின் ஓட்டத்தை எப்படி கொண்டு செல்லலாம், நகைச்சுவையாகவா? அல்லது சீரியஸாகவா?

3) கதையின் ஹீரோவாக மகனை போடலாமா? அல்லது தந்தையை போடலாமா? (யார் ஹீரோவோ அவர்களை மையப்படுத்தி கதையை நகர்த்த வேண்டும்).

4) ஒரு மிகையான நடையில் கதை இருக்க வேண்டுமா? அல்லது யதார்த்த நடையில் கதை இருக்க வேண்டுமா?

5) நிகழ்கால தொழில்நுட்பம் கதையில் இருக்க வேண்டுமா?, (அதாவது gps, transmitter முதலியவை) ஏனென்றால் நாயகனை astro physics scientist ஆக சித்தரிக்க உள்ளேன்.

6) அல்லது இந்த முயற்சியை நான் கைவிடுவது நல்லதா?

எந்த கருத்தாக இருந்தாலும் மறைக்காமல், தயங்காமல், வார்த்தைகளின் மேல் எந்த ஒரு ஜீகினாவும் ஒட்டாமல், நெற்றிப் பொட்டில் அடித்தது போல நேராக சொல்லவும் (அமரன் கவனிக்கவும்), நான் யாரையும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டேன், (ஆதவா-வை தவிர ஹா ஹா ஹா).


நாவல்கள் எழுதி முன் அனுபவம் இல்லாததால், பல சந்தேகங்கள் எனக்கு எழுகிறது, நல்ல வாசகர்களாகிய உங்களின் கருத்துகளை சொன்னீர்கள் என்றால் எனக்கு நாவலை எழுத உபயோகமாக இருக்கும். எனக்கு நன்றாக தெரியும் இது ஒரு அமெச்சூர் முயற்சி என்று, ஆனால் இப்பொழுது இந்த முயற்சி கூட செய்யவில்லை என்றால் கடைசி வரை என்னுடைய எல்லா முயற்சிகளும் அமெச்சூராகவே ஆகிவிடும். உங்களுடைய கருத்தை இந்த திரியிலே போடலாம், திட்டுவதாக இருந்தாலும் சங்கோஜபடாமல் திட்டவும், (கெட்ட வார்த்தை உபயோகிப்பதாக இருந்தால் மட்டும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பவும், murthyd99@yahoo.com).

கதையின் சுட்டி

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18077

இந்த நாவலை கண்டிப்பாக என்னுடைய தாய் மன்றத்திற்கு சமர்பனம் செய்வேன். நன்றி.

(பி.கு : அன்பு பொறுப்பாளர்களே இந்த திரியை வேறு பகுதிக்கு மாற்றுவதாக இருந்தால் தயவு செய்து, உறவுகளுக்கு தெரியும் படி வைக்கவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

சிவா.ஜி
26-01-2009, 03:15 PM
நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தக்ஸ். நிச்சயம் நல்லதொரு நாவலாக வரக்கூடிய கரு இது. எழுதுங்கள். யதார்த்தமிருக்கட்டும் அதே சமயம் நாவலாக இருக்கும்போது எழுத்தாளரின் எண்ணங்களும் அதில் கலந்துவரவேண்டும். மகனையே கதாநாயகனாக்குங்கள். அவனுடைய தொழில் சம்பந்தமாக நிறைய தகவல் திரட்டுங்கள். அதைக் கதையினூடே கலந்து சொல்லுங்கள்.

ஆனால் அவை துருத்திக்கொண்டு தெரியக்கூடாது. இயல்பான கலைவையாக இருக்க வேண்டும். மேலும் சில கதாபாத்திரங்களை சேருங்கள். சிறுகதையில் தந்தைக்கும் மகனுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அதே போல நல்ல நட்புமிருக்கிறது. அவற்றுக்கு சேதம் விளைவிக்க பல காரணிகளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். அவற்றைக் காட்டி, அதை எப்படி உடைத்து மீண்டும் அவர்கள் நல்ல உறவுகளாக இருக்கிறார்களென்று காட்டினால் நன்றாக இருக்கும்.

நகைச்சுவை ஆங்காங்கே தெளித்து சீரியஸாக கொண்டுபோனால்தான் இந்த நாவலுக்கு பொருத்தமாக இருக்குமென்பது என் அபிப்பிராயம்.

வாழ்த்துகள் தக்ஸ். மிகச்சிறந்த எழுத்தாளராய் உருவாவீர்கள் என்பது சர்வ நிச்சயம்.

செல்வா
26-01-2009, 03:50 PM
முதலில் கையக் குடுங்க தக்ஸ். இனிய வாழ்த்துக்கள்.
மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
மன்னிக்கவும் நேரமின்மை காரணமாக இன்னும் உங்கள் கதையை வாசிக்கவில்லை...
ஆனால் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

அனைவரின் பார்வையில் படுவதற்காக ஒரு வாரத்திற்கு இந்தத் திரியை ஒட்டிவைக்கிறேன்.

ரங்கராஜன்
26-01-2009, 04:34 PM
நன்றி அண்ணா
உங்களின் வார்த்தைகள் அனைத்தையும் கவனமாக எடுத்துக் கொண்டு செயல்படுவேன் அண்ணா, நன்றி

நன்றி செல்வா
உன்னுடைய பாராட்டு நன்றி செல்வா, திரியை ஒட்டி வைத்ததற்கு நன்றி. நேரம் கிடைக்கும் பொழுது கதையை படித்து விட்டு மேலான உன்னுடைய கருத்தை சொல்லவும்.

ராஜா
22-07-2012, 12:19 PM
நூல் வெளியிடப்பட்டுவிட்டதா மூர்த்தி..?

சிவாவின் ஆலோசனைகள் மதிப்புமிக்கவை..