PDA

View Full Version : தாயக பூக்கடை



ஆதி
25-01-2009, 12:42 PM
சூரியன் திணிந்தும்
சுருங்கா இருட்டாய்

உலகத்தின் உருகாட்டும்
கண்ணாடியாய்

இழிந்ததின் அடையாளமாய்

குருட்டு நீரே
உன் மீதுதான் எத்தனை
கோணங்கள்..

சுகாதாரம் முழங்கும்
சுயநல சமூகம்
தன் கழிவு யாவயும்
உன் மேல் கிடத்தி
சாக்கடை என்றே உன்னை
சாற்றும்..

கைப்பட்ட யாவையும்
உன் மெய்ப்பட எறிந்து
தேங்க வைத்து
தெருவைக் கெடுக்கும்..
முன்னேற விடாமல்
உன்னை தடுக்கும்..

கூடாரமிட்டு கிருமிகள்
சேதாரமாக்கும் நோய்களை
மகப்பெற்றிடினும்
அவை கருவுற்றது
யார் செய்கைகளால்.. ?

முந்நீர் தண்ணீர்
நன்னீர் எனும்
உயர்ச்சி யாவும்
நீ கரி பூசி கொண்டதால்தான்
மற்றவைகளுக்கு..

தாள்ந்தோர் உயர்வரெனும்
தத்துவ மொழிப்படி இனி நீ
சாக்கடை அல்ல
தாயக பூக்கடை..

சிவா.ஜி
25-01-2009, 02:45 PM
அருமையான சிந்தனை ஆதி. கையில் கிடைப்பதையெல்லாம் அதனுள் விட்டெறிந்து, கழிவுகளையெல்லாம் அதனுள் கலந்துவிட்டு, அதைக் கடக்கும்போது மட்டும் மூக்கை மூடிச்செல்வார்கள்.

ஊராரின் கழிவுதாங்கிக்கொண்டும், களங்கம் சுமந்தும், மேலும் ஓடிக்கொண்டேயிருக்கும் சாக்கடைகள் பூக்கடைகள்தான். வாழ்த்துகள் ஆதி.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-01-2009, 05:11 PM
கலங்குன குட்டைல மீன் புடிப்பாங்க. நீங்க ஒரு கவிதையை புடிச்சிட்டீங்க. ரொம்ப ரொம்ப அருமைங்க உங்க கவிதை.

Mathu
25-01-2009, 05:59 PM
ஆதிக்கு மீண்டும் ஒரு முறை சமூக சிந்தனை இதை அனைவரும் உணர்ந்தால் மூக்க பிடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நாகரா
26-01-2009, 12:07 AM
திரிந்த பொருளும்
தூய அருளின் திரிபே!
மனத்தில் இருக்கும் கழிவே
வெளியே சாக்கடையாய்!
கழிவு நீங்கி மனம் தெளிவுற
சாக்கடை பூக்கடையாய்
அதிசயமாய்ப் பரிமாறும்!
சாக்கடையின் அவலத்தில்
பூக்கடை கண்டு கவி வடித்த
உம் தூய நோக்கம்
நம் அனைவருக்கும் வாய்க்கட்டும்!

சுகந்தப்ரீதன்
26-01-2009, 04:13 AM
சுகாதாரம் முழங்கும்
சுயநல சமூகம்
தன் கழிவு யாவயும்
உன் மேல் கிடத்தி
சாக்கடை என்றே உன்னை
சாற்றும்....நச்சென்று மண்டையில் கொட்டியது போல் இருக்கிறது நண்பரே...இந்த வரிகள்..!! தலைவாழை இலைக்கூட எச்சிலிலையாய் மாறிப்போவது இப்படித்தான் போலிருக்கு..!!

ஆதி உங்களுக்கே உரிய மென்மையான பாங்கில் சமூக அவலங்களை கவிதையில் காட்டி கண்டித்திருப்பது கவிதைக்கு சிறப்பு..!! வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!