PDA

View Full Version : நானும் மனிதன் தானே? (சிறுகதை-27)

ரங்கராஜன்
25-01-2009, 07:00 AM
நானும் மனிதன் தானே?

ஜீப்பை விட்டு இறங்கினான் ரவி, காக்கி ஃபாண்டு, கலர் சட்டை, மூன்று நாள் தாடி, தூக்கம் இல்லாத சிவந்த கண்கள், அசதியான முகம். மாடி நோக்கி சென்றான், மூலையில் பான்பராக் கோலங்கள் உள்ள மாடி படிக்கட்டில் ஏறினான். முதல் மாடியில் இரும்பு கதவு தட்டினான், கதவு திறக்கப்பட்டது. உள்ளே இருந்த உயர் அதிகாரி வெளியே வந்தார். அறையின் உள்ளே இருந்து சத்தமாக குரல் வந்தது.

“யாரு இவன் தானா, என்னிடம் இருந்து உண்மையை வரவழை... ............” அதற்குள் கதவு மூடப்பட்டதால், வாக்கியம் முடிவடையவில்லை.

“மிஸ்டர். ரவி, இந்த மாதிரி ஒரு நிலைமையில் உங்களை நான் தொந்தரவு செய்யக்கூடாது, இருந்தாலும் எனக்கு வேறு வழியில்லை, ரொம்ப திமிரா பேசறான், எதற்கும் பதில் சொல்ல மறுக்கிறான்”

“பேந்தட்டால் மாதிரி எதாவது யூஸ் பண்ண வேண்டியது தானே”

“அது சட்டத்துக்கு எதிரானது”

“பொது மக்களை கொல்வதை விட வா”

“............”

“சரி இப்ப நான் என்ன செய்யணும்”

“அவனிடம் நயமாக பேசி, உண்மையை தெரிஞ்சிக்கனும்”

“நயமாக”

“வேறு வழியில்லை, உங்களால் தான் அது முடியும். அப்ப தான் வருங்கால தாக்குதல்களை தடுக்க முடியும்”

“.........” எதுவும் சொல்லாமல் ஒரு சல்யூடை போட்டுவிட்டு அறையை நோக்கி சென்றான் ரவி.

உள்ளே சென்றான், அங்கு கால் மேல் கால் போட்ட படி உக்கார்ந்து இருந்தான் அவன். கழுத்தை தொடும் அளவிற்கு கோதுமை நிற முடி, நல்ல சிகப்பு, அழகாக தான் இருந்தான். ரவி அவன் அருகில்
நாற்காலியை இழுத்து போட்டு உக்கார்ந்தான்.

“என்னுடைய பெயர் ரவி கந்தசாமி, இன்ட்ராகேஷன் டிப்பார்ட்மேட், ஏ.சி”

“என் பேரு மகாத்மா காந்தி, அகிம்சை டிப்பார்ட்மேட்” என்றான் நக்கலாக காதை குடைந்துக் கொண்டு.

“ஓ அப்படியா, உங்களுடைய நெஞ்சு எலும்பு உடைந்து உண்டியல் மாதிரி சத்தம் வருவதை நீங்க இதுவரை கேட்டு இருக்கிறீங்களா? இன்னொரு முறை எங்கள் காந்தியை பற்றி கிண்டலாக பேசினால், அதை கேட்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்”

“ஹா ஹா அப்படி செஞ்சா, என்னுடைய எழும்பு சத்தம் அடங்குவதற்குள், குண்டு சத்தம் உங்க நாடு பூரா கேட்கும். என் பின்னாடி என்னுடைய நாடே எனக்காக நிக்குது”

“நிஜமாவா, அப்ப இது என்ன?” என்று தன்னுடைய கையில் இருந்த நாளிதழை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதில் தலைப்புச் செய்தியாய்.

“இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பிடிப்பட்டவனும் எங்கள் நாட்டு பிரஜை கிடையாது” $$$$$$$$ நாடு அறிவிப்பு என்று எழுதி இருந்தது.

முதல் முறையாக அவனின் முகம் இருக ஆரம்பித்தது, கண்கள் ரவியை பார்க்க தயங்கியது.

“உன் நாடு பின்னாடி நிக்கும், ஓடிவரும்னு சொன்ன. இப்ப உன் நிலை என்ன தெரியுமா. இந்த உலகத்தில் நீ எங்குமே போக முடியாது”

“என்னுடைய மதக்காரர்கள் என்னை காப்பாற்றுவாங்க”

“நீ வைத்த வெடிகுண்டில் இறந்த பாதி பேர் உங்க மதக்காரர்கள் தான், ஆனால் இந்தியர்கள்”

“நான் என் மதம்னு சொன்னது என்னுடைய நாட்டில் வாழ்பவர்களை தான், அவர்கள் மட்டும் தான் என்னுடைய மதம்”

“ரத்ததிலே உனக்கு தீவிரவாதம் ஊறி விட்டது”

“கஷ்டத்தில் வாழ்ந்து பார், உன் உடம்பிலும் ஊறும், அதற்கு பெருமை படுகிறேன்”

“யாருக்கு தான் கஷ்டம் இல்லை”

“நீ என்ன .......... கஷ்டப்பட்டாய். சிறு வயதில் சாப்பாடு இல்லாமல் வார கணக்கில் இருந்து இருக்கீயா, உன்னுடைய சகோதிரியின் உடல் விற்ற காசில் சாப்பிட்டு இருக்கீயா, உன் தந்தைக்காக விபச்சாரியை அழைத்து வந்து இருக்கீயா, அம்மாவின் விரல் நுனி படாமல் வளர்ந்து இருக்கீயா. அதற்கு பழிவாங்க இதைவிட அதிகமாக செய்வேன், எனக்கு முக்கியம் பணம் மட்டும் தான், நானும் மனிதன் தானே” என்று கத்தினான்.

“அதெல்லாம் அனுபவித்ததில்லை, ஆனால் உன் புண்ணியத்தில் ஆறு மாதமான என் குழந்தை இறந்து விட்டது................... அதுவும் என்னுடைய மனைவி பால் குடுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே........... ரயில்வே ஸ்டேஷனில் நீ வைத்த வெடிகுண்டால்”

“உடலாவது கிடைத்ததா?”

“என் மனைவியின் மார்பும் குழந்தையின் தலையும் மட்டும் கிடைத்தது” குரல் தழுதழுத்தது.

“எங்களுடைய குறி நீங்கள் அல்ல”

“குறி எதுவாக இருந்தாலும், அவங்களும் யாரோ ஒருவருக்கு அப்பா, கணவன், குழந்தை தானே”

“புனிதப்போரில் அதை எல்லாம் பார்க்கமுடியாது”

சற்றென்று எழுந்த ரவி காவலாளியிடம் இரண்டு கிளஸில் தண்ணீர் எடுத்து வரச்சொன்னான். தண்ணீர் வந்ததும் கொஞ்ச நேரம் அதை வாங்கி பார்த்தான்.

“இந்த தண்ணியை குடி” என்று அவனிடம் கொடுத்தான். அதை வாங்கி அவன் குடித்து விட்டு.

“இங்க பார் என்னை இந்த கேஸில் இருந்து விடுதலை செய். உனக்கு கோடி கணக்கில் பணம் வாங்கி தருகிறேன்”

ரவியின் உதட்டில் அசட்டு சிரிப்பு வந்தது.

”என்னுடையை பெண் குழந்தையை நான் தூக்கி கொஞ்சும் பொழுது, அவள் சிரிப்பாள், அப்பொழுது அவள் வாயில் இருந்து எச்சில் துளிகள் என்னுடைய முகத்தில் விழும். அதுக்கு ஈடாகுமா, நீ சொன்ன கோடிகள்” என்றான் அவனின் கண்களை நோக்கி.

எதிரில் அமர்ந்து இருந்த தீவிரவாதி திடீர் என்று தன்னுடைய தொண்டையை பிடித்துக் கொண்டு “ என்ன தண்ணீ ஒரு மாதிரியா இருக்கு”

“சைனைடு கலந்த தண்ணி பின்ன எப்படி இருக்கும்”

“அடப்பாவி................ஏன் ........இப்படி .....செஞ்” என்று துடித்தான் கீழே விழுந்தான். அவனின் காது ஓரமாக சென்ற ரவி

“நானும் மனிதன் தானே” என்றான்.

ரவி வெளியே அவசரமாக தன்னுடைய உயர் அதிகாரியின் அறைக்கு வந்தான்

“என்ன சார் இப்படி செய்து விட்டீர்கள், அவனின் முடியை அவனை கைது செய்தவுடன் வெட்டி இருக்க வேண்டாமா?, இப்ப பாருங்க அதற்குள் சைனைடு குப்பியை மறைத்து வைத்து இருக்கிறான், அதை சாப்பிட்டு தற்கொலை செய்துக் கொண்டான்” என்றான் மூச்சு இறைக்க.

மேல் அதிகாரி அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் “ குட் ரவி, இதையே அனைவரிடமும் சொல்லிடுங்க. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களின் பிஞ்சு குழந்தையின் சாவுக்கு, என்னால் தர முடிந்த ஆறுதல் இது,................ (என்று பெருமூச்சு விட்டவார்), சட்ட ஒழுங்கை காப்பவனாக இருந்தாலும், நானும் மனிதன் தானே” என்றார் ரவியின் கண்களை நோக்கி.

மதி
25-01-2009, 07:07 AM
நச்....

ரங்கராஜன்
04-02-2009, 02:13 AM
நச்....

மதி எழுதியதிலே மிக குறைந்த விமர்சனம் இதுதான், இருந்தாலும் நல்ல தான் இருக்கிறது.

samuthraselvam
04-02-2009, 03:31 AM
"அஹிம்சை வழி அமைதி பெற்றது அந்தக்காலம்...
ஆயுதம் எடுத்து நல்ல தேசியம் செய்வது இந்தக்காலம்...."
கதையை படிக்கும் போதே நம் மனதில் தோன்றியது 'இவனை கொன்றால்தான் என்ன?' ரவி-யை அப்படியே செய்ய வைத்துவிட்டார் daks அண்ணா.
"மதம் பிடித்த மனித மிருகங்களையும், இன வெறி கொண்ட பிசாசுகளையும்,சாதி வெறி பிடித்த சாக்கடை மனம் கொண்ட பேய்களையும்
நாட்டை விட்டு அல்ல, உலகத்தைவிட்டே விரட்ட வேண்டும்" என்பதை விளக்குகிறது இந்தக்கதை இந்த கதை.

ரங்கராஜன்
04-02-2009, 04:49 AM

அடேங்கப்பா தங்கச்சி
உன்னுடைய விமர்சிக்கும் முறையை பார்த்தா, நம்ம மன்றத்தின் மூத்தவர்கள் தாமரை, இளசு, அமரன் விமர்சனம் போல இருக்கிறது, நல்ல விமர்சனத்திற்கு நன்றி

samuthraselvam
04-02-2009, 05:35 AM
அடேங்கப்பா தங்கச்சி
உன்னுடைய விமர்சிக்கும் முறையை பார்த்தா, நம்ம மன்றத்தின் மூத்தவர்கள் தாமரை, இளசு, அமரன் விமர்சனம் போல இருக்கிறது, நல்ல விமர்சனத்திற்கு நன்றி
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:
அன்பு அண்ணா...
நம்ம மன்றத்தின் மூத்தவர்கள் தாமரை, இளசு, அமரன்அவர்களுடன் என்னை ஒப்பிட்டதற்கு மிக்க நன்றி அண்ணா...(அவர்கள் படித்தால் உங்களுடன் சண்டைக்கு வரபோகிறார்கள்.. :cool:)
உங்களை போன்றவர்களுடைய எழுத்துக்களை படிக்கும் போது தானாக வருகிறது அண்ணா..
உணர்ச்சி என்பது அனைவருக்கும் ஒன்றே...
அதை வெளிப்படுத்தும் விதம்தான் மற்றவரை கவரும்.
கடிந்து சொல்வதைக்கூட சிரித்து சொன்னால் மனம் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளும்..

அன்புடன்
லீலுமா...!
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-02-2009, 06:06 AM
உரையாடல்கள் உணர்வுபூர்வமாக இருப்பதும், தேசிய உணர்வு தலைதூக்கியிருப்பதும் கதையை வலியோடு படைத்திருப்பதும் பாராட்டுக்குரியது.

தாமரை
04-02-2009, 07:57 AM
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:
அன்பு அண்ணா...
நம்ம மன்றத்தின் மூத்தவர்கள் தாமரை, இளசு, அமரன்அவர்களுடன் என்னை ஒப்பிட்டதற்கு மிக்க நன்றி அண்ணா...(அவர்கள் படித்தால் உங்களுடன் சண்டைக்கு வரபோகிறார்கள்.. :cool:)
..

அன்புடன்
லீலுமா...!
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ஆமாம். நான் சண்டைக்கு வரத்தான் வேண்டும். நான் விமர்சனம் செய்கிறேன் என்பதே என்னை பலரின் பொல்லாப்புக்கு ஆளாக்கலாம்.. இதென்ன பாரபட்சமென்று..

ரங்கராஜன்
04-02-2009, 03:19 PM
ஆமாம். நான் சண்டைக்கு வரத்தான் வேண்டும். நான் விமர்சனம் செய்கிறேன் என்பதே என்னை பலரின் பொல்லாப்புக்கு ஆளாக்கலாம்.. இதென்ன பாரபட்சமென்று..

தாமரை அண்ணா
உங்களிடம் சீரியஸான ஒரு வார்த்தை “நல்லதோர் வீணை செய்தே அதை ................” இதனுடைய தொடர்ச்சி உங்களுக்கு நல்லாவே தெரியும். அதுபோல நல்ல மொழிவளம், எழுத்துவளம், விமர்சிக்கும் திறமை எல்லாம் இருந்து நீங்கள் அதையெல்லாம் மேலே குறிப்பிட்ட காரணத்திற்காக செய்வதில்லை. இது நியாயமா? இது என்னுடைய கதைகளுக்கு மட்டும் கேட்கவில்லை, அனைவரின் சார்பாக தான் கேட்கிறேன். இதை நீங்கள் அங்கீகார தாகமாக நினைத்தாலும் சரி, இல்லை வற்புறுத்தி விமர்சனத்தை வாங்குகிறான் என்று நினைத்தாலும் சரி, உங்களைப் போல பெரியவர்களிடம் இருந்து வரும் விமர்சனத்தை பார்த்து பார்த்து சந்தோஷப்பட கேட்க வில்லை. எங்களின் படைப்புகளில் உள்ள தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள தான் கேட்கிறோம். நீங்கள் (தாமரை அண்ணா) விமர்சனம் போடாதற்கு என்ன காரணம் சொன்னாலும்

1. எனக்கு நேரம் இல்லை

2. நான் எதுக்கு போடணும், கட்டாயம் இல்லையே

3. கருத்துகள் கவரவில்லை (இதையாவது அப்படியே போடலாமே)

4. பாராபச்சமாக நடக்கவிரும்பவில்லை

இதில் நீங்கள் எதை சொன்னாலும், அல்லது உங்க ஸ்டைலில் வாழைப்பழத்தில் கடப்பாறை ஏற்றுவது போல சொன்னாலும் எங்களுக்கு (எனக்கு) அது லாபமே. இத்தனை நாள் சொல்லவில்லை ஆனால் உங்களின் பதிலை பார்த்து சொல்லிவிட்டேன்.

கண்டிப்பாக இந்த பதிவுக்கு நீங்கள் ஒரு பதில் வைத்து இருப்பீர்கள் எனக்கு தெரியும் என் + சைக்லோபிடியா வாச்சே, என்ன தான் நீங்கள் சப்பகட்டு கட்டினாலும் ”நல்லதோர் வீணை செய்தே, அதை .................” முடிவு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

ரங்கராஜன்
04-02-2009, 03:22 PM
உரையாடல்கள் உணர்வுபூர்வமாக இருப்பதும், தேசிய உணர்வு தலைதூக்கியிருப்பதும் கதையை வலியோடு படைத்திருப்பதும் பாராட்டுக்குரியது.

நன்றி ராசய்யா

தாமரை
04-02-2009, 04:42 PM
தாமரை அண்ணா
உங்களிடம் சீரியஸான ஒரு வார்த்தை “நல்லதோர் வீணை செய்தே அதை ................” இதனுடைய தொடர்ச்சி உங்களுக்கு நல்லாவே தெரியும். அதுபோல நல்ல மொழிவளம், எழுத்துவளம், விமர்சிக்கும் திறமை எல்லாம் இருந்து நீங்கள் அதையெல்லாம் மேலே குறிப்பிட்ட காரணத்திற்காக செய்வதில்லை. இது நியாயமா? இது என்னுடைய கதைகளுக்கு மட்டும் கேட்கவில்லை, அனைவரின் சார்பாக தான் கேட்கிறேன். இதை நீங்கள் அங்கீகார தாகமாக நினைத்தாலும் சரி, இல்லை வற்புறுத்தி விமர்சனத்தை வாங்குகிறான் என்று நினைத்தாலும் சரி, உங்களைப் போல பெரியவர்களிடம் இருந்து வரும் விமர்சனத்தை பார்த்து பார்த்து சந்தோஷப்பட கேட்க வில்லை. எங்களின் படைப்புகளில் உள்ள தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள தான் கேட்கிறோம். நீங்கள் (தாமரை அண்ணா) விமர்சனம் போடாதற்கு என்ன காரணம் சொன்னாலும்

1. எனக்கு நேரம் இல்லை

2. நான் எதுக்கு போடணும், கட்டாயம் இல்லையே

3. கருத்துகள் கவரவில்லை (இதையாவது அப்படியே போடலாமே)

4. பாராபச்சமாக நடக்கவிரும்பவில்லை

இதில் நீங்கள் எதை சொன்னாலும், அல்லது உங்க ஸ்டைலில் வாழைப்பழத்தில் கடப்பாறை ஏற்றுவது போல சொன்னாலும் எங்களுக்கு (எனக்கு) அது லாபமே. இத்தனை நாள் சொல்லவில்லை ஆனால் உங்களின் பதிலை பார்த்து சொல்லிவிட்டேன்.

கண்டிப்பாக இந்த பதிவுக்கு நீங்கள் ஒரு பதில் வைத்து இருப்பீர்கள் எனக்கு தெரியும் என் + சைக்லோபிடியா வாச்சே, என்ன தான் நீங்கள் சப்பகட்டு கட்டினாலும் ”நல்லதோர் வீணை செய்தே, அதை .................” முடிவு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

சப்பைக்கட்டெல்லாம் எதுக்கு.. என்னுடைய 6000+ பதிவுகளில் நான் ஆரம்பித்த திரிகளின் எண்ணிக்கைப் பார்த்தால் நான் பின்னூட்டமிடும் பழக்கமுள்ளவனா எனத் தெரியும்.

இன்றைய எனது தினசரி வாழ்க்கையை கவனியுங்கள்...

காலை 6:00 மணிக்கு விழிப்பு.. காலைக்கடன், குளிய, சிற்றுண்டி, குழந்தைகளை எழுப்பி அவர்கள் தயாராக உதவுதல் அலுவலகம் 8:30 மணி..

தினம் குறைந்த பட்சம் 5 மணிநேர மீட்டிங். குறைந்த பட்சம் 300 ஈமெயில்களை பார்வையிட்டு 25 பதில்கள் அனுப்புதல், கீழே பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.. அறிக்கைகள் தயார் செய்து அனுப்புதல்...

மன்றத்தைப் போல பல வட்ட உறவுகள் உண்டு. அவர்களுடன் நடக்கும் மின்னஞ்சல் கலாய்ப்புகள், உடன் பணிபுரிவோரிடத்து கேளிக்கைகள்,,

இத்தனையும் தாண்டி உலகின் மறுபக்கத்தில் பணிபுரிவோரிடத்து இரவு நேர தொலைபேசல்கள் எல்லாம் செய்து முடித்து பல நேரம் இரவு 9:00 மணிக்கு மேல் வீட்டுக்குப் புறப்படுகிறேன்..

சனியும் ஞாயிறும் குழந்தைகளுக்கும் குடும்பத்திற்கும், மாதமிருமுறை சேலம் - ஈரோடு எனப் பயணம்.

இத்தனைக்கிடையில் மூளையில் ததும்பும் ஆயிரக்கணக்கான எண்ணங்களைக் கொட்டுதல்...

நான் எழுதுவதெல்லாம் யோசித்து நிறுத்தி நிதானமாக எழுதவில்லை, அந்த நேரத்து வெள்ளம்.

இருந்தாலும் நான் விமர்சித்துக் கொண்டும் பங்களித்துக் கொண்டும்தான் இருக்கிறேன்..

என்னிடம் நேரம் கேட்டவர்களுக்கு நான் இல்லையெனச் சொன்னதில்லை.

தற்பொழுது நான் கதைகள், கவிதைகள் அதிகம் படிப்பது கூட கிடையாது. சட்டென ஈர்க்கும் விதமாக இருப்பதைப் படிக்கிறேன்.. எதாவது தோன்றினால் எழுதி விட்டுச் சென்றுவிடுகிறேன்.

என்னுடைய பாணி எழுதியவனுக்கு ஆலோசனை சொல்லுவதோ ஆரங்கள் சூட்டுவதோ அல்ல, எழுதப்பட்ட பொருளை மட்டும்தான் பார்ப்பேன்.

உதாரணத்திற்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7248
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16654&page=2
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7027

இப்படிப் பலப்பல விமர்சனங்கள் உண்டு, ஆனாலும் தங்களுக்கு எதுவும் கிடைக்கலியே என ஏக்கம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அதுக்கும் சற்று மேலாக

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10991&page=2
பதிவு எண் 40 லிருந்து கவனிக்கவும்..

அந்தப் பக்தியிலேயே என் விமர்சனங்கள் குறைந்து போனதிற்குக் காரணமும் இருக்கிறது..

இன்னும் கண்ணில் படும் நல்லவைகளைப் பாராட்டவும் தவறுகளைச் சொல்லவும் நான் மறப்பதில்லை.

அதுக்காக பரீட்சை பேப்பர் திருத்தும் வாத்தியார் கணக்கா எல்லாவற்றிற்கும் எதையாவது சொல்லணும் என்று எதிர்பார்க்காதீர்கள்,

உன்னுடைய முதியோர் இல்லம் கதையில் இருந்து கருவை விமர்சித்து இருந்ததை நீ மறந்திருக்கலாம்.. :icon_rollout::icon_rollout::icon_rollout:

சிம்பிளா.. சொல்றேன்...

என்னை எழுதத் தூண்டுகிற மாதிரி எழுதுங்க தக்ஸ். :D :icon_b:

arun
04-02-2009, 04:59 PM
கதை நன்றாக இருந்தது தக்ஸ் பாராட்டுக்கள்

ரங்கராஜன்
04-02-2009, 05:02 PM
என்னை எழுதத் தூண்டுகிற மாதிரி எழுதுங்க தக்ஸ். :D :icon_b:

நன்றி அண்ணா
உங்களை எழுத தூண்டுகிற மாதிரி தான் எழுத நினைத்து இதுவரை தோற்று வருகிறேன், ஆனால் கடைசி வரை தோற்க மாட்டேன். எப்படியாவது உங்களின் நல்ல விமர்சனங்களை பெருவேன், உங்களை எழுத தூண்டும் கருக்களை எழுதி.

நன்றி.

kugan
12-02-2009, 07:49 AM
சரியான முடிவு.......................