PDA

View Full Version : திரைப்பட விமர்சன திரியில் பிரச்சனைரங்கராஜன்
25-01-2009, 02:17 PM
வணக்கம் நண்பர்களே
ரொம்ப நாளாய் இந்த சந்தேகத்தை கேட்க வேண்டும் என்று இருந்தேன், திரைவிமர்சனம் திரியில் பதிவுகளை பதிந்து போஸ்டு என்ற பட்டனை க்ளிக் செய்தால், page cannot be displayed என்று வருகிறது. இந்த பிரச்சனை வேறு யாருக்காவது இருக்கிறதா?. எனக்கு ஒரு முறை அல்ல, பல முறை இந்த பிரச்சனை வருகிறது.

இதனாலே நான் எழுதிய பல படங்களின் விமர்சனம் மன்றத்தில் பதிக்காமல் போய்விட்டேன்.

பூ

சிலப்பாட்டம்

அபியும் நானும்

ஸ்லம் டாக் மில்லினியர்

தி டாவின்ஸி கோடு

artificial intelligence

the happening

இன்னும் பல படங்களின் விமர்சனத்தை எழுதி போஸ்டு செய்யும் பொழுது page cannot be displayed வந்தது. பேக் பட்டனை அழுத்தினால், page expired-னு வருது (மற்ற திரிகளுக்கு இப்படி வருவதில்லை). என்னுடைய விமர்சனங்கள் அனைத்து போய் விட்டது, திரும்பவும் எழுதுவதற்கு சொம்பேறி தனம்.

சரி தனியாக எழுதி வைத்து cut and paste பண்ண வேண்டியது தானே என்று கூறுவது காதில் விழுகிறது. போஸ்டு செய்த பின் page cannot be displayed என்ற வார்த்தைகளை பார்த்தால் தான் இந்த பிரச்சனையே ஞாபகம் வருகிறது. நேற்று கூட ஸ்லம் டாக் மில்லினியர் படத்தின் விமர்சனத்தை எழுதிவிட்டு போஸ்டு செய்யும் பொழுது இதே பிரச்சனை, வெறுத்து விட்டேன். பொறுப்பாளர்கள் கவனிக்கவும்.

அன்புரசிகன்
26-01-2009, 02:28 AM
நான் நினைக்கிறேன். சாதாரண உறுப்பினர்களாக வலம் வரும் போது இவ்வாறு பிரச்சனை வருவதில்லை. நீங்கள் இதழ் தொகுப்பாளர் மனங்கவர் பதிவாளர் என்கிற வகைகளில் வந்திருப்பதால் (உங்கள் பெயரிற்கு கீ்ழ்வருவது) நிர்வாகி உங்கள் வகையினை அடிக்கடி மாற்றியிருப்பார். அந்த வகைகளின் அனுமதிகள் மாறுபட்டிருக்கும். முன்பு பூமகளுக்கு இதே பிரச்சனை வந்ததாய் ஞாபகம். நிர்வாகி தகமையுள்ளவர்கள் (அறிஞர்) தான் இதை மாற்றவேண்டும். பொறுப்பாளர்களுக்கு அல்லது அறிஞருக்கு தனிமடலிடுங்கள்.

ஓவியன்
26-01-2009, 04:15 AM
பிரச்சினையை உரியவர்களின் கவனத்துக்கு ஈர்க்கின்றேன், தக்ஸ்...!

ரங்கராஜன்
26-01-2009, 04:22 AM
நன்றி ஓவியன் & அன்பு
நீங்கள் கூறயபடியே செய்கிறேன்

அன்புரசிகன்
26-01-2009, 04:24 AM
ஆனாலும் உங்கள் குசும்புக்கு அளவில்லை மூர்த்தி. ஒருமுறை விடலாம். இரண்டாம் முறை விட்டிருக்கலாம். மூன்றாமுறையும் ஏன் நேரடியாக பதிய முயன்றீர்கள்??? நோட்பாடில் சேமித்துவிட்டு பின் பதிந்திருக்கலாமே........... :D :D :D

நோட்பாட் திறப்பதற்கும் சோம்பேறித்தனமா?????????? :D

சாப்பாடு வாயால் தானா? இல்லை கை தூக்க கஷ்டத்திற்காக கழுத்தில் துவாரமிட்டுள்ளீர்களா??:D :D :D

ரங்கராஜன்
26-01-2009, 04:31 AM
ஆனாலும் உங்கள் குசும்புக்கு அளவில்லை மூர்த்தி. ஒருமுறை விடலாம். இரண்டாம் முறை விட்டிருக்கலாம். மூன்றாமுறையும் ஏன் நேரடியாக பதிய முயன்றீர்கள்??? நோட்பாடில் சேமித்துவிட்டு பின் பதிந்திருக்கலாமே........... :D :D :D

நோட்பாட் திறப்பதற்கும் சோம்பேறித்தனமா?????????? :D

சாப்பாடு வாயால் தானா? இல்லை கை தூக்க கஷ்டத்திற்காக கழுத்தில் துவாரமிட்டுள்ளீர்களா??:D :D :D

ஹா ஹா நல்ல நக்கல்,

இல்லங்க நோட்டு பேடில் அடித்தால், அதை மன்றத்தில் பதிக்கும் பொழுது வார்த்தைகளை அலைன் செய்து பண்ண வேண்டும், நேரடியாக மன்றத்தில் பதித்தால் இந்த தொல்லை இல்லை. எல்லாத்தையும் எழுதி விட்ட அப்புறம் தான் விமர்சன திரியில் இருக்கும் பிரச்சனை ஞாபகம் வரும், என்ன செய்வது சரியான டியூப்லைட் நான்

ஆதவா
26-01-2009, 04:44 AM
நான் இப்போதுதான் விமர்சனம் ஒன்றை எழுதினேன்.. எனக்கக இந்த பிரச்சனை இல்லை..

Opera உபயோகியுங்கள்... ஒருவேளை பிரச்சனை வந்தாலும், Back பட்டனை அழுத்தும் பொழுது, எழுதியவை அப்படியே நிற்கும்...

ஓவியன்
26-01-2009, 05:22 AM
எழுதியவை அப்படியே நிற்கும்...

எழுதியவை இருந்தாலே போதுமே ஆதவா, வீணாக ஏன் எழுந்து நிற்க வேண்டும்...?? :D

பாவம், எழுதியவை..
கால் வலிக்கும்...!! :D:D:D

தாமரை
26-01-2009, 05:45 AM
அதது உட்கார உரிய இடம் கிடைக்காததாலதானே நிக்குது,

இது மாதிரி பிரச்சனைகள் சில சமயம் எனக்கு இணையத் தொடர்பு துண்டித்துப் போவதால் வருவதுண்டு.

அதனால் சப்மிட் பட்டன் அழுத்தும் முன்பு எல்லாவற்றையும் செலக்ட் செய்து கண்ட்ரோல்-சி செய்து கிளிப்போர்டில் சேவ் செய்து விடுவேன்.

மற்றபடி பதிவு போட ஏற்கனவே சேமித்ததே,..


ஆதவா சொன்னது போஸ்ட் ரிப்ளை அல்லது கோ அட்வான்ஸ்டு மோடில் மட்டுமே வேலை செய்யும். குவிக் ரிப்ளை மோடில் இது சரியாக வேலை செய்வதில்லை

ஆதவா
26-01-2009, 06:37 AM
ஆதவா சொன்னது போஸ்ட் ரிப்ளை அல்லது கோ அட்வான்ஸ்டு மோடில் மட்டுமே வேலை செய்யும். குவிக் ரிப்ளை மோடில் இது சரியாக வேலை செய்வதில்லை

நான் பெரும்பாலும் குயிக் மோடுதான் உபயோகிக்கிறேன்.. எனது இணையம் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை டிஸ்கனக்ட் ஆகக்கூடியது.... இதுநாள் வரையிலும் பேக் பட்டன் அழுத்தி தகவல் போனதில்லையே!!! ஓபராவில் மட்டுமே இது விஷேஷம்...

ஓவியன்.... :sauer028::sauer028:

அறிஞர்
26-01-2009, 01:03 PM
தக்ஸ்... இணைய இணைப்பில் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.... இணைய இணைப்பு தொடர்ந்து.. வராமல்.. விட்டு விட்டு வந்தால் இந்த பிரச்சனை வரும்.

வேறு யாருக்கும் இந்த பிரச்சனை உள்ளதென்றால் கூறுங்கள்.. உடனே நடவடிக்கை எடுக்கிறோம்.

நிரன்
26-01-2009, 01:38 PM
தக்ஸ் அண்ணா எனக்கு இதே பிரச்சினை பலவேளைகளில் வருவதுண்டு டைப் செய்து விட்டுபோஸ்ட் பட்டினை அழுத்தும் பொழுது

''The browser could not find the host server for the provided address.''

இப்படி ஒரு பந்தியே தோன்றும். பின்பு 5 நிமிடம் பின்பு Try again என்று நெருப்பு நரியில் ஒரு பட்டினும் உண்டு அதனை கிளிக்செய்வேன் பின்பு
பழைய நிலைக்கு திரும்பிவிடும் நான் போஸ்ட் செய்த பதிவும் திரியில் இணைந்து விடும் நீங்களும் நெருப்பு நரியை உபயோகியுங்கள்.

நீங்க இதுக்கின்னு ஒரு திரி அமைச்சுப் போட்டுட்டீங்க நானும் வந்து ஒட்டீட்டன்:D

அறிஞர் அண்ணா கூறியது போல இணைய இணைப்பில் பிரச்சினை உள்ளதாக எனக்குத் தென்படவில்லை ஏனெனில் மற்றைய தளங்கள் எல்லாம் நன்றாக இயங்குகிறதே. முன்பு இந்தப் பிரச்சினை இல்லை இப்பொழுது கொஞ்சக்காலமாகத்தான்:confused:

samuthraselvam
30-01-2009, 07:14 AM
daks அண்ணா சொன்னது போல் போஸ்ட் பட்டனை அழுத்தினால் என் Aoccount-லிருந்து வெளியே வந்துவிடுகிறது. Back பட்டனை அழுத்திய பிறகு copy செய்து திரும்பவும் user name password கொடுத்தால்தான் உள்ளே வருகிறது. திரும்பவும் அதே திரியை தேடி பின்னூட்டம் செய்யவேண்டி இருக்கிறது.

ஆதி
30-01-2009, 07:25 AM
daks அண்ணா சொன்னது போல் போஸ்ட் பட்டனை அழுத்தினால் என் Aoccount-லிருந்து வெளியே வந்துவிடுகிறது. Back பட்டனை அழுத்திய பிறகு copy செய்து திரும்பவும் user name password கொடுத்தால்தான் உள்ளே வருகிறது. திரும்பவும் அதே திரியை தேடி பின்னூட்டம் செய்யவேண்டி இருக்கிறது.

தக்ஷண்ணா பிரச்சனை வேறு தங்களின் பிரச்சனை வேறு சகோதரி..

login செய்யும் போது remember me box-ஐ check செய்துவிட்டால் நீங்கள் வெளியேறும் வரை login expire ஆகாது..