PDA

View Full Version : ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் மீதான பயங்கரவாத தடை நீக்கம்

அன்புரசிகன்
26-01-2009, 10:39 AM
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பலஸ்தீன் ஹமாஸ் மற்றும் புலிகள் மீதான தடையை நீக்க ஒப்புதல் அளித்துள்ளது.. இது தொடர்பாக ரொய்டரில் உள்ள செய்தி வருமாறு...

EU agrees to take Iran group off terror list

BRUSSELS, Jan 26 (Reuters) - European states agreed on Monday to remove exiled Iranian opposition group the People's Mujahideen Organisation of Iran (PMOI) from an EU list of banned terrorist groups, an EU official said.

The official confirmed EU foreign ministers approved a decision to remove it from a list that includes Palestinian Hamas and Sri Lanka's Tamil Tigers. The decision follows a number of court rulings against its inclusion on the blacklist.

"What we are doing today is abiding by the resolution of the the European court," EU foreign policy chief Javier Solana told reporters just before the ministers finalised the decision.

The PMOI is the group which exposed Iran's covert nuclear programme in 2002. It began as a leftist-Islamist opposition to the late Shah of Iran and has bases in Iraq.

Western analysts say its support in Iran is limited because of its collaboration with Iraq during the 1980-88 Iran-Iraq war. It remains banned in the United States.

The decision means that the PMOI will now be able to raise funds in Europe, but may not be the end of a years-long saga.

France announced last week an appeal against the December judgment of the European Court of First Instance which called for the delisting of the group, and EU officials stress that court ruling was based on procedure rather than substance.

"This does not mean the court does not think the PMOI is a terrorist group," one EU official said. "We are taking it out for procedural reasons."

PMOI allies have repeatedly accused the EU -- which has led efforts to persuade Iran to curb a nuclear programme suspected as a cover for the atom bomb -- of seeking to "appease" Tehran by keeping the group blacklisted.

British Foreign Secretary David Miliband insisted that the delisting of the PMOI should have no effect on international diplomacy aimed at persuading Tehran to curb uranium enrichment.

"We have to find a way to respect the court judgment ... I think the Iranian standoff with the IAEA (International Atomic Energy Agency) is very clear. During 2009 there will and should be significant focus on this issue. (Reporting by Mark John and Ingrid Melander; editing by David Brunnstrom)

நல்ல செய்தி ஒன்று...

நன்றி http://www.reuters.com/article/latestCrisis/idUSLQ200287

தூயவன்
26-01-2009, 10:49 AM
சூப்பர் ஆனா லிட்டில் லேட் ... எது எப்படி இருப்பினும் நல்ல செய்தி

சுகந்தப்ரீதன்
26-01-2009, 11:00 AM
அப்பாடா... இப்பவாவது அவுங்க ஒத்துக்கிட்டாங்களே அதுவே பெரிய விசயம்தான்...!! இவுங்க எப்பத்தான் ஒத்துக்குவாங்களோ தெரியலையே...??

அப்படியே இலங்கை அரச பயங்கரவாதத்தை அந்த லிஸ்டுல சேர்த்துவிட்டா என்னவாம்..??

என்னவன் விஜய்
26-01-2009, 11:02 AM
நல்ல விடயம்,
இதே செய்தி மற்றச்செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளதா அன்பு?

அன்புரசிகன்
26-01-2009, 12:26 PM
இந்த செய்தியை கூறியதே ஒரு அரபி தான். அவர்களது ஹமாஸை நீக்கும் போது புலிகளையும் நீக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஐ.ஒ ற்கு என்று கூறினான். அவர்கள் சொன்னது ரொய்டர் தான். மற்றயவற்றை தேடிபார்க்கவில்லை...

என்னவன் விஜய்
26-01-2009, 12:27 PM
அப்படியா, நன்றி அன்பு.
காத்திருப்போம். நல்ல செய்தி வரும் என்று காத்திருப்போம்.

நிரன்
26-01-2009, 08:22 PM
எப்படி எடுக்காம இருக்க முடியும் யெர்மன் அரசு .இலங்கையை உடனே
போரை நிருத்தச் கூறியும் மகிந்த அரசு யெர்மனி நாட்டின்
வேண்டுகோளை நிராகரித்து விட்டது.

இதிலிருந்தே மகிந்த அரசின் வெறித்தனமான தாக்குதல் விளங்கியிருக்கும்.

நல்லவொரு செய்தி அன்பண்ணா! அப்படியே நம் மக்களுக்கும் ஒரு விடிவு பிறக்கட்டும்

அக்னி
26-01-2009, 08:31 PM
நம்பிக்கை சிறு கீற்றாக...

வவுனியன்
29-01-2009, 12:36 AM
இந்த செய்தியில் People's Mujahideen அமைப்பையே பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது...
ஆனால் புலிகள் அமைப்பினை நீக்கியதாக கூறப்படவில்லையே?

அன்புரசிகன்
29-01-2009, 07:10 AM
இந்த செய்தியில் People's Mujahideen அமைப்பையே பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது...
ஆனால் புலிகள் அமைப்பினை நீக்கியதாக கூறப்படவில்லையே?

ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை பலஸ்தீன் ஹமாஸ் மற்றும் புலிகள் மீதான தடையை நீக்க ஒப்புதல் அளித்துள்ளது.. இது தொடர்பாக ரொய்டரில் உள்ள செய்தி வருமாறு...

நல்ல செய்தி ஒன்று...

நன்றி http://www.reuters.com/article/latestCrisis/idUSLQ200287

சரியா???

EU foreign ministers approved a decision to remove it from a list that includes Palestinian Hamas and Sri Lanka's Tamil Tigers.

இது முதலாவது நடவெடிக்கையே... அதன் பின் தொடராக சில நடவெடிக்கைகளின் பின்னர் நீக்கப்படலாம்...

தவிர இந்த செய்தியை நான் தமிழ் இணையங்களில் இருந்து எடுக்கவில்லை. அமீரக அலுவலக நண்பனின் (அரபு மொழிபேசும் பலஸ்தீனிய) உதவியால் கிடைத்தது.

செய்தி தவறு என்றால் மன்னிக்க...

வவுனியன்
29-01-2009, 07:17 AM
இது உண்மையாக இருக்கவேண்டும்...
பதிலுக்கு நன்றிகள்.

புதியவன்
29-01-2009, 04:04 PM
வெற்றி நிச்சயம் இது வேத தத்துவம்
கொள்கை வெல்வதே நாம் கொண்ட லட்சியம்

தர்மமே வெல்லும்.
(நம்புங்கள் தமிழீழம் மலரும்)

erode
30-01-2009, 09:28 AM
இதுமட்டும் உண்மையா இருந்தா அவர்களும் இனி வருத்தபடுவார்கள் தடைய நீக்கியதற்க்கு

அன்புரசிகன்
30-01-2009, 10:17 AM
இதுமட்டும் உண்மையா இருந்தா அவர்களும் இனி வருத்தபடுவார்கள் தடைய நீக்கியதற்க்கு

எனக்கும் வருத்தமா இருக்கு... நீங்கள் நல்லா இருங்க... மற்றவங்க எப்பாடு பட்டா உங்களுக்கு என்ன... சரிதானே.........

தூயவன்
30-01-2009, 10:35 AM
இதுமட்டும் உண்மையா இருந்தா அவர்களும் இனி வருத்தபடுவார்கள் தடைய நீக்கியதற்க்கு

அவர்களுடைய வருத்தங்களை அவர்கள் பார்பார்கள் நீங்க உங்க பிழைப்பை பாருக.. புரியுதா ??

அக்னி
30-01-2009, 10:54 AM
இதுமட்டும் உண்மையா இருந்தா அவர்களும் இனி வருத்தபடுவார்கள் தடைய நீக்கியதற்க்கு
நண்பரே,
மக்களின் உணர்வுகளையும், ஆதரவையும் இத்தடைகளாற் தடுக்க முடியவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றும், ஐரோப்பிய மண்ணில், புலிக்கொடி பறக்கத்தான் செய்கின்றது.

இது மக்களின் உணர்வும் உரிமையும் சார்ந்த விடயம்.

உணர்வை இழந்துவிட்டு வாழ இனியும் முயற்சிக்காதீர்கள்.

நிரன்
30-01-2009, 11:03 AM
இதுமட்டும் உண்மையா இருந்தா அவர்களும் இனி வருத்தபடுவார்கள் தடைய நீக்கியதற்க்கு

நண்பரே நீங்கள் ஒருவர் மட்டும் இங்கே வந்து இப்படியான கூற்றைக் கூறுவது எனக்கு சில அரசியல் வாதிகளை நினைவில் நிறுத்துகிறது. நாளை கனடாவில் ஈழத்திற்காக பல்லாயிரம் மக்கள் ஒன்று திரண்டு பெரும் போரட்டம் நடத்தப் போகிறார்கள். அதே நேரத்தில் லன்டன் மாநகரிலும் இலங்கை அரசைக் கண்டித்து பெரும் போராட்டம் நடத்தவுள்ளனர். என்னால் முடிந்தால் லன்டனில் நடக்கவுள்ள போரட்டத்தில் கலந்து கொள்வேன். ஏனெனின் நானும் ஒரு ஈழத் தமிழன் எவர் கூற்றும் எம் தமிழினத்தின் பற்றைக் குறைக்காது அதே நேரத்தில் தமிழனையும் தமிழையும் கேலி செய்வதும், உணர்வுகளைக் கொச்சைப் படுத்துவதையும் பார்த்துக் கொண்டும் என்னால் சும்மா இருக்க முடியாது.

உணர்வுகளை இழந்து பிணமாக இருப்பதைவிட உணர்வுடன் மனிதனாவேன்

erode
30-01-2009, 11:10 AM
நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு

அக்னி
30-01-2009, 11:14 AM
நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு
பின்னர் ஏன் ஐரோப்பிய சட்டதிட்டத்திற் தலைபோடுகின்றீர்கள்..?

தூயவன்
30-01-2009, 11:22 AM
நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு

ரொம்ப "அழ"கா இருக்கீங்க

நிரன்
30-01-2009, 11:32 AM
நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு

தமிழ்நாட்டு முதலைமைச்சர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா???

அறிஞர்
30-01-2009, 01:32 PM
நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு மனித நேயத்தோடு நடப்பது தான் மனிதனுக்கு அழகு....
அடுத்தவர் மனது புண்படும்படி பேசுவது அழகல்ல...
இங்கு இந்தியன், அமெரிக்கன், ஐரோப்பியன், கனடா, இலங்கை சேர்ந்தவன் என்ற பாகுபாடு கிடையாது.
இங்கு தமிழராக மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

என்னவன் விஜய்
30-01-2009, 01:42 PM
இதுமட்டும் உண்மையா இருந்தா அவர்களும் இனி வருத்தபடுவார்கள் தடைய நீக்கியதற்க்கு

உங்களை உள்ளே விட்டதற்க்கு மன்றம் வருத்தப்படாமல் இருந்தால் சரி, :D:D

நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு

நல்ல அழகா வடிவாத்தான் இருக்கின்றீர்கள். :redface:

இளசு
02-02-2009, 08:47 PM
நல்ல செய்தி... நல்ல மாற்றங்களும் தொடரட்டும்!

ஈழத்தமிழர் இன்னல்கள் இன்றோடு மறையட்டும்..!

எத்தனைதான் தாங்கும் எங்கள் இனம்?

நடப்பவை கண்டு/கேட்டு பதறும் எங்களுக்கு
விரைந்து நல்ல சேதி கிட்டட்டும்!

என் பிரார்த்தனைகள்!

அமரன்
02-02-2009, 08:57 PM
என்ன செய்து என்ன பிரயோசனம் அண்ணா. எம்மம்மகள் பலரின் சாம்பல்படுக்கை மீதா சமாதானக் குழந்தையை வளர்த்தப் போகிறார்கள்.

இப்போது கூட 5000 எறிகணைகள் ஒரே இடத்தில் வீழ்ந்ததாகவும் இடம்பெயர்ந்தோர் அடைக்கலம் புகுந்த இரு முகாம்கள் தீக்கிரை என்றும் நித்திரையிலேயே நிரந்தர நித்திரைக்குப் பலர் போனதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது. உறுதிப்படுத்த முயன்றபடி உள்ளேன். உண்மையாக நடந்திருந்தால் நெஞ்சடைக்கும் நிமிடங்கள் வந்துவிட்டன என்பதைத் தவிர வேறேதும் சொல்ல இயலவில்லை.

இன்னும் இன்னும் எத்தனையோ செய்திகள். எத்தனையோ தகவல்கள். இழந்த உறவுகளின் வேதனையே தீராத நிலையில் இருக்கும் உறவுகளையும் இழக்க விரும்பாமல் தாங்கும் சக்தி இல்லாமால் விழுங்கத்தான் முடிகிறது.

இளசு
02-02-2009, 09:08 PM
அமரா

நிர்க்கதியாய் நிற்கும் மக்களைக் கொன்றுகுவிக்கும்
இனப்படுகொலைப் பாதகம்..

எட்டி நிற்கும் எங்கள் குலையே பதறுகிறதே..

ஒட்டிப் பிறந்த உனக்கும் மற்றைய சகோதர -சகோதரிகளுக்கும்..
எப்படி இருக்கும்?

தேற்றவும் சொல்லின்றி.....

jk12
08-02-2009, 07:13 AM
அவர்களுடைய வருத்தங்களை அவர்கள் பார்பார்கள் நீங்க உங்க பிழைப்பை பாருக.. புரியுதா ??

உங்களை உள்ளே விட்டதற்க்கு மன்றம் வருத்தப்படாமல் இருந்தால் சரி, :D:D
. :redface:

நண்பர்களே இந்த வார்த்தைகளும் நன்றாகவா இருக்கிறது?

இங்கு நாம் அனைவரும் தமிழர்களே...
அனைவருக்கும் அங்கு உள்ள தமிழர்கள் படும் கஷ்ட்டங்கள் வருத்தத்தைதான் தருகிறது.
எந்த தரப்பு தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிங்கள இனவாதிகளை கண்டிப்பாக பிடிக்காது.

ஆனால் அனைவரும் புலிகள் மட்டும்தான் தமிழர்கள் என்றோ, அவர்களின் அனைத்து நிலைபாட்டையும் சரியேன்று அனைத்து தரப்பு தமிழர்களுக்கும் தோன்றவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயபடுத்துவது சரியாகாது.

அன்புரசிகன்
08-02-2009, 07:29 AM
ஆனால் அனைவரும் புலிகள் மட்டும்தான் தமிழர்கள் என்றோ, அவர்களின் அனைத்து நிலைபாட்டையும் சரியேன்று அனைத்து தரப்பு தமிழர்களுக்கும் தோன்றவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயபடுத்துவது சரியாகாது.
வாஸ்த்தவம் தான். அதை அனைவரும் பின்பற்றவேண்டுமல்லவா?

புலிகளை புறம் கூறுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நம் வலிகளை ஏளனப்படுத்துவது சரியா????

ஆம் என்றால் எனது மன்னிப்புக்கள் மற்றவர்கள் சார்பில்....

மறத்தமிழன்
08-02-2009, 08:10 AM
ஆம் என்றால் எனது மன்னிப்புக்கள் மற்றவர்கள் சார்பில்....

மன்னிப்புக்கள்!!! கேட்கிறியளா? வழங்குறியளா?

விக்ரம்
08-02-2009, 09:25 AM
தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...

அன்புரசிகன்
08-02-2009, 09:43 AM
மன்னிப்புக்கள்!!! கேட்கிறியளா? வழங்குறியளா?

எனது ஆடையில் சேறு பூசிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. மன்னிப்பு தான் கேட்டேன். அதனால் எனக்கோ என்னினத்திற்கோ எந்த இழுக்கும் வராது...

உண்மை எது என்று எனக்கும் தெரியும். காலம் அதனை தூற்றுபவர்களுக்கும் புரியவைக்கும்...

தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...

நீங்கள் ஏமாளியா?? அவ்வளவுக்கு தமிழ்மன்றம் உங்களுக்கு புளித்துவிட்டதா???

உபதேசங்கள் தூற்றல்கள் செய்வது இலகு..........................

praveen
08-02-2009, 11:10 AM
ஒரு திரி பார்க்க பிடித்தால் அதில் உள்ள கருத்துக்கு மறு கருத்தோ/ஆதரவு கருத்தோ தோனினால் தன்மையாக எழுதுங்கள். திரியின் உள்ளடக்கம்\போக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த திரிக்கு சென்று விடுங்கள். இங்கே தான் வகைவகையாக பலதரப்பட்ட பகுதிகள் உள்ளனவே. உள் நுழைந்தவுடன் இந்த திரி தான் பார்த்து ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.

உறுப்பினர் யாவரும் திறந்து பார்க்கும் திரி அனைத்தும் கருத்து பதித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. எனவே பிடிக்கவில்லை என்றால் கருத்து பதிக்காமல் கூட சென்று விடலாம்.

வர வர நம்மவர்களிடையே சகிப்பு தன்மை குறைந்து வருகிறது. நாலு தமிழ்(புலவர்கள்) ஒன்றாக கூடி பேசினால் கடைசியில் பேச்சுவார்த்தை முற்றி அடிதடியில் தான் முடியும் என்பது சரியாக இருக்கும் போல.

சமீபகாலமாக, தமிழனுக்கு எதிரி தமிழனே. மாற்றுக்கருத்தை கூட அடுத்தவர் மனம் புண்படும்படி தான் வைப்பான் போல.

முகம் தெரியாத சகோதரர்களுக்கு உதவ மனம் இல்லாவிட்டாலும், நம் முககுறிப்பை கான விழையும் போது அவர்களை எட்டி உதைக்க வேண்டாம்.

நிரன்
08-02-2009, 11:54 AM
தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

நண்பரே!
இங்கு யாரும் புலிகளுக்கு சப்போர்ட் செய்யவில்லை வன்னியில் இருக்கும் 3லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவர்களைத்தான் நம்பியுள்ளனர் தமக்கு ஒரு விடிவு பிறக்குமென்றும். அப்படியெனின் அவர்கள் எல்லாம் முட்டாள்களா! இல்லை தமிழ் மன்றம் புலிகளுக்கு சப்போர்ட் என்று கூறும் தாங்கள்!!!!

இங்கு நாம் யாரையும் சப்போர்ட் செய்யும் படி கேட்கவில்லை, வற்புறுத்தவில்லை, வாதம் செய்யவில்லை, முயன்றவரை எம் மக்கள் பற்றிய கருத்துக்களை மற்றவர்களுக்கும் ஆதாரம் மூலம் நிருபிக்கிறோம். நாம் இங்கு இடும் சில கருத்துக்கள் சிலரின் செயல் மூலம் வாதமாக மாறுகிறது பலர் அக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை காரணம் அவர்களில் சிலர் அந்நிலையில் இருந்து வந்தவர்கள்தான் பிறர் அவர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் பொழுது மனதில் இருக்கும் வேதனைகளுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கிறது.

மன்றத்தில் நாம் புலிகளல்ல மன்றமும் புலிக்கு சப்போர்ட் செய்யவில்லை, மன்றத்தின் மடியில் தவழும் குழந்தைகள் போல் எம் கண்ணீரையும் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்கிறோம். மனதில் பாரம் குறைகிறது, இதோ இந்தச் சுட்டியை ஒரு முறை பாருங்கள் இதற்குப் பின்னர் உங்கள் கருத்து என்ன என்பதைக் கூறுங்கள் நாம் புலிகளுக்கு ஆதரவா இல்லை அல்லல் படும் எம்முறவுகளுக்கா என்று. இங்கே சொடுக்குங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19128)

அல்லது அதற்கான சுட்டி கீழே
http://tamilmantram.com/vb/showthread.php?t=19128

ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் நண்பரே!
மற்றவர்களை புண்படுத்தும் அல்லது கொச்சைப் படுத்தும் கருத்துக்கள் எவர் படைத்திருந்தாலும் அதனைச் குப்பைக்கு அனுப்புவதற்கு சுட்டிக் காட்டுவோம்.

அன்புடன்
°°நிரன்°°

அமரன்
08-02-2009, 12:24 PM
தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...

ஒருவர் மீது குற்றம் சாட்டுவது எளிது. அதனை வார்த்தைகளை வளைத்து வலுப்படுத்துவதும் எளிது. அந்த வார்த்தை வளைப்புகளின் போது சீறிப்பாயும் உணர்வுகள் அடுத்தவர்களை தாக்கும் என்பதும் தெளிவு.

மன்றம் மீதான உங்கள் குற்றச்சாட்டு அந்த வகையானது.

புலிகளுக்கு ஆதரவான திரிகள்.. ஏன் தமிழருக்கு ஆதரவான பல திரிகள்கூடப் பூட்டப்பட்டன. அப்போது யாரும் தமிழ்மன்றத்தின் பெயரை மாற்றுங்கள் என்று கேட்டதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

நன்றி.

ஓவியன்
08-02-2009, 01:23 PM
தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...

அன்பான விக்ரம்..!!

தமிழ் மன்றம் யாருக்குமோ, இல்லை எந்த அமைப்பினருக்குமோ சார்பானதல்ல...
இந்த நோக்கத்துடனேயே தமிழ் மன்ற நிர்வாகமும் நடந்து வருகிறது, இதற்கு முன்பு பூட்டப் பட்ட திரிகளை எடுத்து நோக்கினால் உண்மை புரியும்,
ஏனென்றால் பூட்டப் பட்ட திரிகளில் புலிகளுக்கு ஆதரவான திரிகளும் கணிசமானவை என்பது மறுக்க முடியாத உண்மை (மன்றத்தின் ஒரு பொறுப்பாளனாக என்னால் இதனை நிரூபிக்க முடியும்)....

இங்கு திரிகள் பூட்டப் படுவது, திரியில் வளர்ந்து செல்லும் பிரச்சினையான பதிவுகளை நிறுத்தி மன்ற மக்களிடை பிரிவுகளை தடுப்பதன்றி யாருக்கேனும் ஆதரவளிப்பதல்ல...

என்னவன் விஜய்
08-02-2009, 04:30 PM
தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...

விக்ரம் அவர்களே,

இங்கு அனைவரும் சமம் என்றே என் கருத்து. எல்லோருக்கும் கருத்து சுதந்திரமும் உண்டு.

நம் சகா உருப்பினர்கள் பதியும் பின்னூட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்குமாயின் அதை தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். அதுதான் முறை, இப்படி மன்றத்தை புளி(லி) மன்றமாக மாற்றுங்கள் என்று எழுதுவது சரியான கூற்றாகயில்லை.

நன்றி.

யாரோ ஒரு ஏமாளியை உசுப்பேத்திவிட்டு மன்றம் வேடிக்கை பார்க்கிறதா!! அடடே, யாருபா அது? ;)
பிரவீன் சொல்வதுபோல் இனி சில திரிகளை கண்டும் காணாமல் செல்வதே சிறப்பு, எனக்கும் வரவர பின்னூட்டங்கள் பதியவே பயமாக இருக்கின்றது. :redface:

விக்ரம்
08-02-2009, 04:39 PM
என்னவன் விஜய்,

உங்களை உள்ளே விட்டதற்க்கு மன்றம் வருத்தப்படாமல் இருந்தால் சரி என்று யாரை சொன்னீர்களோ அதற்கு சம்பந்தப்பட்டவருக்கு எவ்வளவு மனவருத்தம் இருந்திருக்குமோ, அதைவிட புளி என்று சொன்ன வருத்தம் ஒன்றும் பெரியது இல்லை.. இல்லை என்று நினைத்தீர்களாயின் ரெண்டும் சமம் அவ்வளவு தான்.. இனிமேல் யாரும், யாருடைய மனதையும் புண்படும் அளவுக்கு எழுதமாட்டார்கள் என்று நினைக்கிறேன்...

யாரோ ஒரு ஏமாளியை உசுப்பேத்திவிட்டு மன்றம் வேடிக்கை பார்க்கிறதா!! அடடே, யாருபா அது? ;)
:redface:
போங்க என்னவன் விஜய், உங்களுக்கு குசும்பு ரொம்ப... புரிஞ்சுகிட்டே புரியாத மாதிரி நடிக்கிறீங்க பாருங்க...

இலங்கைப் போரில உண்மையா யாரு பாதிக்கப்பட்டு இருக்காங்களோ அவங்களைத்தான் ஏமாளினு சொன்னேன்.. உசுப்பேத்தி விடுறது யாருமல்ல.. வெளிநாட்டுல இருக்கற மக்களும், தமிழ்நாட்டுல இருக்கற அரசியல் வாதிகளும்...

என்னவன் விஜய்
08-02-2009, 04:51 PM
என்னவன் விஜய்,

உங்களை உள்ளே விட்டதற்க்கு மன்றம் வருத்தப்படாமல் இருந்தால் சரி என்று யாரை சொன்னீர்களோ அதற்கு சம்பந்தப்பட்டவருக்கு எவ்வளவு மனவருத்தம் இருந்திருக்குமோ, அதைவிட புளி என்று சொன்ன வருத்தம் ஒன்றும் பெரியது இல்லை.. இல்லை என்று நினைத்தீர்களாயின் ரெண்டும் சமம் அவ்வளவு தான்.. இனிமேல் யாரும், யாருடைய மனதையும் புண்படும் அளவுக்கு எழுதமாட்டார்கள் என்று நினைக்கிறேன்...
..

ஆனாலும் நீங்கள் இரோட் (erode) அவர்களுக்கு நன்றாகவே வாதாடுகிறீர்கள். இரோடுகூடா இப்படி பீல் பண்ணியிருப்பாரா என்பதே சந்தேகம்தான்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் இருக்கிறது உங்கள் விளக்கம்.

இனி நான் வாதாட ஒன்றுமில்லை. நன்றி

அமரன்
08-02-2009, 05:17 PM
போங்க என்னவன் விஜய், உங்களுக்கு குசும்பு ரொம்ப... புரிஞ்சுகிட்டே புரியாத மாதிரி நடிக்கிறீங்க பாருங்க...

இலங்கைப் போரில உண்மையா யாரு பாதிக்கப்பட்டு இருக்காங்களோ அவங்களைத்தான் ஏமாளினு சொன்னேன்.. உசுப்பேத்தி விடுறது யாருமல்ல.. வெளிநாட்டுல இருக்கற மக்களும், தமிழ்நாட்டுல இருக்கற அரசியல் வாதிகளும்...

விக்ரம் தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூட உங்கள் மேல் குதர்க்கம் செய்வதாக கோபம் கொண்டு விட்டேன்.

இப்பத்தான் தெரிகிறது உங்களுக்குப் பல விடயங்கள் தெரியாமல் பேசுகின்றீர்கள் என்பது.

ஐநா முன்றலில் சுவிஸ் வாழ் தமிழ் இளையோர் தொடர்ந்து நீங்க சொன்னமாதிரி சும்மா உட்கார்ந்திருந்தாங்க. பல நாட்கள் இருந்தாங்க. ஏன் நாயேன்னு எவரும் எட்டிப்பார்க்கவில்லை. அந்த நேரம் பார்த்து முத்துகுமார் தீக்குளித்த செய்தி பரவ அந்த இளையோரில் ஒருவர் அவர் வழி முயல ஐ.நா அதிகாரி ஒருவர் ஓடோடி வந்தார். நீங்கள் பத்துப்பேர் இருந்து பிரயோசனம் இல்லை. பல பேர் வந்து சும்மா உட்காருங்க என்றார். மக்களும் நம்பி பெப். 1 முதல் இருந்தாங்க. நான்காந்தேதி அதிகாரி ஒருத்தர் வந்தாரு. இலங்கையில் போர் நிறுத்தம் வர ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து கலைந்து செல்லுங்கள் என்றார். நம்மவர்கள் சொன்னதை செய்தார்கள். ஐ.நாவும் சொன்னார்கள் இலங்கை அரசுக்கு. இலங்கை அரசு செய்யலை. அதன் மூலம் ஐ.நாவும் செய்யலை. இனி இன்னொருவர் உயிரை மயிராக நினைத்து கொடுக்க முயற்சித்தால்தான் ஐ.நா ஏதாவது செய்ய முன்வரும் போல..

குறிப்பிட்ட புதினத் தளங்களை மட்டும் பார்க்காமல் எல்லாப் புதினத் தளங்களையும் பாருங்கள் விக்ரம்.

வெளிநாட்டு மக்கள் உசுப்பேத்துறாங்கன்னு சொன்னீங்க பாருங்க. மிக மிக மிக தவறான கூற்று. வெளிநாட்டு மக்கள் பலருக்கு ஈழ விவகாரம் தெரியவே இல்லை. வெளிநாடு வாழ் தமிழ் மக்களோ வேதனையின் உச்சத்திலும் பொறுமையின் எல்லையிலும் உங்கள் பாசையில் சொல்லப்போனால் உசுப்பேறியும் அரசாங்கம் அனுமதி கொடுக்கும் தேதியில், அனுமதிக்கும் இடத்தில் சும்மா உட்கார்ந்துக்கிட்டுதான் இருக்காங்க.

எவருக்கும் இடையூறு செய்யாமல் மிகச்சரியான அகிம்சைப் போராட்டம் செய்தபடி உள்ளனர். அதிலும் சில நாடுகளில் புலிக்கொடியே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பாருங்கள்.. ஐ.நா விவகாரம் நீங்கள் ஏந்த வேண்டியது அகிம்சை இல்லை என்று அடித்துச் சொல்லுது. நட்டதும் ரோஜா உடனே பூக்கனும் என்று எதிர்பார்க்கக்கூடாது என்கிறீர்களா... சரிதான்.. ஆனால் பிணங்களுக்கு வைக்க ரோசாப்பூ எதுக்கு.

அப்புறம் இன்னொன்று சொல்லி இருக்கீங்க.. இங்க இல்ல.. இன்னொரு இடத்தில. இந்திய அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செய்ய வேண்டியதை. அவர்களை ஒருமைப்படுங்கள் என்று மக்கள் சொல்லிக் களைத்து விட்டார்கள். ஒரு சிலர் கேட்பதாயில்லை. நீங்கள் சொல்வதை செய்யுங்கள் என்று மன்றாடினாலும் நடக்காது. அதான் உயிர்கொடை செய்தாலாவது ஒருமைப்பட்டு செயல்பட முன்வருகிறார்களா என்று அப்பாவிகள் உயிரை விடுகிறார்கள். அவர்கள் செய்வது தவறுதான் என்றாலும் தவறு செய்யத் தூண்டியவர்கள் எந்தவிதமான உறுத்தலோ தண்டனையோ இல்லாமல் சுந்தந்திரமாக உலவுகிறார்களே.

உயிர்துறப்பு வேண்டாம் என்ற எண்ணமும் எனக்காகவும் சேர்ந்துதானே உயிரை விட்டான் என்பதும் இப்போதும் என்னை உறுத்துகிறது.

உலக நாடுகள் செய்யும் இன்னொரு காமெடி என்ன தெரியுமா.. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று நினைத்து போரை நிறுத்துங்கள். அரசியல் தீர்வை முன்வையுங்கள் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். புலிகள் வலிந்த தாக்குதலை நடத்தி ஒட்டிசுட்டான் வரை இராணுவத்தை பின்னகர்த்தி... கடலில் வலிந்த தாக்குதல் நிகழ்த்தி இராணுவத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தி.. தாம் பலம் இழக்கவில்லை என்று நிரூபித்ததும் குத்துக்கரணம் அடித்து புலிகள் ஆயுதங்களை போட வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள். சரிதான்... போடலாந்தான்.. ஆனாப்பாருங்க.. போலீசுக்கு கூட அதிகாரம் இல்லாத ஒரு சக்கையான தீர்வு என்று இலங்கையின் சர்வகட்சி குழுவும்.. அது கூட இல்லை.. பௌத்தருக்குத்தான் நாடு என்று சில கட்சிகளும், பிக்குகளும் சொல்கிற்றார்கள்.. அவை எதுவும் உலக நாடுகள் காதில் விழவில்லை. அட அதை விடக் கொடுமை.. ஐ.நா அமைதிப்படையை அனுப்பி தீர்வை ஏற்படுத்லாமே என்ற்ற கனெடிய முன்மொழிவை எவரும் சட்டையே செய்யலை.

என்னைப் பொறுத்தவரை.. புலிகள் பலமாக இருப்பதையோ, அவர்கள் மூலம் தமிழீழம் மலர்வதையோ எந்த ஒரு வல்லரசும் விரும்பவில்லை. ஏன் எனில் இருக்க இடம் இல்லாதபோதே நீர்மூழ்கியை சொந்தமாகத் தயாரிக்கும் அளவுக்கு இருப்பவர்களுக்கு சொந்த நாடு இருந்தால் எத்தனை பேரின் வல்லரசுக் கனவுகள் கலைந்து விடும்.

ஆதி
08-02-2009, 05:44 PM
//இனிமேல் யாரும், யாருடைய மனதையும் புண்படும் அளவுக்கு எழுதமாட்டார்கள் என்று நினைக்கிறேன்...//

விக்ரம் அண்ணா, என்ன கொடுமை இது.. முதலில் கல்வீசியது erode தான் அப்புறம் குளத்தில சலனம் னு குறை சொன்ன எப்படி ?

அண்ணா, களத்தில் நிற்பவர்களுக்குதான் வலி தெரியும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எல்லாமே ஆத்துல கரைச்ச புளியாதான் தெரியும்..

நம்மால முடிஞ்சா தோள் கொடுப்போம், இல்ல தூர நிற்போம்... அடுத்தவங்க காயத்துல கல்லெறிய வேண்டாம் ப்ளீஸ்..

விக்ரம்
08-02-2009, 06:13 PM
அமரன்!

சுவிஸ் ஐ.நா முன்னாடி மக்கள் அமர்ந்து போராடியது எனக்கு தெரியாது. நான் சொன்னது, நா(தா)னகவே சிந்தனையில் வந்ததை சொன்னது.. அறவழிப் போராட்டத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான்.. அதனால் தான் அவ்வாறு சொன்னேன்...

ஓவியன்
09-02-2009, 01:07 AM
இலங்கைப் போரில உண்மையா யாரு பாதிக்கப்பட்டு இருக்காங்களோ அவங்களைத்தான் ஏமாளினு சொன்னேன்.. உசுப்பேத்தி விடுறது யாருமல்ல.. வெளிநாட்டுல இருக்கற மக்களும், தமிழ்நாட்டுல இருக்கற அரசியல் வாதிகளும்...

ஈழத்தில் வன்னிப் பகுதியில் தினம் தினம் அவதிக்குள் தவிக்கும் லட்சக் கணக்கான மக்களில் என் பெற்றோர் அடங்கலான பெரும்பாலான உறவினர்களும் அடங்குவார்கள், நான்கு வாரங்களுக்கு முன் நான் அவர்களுடன் பேசுகையில் (அதன்பின்னர் அவர்கள் யாருடனும் எந்த தொடர்புகளும் இல்லை) இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருக்கும் அகதி முகாம்களுக்கு வாருங்களேன் என விண்ணப்பித்தேன், அப்போது அங்கிருந்து கிடைத்த பதில் “இராணுவத்தால் நடத்தப்படும் நலன்புரி நிலையமென்ற பெயரிலுள்ள தடை முகாம்களில் அடைபட்டுக் கிடப்பதிலும்,, சொந்த பூமியில் பட்டினி கிடந்து சாவதே மேல்”

அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களை உசுப்பேத்தி உரமேற இது ஒன்றும் ஆடு, புலி ஆட்டமில்லை மாறாக பல்லாயிரம் உயிர்களோடான பிரச்சினை....

ஒரு சிறு புழு கூட உயிருக்கு ஆபத்தென்றால் போராடும், நிலமை அப்படியிருக்க அங்கே இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தம் விரும்பமில்லாமல் அங்கிருந்தால் அங்குள்ள சில ஆயிரக்கணக்கான புலி வீரர்களால் தடுத்திட இயலுமா.....?

அத்துடன் இப்போது அங்குள்ளவர்களுக்கு வெளி உலகத்திடமிருந்து எந்த தொடர்புகளுமில்லை...

மின்சாரமில்லை,
அலைபேசி இல்லை,
தொலைபேசி இல்லை,
பொருளாதார தடை என்ற பெயரில் பற்றரி உட்பட பல பொருட்கள் அங்கு இல்லை....

இப்படி பல இல்லைகள் அங்கிருக்க, நாமெல்லாம் இங்கிருந்து உசுப்பேத்துவதை கண்டு அங்கிருந்து எப்படி அவர்கள் உசுப்பேறினார்களோ தெரியலையே....??? :frown:

அன்புரசிகன்
09-02-2009, 02:28 AM
வன்னியில் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தவர்களை அவரவர் இடங்களில் குடியமர்த்தாது வவுனியா நெலுக்குளம் பகுதியிலுள்ள முகாம்களில் தான் வைத்துள்ளனர்... வடிகட்ட இலகு இல்லையா......... செம்மணி புதைகுழி போன்றதொரு புதைகுழி தோன்றும். அதற்கல்லாம் நம் பதறக்கூடாது. அறவழியில் போராடுவோம்...

தூயவன்
09-02-2009, 02:31 AM
உண்மையானவை ஓவியன்அண்ணா..உங்கள் குடும்பம் நலமுடன் இருக்க எனது பிராத்தனைகள்.

jk12
10-02-2009, 04:45 PM
அங்கிருப்போரின் வலிகள்.... மனதை உருக்குகிறது.

மீண்டும் நம் தமிழர்கள் பலம் பெற்று, அனைத்து நட்பு நாடுகளின் முயற்ச்சியால்.. ஒரு போரில்லாத வாழ்விடங்கள் அனைவருக்கும் அமைய ஆண்டவனை பிரர்த்திக்கிறேன்

திரு.ஓவியன் அவர்களே உங்கள் குடும்பத்தினரும்... மற்றும் போர்முனையில் இருக்கும் அனைவரும் எந்த ஓரு ஊறும் நேராமல் பத்திரமாக இருக்கவும் ஆண்டவனை பிரர்த்திக்கிறேன்

புதியவன்
11-02-2009, 04:11 PM
நான் இந்தியன் அதுனால என் நாட்டின் அரசியல் சட்டபடி தான் இருக்கிறேன், அது தான் குடிமகனுக்கு அழகு

நண்பரே நீங்கள் முதலில் தமிழனாக இருக்கப்பாருங்கள், அதற்கப்புறந்தான் நீர் இந்தியர்:icon_p:

விக்ரம்
12-02-2009, 08:51 AM
நண்பரே நீங்கள் முதலில் தமிழனாக இருக்கப்பாருங்கள், அதற்கப்புறந்தான் நீர் இந்தியர்:icon_p:
முதலில் மனிதன், அதுக்கப்புறம் இந்தியன், அப்புறம் தான் தமிழன் எல்லாம்.....

முதலில் மனிதனாய் இருந்தாலே, இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்படுவது புரியும், வருத்தம் ஏற்படும்...

முதல்ல தமிழன் என்று சொல்லி, இனப்பற்றை காமிப்பதாய் நினைத்து, இனவெறியை வளர்க்காதீர்கள்...

இந்தியன் என்று சொல்லும் தமிழன் எவனும், இலங்கை தமிழ் மக்களை கொலை செய்யணும்னு ஆசைப்படல...

நான் மீண்டும் சொல்றேன்... இலங்கைப் பிரச்சினையை காரணம் காட்டி,, இந்தியாவை பிரிக்காதீர்கள்..

miindum
12-02-2009, 09:08 AM
இந்தியா எனப்து ஓரளவிற்கு ஜனநாயகத்துக்கு வழிமுறையான செயல்பாடுகளில் மற்ற நாடுகளின் நியாயப்பார்வைக்காகவாவது நடக்க முயற்சிக்கிறது.
ஆனால் இலங்கை அப்படியல்ல.....
(தனிப்பட்ட நபர் பற்றி பேசிய வார்த்தைகள் நீக்கப்பட்டது - அறிஞர்!)

சுகந்தப்ரீதன்
17-02-2009, 07:04 AM
நான் மீண்டும் சொல்றேன்... இலங்கைப் பிரச்சினையை காரணம் காட்டி,, இந்தியாவை பிரிக்காதீர்கள்..
தமிழகத்தை பிரிக்கறதுக்கு காரணம்தேடி நீங்க இலங்கை வரைக்கும் எல்லாம் போக வேண்டாம்..?? தமிழக மீனவர்கள், காவேரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனைன்னு ஆயிரம் காரணத்தை இந்திய அரசு உங்களுக்காக இங்கேயே உருவாக்கி வச்சிருக்கு...!!

miindum
17-02-2009, 11:53 AM
மனிதன் என்ற உணர்வுகள் படைத்தவன் மனிதந்தான்....

இந்தியன் என்ற உணர்வுகள்
படைத்தவன் இந்தியந்தான்....

ஆனால் தமிழன் என்ற உணர்வுகள்
படைத்தவன் தமிழனா இல்லையா..............?
விக்ரம் என்ற தமிழர் மன்னிக்கவும் மனிதர் பதில் சொல்லட்டும்...

சூரியன்
17-02-2009, 01:59 PM
நல்ல செய்தி.
போர் நிறுத்தம் எப்போது ஏற்படுமோ?

விக்ரம்
17-02-2009, 05:27 PM
தமிழகத்தை பிரிக்கறதுக்கு காரணம்தேடி நீங்க இலங்கை வரைக்கும் எல்லாம் போக வேண்டாம்..?? தமிழக மீனவர்கள், காவேரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனைன்னு ஆயிரம் காரணத்தை இந்திய அரசு உங்களுக்காக இங்கேயே உருவாக்கி வச்சிருக்கு...!!
சிறந்த சிந்தனை சுகந்தா.. சீமான் கேட்ட அதே கேள்வியை கேட்டிருக்க. கேள்வியை உங்கிட்டயே திருப்பி கேட்குறேன், ச்சீமானுக்கும் சேர்த்துதான். தமிழக மீனவர்கள், காவேரி, பாலாறு, முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கமா தீர்க்குற மாதிரி நியாயமான வழி சொல்ல முடியுமா உன்னால? உணர்ச்சி கொந்தளிக்க பேசுறதுனால எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியும்னு நம்புறியா?

மீனவர் பிரச்சினை?
இந்திய கடல் எல்லைக்குள் வந்து, இங்கே மீன் பிடித்துக் கொண்டிக்கும் மீனவர்களை இலங்கை இராணுவம் எப்பவாது சுட்டதா இல்லவே இல்லை.. அப்படி சுட்டால் இங்கே மீனவர் பிரச்சினையை எடுத்திட்டு வரலாம்.

என்ன மாதிரி சூழ்நிலைகளில சுடுறாங்கனு தெரியுமா?

மீனவர் சுடப்படுவதை இரண்டு விதமா பார்க்கலாம்.

இலங்கை ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டால் அது தமிழக மீனவர்களை சுடுறாங்க என்று சொல்லலாம்.

இலங்கை கடல் எல்லைக்குள், தெரிந்தோ (அ) தெரியாமலோ செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படை சுடுகிறது என்றால், அது இலங்கை நாட்டின் அரசியல் எதிரிகள் சிலருக்கு ஆயுதம் மற்றும் வெடிமருந்து சப்ளை செய்ய வருகிறார்கள் என்று நினைத்து அவர்கள் சுடுகிறார்கள்.

அங்க போனாத்தான் சுடுறானுகனு தெரிஞ்சதுக்கு அப்புறம், போறவங்க தப்பா? சுடுறவங்க தப்பா?

காவேரி, பாலாறு, முல்லை பெரியாறு
கோர்ட் சொல்றபடிக் கேட்டா காவேரி பிரச்சினையை தீர்க்கலாம். கோர்ட் சொல்றதை கேட்டிருந்தா, தண்ணிப்பிரச்சினை இல்ல, பெரிய பெரிய மதக்கலவரங்களே வராம தடுத்திருக்கலாம். Already இனப்பிரச்சினையைப் பத்தி பேசுறோம். மதப்பிரச்சினையையும் சேர்த்து இழுக்க வேண்டாம்நு நினைக்கிறேன், அதனால மதபிரச்சினையை அலசவேண்டாம்.

கோர்ட்டின் தீர்ப்பை கட்டாயம் நடைமுறைப்படுத்த முடியாது. கர்நாடகர்கள் விடமாட்டார்கள்.. ஏனா அவன்கிட்ட இருந்து தானே வருது. தனக்கு மிஞ்சினால் தான் தானமும், தர்மமும்னு வீராப்பா பேசுவான். வேறெப்படி பண்ணலாம்? ஆயுதம் எடுக்கலாமா? ஆயுதம் எடுத்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

இல்லை, நம்மகிட்ட இருந்து அவனுகளுக்கு போறது எதையாவது கொடுக்கமாட்டேனு சொல்ற அளவுக்கு நம்மகிட்ட எதாவது இருக்கா? ஒண்ணுமில்லை. நெய்வேலி, கல்பாக்கம்னு யாரோ சொல்ற மாதிரி இருக்கு, அதெல்லாம் மத்திய அரசுக்கு சொந்தமானது. பி.ஜே.பியோ, காங்கிரஸோ யாரு ஆட்சியில உட்கார்ந்தாலும் இரு மாநிலத்துக்கு இடையிலான பிரச்சினைகளில் தீர்வு காண முன்வரமாட்டார்கள். அப்படி தீர்வு கண்டா, காலா காலத்துக்கும் ஒரு மாநிலத்தோட ஓட்டு கிடைக்காது..

நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்ல, எதிரிக்கு ஒரு கண்ணாவது போகணும்னு நம்மளே வேணும்னா களத்திலே இறங்கலாம். தமிழகமே இருளில் மூழ்கினாலும் பரவாயில்லை, கர்நாடகா, கேரளாக்கு கரெண்ட் போகக்கூடாதுனு, நெய்வேலியையும், கல்பாக்கத்தையும் இழுத்து மூடுற அளவுக்கு செய்யலாம். இது தீர்வா?

ஒரு பிரச்சினையை தீர்க்க முயலும்போது, அதைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும். மற்றப்பிரச்சினைகளை சம்பந்தா சம்பந்தமில்லாமல் முடிச்சு போடக்கூடாது. அப்படியே முடிச்சு போட்டாலும், அவிழ்க்க நான் தயார்.

சம்பந்தா, சம்பந்தமில்லாம ஒரு கேள்வி :mini023: தமிழன், தமிழனு கூடப்பிறந்தவன் மாதிரி வாய் கிழியப் பேசுறவங்களுக்கு ஒரு கேள்வி -> ராமதாஸ் வீட்டில (அ) வைகோ சொந்தத்துல திருமாவளவன் பொண்ணுகட்ட முடியுமா? சுகந்தா நாங்கெல்லாம் தூங்கும்போதே, சிந்திக்குறவைங்க.. இப்ப நான் கேட்ட கேள்வியும் கூட, திசை திருப்பும் பாணி கேள்வி தான்.

விக்ரம்
17-02-2009, 05:53 PM
மனிதன் என்ற உணர்வுகள் படைத்தவன் மனிதந்தான்....

இந்தியன் என்ற உணர்வுகள்
படைத்தவன் இந்தியந்தான்....

ஆனால் தமிழன் என்ற உணர்வுகள்
படைத்தவன் தமிழனா இல்லையா..............?
விக்ரம் என்ற தமிழர் மன்னிக்கவும் மனிதர் பதில் சொல்லட்டும்...
விக்ரம் ஒரு மனிதன் விலங்குகளிடமிருந்து வேறுபடும்போது.

ஒரு இந்தியன் பிரஞ்சுக்காரன் (அ) பாகிஸ்தானியனுடன் ஒப்பிடும்போது.

விக்ரம் ஒரு தமிழனும் கூட, ஏனா அவனும் அவங்கம்மாவும் பேசுற மொழி தமிழ். விக்ரமோட அம்மாக்கு தமிழ் மட்டும் தான் தெரியும்..

தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையென்றால் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்னு பேசுறதுக்கோ, வழிமொழியறதுக்கோ கொஞ்சம் யோசிப்பவன் நான்.

நானும் இருப்பது ஜகத்தினில் தான், உணவில்லாமல் தவிக்கும் அந்த தனிமனிதன் இருப்பதும் ஜகத்தினில் தான். அவனுக்கு உணவில்லைனு ஜகத்தினை அழிக்கிறது லாஜிக் படி தப்புத்தானே..

அறிஞர்
17-02-2009, 07:43 PM
இந்த பதிவில் இடம் பெற்ற பதிவுகள் போதுமென எண்ணுகிறேன்.