PDA

View Full Version : காதலாம் காதல்...!!

சிவா.ஜி
24-01-2009, 03:12 PM
என் அக்காவுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகனின் திருமணத்துக்காக போனமாதம்தான் என் மனைவி கோவை போய்வந்தார்கள். இன்று அடுத்த மகனின் சாவுக்கு போயிருக்கிறார்கள்.

22 வயது. இரண்டு கால் டாக்ஸிகளுக்கு(Call taxi) சொந்தக்காரன். இன்று காலை தூக்கில் தொங்கிவிட்டான். ஏன்....??? காதலாம்....ஒரு பெண்ணை காதலித்தானாம்...நேற்று அந்த பெண் ஏதோ சொல்லிவிட்டதாம்...இரவு முழுவதும் யோசித்து காலையில் தொங்கிவிட்டான். சாகும் வயதா இது?

காதல் தேவைதான்...ஆனால் உயிரைவிடுமளவுக்கு அதிலென்ன இருக்கிறது? உயிர் என்பது இத்தனை மலிவா? மனமெல்லாம் பதறுகிறது. கூடவே ஆத்திரமும் எழுகிறது. காதல் மயக்கத்திலிருந்து இந்த இளைஞர்கள் எப்போது விழித்தெழுவார்கள்? கண்டதும் காதல், காணாமலேயே காதல், சொல்லாத காதல், ஏற்கப்படாத காதல், ஒருபக்க காதல் என இத்தனைக் காதலில் உண்மையான காதல் என்று ஒன்று இருந்தால் அது உயிரை பலி வாங்குமா?

இளைஞர்களே காதலியுங்கள்...ஆனால்....உயிரைவிட அது உயர்ந்ததல்ல என புரிந்துகொள்ளுங்கள்.

ரங்கராஜன்
24-01-2009, 04:34 PM
சிவாஜி அண்ணா
எப்படி உங்களிடம் சொல்வது என்று தெரியவில்லை, உங்களின் இந்த திரி என்னை மிகவும் பாதித்தது காரணம்......................... இரண்டு நாளுக்கு முன் தான் என்னுடைய காதலிக்கு திருமணம் நடந்தது, அவளை இப்பொழுது காதலி என்று சொல்லுவது நாகரிகம் இல்லை. அதனால் அவள் என்று குறிப்பிடுகிறேன்.

ஐந்து வருடமாக காதலித்தோம், என்னுடைய குடும்ப சூழல், எனக்கு யாரும் இல்லை என்று எல்லா விவரங்களும் தெரிந்து தான் காதலித்தாள். நான் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினேன். அவளும் அப்படி தான் என்னையும் தாங்கினாள். நாட்கள் சென்றது என்னுள் சந்தேகம், போஸஸீவ்னேஸ், ஆணாதிக்கம் எல்லாம் வரத்துடங்கியது. உண்மையில் நான் அப்படிபட்டவன் இல்லை, மென்மையானவன் தான். ஆனால் அந்த காதல் என்ற உறவினால் என்னூல் பல மாற்றங்கள். நானாக இல்லை. எப்பொழுதும் சண்டை, மனக்கசப்பு, எரிச்சல் என்று அதனால் பல விஷயங்கள் என்னுல் வந்து, பல விஷயங்களை நான் இழக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் பேசினால் ஒரு மணி நேரம் சண்டை போட ஆரம்பித்தோம், அப்புறம் பாதி நாள் ஆனது. அது அப்புறம் பேசினாலே சண்டை வர ஆரம்பித்தது. அவளும் அப்படிப்பட்டவள் இல்லை, அவளும் மாற ஆரம்பித்தாள். முன்பெல்லாம் கொஞ்ச நேரம் பேசவில்லை என்றாலே தாங்க முடியாது, ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நாட்கள், வாரங்கள் , மாதங்கள் ஆயின.

மாத கணக்கில் பேசாமல் இருந்தோம், ஒரு முறை எதர்ச்சியாக நான் வண்டியில் போய் கொண்டு இருக்கும் பொழுது, ரோட்டில் அவளை பார்த்தேன். பிஸியாக யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள், மனது கேட்காமல் ஒரமாக நின்று அவளுக்கு தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தேன். மொபைலில் பேசும் பொழுது அவளின் முகம் வெட்கத்தில் சிவந்து இருந்தது, சிரிப்பு அதிகமானது. எனக்கு புரிந்து விட்டது, என்னுடைய அன்புக்கு மேல் அன்பு காட்ட யாரோ வந்து விட்டார்கள் என்று, மனது வலித்தது அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டேன். மனது கேட்காமல் அவளுக்கு பல முறை அப்பொழுதே போன் செய்தேன் எடுக்கவில்லை, அப்புறம் எடுத்தாள்

“ஹாலோ நான் தான்”

“உம் சொல்லு”

“யார் கூட இவ்வளவு நேரம் பேசினாய்”

“என் அப்பாவிடம்”

“அப்பா கூடவா இவ்வளவு நேரம் பேசினாய்”

“ஆமா அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறாராம் அதான்”

“ஆஸ்பத்திரியில் இருந்தால் சிரிப்பு வருமா என்ன”

“நீ எங்க இருக்கிறாய்”

“நீ போய் கொண்டு இருக்கும் ஆட்டோவின் பின்னாடி தான் வரேன்” என்றேன்.

திடீர் என போனை கட் செய்தாள், அவள் போகும் ஆட்டோவின் பின்னாடி என்னை பார்த்தாள், அவள் போனை எடுத்து recent calls எல்லாத்தையும் அழித்தால். ஆட்டோவின் பின்னாடி கண்ணாடி வழியாக நான் அதை பார்த்து நொறுங்கி போனேன், மனது மிகவும் வலித்தது.

பஸ் ஸ்டாண்டில் இறங்கினாள் அவளிடம் நேராக சென்று

“யாரையாவது காதலிக்கிறாயா?”

“எப்படி உன்னால் இப்படி நினைக்க முடியுது”

“உண்மையா இருந்தா சொல்லு, நானே விலகி விடுகிறேன்”

“என்னுடைய பின்னாடியே என்னை செக் பண்ணிக் கொண்டு வரீயா”

“சத்தியமா இல்லை நான் வேறு வேலையா இங்கு வந்தேன், நீ இருப்பது எனக்கு தெரியாது, சொல்லு நீ யாரையாவது காதலிக்கிறீயா”

“என்னுடைய அப்பா தினமும் என்னை திருமணம் செய்துக்க செல்லி வற்புறுத்துவார், இன்று போய் நான் சரின்னு சொல்லப்போறேன்”

“சந்தோஷம், உனக்கு அம்மா இல்லாத குறையை தீர்ப்பேன் அடிக்கடி சொல்லுவியே, அத தயவு செய்து அவனுக்காவது செய்” என்றேன்.

அவளின் கண்கள் கலங்கி விட்டன, அதை பார்த்து என்னுடைய கண்களும் கலங்கிவிட்டன. அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன். கொஞ்ச நாள் கழித்து அவளுக்கு திருமணம் என்று எனக்கு செய்தி வந்தது, மனம் குமுறியது, சில நியாபகங்கள் கொன்றது. அப்பொழுது தான் எனக்கு இன்னொறு தாய் கிடைத்தால், நிறைய உறவுகள் கிடைத்தது, நம் மன்றத்தை தான் சொல்கிறேன். கடந்து இரண்டு மாதங்களாக நம் மன்றத்தின் மடியில் தான் என்னுடைய சோகங்களை மறக்கிறேன். நான் உண்மையாகவே நம் மன்றத்தை நேசிக்கிறேன் காரணம் என்னுடைய காயங்களுக்கு மருந்து போட்டது நம் மன்றம்.

கொஞ்ச நாள் முன்பு பெங்களூரில் குண்டு வெடித்ததே அப்பொழுது மனது கேட்காமல் அவளுக்கு போன் செய்தேன், காரணம் அவளுடைய would be அங்கு தான் இருப்பதாக செய்தி கிடைத்தது, அவர் நலமாக இருக்கிறரா என்று கேட்க செய்தேன். அவளுடைய மொபைலில் ரீங் அடிக்கவில்லை, அதற்கு பதிலாக ஹலோ டியினில் ஒரு பாடல் கேட்டது

“அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க இத்தனை நாளாய்
தவித்தேன்”

என்று தாம் தூம் படப்பாடல் ஒலித்தது, அவளுடைய வருங்கால கணவருக்காக அந்த பாடலை வைத்து இருந்தாள், நாங்கள் பிரிந்து ஓரு மாதம் கூட ஆகவில்லை. அப்படியே உறைந்து நின்றேன், அவமானமாக இருந்தது, அப்போ இத்தனை நாள் என்னுடன் இருந்தது எல்லாம் நாடகமா, எனக்கு அசிங்கமாக இருந்தது. அதற்குள் அவள் போனை எடுத்து விட்டாள்

“ஹலோ யார் பேசறது”

“நா.....நா.....நான் தான் தக்*ஷணா......”

“சொல்லுப்பா எப்படி இருக்க, நல்லா இருக்கறீயா”

“உம், நீ எப்படி இருக்க”

“உம், என்ன விஷயம் பா”

“ஒண்ணும் இல்ல தெரியாம உன் நம்பரை அழுத்தி விட்டேன் சாரி”

“ஓ அப்படியா, சரி வேற என்ன விஷயம் பா”

“வேற ஒண்ணும் இல்லை வச்சிடுறேன்.........ஹலோ ஹலோ”

“உம் சொல்லு லைன்ல தான் இருக்கிறேன்”

“உன்னுடைய காலர் டீயுன் நல்லா இருக்கிறது, உன்னுடைய திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்”

“......”

போனை வைத்து விட்டேன். தற்கொலை பண்ணிக்கலாமான்னு தோணிச்சு, யாருடனும் பேச பிடிக்கவில்லை. ரூமில் தற்கொலை செய்வதை பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன். எதிரில் என்னுடைய தாயுடைய படம் தொங்கிக் கொண்டு இருந்தது. அவள் என்னிடம் சில விஷயங்கள் சொல்லி இருக்கிறாள்.

1) நான் ஏழாவது மாசத்திலே பிறந்தேனாம், பிறக்கும் பொழுதே இறந்து இருக்க வேண்டியவனாம் நான்.

2) அப்புறம் நான் இரண்டு வயதாக இருக்கும் பொழுது நான் பால் புட்டியில் பால் குடித்துக் கொண்டு இந்தேனாம், என்னை பக்கத்து வீட்டு அக்கா தூக்கி வைத்து இருந்தாலாம். திடீர் என்று அவள் கத்திக் கொண்டே மயக்கமாகி விட்டாலாம், என்னை கையில் பிடித்தவாரே. எங்கள் வீட்டில் எல்லோரும் ஓடி வந்து பார்த்தார்களாம். நான் குடித்துக் கொண்டு இருந்த பால் புட்டிக்குள் ஒரு பெரிய பல்லி செத்து கிடந்ததாம். நான் நல்லா தான் இருந்தேனாம். அந்த அக்கா தான் ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் இருந்தாலாம்.

அப்புறம் என்னுடைய அம்மா இறந்த விபத்தில் நானும் இருந்து ஒரு கீறல் கூட விழாமல் தப்பித்தேன்.

இத்தனை முறை பிழைத்தது எல்லாம் எதற்கு இப்படி ஒரு பெண்ணுக்காக தற்கொலை செய்துக் கொள்ளவா என்று எனக்குள் கேள்வி எழுந்தது. மனம் மாறினேன். இப்பொழுது என்னுடைய இஷ்டத்திற்கு வாழ்க்கையை வாழ்கிறேன், சந்தோஷமாகவா? என்றால், முழுமையாக இல்லை, ஆனால் கால என்னை மாற்றும்.

காதல் என்பது ஒரு உணர்வு, அது வந்து ஒரு பாண்டு (bond) மாதிரி. ஒரு முறை மட்டும் புரிந்துக் கொள்ளுதல் இல்லை காதல், வாழ்க்கை முழுவதும் புரிந்து கொண்டு விட்டு கொடுப்பது தான் காதல். அப்படி பட்ட காதல் எல்லாம் பாரதிராஜா படத்துடன் போய்விட்டது. இப்பொழுது எல்லாம் எஸ்.ஜ.சூர்யா காலம்.

உங்கள் குடும்பத்தில் நடந்த இழப்புக்கு, வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாது. என்னமோ உங்களின் வார்த்தைகளை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் எல்லாவற்றையும் கொட்டி விட்டேன், தப்பாக எடுத்துக் கொள்ளவேண்டாம், இது ஒரு சுயவிளம்பரமும் இல்லை.

நன்றி

சிவா.ஜி
24-01-2009, 04:48 PM
தக்ஸ்....என்ன சொல்வது என்றே தெரியவில்லை...மனம் பாரமாகிவிட்டது. எத்தனை சோகங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்கிறீர்கள் என்று நினைக்கும்போது கலங்குகிறேன்.
காதல் நல்ல அனுபவம்தான். ஆனால் காதலில் பிரிவு.....நிச்சயம் மிகக்கொடுமை. எனக்கும் அந்த வலி இருந்திருக்கிறது. உங்களின் பக்குவமான அணுகுமுறையை எண்ணி வியக்கிறேன். பண்பட்ட மனது உங்களுடையது. ஆனால் உங்கள் முன்னாள் காதலிக்குத்தான் உங்களுடன் வாழும் பாக்கியமில்லை.

பிறந்ததிலிருந்தே சாவை ஜெயித்து வரும் நீங்கள் நீண்டகாலம் நலமுடன் வாழ மனதார பிரார்த்திக்கிறேன். காதல் பிரிவில் தற்கொலை எண்ணம் தலைதூக்கியும் அதை தவிர்த்து, வாழ்க்கையை தைரியத்துடன் வாழத்தொடங்கிவிட்ட நீங்கள் என் எண்ணத்தில் உயர்ந்துவிட்டீர்கள்.

உங்களுக்கென...உங்களை மட்டுமே நேசிக்கும் ஒரு உள்ளம் நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கையை அந்த துணையுடன் மிக சந்தோஷமாக அனுபவிப்பீர்கள். என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

(நீங்கள் சொன்னதில் தவறாக எடுத்துக்கொள்ள என்ன இருக்கிறது. மன்றக்குடும்பத்தின் உறவுகள்தாமே நாமெல்லாம். ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளத்தானே நாம் ஒன்றாய் இணைந்திருக்கிறோம். இனி உங்களை தனியாக எண்ண வேண்டாம். உடன்பிறவா அண்ணனாய் நானிருக்கிறேன். இனி எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர்)

ரங்கராஜன்
24-01-2009, 04:53 PM
இனி எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர்

இந்த ஒரு வாக்கியம் போதும் அண்ணா, என்னுடைய சோகங்கள் யாவும் பறந்தன.

அமரன்
24-01-2009, 05:38 PM
எனக்கு புரிந்து விட்டது, என்னுடைய அன்புக்கு மேல் அன்பு காட்ட யாரோ வந்து விட்டார்கள் என்று,

இந்த ஒரு வாக்கியம் போதும் காதலில் ஜெயிக்க.

தக்ஸ் நீங்கள் காதலில் ஜெயித்து விட்டீர்கள்.

நிச்சயம் உங்களுக்காக ஒரு இடம் உலகில் உள்ளது.

சோகமான நேரத்தில் தாயின்மடி தரும் சுகம், ஆறுதல் போல் எதுவுமில்லை. அதை உங்களுக்கு மன்றம் தருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. என்றும் மன்றம் இப்படியே இருக்க வேண்டும். அதுக்காக எல்லாரும் உழைக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

சிவா.. தக்ஸ்..

உங்கள் பாரத்தில் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்.

உங்களைப் போன்றவர்கள் உடன் இருப்பதில் பெருமை.

இளசு
24-01-2009, 05:39 PM
விழிகள் இருமுறை கலங்கின..

சிவா,

உங்கள் அக்கா மகன் தன் தாய்க்கும் உறவுக்கும் இழைத்த இக்கொடுமை
மிக அநியாயச் சோகம்..!
அத்தாய்க்கு என் மனம் சிந்தும் கண்ணீர்த்துளிகள் சமர்ப்பணம்..!

அன்பு தக்ஸ்..
சொற்களின்றி நிற்கிறேன்..
காலம் இதை ஆற்றி தேற்றி மாற்றட்டும்...
காலத்தின் இழுப்புக்கு இயல்பாய் மனம் இருந்தால் போதும்..

ஆதிக்கம் வந்துவிட்டாலே காதல் கசக்கும்..
ஆதிக்கம் - அதிகம் காதலில்தான் வரும்..

இத்தனை முறை பிழைத்தது நீங்கள் இருந்து எத்தனையோ சாதிக்கத்தான்..

நேற்றுதான் வாழ்த்தினேன் -
முழுநூற்றாண்டும் கடந்து வாழ்க என!

அண்ணன் சொல் பலிக்கும்..!

-------------------------------

இத்திரி, ''காதல்'' என்றால் என்ன என அறிவியல்பூர்வமாய் ஒரு கட்டுரை
எழுத எண்ணித் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும் என்னை
விரைந்து எழுதும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது!

சிவா.ஜி
24-01-2009, 05:45 PM
சிவா.. தக்ஸ்..

உங்கள் பாரத்தில் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்.

மனம் நெகிழ்கிறது அமரன். மிக்க நன்றி.

சிவா.ஜி
24-01-2009, 05:48 PM
விழிகள் இருமுறை கலங்கின..

சிவா,

உங்கள் அக்கா மகன் தன் தாய்க்கும் உறவுக்கும் இழைத்த இக்கொடுமை
மிக அநியாயச் சோகம்..!
அத்தாய்க்கு என் மனம் சிந்தும் கண்ணீர்த்துளிகள் சமர்ப்பணம்..!

அன்பு தக்ஸ்..
சொற்களின்றி நிற்கிறேன்..
காலம் இதை ஆற்றி தேற்றி மாற்றட்டும்...
காலத்தின் இழுப்புக்கு இயல்பாய் மனம் இருந்தால் போதும்..

ஆதிக்கம் வந்துவிட்டாலே காதல் கசக்கும்..
ஆதிக்கம் - அதிகம் காதலில்தான் வரும்..

இத்தனை முறை பிழைத்தது நீங்கள் இருந்து எத்தனையோ சாதிக்கத்தான்..

நேற்றுதான் வாழ்த்தினேன் -
முழுநூற்றாண்டும் கடந்து வாழ்க என!

அண்ணன் சொல் பலிக்கும்..!

-------------------------------

இத்திரி, ''காதல்'' என்றால் என்ன என அறிவியல்பூர்வமாய் ஒரு கட்டுரை
எழுத எண்ணித் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும் என்னை
விரைந்து எழுதும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது!

நன்றி இளசு. வளர்ந்த பிள்ளையை பறிகொடுப்பது எத்தனை சோகம். என் அக்காவுக்கு ஆறுதல் மட்டுமே நம்மால் சொல்லமுடியும். காலம்தான் அனைத்தையும் ஆற்றவேண்டும்.

Keelai Naadaan
24-01-2009, 06:26 PM
சற்று நேரத்திற்க்கு முன் இத்திரிக்கு வந்தேன், என்ன சொல்வதென்று தெரியவில்லை.

இப்போதும் தெரியவில்லை....

என்னுடைய நண்பர்கள் ஓரிருவரும் இந்த நிலை அடைந்துள்ளனர்.
காதலினால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களை விட சில அப்பாவி ஆண்களே அதிகம் என்பதாக படித்த நினைவு.

அளவுக்கதிகமான ஒளி கண்ணை குருடாக்குவது போல் அதீதமான அன்பும் கெடுதலே என புரிகிறது.

அன்பு மூர்த்தி, உங்களை தாயாருடைய படம் காப்பாற்றியது போல்,
என்னை, சுவரில் ஒட்டி வைத்திருந்த பாரதியின் படமும்
அதில் எழுதி இருந்த "மனதில் உறுதி வேண்டும்" என்ற வார்த்தையும் காப்பாற்றியது.

வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தால் நல்லது, நடக்கா விட்டால் அதை விட நல்லது என்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

அக்னி
24-01-2009, 06:35 PM
சிவா.ஜி,
காதலாம் காதல் என்னும் தலைப்பில் கவிதை எழுதி வைத்திருக்கின்றார் என்ற எதிர்ப்பார்ப்பிற்தான் வந்தேன்.
ஆனால்,
சோகம் நிறைந்த ஆற்றாமையால் வெம்பும் பதிவைக் கண்டு,
திகைத்துவிட்டேன்.

அதற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை தேடினால்,
ஆறுதல் சொல்லவே முடியாத daksன் பதிவு....

காதல், வாழவைக்கவேண்டுமே தவிர, வாழ்வை அழிக்கக்கூடாது.

சமகாலத்தில்,
காதலினால், மனமுடைந்த இருவரின் முரண்பாடான பதிவுகள்.

இரண்டுமே வழிகாட்டுகின்றன...
இப்படி இருக்கக்கூடாது என்றும், இப்படித்தான் இருக்கவேண்டும் என்றும்...

சிவா.ஜி...
உங்கள் உங்கள் சகோதரிக்கும், மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதல்களும், பிரார்த்தனைகளும்...

daks...
உங்கள் வாழ்க்கை மற்றோருக்குப் படிப்பினை.
சிலவேளைகளில் இந்தப் பதிவை முன்னரே பார்க்கும் சந்தர்ப்பம், அந்த இளைஞனுக்குக் கிட்டியிருப்பின்,
சிவா.ஜியின் குடும்பத்தில் இன்று ஒரு துயரம் ஏற்பட்டிருக்கமாட்டாது.

காதலை வாழவைப்போம். காதலுக்காக வாழ்வோம்.
ஆனால், காதலுக்காக தற்கொலை செய்வதைத் தவிர்த்துக்கொள்வோமே...
காதலுக்காக மட்டுமன்று,
வாழ்வில் நாம் சந்திக்கும் எந்த நெருக்கடிக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதை,
மனதிற் கொள்ளுவோம். கொள்ள வைப்போம்.

சிவா.ஜி
24-01-2009, 09:38 PM

அர்த்தமுள்ள கருத்துக்கள் அக்னி. அனைவரும் இதனை உணரவேண்டும். காதலுக்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது. தற்கொலை எதற்குமே தீர்வாகாது........

ஆதவா
25-01-2009, 01:05 AM
சிவா.. அண்ணா... உங்கள் அக்காவுக்கு என் ஆறுதல்கள்... உங்கள் அக்கா பையனின் கோழைத்தனமான முடிவுக்கு கண்டனங்கள்.

//// இளைஞர்களே காதலியுங்கள்...ஆனால்....உயிரைவிட அது உயர்ந்ததல்ல என புரிந்துகொள்ளுங்கள். /////

ஆம் அண்ணா.... இந்த வரிகள் இனி பொன்வரிகளாகவேண்டும்..... இன்றைய இளைஞர்/இளைஞிகள் இதை நன்றாக கடைபிடிக்கவேண்டும்....

இனிய தக்ஸ்...

நீ எதற்காக திருப்பதிக்குச் சென்றாய் என்று சொன்னதும், எனக்கு வலிக்கவில்லை.. ஏனெனில் நானும் அந்த சூழலில் இருந்து வந்தேன் என்பதை சொன்னேன்.. ஆனால் உன் எழுத்துக்களாகப் பார்க்கும் பொழுது என்னவோ செய்கிறது.

மன்றம் இருக்கிறது... அதைவிட, நான் இருக்கிறேன். கவலைப்படவேண்டாம்... என்னை உன் சகோதரனாக எண்ணிக்கொள்..

காதல் என்பது ஒரு அத்தியாயம்... அது முடிந்ததும், அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்கவேண்டும்... எந்தச் சூழ்நிலையிலும், கொலையும் தற்கொலையும் தீர்வாக இருக்காது...

நான் இன்று கூட நினைப்பேன்.. நாளை என்னென்ன டெக்னாலஜி வரும்.. அதுவரை உயிரோடு இருப்போமா என்றெல்லாம் யோசிப்பதன் காரணம்தான், எதிர்கால கதை, கவிதை போன்றவைகள்.... அவ்வளவு விலைமதிப்பற்ற உயிரை தயவு செய்து,... தற்கொலை என்ற பெயரில் வதம் பண்ணவேண்டாமே!!!!

(ஏம்பா... இனிமே தம்மூவை அடிக்காதீங்கப்பா... :traurig001:)

மதி
25-01-2009, 02:59 AM
சிவாண்ணா.. மனது சுருக்கென்றது. உங்களுக்கும் உங்க அக்கா குடும்பத்தாருக்கும் என் ஆறுதலை சொல்வது தவிர வேறேதும் தோன்றவில்லை....

தக்ஸ்..
உன் அனுபவம் பகிர்ந்தாய்.. வலி என்பது இருக்கத் தான் செய்யும். அதற்கேற்ற மருந்தாய் மன்றம் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. காலம் மாறும். கவலைவிடு.

காதல்... வார்த்தை தான் எத்தனை சக்தியுள்ளது. நான் பார்த்த காதல் திருமணங்கள் நிறைய. என் குடும்பத்தில் கூட என் தலைமுறையில் இதுவரை நடந்தது எல்லாம் காதல் திருமணங்கள் தான். காதல் மேல் நன்மதிப்பு வர சில நண்பர்களின் காதலே சான்று. ஆனாலும் அதே காதல் பேரை சொல்லி அடாவடித்தனம் செய்தவர்களையும் பார்த்தாயிற்று. உண்மையில் புரியாத விஷயம் இந்த காதல்.

ஆதவா.. நீ சொன்னா எல்லாம் ஏத்துக்க முடியாது. தக்ஸ் அலைஸ் தம்மூ.. என்னிக்குமே....ஹிஹி

ரங்கராஜன்
25-01-2009, 03:05 AM
.

அளவுக்கதிகமான ஒளி கண்ணை குருடாக்குவது போல் அதீதமான அன்பும் கெடுதலே என புரிகிறது.

வாழ்க்கையில் சில விஷயங்கள் நடந்தால் நல்லது, நடக்கா விட்டால் அதை விட நல்லது என்பது உங்களுக்கு தெரிந்தது தானே.

நன்றி கீழை
அருமையான வரிகள், காதலில் எப்பொழுது கொஞ்சம் இடைவெளி இருக்க வேண்டும். இல்லை என்றால் அது ஒரு அப்நார்மல் உறவாக போய் முடிகிறது.

காதல், வாழவைக்கவேண்டுமே தவிர, வாழ்வை அழிக்கக்கூடாது.

.

நன்றி அக்னி
காதலின் உண்மையான குணத்தை ஒரே வரியில் சொல்லி விட்டீர்கள்.

ரங்கராஜன்
25-01-2009, 03:18 AM
நன்றி டா ஆதவா
இத்தனை நாள் இதை யாரிடமும் நான் பகிர்ந்ததில்லை, என்னமோ சிவாஜி அண்ணாவின் வார்த்தைகளை இந்த திரியில் பார்த்தேன், ஒரு பிள்ளையை பறி கொடுத்த பெற்றவரின் வார்த்தைகள் என்னை கலங்க வைத்து விட்டது, எனக்கு அவமானமாக இருந்தது, காரணம் நானும் இறந்தவர் போல யோசித்தவன் தானே. இந்த திரியை பாவமன்னிப்பு கேட்கும் அந்த கூண்டாக எண்ணி, சிவாஜி அண்ணாவை பாதிரியாராக எண்ணி அனைத்தையும் கொட்டி விட்டேன் டா. இப்பொழுது மனது லேசாக இருக்கிறது.

நீ கூறியது உண்மை தான் காதல் என்பதற்காக உயிரை விட கூடாது, உண்மையில் காதல் வந்த அப்புறம் ஆணும் சரி பெண்ணும் சரி மாற ஆரம்பித்து விடுகிறார்கள். முதலில் அங்கு வந்து குடியேருவது சுயநலம்.

நான் பதித்த இந்த பதிவையே அந்த பெண் பதித்து இருந்தாள், என்னுடைய சுயரூபமும், நான் செய்த தவறுகளும் வெளியிடப்பட்டு இருக்கும். காரணம் பார்வைகள் வேறுபடுகின்றன. அவள் எதிர்பார்த்ததை நான் செய்யவில்லை, நான் எதிர்பார்த்ததை அவள் செய்யவில்லை. அனுபவித்து சொல்கிறேன்

காதல் வந்தால் நீங்கள் நீங்களாக இருக்க முடியாது

ஓவியன்
25-01-2009, 08:48 AM
அன்பான சிவா,

இழப்புக்கள் கொடுமையானது, அதனைத் தேற்ற எந்த ஆறுதல் மொழிகளாலும் முடியாது...
இருந்தாலும் என் ஆழ்ந்த இரங்கலை உங்களது சகோதரியின் குடும்பத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்...

தன் சொந்த சுக துக்கங்களால் தன் குடும்பத்தின் ஒட்டு மொத்த சந்தோசத்தைத் தொலைத்த முடிவெடுத்த அந்த இளைஞனை என்ன சொல்ல...

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...!!

_____________________________________________________________________________________

அன்பான தக்ஸ்,

இத்தனை ரணங்களை மனதினுள்ளேயே புதைத்து விட்டு வாழ்க்கையில் போராட முடிவெடுத்து விட்ட உங்களை நான் எத்தனை பாராட்டினாலும் தகும்....

வாழ்க்கை என்பது நமக்காம மட்டுமல்ல, பிறருக்காகவும் தான் என்ற உண்மையை உணர்ந்த உங்களுக்கு இனி எல்லாச் சிறப்புக்களும் தானே தேடி வரும்...

அதற்கு என் மனதார்ந்த வாழ்த்துக்களும்...

அன்புரசிகன்
25-01-2009, 09:10 AM
எதிர்பார்ப்பினால் வரும் காதல்கள் ஜெயிப்பது கடினமே... அது அன்பாக இருந்தாலும் கூட... திருமணங்கள் காதலில் வெற்றிகள் அல்ல. இறக்கும் வரையில் அது தொடரவேண்டும்.........

இந்த திரியில் ஒரே சோகமயமாக உள்ளதே... சிரிங்கப்பா.... உங்களை வெறுத்து விலத்துகிறார்கள் என்றால் (அது பிரிவோ மரணமோ) அவர்களை பற்றி பேசி பலன் இருக்குமா????????

அதிகம் அன்பு வைத்தவர்கள் ஏமாற்றினால் மனதார திட்டிவிடுங்கள். மனம் ஆறுதலடையும். (நன்றி- JAB WE MET)

அக்னி
25-01-2009, 10:26 AM
எதிர்பார்ப்பினால் வரும் காதல்கள் ஜெயிப்பது கடினமே... அது அன்பாக இருந்தாலும் கூட...
அன்புரசிகருக்கும் அனுபவம் இருக்கின்றது போலிருக்கே.
மறைமுகமாகச் சொன்னால் விட்டுவிடுவோமா?
பதிவைப் போடுங்கோ ரசிகரே...:rolleyes:

திருமணங்கள் காதலில் வெற்றிகள் அல்ல. இறக்கும் வரையில் அது தொடரவேண்டும்.........
:icon_b:
சத்தியமான வார்த்தை...
ஆனால், யாரும் எண்ணுவதில்லை என்பதுதான் உண்மை.
எண்ணிப் பார்க்கவேண்டும். எண்ணி வாழவேண்டும்.

நிரன்
25-01-2009, 12:16 PM
சிவா அண்ணா! மற்றும் மூர்த்தி அண்ணா!

உண்மையாகவே உங்கள் இருவரின் வலிகளைக் கண்டு கண்கள் கலங்கிவிட்ட்து. நான் நேற்று இரவே இதைனைப் படித்து விட்டேன் ஆனால் இதற்கு என்னத்தை நான் சொல்வதென்று மனம் வெறுமைப்பட்டுப் போனது. அமரன் அண்ணா கூறியது போல உங்கள் துயரத்தில் பாதியை எங்களுக்குக் கொடுங்கள். அதை நாம் அன்புடன் அரவணைப்போம். மனதில் வைத்திருக்கையில் அது ஒரு சுமை போன்று உங்கள் துன்பங்களில் பங்கெடுக்க நமிருக்கும் கோது நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும் மன்றத்தில் நாமெல்லாம் உடன் பிறவா உறவுகளே.

உண்மைக்காதலை வாழ்ந்துதான் வாழ வைக்க முடியுமெனன எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாழ்கை வாழ்வதற்குத்தான் அன்றி சாவதற்கல்ல.. காதல் ஒரு பகுதியென்றால் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. சிலர் காதலியின் நினைவுகளுடனும் கதலின் வலிகளையும் தமக்குள்ளே அடக்கிக் கொண்டு வாழ்கையை வாழ்கின்றனர். பலர் வலிகளை மறப்பதற்காக புதிய உறவுகளை நாடுகிறன்றனர். வாழும் காலம் மிக மிக கொஞ்சம்தான் அதில் நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவது எம் கடமையே.

தக்ஸ் அண்ணா. நீங்கள் தனிமை என்று என்ன வேண்டாம் உங்களுக்கு தோள்கொடுக்க நல்ல நண்பர்கள் மற்றும் நல்ல உறவுகள் இருக்கையில் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். மீண்டும் ஒரு பெண் உங்களுக்காக வருவாள் உங்களை மட்டுமே மனதில் வைக்க.

துன்பங்கள் விலகட்டும் முயற்சி செய்து இன்பமான விடயங்களை மட்டும் புகுத்துங்கள். என்னையும் ஒரு தம்பியாக நினைத்து இக் கருத்துக்களை எடுங்கள்.

ரங்கராஜன்
25-01-2009, 12:21 PM
உண்மைக்காதலை வாழ்ந்துதான் வாழ வைக்க முடியுமெனன எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறேன்.

.

டேய் தம்பி எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்டாக சொல்விட்டாயடா, சூப்பர்டா, இந்த ஒரு வார்த்தையால் என்னுடைய மனதில் இன்னும் நீ நெருங்கி விட்டாய் தம்பி.

arun
26-01-2009, 02:33 AM
காலையில் வந்தவுடன் படிக்கும் முதல் திரி இது லேசாக கண்கள் கலங்கி தான் போனது

இருவருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை

உறவுகளே.....

ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுறைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா...
காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனா சல்வார் உள்ளதடா...
(திரி ரொம்ப கனமாக செல்கிறது அனைவரையும் ரிலக்ஸ் செய்ய தான் இது )

ரங்கராஜன்
26-01-2009, 02:56 AM
தாவணி போனா சல்வார் உள்ளதடா...

நன்றி அருண்
நீங்கள் சொல்வது 100% உண்மை தான், தாவணியெல்லாம் எப்போவோ போய்விட்டது, இப்ப பெண்கள் எல்லாம் சல்வார் கூட இல்லை, டி.சர்டு, பனியன்னு மாறிட்டாங்க. ஹா ஹா ஹா சும்மா சும்மா தமாஷுக்கு.

சுகந்தப்ரீதன்
26-01-2009, 04:41 AM
மக்களே இத்தனை நாளாய் காதலில் தோற்றால் ஒருரகத்தினர் "தாடி வளர்ப்பார்கள்" என்று நினைத்தேன்.. இல்லை "தற்கொலையும் செய்வார்கள்" என்று சிவா அண்ணா பதிவு கூறுகிறது.. அதற்கு கண்டணங்களையும் என் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!!

அடுத்து இன்னொரு ரகத்தினர் "கவிதை எழுதுவார்கள்" என்று மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இல்லை இல்லை "கதையும் எழுதுவோம்" என்று தக்ஸ்சும் சிவா அண்ணாவும் உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்..(:confused:)

இன்னும் இந்த மதிமட்டும்தான் "நான் காதலிக்கவே இல்லை"ன்னு கதைவிட்டுக்கிட்டு திரியுறான்..:sprachlos020:

இத்திரி, ''காதல்'' என்றால் என்ன என அறிவியல்பூர்வமாய் ஒரு கட்டுரை
எழுத எண்ணித் தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும் என்னை
விரைந்து எழுதும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது! அண்ணா இதுக்கெல்லாமா நேரம் காலமா பார்த்துக்கிட்டு இருக்கறது.. சீக்கிரம் வந்து சின்னபிள்ளைங்க சிக்கலை தீர்த்து வைங்கோ..!!:icon_rollout:

நீ கூறியது உண்மை தான் காதல் என்பதற்காக உயிரை விட கூடாது, உண்மையில் காதல் வந்த அப்புறம் ஆணும் சரி பெண்ணும் சரி மாற ஆரம்பித்து விடுகிறார்கள். முதலில் அங்கு வந்து குடியேருவது சுயநலம்.

நான் பதித்த இந்த பதிவையே அந்த பெண் பதித்து இருந்தாள், என்னுடைய சுயரூபமும், நான் செய்த தவறுகளும் வெளியிடப்பட்டு இருக்கும். காரணம் பார்வைகள் வேறுபடுகின்றன. அவள் எதிர்பார்த்ததை நான் செய்யவில்லை, நான் எதிர்பார்த்ததை அவள் செய்யவில்லை. அனுபவித்து சொல்கிறேன்

காதல் வந்தால் நீங்கள் நீங்களாக இருக்க முடியாதுதக்ஷணாமூர்த்தி... காதல்ல தோத்தா மத்தவங்களை குறைசொல்லி திட்டுறவங்க மத்தியில "அந்த பெண்ணோட பார்வையில பார்த்தாதான் என்னோட தவறுகள் தெரியும்"ன்னு சொன்னப்பாரு அந்த இடத்திலே உண்மையிலேயே நீ ஒருபடி எல்லோர் மனதிலும் உயர்ந்து நிக்கிறப்பா...!!:icon_b: கண்டிப்பாக உனக்கு நீ எதிர்பார்த்ததை விட நல்லதொரு வாழ்க்கைத்துணை அமையும்... அதற்கு எனது பிரார்த்தனைகள்..!!

மதி
26-01-2009, 05:40 AM
இன்னும் இந்த மதிமட்டும்தான் "நான் காதலிக்கவே இல்லை"ன்னு கதைவிட்டுக்கிட்டு திரியுறான்..:sprachlos020:
அட..இது ஒரு குத்தமா....???? நான் காதலிக்கவில்லை. இல்லை.. இல்லை... ஹிஹி..
எல்லாம் இனக்கவர்ச்சி தான்.. ஹிஹி.. தற்கால தமண்ணா.. (ஆதவாவிற்கு) போட்டியாக... ஃப்ரீதா பிண்டோ.. (ஸ்லம்டாக் மில்லினியர்):D:D:D:D:D:D:D:D

தாமரை
26-01-2009, 06:01 AM
காதலே செய்யாம காதல் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்ட் பெரிசு மதி.. :)

சுகந்தப்ரீதன்
26-01-2009, 06:13 AM
காதலே செய்யாம காதல் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்ட் பெரிசு மதி.. :)
அண்ணா.. லிஸ்டுல-ன்னு வந்திருக்கனுமோன்னு நினைச்சேன்... அப்புறம்தான் நீங்க பெருசுங்க லிஸ்டுன்னு விட்டுட்டேன்..!!:wuerg019:

மதி
26-01-2009, 06:26 AM
காதலே செய்யாம காதல் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்ட் பெரிசு மதி.. :)
அட இது நல்ல இருக்கே..:)

அன்புரசிகன்
26-01-2009, 06:27 AM
காதலே செய்யாம காதல் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்ட் பெரிசு மதி.. :)

ஸ்ஸ்..... முடியல......... அந்த லிஸ்டை சன்டீவீ TOP TEN ரகத்தில் வெளியிடுங்களேன்.... :D

அன்புரசிகருக்கும் அனுபவம் இருக்கின்றது போலிருக்கே.
மறைமுகமாகச் சொன்னால் விட்டுவிடுவோமா?
பதிவைப் போடுங்கோ ரசிகரே...:rolleyes:

உங்களுக்கு பதிவு வேண்டும் என்பதற்காக நான் புழுக முடியுமா??? :lachen001:

arun
27-01-2009, 01:58 AM
நன்றி அருண்
நீங்கள் சொல்வது 100% உண்மை தான், தாவணியெல்லாம் எப்போவோ போய்விட்டது, இப்ப பெண்கள் எல்லாம் சல்வார் கூட இல்லை, டி.சர்டு, பனியன்னு மாறிட்டாங்க. ஹா ஹா ஹா சும்மா சும்மா தமாஷுக்கு.

உண்மை தானுங்கோ உண்மை தானுங்கோ ஆனா சென்னைல மட்டும்னு நினைக்கிறேன் :D

arun
27-01-2009, 02:00 AM
காதலே செய்யாம காதல் தோல்வி அடைந்தவர்கள் லிஸ்ட் பெரிசு மதி.. :)

இந்த திரியில் உண்மைகள் தானா வெளி வரும் போல இருக்கே :D

sathyamani
27-01-2009, 05:13 AM
காலையில் வந்தவுடன் படிக்கும் முதல் திரி இது லேசாக கண்கள் கலங்கி தான் போனது காதல் நல்ல அனுபவம்தான். ஆனால் காதலில் பிரிவு.....நிச்சயம் மிகக்கொடுமை. எனக்கும் அந்த வலி இருந்திருக்கிறது

samuthraselvam
27-01-2009, 10:31 AM
சிவா அண்ணாவின் குடும்பத்துக்கு என் ஆறுதல்கள்! "உலகில் எதுவுமே உன்னுடையது அல்ல" என்று கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. நமது உடம்பில் உள்ள உயிர் கூட நமது இல்லை. அப்படி இருக்கும்போது அதை எடுக்க நமக்கு உரிமை இல்லை. ஒரு அன்னைக்கு தான் பிள்ளையை இழந்த இன்னொரு அன்னையின் வலியை அதிகம் உணர முடியும். உணர்கிறேன். அக்காவிற்கு என் வருத்தத்தை தெரிவியுங்கள். "தற்கொலை செய்து கொள்ளலாம். அந்த அளவுக்கு தைரியம் உள்ளவர்கள் வாழ்ந்து பாருங்களேன்." தற்கொலை செய்ய தைரியம் உள்ளவர்களுக்கு வாழ ஏன் இருப்பதில்லை? இன்று வந்த காதலினால் பெற்ற உறவுகளையும் உடன் பிறந்தவர்களையும் மறந்துவிட்டு செல்பவர்கள் முட்டாள்கள்.

_____________________________________________________________________________________-
daks!
அண்ணா உண்மையாக நேசிப்பவர்களை உறவுகள் எளிதாக இழந்துவிடும். ஆனால் சில உறவுகள் அதை எளிதாக பெற்றுவிடும். காதலி போனால் என்ன? காதல் போகவில்லையே. அன்பை ஒருவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்த அன்பு வீணாகபோவது இல்லை. அடுத்தவர்களிடம் காட்டலாம். அன்பும் காதலும் ஒன்றுதான். நீங்கள் அமைய அவருக்கு கொடுத்துவைக்கவில்லை. அவ்வளவுதான். காதலில் வென்றவர்கள் எல்லோருமே சந்தோசமாக இருப்பதில்லை அண்ணா.. அதுபோல் காதலில் தோற்றவர்கள் எல்லோருமே சோகமாக இருக்க வேண்டியதும் இல்லை.(எனக்கும் காதல் திருமணம்தான், பெற்றவர்களின் சம்மதத்தோடு....) நீங்கள் உங்கள் மனைவியுடன் வாழ்வதை என்றேனும் உங்கள் பழைய காதலி பார்க்க நேர்ந்தல் 'ஐயோ! இழந்து விட்டோமே இந்த இனியவரை' என்று என்னும் அளவிற்கு நீங்கள் வாழ வேண்டும். அதுவே உங்கள் தங்கையின் ஆசை.

அன்புடன்
லீலுமா..!

ரங்கராஜன்
27-01-2009, 10:45 AM

நன்றி லீலுமா
என்னை அண்ணா என்று அழைத்து இருக்கிறாய், சகோதிரியே அப்போ கண்டிப்பாக உன்னுடைய வயது 25-க்குள் தான் இருக்கும். இந்த சின்ன வயதில் உன்னுடைய ஆறுதல் வார்த்தைகள் விண்ணை முட்டுகிறது, அருமையான யதார்த்தமான அறுதல் வார்த்தைகள். கவரப்பட்டேன். காதலில் வெற்றி பெற்று விட்டு கூட எதிர்மறையான எங்களின் கருத்துக்களில் உள்ள வலியை புரிந்துக் கொண்டு ஆறுதல் கூறி இருக்கிறாய், சந்தோஷமாக இருக்கிறது, உன்னுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதிரியே. உண்மையில் உன்னுடைய கணவர் (மச்சான்) குடுத்து வைத்தவர் தான், புத்திசாலியான பெண்னை தான் திருமணம் செய்து இருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடு, சகோதிரியே வாழ்க நீ பல்லாண்டு.

சிவா.ஜி
27-01-2009, 02:03 PM
தங்கை லீலுமாவுக்கு அண்ணனின் மனமார்ந்த நன்றிகள். சோகத்தில் துணைநிற்ற்கும் மன்ற உறவுகளை நினைக்கும்போது மனம் நெகிழ்கிறது.

சகோதரி நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்கள் நிச்ச்யமாக மிக உண்மை. உயிரை விட தைரியம் உள்ளவர்கள், வாழ்ந்துதான் காட்டட்டுமே...அதற்கு ஏன் தைரியமில்லை. தக்ஸுக்கு நீங்கள் சொன்னவையும் அருமை.

தங்கைக்கு நன்றி.

ஆறுதல் சொன்ன அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

samuthraselvam
28-01-2009, 08:16 AM
நன்றி லீலுமா
என்னை அண்ணா என்று அழைத்து இருக்கிறாய், சகோதிரியே அப்போ கண்டிப்பாக உன்னுடைய வயது 25-க்குள் தான் இருக்கும். இந்த சின்ன வயதில் உன்னுடைய ஆறுதல் வார்த்தைகள் விண்ணை முட்டுகிறது, அருமையான யதார்த்தமான அறுதல் வார்த்தைகள். கவரப்பட்டேன். காதலில் வெற்றி பெற்று விட்டு கூட எதிர்மறையான எங்களின் கருத்துக்களில் உள்ள வலியை புரிந்துக் கொண்டு ஆறுதல் கூறி இருக்கிறாய், சந்தோஷமாக இருக்கிறது, உன்னுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதிரியே. உண்மையில் உன்னுடைய கணவர் (மச்சான்) குடுத்து வைத்தவர் தான், புத்திசாலியான பெண்னை தான் திருமணம் செய்து இருக்கிறார், அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடு, சகோதிரியே வாழ்க நீ பல்லாண்டு.
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:
அன்பு அண்ணா...!
எப்படி கண்டுபிடித்தீர்கள் என் வயதை? வைகாசி 15 வந்தால் 25 வயது ஆகிறது. உங்கள் மன கணிப்பு அபாரம்!:icon_b: காதலில் வெற்றி பெற்றதால்தான் எனக்கு இவ்வளவு மன பக்குவம் வந்தது. எப்படி என்றால் ஒரு சின்ன உதாரணம்: "இந்த வழியில் போகாதே, போனால் முள் குத்தும்" என்று ஒருவர் அறிவுரை கூறினால், அதை ஏற்க வேண்டும். ஏன் என்றால், அவர் ஏற்கனவே அந்த வழியில் சென்று முள்ளை மிதித்து வலியை அனுபவித்து இருப்பார். எனக்கும் சொன்னார்கள், நான் தான் கேட்காமல் 'முள் குத்தும் அனுபவத்தை' "சுகமாக" அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். "கிழவன் சொன்ன கின்னாரக்காரனுக்கு ஏறுமா?" என்று எங்கள் அப்பத்தா சொல்லுவார்கள். அது போலவே எனக்கும் ஏறவில்லை. என்ன செய்வது? சோகங்களை எல்லாம் சுகங்கலாக்கி வாழக் கற்றுக்கொண்டேன்.
சந்தோசங்களை பகிர்ந்தால் பல மடங்கு அதிகமாகும்..
துக்கங்களை பகிர்ந்தால் சில மடங்காவது குறையும் அல்லவா?..
உங்கள் மச்சானுக்கு உங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தேன். சந்தோசப்பட்டார். என்னை புத்திசாலி பெண் என்று சொன்னதை தெரிவித்ததற்கு "உன் புது அண்ணனுக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை. எனக்குத்தானே தெரியும் உங்கள் தங்கையின் புத்திசாலித்தனத்தை" என்று சொல்லச்சொன்னார்.

அன்புடன்
லீலுமா..!
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ரங்கராஜன்
28-01-2009, 04:38 PM

"உன் புது அண்ணனுக்கு உண்மை என்னவென்று தெரியவில்லை. எனக்குத்தானே தெரியும் உங்கள் தங்கையின் புத்திசாலித்தனத்தை" என்று சொல்லச்சொன்னார். [/COLOR]

அன்புடன்
லீலுமா..!
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

அன்பு தங்கையே
மச்சானின் வார்த்தைகளுக்கு ஹா ஹா ஹா ஹா, நான் சொன்னது பொய்-னு எப்படி கரைக்டா கண்டுபிடிச்சார், உண்மையில் உன்னை விட மச்சான் புத்திசாலி என்று நினைக்கிறேன். (எப்படி !!!!!!!!!!!!!!!)

samuthraselvam
29-01-2009, 09:56 AM
அன்பு தங்கையே
மச்சானின் வார்த்தைகளுக்கு ஹா ஹா ஹா ஹா, நான் சொன்னது பொய்-னு எப்படி கரைக்டா கண்டுபிடிச்சார், உண்மையில் உன்னை விட மச்சான் புத்திசாலி என்று நினைக்கிறேன். (எப்படி !!!!!!!!!!!!!!!)

இப்படி மச்சினனும் மச்சானும் ஒன்னு சேர்ந்துட்டு என்னை தனிய கழட்டி விட்டிங்களே இது நியாமா அண்ணா ? பாவமில்லையா உங்கள் தங்கை? ஆண்கள் எல்லாம் நெறைய பொய் சொல்லுவாங்க அப்பிடிங்கிறது உண்மைதான்.

அன்புடன்
:icon_rollout:உங்கள் தங்கை லீலுமா.. :icon_rollout:

ஆதி
29-01-2009, 10:09 AM
காதலென்னும்
நிலா வேடமிட்ட நெருப்பே!

"நீ தோண்டும் சுரங்கத்தில்
நான் வைரகல்லா ?
எரிகரி சில்லா ?"

காதல் சொன்னது

"எரி கரி தான் நீ
அழுத்தங்கள் கூட கூட
இறுக பழகு
வைரமாவாய்"

செல்வா
29-01-2009, 11:08 AM
சோகச் சுமையை இறக்கிவைக்க சுமைதாங்கியாகி... வந்த களைப்பு தீர ஆறுதல் தென்றலில் வருடி ... இப்போது புத்துணர்ச்சி யூட்ட நகைச்சுவை இளிநீர் பருக வைக்கிறது இந்தத் திரி....
மன்றத்தின் மாண்பைச் சொல்லவும் தகுமோ....

சிவா.ஜி
29-01-2009, 02:03 PM
காதலென்னும்
நிலா வேடமிட்ட நெருப்பே!

"நீ தோண்டும் சுரங்கத்தில்
நான் வைரகல்லா ?
எரிகரி சில்லா ?"

காதல் சொன்னது

"எரி கரி தான் நீ
அழுத்தங்கள் கூட கூட
இறுக பழகு
வைரமாவாய்"

பிரமாதம் ஆதி. கரி சில்லும் காதல் அழுத்தத்தில் வைரமாகும் என்பது உண்மையே. அதற்கு வைரமாகும்வரை வாழ்ந்து ஆகவேண்டும். பாராட்டுக்கள் ஆதி.

சிவா.ஜி
29-01-2009, 02:05 PM
இப்படி மச்சினனும் மச்சானும் ஒன்னு சேர்ந்துட்டு என்னை தனிய கழட்டி விட்டிங்களே இது நியாமா அண்ணா ? பாவமில்லையா உங்கள் தங்கை? ஆண்கள் எல்லாம் நெறைய பொய் சொல்லுவாங்க அப்பிடிங்கிறது உண்மைதான்.

அன்புடன்
:icon_rollout:உங்கள் தங்கை லீலுமா.. :icon_rollout:

ஆஹா கடைசியில நச்சுன்னு ஒரு உண்மையை சொல்லி தங்கை புத்திசாலிதான்னு ஸ்ட்ராங்கா நிரூபிச்சிட்டாங்க.

மதி
29-01-2009, 03:11 PM
இந்தத் திரியில் இறுதியாக வந்த பின்னூட்டங்கள் சொல்ல வைக்குது
முடி.....ல :)

ரங்கராஜன்
29-01-2009, 03:28 PM
இப்படி மச்சினனும் மச்சானும் ஒன்னு சேர்ந்துட்டு என்னை தனிய கழட்டி விட்டிங்களே இது நியாமா அண்ணா ? பாவமில்லையா உங்கள் தங்கை? ஆண்கள் எல்லாம் நெறைய பொய் சொல்லுவாங்க அப்பிடிங்கிறது உண்மைதான்.

அன்புடன்
:icon_rollout:உங்கள் தங்கை லீலுமா.. :icon_rollout:

தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
ஊட்டி வளத்த அன்பு தங்கச்சி சூஊஊஊஊ இப்பவே கண்ன கட்டுதே
நீ கூறியது உண்மை தான், ஆனால் ஆண்கள் பொய் யாரை சந்தோஷப்படுத்த சொல்றாங்க, ஹீ ஹீ ஹீ மச்சான் உன் சமையலை பற்றி உண்மையை சொல்ல ஆரம்பித்தா. நீ அவர் வாயை கிழித்து விடமாட்ட. ஹா ஹா ஹா ஹா

தாமரை
29-01-2009, 03:44 PM

உன் சமையல் - உண்மை

சம்மந்தமில்லா விசயங்களைப் பற்றிப் பேசறீங்களே தக்ஸ்

அதுவே(உன் சமையல்) பொய்தானே!:rolleyes::eek:

ஆதி
29-01-2009, 03:51 PM
உன் சமையல் - உண்மை

சம்மந்தமில்லா விசயங்களைப் பற்றிப் பேசறீங்களே தக்ஸ்

அதுவே(உன் சமையல்) பொய்தானே!:rolleyes::eek:

:D:D:D

சரி டைமிங் காமடி அண்ணா..

ரங்கராஜன்
29-01-2009, 05:14 PM
உன் சமையல் - உண்மை

சம்மந்தமில்லா விசயங்களைப் பற்றிப் பேசறீங்களே தக்ஸ்

அதுவே(உன் சமையல்) பொய்தானே!:rolleyes::eek:

நடுவில் பூந்து கலாய்பதில் தாமரை அண்ணாவை அடித்துக் கொள்ள முடியாது.:icon_b::icon_b::icon_b:

தாமரை
30-01-2009, 02:41 AM
சமையல் விமர்சனம் அப்படின்னாலே எனக்கு ஞாபகம் வருவது இந்தத் திரிதான்..

ரசத்தில் நவரசம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6052)

அது உண்மையாவே அண்ணி ரசத்தில உப்பு அதிகம் போட்டப்ப நான் சொன்னதுதானுங்க.. :)

samuthraselvam
30-01-2009, 04:49 AM
<<தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
ஊட்டி வளத்த அன்பு தங்கச்சி சூஊஊஊஊ இப்பவே கண்ன கட்டுதே
நீ கூறியது உண்மை தான், ஆனால் ஆண்கள் பொய் யாரை சந்தோஷப்படுத்த சொல்றாங்க, ஹீ ஹீ ஹீ மச்சான் உன் சமையலை பற்றி உண்மையை சொல்ல ஆரம்பித்தா. நீ அவர் வாயை கிழித்து விடமாட்ட. ஹா ஹா ஹா ஹா...>>
அண்ணன் ஒரு கோவில் என்றால் ....
தங்கை ஒரு தீபம் அன்றோ...
பெண்களின் சமையல் பற்றி இவ்வவளவு கிண்டல் செய்யும் ஆண்களே! அண்ணன்மார்களே!!
உங்களுக்கு எல்லாம் இனி வீட்டில் சாப்பாடு போடாம பட்டினி போட்டால் இப்படி கிண்டல் செய்ய மாட்டீங்க. அட தமிழ் மன்றத்தில் சமையல் செய்யும் பெண்களே இல்லையா? துணைக்கு வாங்க ஆண்கள்கிட்டே சண்டை போடலாம். ஆண்களா பெண்களான்னு ஒரு கை பார்க்கலாம் வாங்கப்பா.
<<சமையல் விமர்சனம் அப்படின்னாலே எனக்கு ஞாபகம் வருவது இந்தத் திரிதான்..

ரசத்தில் நவரசம்

அது உண்மையாவே அண்ணி ரசத்தில உப்பு அதிகம் போட்டப்ப நான் சொன்னதுதானுங்க..>>
தாமரை அண்ணாவுக்கு ரோசமே இல்லைன்னு அண்ணி சொன்னங்க, அதுதான் சமையலில் கொஞ்சம் அதிகமா நான்தான் உப்பு போட சொன்னேன். ஆனா அவர் அதைக்கூட நவரசம் அப்படின்னு ரசிச்சு சொல்லுகிறார். ஆண்கள் பொய் சொல்லுவாங்க என்கிறதுக்கு இதுகூட ஒரு உதாரணம்.
<<ஆஹா கடைசியில நச்சுன்னு ஒரு உண்மையை சொல்லி தங்கை புத்திசாலிதான்னு ஸ்ட்ராங்கா நிரூபிச்சிட்டாங்க.>>
சிவா.ஜி அண்ணா!
நீங்களாவது எனக்கு உதவி புரிய வந்திங்களே, ரொம்ப நன்றி அண்ணா!..
ஆண்களில் ஒரு சிலர்(!!?) உங்களை மாதிரி நல்லவங்களும் உண்மையை சொல்லுரவங்களும் இருக்கிறாங்க.

தாமரை
30-01-2009, 05:29 AM

1. சொரணை இல்லாட்டி ரசனை எப்படி வருமாம் தங்கச்சி? :lachen001:

2. உப்பு அதிகம்னு உண்மையைத்தானே சொன்னேன். இனிக்குதுன்னு பொய்யா சொன்னேன்?:aetsch013::aetsch013:

3. ஆண்கள் உண்மையை அழகாச் சொல்லுவாங்க. பெண்கள்தான் அழகா பொய் சொல்வாங்க. உதாரணம் அழகிப் போட்டிகளின் இறுதிச் சுற்று. எவ்வளவு அழகா பொய்சொல்றாங்களோ அவ்வளவு அழகாம் பெண்கள்.:lachen001::lachen001:

உங்க அபயக் குரலுக்கு ஓடோடி வருவது யாருன்னுதான் பார்ப்போமே.:D:icon_b:

samuthraselvam
06-02-2009, 03:55 AM

1. சொரணை இல்லாமலே ரசனை இருக்குன்னு சொல்லுறதே பெரிய பொய். :lachen001:

2. ------------ :smilie_abcfra: ------------

3. ஆண்கள் பொய்யை உண்மை மாதிரி திரிச்சு அழகா சொல்லுவாங்க:icon_p:. பெண்கள் உண்மை சொல்லுறது அவங்களை மாதிரியே அழகா இருக்கும்:icon_b:. ஆண்களுக்கு பொறாமை அதான் இப்படி சொல்லுறீங்க. (எப்பிடி....!)

இந்த மன்றத்துல பெண்கள் (சமைக்கும் பெண்கள்) இல்லைபோல் இருக்கே?:traurig001:

தாமரை
06-02-2009, 05:14 AM

[COLOR="DarkOrchid"] ]தாமரை அண்ணாவுக்கு ரோசமே இல்லைன்னு அண்ணி சொன்னங்க, அதுதான் சமையலில் கொஞ்சம் அதிகமா நான்தான் உப்பு போட சொன்னேன். ஆனா அவர் அதைக்கூட நவரசம் அப்படின்னு ரசிச்சு சொல்லுகிறார். ஆண்கள் பொய் சொல்லுவாங்க என்கிறதுக்கு இதுகூட ஒரு உதாரணம். .

மாட்டிக்கிட்டீங்களா?

தாமரைக்கு ரோஷமே இல்லைன்னு சொன்னதும் பெண்
தாமரை அண்ணா ரசிச்சு சாப்பிடரார்னு சொன்னதும் பெண்
ரசனை இருக்குன்னு சொல்றது பொய்ன்னு சொல்றதும் பெண்..

இது எப்படி இருக்கு தெரியுமா?

1. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
2. தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்திருக்கான்
3. வாத்தியார் பிள்ளை கோமாளி. வைத்தியர் பிள்ளை கோமாளி.

இதெல்லாம் பாட்டி சொல்ற பழமொழிகள். இதில எது பொய் எது நிஜம்? இதில எதாவது ஒண்ணு நிஜம்னா இரண்டு பொய்தானே..

பெண்கள் சொல்ற பொய்யைக் கண்டுபிடிக்க புத்திசாலித்தனம் வேணும். இப்படி உள்ளே புகுந்து ஆராய்ஞ்சு பார்த்தாதான் தெரியும். ஆண்கள் பாவம் அப்பிராணிகள். கள்ளங்கபடமில்லாம வெள்ளந்தியா சொல்றதை பொய்ன்னு எடுத்துக்கிறாங்க மக்கள்.

ஒரு விஷயத்துக்கு ஆண் ஒரு பொய்யைத்தான் சொல்வான். பெண் ஒரே விஷயத்துக்கு ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொரு பொய் சொல்வாள்...

நானும் தமிழும் இன்னும் தங்கை படிக்கலை போல இருக்கு. :)

பொறாமையா? ஆண்களுக்கா? :lachen001::lachen001::lachen001:

அழகான உண்மைகள் உண்டுதான். ஆனால் அவை பால் பாகுபாடு பார்ப்பதில்லை. அதுக்குப் பேர் மழலை.

மன்றத்தில் சமைக்கத் தெரிஞ்ச பெண்கள் நிறையவே இருக்காங்க... ஆனா சமையலானந்தா கிட்ட மல்லு கட்டறதுக்கு கல்லு சுவர்ல முட்டிக்கலாம்னு ஓடிப்போய்ட்டாங்க.

samuthraselvam
06-02-2009, 07:10 AM
<<நானும் தமிழும் இன்னும் தங்கை படிக்கலை போல இருக்கு.>> நெஜமாவே படிக்கல
ஆண்கள் பொய் சொல்வதில் மட்டும் அல்ல; பேச்சால் மடக்குவதிலும் கை தேர்ந்தவர்கள்தான்.
அதுசரி யாரு சமையலானந்தா? நீங்கதானே? சாப்பிடலானந்தா-னு இருந்த நல்ல பொருத்தமா இருக்கும்.

தாமரை
06-02-2009, 08:54 AM
அதாவது மாட்டிக்கிட்டேனே அண்ணா அப்படீங்கறீங்க..

சரி பாவம் பொழைச்சுப் போங்க..

சமையலானந்தா தங்கை ஓவியா கொடுத்த பட்டம். :)

அது பொய் அப்படின்னு சொன்னா பெண்கள் பொய் சொல்றாங்கன்னு நீங்க ஒத்துக்கும் படி நேரிடும்.:icon_rollout::icon_rollout::icon_rollout:

எப்படி வசதி?

samuthraselvam
06-02-2009, 09:27 AM
அதாவது மாட்டிக்கிட்டேனே அண்ணா அப்படீங்கறீங்க..

சரி பாவம் பொழைச்சுப் போங்க..

சமையலானந்தா தங்கை ஓவியா கொடுத்த பட்டம். :)

அது பொய் அப்படின்னு சொன்னா பெண்கள் பொய் சொல்றாங்கன்னு நீங்க ஒத்துக்கும் படி நேரிடும்.:icon_rollout::icon_rollout::icon_rollout:

எப்படி வசதி?

நான் பொய்ன்னு சொல்லவில்லை. ஆனா சாப்பிடலானந்தா-னு இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும்.

தாமரை
06-02-2009, 09:53 AM
எனக்குச் சாப்பிடறதை விட சமைக்கிறது ரொம்பவே பிடிக்கும்.. :)

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13950

sivani
07-10-2009, 01:30 PM
உண்மை காதல நம்மையும் உயர்த்தும்! காதலித்தவர் உடன் இல்லாவிட்டால் என்ன ! உண்மை காதல என்றும் வாழும், வளரும்,......

வானதிதேவி
09-10-2009, 04:24 PM
அப்பபா இந்த ஆண்களில் என்னதான் பிரமாதமாக சமைத்தாலும் குற்றம் கண்டு பிடித்து மற்றவரிடத்தில் தம்பட்டம் அடித்து பேர் வாங்கும் நக்கீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.(அண்ணாத்தே சும்மா தமாசு)

சாலைஜெயராமன்
09-10-2009, 05:56 PM
உடலை நேசிப்பது காதலல்ல. தன்னைத் தானே காதல் கொள்பவன் காதலுக்கு இலக்கணம் தந்தவன்

aren
10-10-2009, 12:14 AM
அப்பபா இந்த ஆண்களில் என்னதான் பிரமாதமாக சமைத்தாலும் குற்றம் கண்டு பிடித்து மற்றவரிடத்தில் தம்பட்டம் அடித்து பேர் வாங்கும் நக்கீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.(அண்ணாத்தே சும்மா தமாசு)

ஒன்றுமே பேசாமல் சாப்பிட்டாலும் இவ்வளவு கஷ்டப்பட்டு சமைத்திருக்கிறேன், ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எழுந்தால் என்ன அர்த்தம் என்பார்கள். தப்பித்தவறி நன்றாக இல்லை, இப்படி இருந்திருக்கலாம் என்று ஏதாவது ஏடாகூடமாகச் சொன்னால் அவ்வளவுதான், உருட்டுக்கட்டைதான்

வானதிதேவி
10-10-2009, 11:03 AM
ஆஹா ஆஹா அனுபவம் பேசுகிறது என்பார்களே அது இது தானோ. புலியவே அடிச்சு விரட்டி இருக்கோம்ல(ஆனாலும் இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள)