PDA

View Full Version : காதலை விரட்டிய படி



dhanasekaran10
26-01-2009, 10:58 AM
அவளை பார்த்ததும் என் மனதில் ஓடிய முதல் கவிதை

"அணு அணுவாக சாக தயார் என்றால் காதல் செய் என்றான் ஒருவன்"

வேகமாக முடிவெடுத்தேன்.அவளை விரட்ட........

"அவளை உன் மூச்சாக மாற்று என்றார் மற்றொருவர்"

அன்று முதல் என் தூக்கம் போனது .ஆனால் அவளைப் பார்த்தால்

"பெண்ணே உன்னைப் பார்த்தால் கற்சிலை ஆகிறேனடி"

காதலை சொல்ல முடிய வில்லை.உருகுலைந்து நின்ற போது நண்பனிடம் சொன்னேன்.

"திரவகமாக பிறக்க வேண்டியவள்
பெண்ணாக பிறந்து விட்டாள்"

என்றேன்.அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்......

"ஒவ்வொரு பூக்களின் சிரிப்பிலும்
அடுத்த நொடியின் மரணம் ஒழிந்துள்ளது
ஒவ்வொரு பெண்ணின் உள்ளும்
சொல்ல முடியாத வேதனை உள்ளது
ஒவ்வொரு நொடியும் இறந்து கொண்டிருக்கும் பூவை
ஒரேயடியாக சாகடித்து விடாதே"

காதலை விரட்டிய படி ஆரம்பித்த நான் இப்போது எனக்குள் இருந்த காதலை வெளியே விரட்டிய படி
செல்கிறேன்.

:icon_b:

சிவா.ஜி
26-01-2009, 06:05 PM
நல்லாருக்குங்க இக்யு. வித்தியாசமா சிந்திச்சிருக்கீங்க. வாழ்த்துகள்.

arun
03-02-2009, 04:31 PM
வித்தியாசமாக இருக்கிறது பாராட்டுக்கள்

அறிஞர்
05-02-2009, 08:31 PM
விரட்டி.. விரட்டி செய்தால் தான் காதல்.....
அருமை அன்பரே..